TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


உலகத்திலேயே பெரிய தாவரம்

3 posters

Go down

உலகத்திலேயே பெரிய தாவரம் Empty உலகத்திலேயே பெரிய தாவரம்

Post by ஜனனி Tue Feb 23, 2010 7:41 am

“உலகத்திலேயே பெரிய தாவரம் எது தெரியுமா?” என்று சுட்டிகளைப் பார்த்துக் கேட்டார் ரேஞ்சர் மாமா.

சுட்டிகள் யோசிக்க ஆரம்பித்தனர்.

“நானே சொல்லிடுறேன்! அதுதான் காளான்!”

உலகத்திலேயே பெரிய தாவரம் 08
“ஆச்சரியமா இருக்கே மாமா! விவரமாத்தான் சொல்லுங்களேன்!” என்றான் மாதப்பன்.
உலகத்திலேயே பெரிய தாவரம் 06
அதுக்கு முன்னாடி காளன்களைப் பத்தின சில பொதுவான விஷயங்களைச் சொல்றேன். கிட்டத்தட்ட 64,000 வகைகளுக்கு மேல காளான்கள் இருக்கு. உலகத்திலேயே பெரிய தாவரம் 07காளான்கிறது
ஸ்போர் அப்படின்னு சொல்லப் படுற விதை போல இருக்கிற ஒண்ணிலிருந்துதான் வளர
ஆரம்பிக்கும். இந்த ஸ்போர்கள் ரொம்ப ரொம்ப எடை குறைவாயும் ரொம்பச்
சின்னதாயும் இருக்கும். ஸ்போரிலிருந்து நூல் மாதிரியான அமைப்புக் கிளம்பி
வளரும். இதுக்கு ஹைஃபே அப்படின்னு பேரு. இந்த ஹைஃபே இழை மாதிரி இருக்கும்.
சில வகைகள் வெறும் கண்ணால் பார்த்தாத் தெரியாது. மைக்ராஸ்கோப்பில்தான்
தெரியும்! இதோ பாருங்க!உலகத்திலேயே பெரிய தாவரம் HYPHAE+MICROSCOPIC+VIEW

“ஏன் மாமா! நாம பார்க்கிற நாய்க்குடை மாதிரியான காளான்கள் கண்ணுக்கு நல்லாத் தெரியுதே?” என்று சந்தேகத்தை எழுப்பினாள் மெஹருன்னிஸா.

உலகத்திலேயே பெரிய தாவரம் Fungus+in+a+forest






“இனப்
பெருக்கக் காலத்தில் தரைக்குக் கீழே இருக்கிற இந்த நூல் மாதிரியான
ஹைஃபேயிலிருந்து தரைக்கு மேலே குடை மாதிரியோ இல்லை வெவ்வேறு வடிவங்களிலே
ஒரு அமைப்புக் கிளம்பும். உலகத்திலேயே பெரிய தாவரம் 09இதைச்
சாதரணமாக் கண்ணாலே பார்க்கலாம். இதை ஃபுரூட் பாடி (Fruit body) அப்படின்னு
சொல்லுவாங்க! இதிலிருந்து லட்சக் கணக்கிலே ஸ்போர்கள் உற்பத்தியாவும்.
சாதகமான சூழ்நிலையில் இந்த ஸ்போர்களிலிருந்து மறுபடியும் ஹைஃபே வளரும்.
சூழ்நிலை சாதகமாய் இல்லாட்டி வருஷக் கணக்கிலே கூடக் காத்திருந்து அப்புறமா
ஸ்போரிலிருந்து ஹைஃபே வளரும். இனத்துக்குத் தகுந்தபடி இந்த நூல் மாதிரியான
சில ஹைஃபேயில் செல் சுவர்கள் இருக்கும். சிலதிலே செல் சுவர்களே இல்லாமலும்
இருக்கும்.
உலகத்திலேயே பெரிய தாவரம் 13
காட்டிலே
இருக்கிற அநேக மரங்களின் வேர்களில் இந்த மாதிரியான ஹைஃபே சேர்ந்து வளரும்!
தங்களுக்குத் தேவையான சர்க்கரையையும் அமினோ அமிலங்களையும் காளான்கள்,
காட்டு மர வேர்களிலிருந்து உறுஞ்சிக் கொள்ளும். அதுக்குப் பதிலா
தண்ணியையும் தாது உப்புக்களையும் உறுஞ்சி மரங்களுக்குக் காளான்கள் தரும்!
உலகத்திலேயே பெரிய தாவரம் 05
மழை
தூற ஆரம்பிச்சவுடனே ஒரு வாசனை வருமே .. .. மண் வாசனைன்னுகூட
சொல்லுவாங்களே! அது என்ன தெரியுமா? மண்ணிலே இருக்கிற காளான் ஹைஃபேக்கள்
மழையால் தூண்டப் பட்டுச் சில கெமில்களை உற்பத்தி பண்ணும். அதோட
வாசனையைத்தான் நாம மண் வாசனை அப்படிங்கிறோம்! சில காளான்கள் ரொம்ப துர்
நாற்றம் கொண்டதாயிருக்கும். இன்னும் சிலது அருமையான வாசனையோட இருக்கும்!

நல்ல
சாதகமான சூழ்நிலைகளில் இந்த ஹைஃபே ரொம்ப வேகமா வளரும். ஒரு காளன் ஹைஃபே
நூலை நீளமா ஒண்ணுக்குப் பின்னாடி ஒண்ணா வச்சா ஒரு நாளிலே வளர்ந்த நீளம்
ஒரு மைல் அளவு கூட இருக்குமாம்!

அர்மில்லேரியா பல்போசா
அப்படிங்கிற வகைக் காளான் அமெரிக்கா பக்கத்திலே இருக்கிற வட மிசிகன்
பிரதேசத்திலே காட்டில் 106 ஏக்கருக்கும் மேலே 6000 டன் எடையிலே பரவி
இருக்காம்!

ஆயிரக் கணக்கான வருடங்களா இது
வாழ்ந்துகிட்டிருக்கலாம்னு கண்டு பிடிச்ச்சிருக்காங்க! ஒரே தனித் தாவரம்
இவ்வளவு பெரிசா இருக்குறது ரொம்ப அபூர்வம்தானே!”

“ஓஹோ! காளான்தான் உலகத்திலேயே பெரிய தாவரம்னு அதனாலதான் சொன்னீங்களா? எல்லாக் காளான்களும் ரொம்பப் பெரிசா மாமா?” என்றாள் வின்னி.

“இல்லைம்மா! யீஸ்ட் (Yeast)
அப்படிங்கிற வகைக் காளான் ஒரே ஒரு செல்லால் மட்டுமே ஆன தாவரம்கிறதும்
ரொம்ப ஆச்சரியமான விஷயம்! ஒரே செல் தாவரம்னாலும் இதாலே நன்மைகளும் உண்டு.
தீமைகளும் உண்டு! பேக்கரிப் பொருள்கள் தயாரிக்கவும், பீர் தயாரிக்கவும்
யீஸ்ட் ரொம்பப் பயன்படுது. அதே சமயம் தொண்டையிலும் வாயிலேயும்
கொப்புளங்கள் உருவாக்கித் தொல்லை கொடுக்கிறதும் இந்த யீஸ்ட் காளான்தான்!


சில
பேருக்குத் தொடைகளில் அரிப்பு ஏற்படுத்தும் காளான்களும் இருக்கு.
சுகாதாரமில்லாத உள்ளாடைகளை அணியறது மாதிரியான காரணங்களில் அங்கே காளான்
வளர்ந்து படர் தாமரை நோயை உருவாக்கும். பாதிக்கப் பட்ட மனித உடலோட ஒரு
பகுதியப் பாருங்க.

உலகத்திலேயே பெரிய தாவரம் Fungus+affected+human+skin
“அது சரி! எங்கெல்லாம் மாமா காளான்கள் இருக்கு?” என்றான் மாதப்பன்.

“நிலம்,
தண்ணி, காத்து இப்படிக் காளான் ஸ்போர்கள் இல்லாத இடமே கிடையாது!
தாவரங்கள், பிராணிகள், மனுஷர்கள் இப்படி எல்லா ஜீவராசிகள் உடம்பிலேயும்
காளான் வளரும்!

முக்கியமான விஷயம் - காளான்களில் பச்சயம் கிடையாது .. .. ..”
உலகத்திலேயே பெரிய தாவரம் 10
“பச்சையம் இல்லாட்டி தன்னோட உணவை அது எப்படி மாமா தயாரிக்க முடியும்” என்று இடைமறித்தாள் விஜி.

“நியாயமான
கேள்வி! காளான்களாலே தங்களோட உணவைத் தாங்களே தயாரிக்க முடியாததாலே
உணவுக்காக மத்த தாவரங்களையோ அல்லது மத்த உயிரினங்களையோ சார்ந்துதான்
இருக்கும். உயிருள்ள தாவரங்களையோ அல்லது மத்த ஜீவராசிங்களையோ உணவுத்
தேவைக்காகச் சார்ந்திருந்தா ஒட்டுண்ணி அப்படின்னும் செத்துப் போனவைகளைச்
சார்ந்திருந்தா சாறுண்ணி அப்படின்னும் சொல்லுவாங்க. உலகத்திலேயே பெரிய தாவரம் 01

இன்னொரு
விஷயம்.. .. காளன்கள் வாழ சூரிய வெளிச்சம்கூடத் தேவை இல்லை! அதனாலே
இருட்டான பகுதிகளிலும், மண்ணுக்கடியிலேயும் கூட ஜம்முனு வளரும்.

“காளான்கள் எப்படி மாமா ஆகாரம் எடுத்துக்கும்?” இது விபாஷாவின் விவரமான கேள்வி.

“எந்த
ஒரு ஆகாரத்தையும் உணவாக்கிறதுக்கு முன்னாலே காளான்கள் சில என்சைம்களைச்
சுரக்கும். அந்த என்சைம்கள் உணவோட கடினமான திசுக்களையும் எளிமைப்
படுத்திக் கொடுக்கும்.

சாதாரணமா மத்த உயிரினங்கள் உணவை சாப்பிட்ட
பிறகுதான் ஜீரணிக்க ஆரம்பிக்கும். ஆனால் சுரக்கிற என்சைம்கள் மூலமா
காளன்கள் முதல்லே வெளியிலேயே உணவை ஜீரணிச்சிட்டு அதுக்குப் பிறகுதான்
உள்ளே உறிஞ்சவே ஆரம்பிக்கும்.! அதை ஜீரணிக்கும் போது காளன்களிலிருந்து
உற்பத்தியாவுற கெமிக்கல்களுக்கு மைக்கோடாக்சின் (micotoxin) அப்படின்னு பேரு!

இந்த
மைக்கோடாக்சின்கள், பேக்டீரியா மாதிரியான மத்த கிருமிங்க கிட்டே இருந்து
காளான்களைக் காப்பாத்தும். அதே சமயம் ஏராளமான வியாதிகளுக்கும் இந்த
மைக்கோடாக்சின்கள் காரணமாயிடுது. சில மைக்கோடாக்சின்கள் சில வியாதிகளைக்
குணமாக்கிற மருந்துகளாகவும் பயனாகுதுன்றதுதான் ஆச்சரியம்!

பேக்டீரியாக்களைப்
போலவே காளான்களும் காத்து மண்டலத்திலே இருக்கிற நைட்ரஜன் வாயுவைத்
தாவரங்களுக்குப் பயன் படுற தாது உப்புக்களா மாத்தும்! பல ஆர்கானிக்
அமிலங்களை வணிக ரீதியாத் தயாரிக்கக் காளன்கள் பயனாகுது.

நிறையக் காளான் வகைகள் மருந்துகள் செய்யப் பயன் படுது! உதாரணமாப் பென்சிலின் அப்படிங்கிற முக்கியமான மருந்து பெனிசிலியம் அப்படிங்கிற காளான் வகையிலிருந்துதான் கிடைக்குது. இது ஒரு உயிர் காக்கும் மருந்து.

ஒரு
விஷயம் தெரியுமா? உலகப் போர்கள் நடந்தப்போ ஏராளமான போர் வீரருங்க செத்துப்
போனாங்க இல்லையா? துப்பாக்கிக் குண்டு பட்டோ பீரங்கிக் குண்டு பட்டோ
செத்தவங்களை விடக் காயங்களுக்குச் சரியான மருந்து இல்லாமல் பேக்டீரியா
தாக்குதலாலே அழுகிப் போய் இறந்தவங்கதான் அதிகம்.


முதல்
உலகப் போரிலே காயம் ஆறினது 25%தான். ஆனால் ரெண்டாவது உலகப் போரிலே -
அதாவது பென்சிலின் கண்டு பிடிச்ச பிறகு - காயம் ஆறியது 95 சதவீதம்
பேருக்கு! இதுக்குக் காரணம் பேக்டீரியாக்களைக் கொல்லும் பெனிசிலினைப் பயன்
படுத்தியதுதான்!

இந்தப் பெனிசிலின் மருந்தைக் கண்டு பிடிச்சதுக்காகவும் அதோட மருத்துவக் குணங்களுக்காகவும் ஆல்ஃப்ரட் ஃப்ளமிங், எர்னஸ்ட் போரிஸ் செயின், சர் ஹோவர்ட் வால்டெர் ஃப்ளோரி இந்த மூணு பேருக்கும் 1945ம் வருஷத்திய நோபல் பிரைஸ் கிடைச்சிருக்கு!

“பெனிசிலினை எப்படி மாமா கண்டு பிடிச்சாங்க?” இது ஜோசப் செல்வராஜின் கேள்வி.

“ஓ! அதுவா? அது ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான விஷயம்! அடுத்த தடவை சொல்றேனே?” என்றபடி எழுந்தார் ரேஞ்சர் மாமா.
உலகத்திலேயே பெரிய தாவரம் 04
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

உலகத்திலேயே பெரிய தாவரம் Empty Re: உலகத்திலேயே பெரிய தாவரம்

Post by Rikaz Tue Feb 23, 2010 1:44 pm

உலகத்திலேயே பெரிய தாவரம் 753281
Rikaz
Rikaz
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 662
Join date : 28/01/2010

Back to top Go down

உலகத்திலேயே பெரிய தாவரம் Empty Re: உலகத்திலேயே பெரிய தாவரம்

Post by saravanann Tue Feb 23, 2010 3:49 pm

நன்றாக இருந்தது
avatar
saravanann
பண்பாளர்
பண்பாளர்

Posts : 15
Join date : 02/02/2010

Back to top Go down

உலகத்திலேயே பெரிய தாவரம் Empty Re: உலகத்திலேயே பெரிய தாவரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum