Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி!
Page 1 of 1
சங்கரன்கோவில்: மதிமுகவை "தோற்கடிக்கவே' திமுக போட்டி!
சென்னை,
பிப். 18: சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி
உறுதியில்லை என்பது தெரிந்தும் மதிமுகவை "தோற்கடிக்க' வேண்டும்
என்பதற்காகவே திமுக போட்டியிட முடிவு செய்திருப்பதாக கருதப்படுகிறது.கடந்த
2011 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடாத மதிமுக, இந்த இடைத்தேர்தல்
மூலம் "அரசியல் வாழ்வு' பெற்று விடக் கூடாது என்பதில் திமுக தலைமை தீவிரமாக
இருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.தமிழக அரசியல்
களத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தேதி
அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி மட்டும்தான் இப்போது
அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர ஆளும் அதிமுக ஒரு மாதத்திற்கு முன்பாகவே தேர்தல்
பணியை தொடங்கி விட்டது என்றே கூறலாம். அதனால் தேர்தல் களமும்
சூடுபிடிக்கத் தொடங்கியது.2011 சட்டப் பேரவைத் தேர்தலில் இருந்த
கூட்டணி நிலையில் மாற்றம், தேமுதிகவுடனான உறவில் விரிசல், தேர்தலில்
வாக்குறுதி அளித்தபடி தீர்க்க முடியாத மின்வெட்டுப் பிரச்னை போன்றவற்றால்
இந்த இடைத்தேர்தலில் எவ்வித பின்னடைவும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில்
அதிமுக தலைமை தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது. அது சட்டப் பேரவையிலும்
எதிரொலித்தது.கடந்த திமுக ஆட்சியின்போது திருமங்கலம் இடைத்தேர்தலில்
ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை கருத்தில் கொண்டு அதன் பின்பு நடைபெற்ற சில
இடைத்தேர்தல்களில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து வந்தது.
இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோகம், பண பலம்
போன்றவற்றால் தேர்தல் ஜனநாயகம் இல்லை என அக்கட்சித் தலைமையால் காரணம்
கூறப்பட்டது.அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு கடந்த அக்டோபரில்
நடைபெற்ற திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட்டு
தோல்வி அடைந்தது. எனவே, திருச்சி மேற்கு இடைத்தேர்தல் அனுபவத்தை கொண்டு
சங்கரன்கோவில் இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கலாம் என்று திருநெல்வேலி
மாவட்டத்தைச் சேர்ந்த அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருதியதாக
கூறப்படுகிறது. அந்த கருத்து கட்சித் தலைமையை எட்டும் வகையில் பல
மட்டங்களிலும் கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது.இதனிடையே, கடந்த
சட்டப் பேரவைத் தேர்தலை மதிமுக புறக்கணித்ததால் அக்கட்சியின் எதிர்காலம்
கேள்விக்குறியானது. அடுத்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக கணிசமான
இடங்களில் வெற்றி பெற்றது. இது கட்சியின் பொதுச்செயலர் வைகோவையும்,
தொண்டர்களையும் உற்சாகப்படுத்தியது. எனவே, சங்கரன்கோவில்
இடைத்தேர்தலில் போட்டியிட்டு அரசியல் களத்தில் தமது இருப்பை உணர்த்துவது என
மதிமுக முடிவு செய்தது. அதற்காக, அதிமுகவுக்கு ஈடுகொடுக்கும் வகையில்
தீவிரமான தேர்தல் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியை உள்ளடக்கிய சங்கரன்கோவில் தொகுதியில் மதிமுகவுக்கு கணிசமான வாக்கு வாங்கி உண்டு. கடந்த
1996 சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட், ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன்
கூட்டணி அமைத்து போட்டியிட்ட மதிமுக சுமார் 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது.
அடுத்து 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு சுமார் 21
ஆயிரம் வாக்குகளை பெற்றது.இப்போதைய இடைத்தேர்தலில் இரண்டாவது
இடத்தையாவது பெற்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில் மதிமுக தலைமை
தீவிரமாக உள்ளது. அவ்வாறு நிரூபித்தால்தான் 2014 மக்களவைத் தேர்தலில் பெரிய
கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், கணிசமான தொகுதிகளைப் பெறவும் தளம்
கிடைக்கும் என கருதுவதாகத் தெரிகிறது.திமுகவின் அடுத்த தலைவராக
ஸ்டாலினை ஏற்க மறுத்து அக்கட்சியிலிருந்து வெளியேறிய வைகோ, அதன் பின்பு
திமுகவுடன் கூட்டணியும் வைத்துக் கொண்டார். எனினும், இரு
தரப்புக்கும் இடையிலான "கசப்பு' மறைந்து விட்டதாக கருத இடமில்லை. எனவே,
மதிமுகவின் அரசியல் வளர்ச்சியை திமுக ஒருபோதும் ஏற்காது என்பது அரசியல்
நோக்கர்களின் கருத்து. இந்த சூழ்நிலையில், சங்கரன்கோவில் இடைத்
தேர்தலில் திமுக போட்டியிடாவிட்டால் அது மதிமுகவுக்கு சாதகமாக அமையும்.
மதிமுக இரண்டாவது இடத்தைப் பெற்றுவிட்டால் அதன் "அரசியல் வாழ்வு' அடுத்த
ஏழெட்டு ஆண்டுகளுக்கு நிலைப் பெற்று விடும். அது திமுகவுக்கு நல்லதல்ல
என்பதோடு, அதற்கு திமுகவே வழிவகுத்து விடக் கூடாது என்பதில் அக்கட்சித்
தலைமை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.திருச்சி மேற்குத் தொகுதி
இடைத்தேர்தலில் திமுக இரண்டாவது இடத்தைப் பெற்று, அரசியல் களத்தில் பிரதான
எதிர்க்கட்சி தான்தான் என்பதை நிரூபித்தது. அதேபோல், சங்கரன்கோவில்
இடைத்தேர்தல் வெற்றி உறுதியில்லை என்றாலும் இரண்டாவது இடத்தைப் பெற்று
மதிமுகவை ஓரங்கட்ட வேண்டும் என்பதில் திமுக தலைமை உறுதியாக இருப்பதன்
வெளிப்பாடே போட்டி முடிவு என்பது அக்கட்சியினரின் கருத்து.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார்
» சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் சசிகலா பேரவை போட்டி?
» சங்கரன்கோவில்: 2ம் இடத்துக்கு போட்டி போடும் 3 கட்சிகள்
» சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டி: வைகோ
» சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : களத்தில் 34 வேட்பாளர்கள்
» சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் சசிகலா பேரவை போட்டி?
» சங்கரன்கோவில்: 2ம் இடத்துக்கு போட்டி போடும் 3 கட்சிகள்
» சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டி: வைகோ
» சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : களத்தில் 34 வேட்பாளர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum