Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
முதல்வரே, இலவச மிக்சி, கிரைண்டர் வேண்டாம், வீட்டுக்கு ஒரு யு.பி.எஸ்., கொடுங்க, சிட்டிசன்,
Page 1 of 1
முதல்வரே, இலவச மிக்சி, கிரைண்டர் வேண்டாம், வீட்டுக்கு ஒரு யு.பி.எஸ்., கொடுங்க, சிட்டிசன்,
மின் தடையால் பெரும்பாலான நேரங்களில், "டிவி' பார்க்க முடியாத காரணத்தால்,
"டிவி' நிகழ்ச்சிகளின் "ரேட்டிங்' படு பாதாளத்துக்குச் சென்று
கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து, பிற பகுதிகள் அனைத்திலும் தினமும் 8 மணி
நேரத்திலிருந்து 11 மணி நேரம் வரை மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது;
கிராமப்புறங்களில் இந்த நேரம், இன்னும் அதிகமாகவுள்ளது. மின்சாரம் போகும்
நேரத்தை மின் பகிர்மானக்கழகம் அறிவிப்பதை விட, மின்சாரம் இருக்கும் நேரத்தை
அறிவித்தால் பரவாயில்லை, என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால், கல்வி, வேலை,
தொழில், சிகிச்சை, அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி, வினியோகம் என எல்லாமே
பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கோவையைப் போன்ற தொழில் நகரங்களில் உள்ள தொழில்
அமைப்புகள், வாரம் ஒரு நாளை மின் தடை நாளாக அறிவிக்கலாம், என்ற ஆலோசனையும்
ஏற்கப்படவில்லை; தினமும் மின் தடையால் ஏற்படும் பாதிப்பு, அதிகமாகிக்
கொண்டே இருக்கிறது.
இவை ஒரு புறமிருக்க, தொடர் மின் தடையால், "டிவி' நிகழ்ச்சிகளைப் பார்க்கும்
நேரம், மிகவும் குறைந்துள்ளது; வேலைக்குப் போகாத இல்லத்தரசிகள், முதியோர்
ஆகியோர் "டிவி' சீரியல்களைப் பார்ப்பது, மிகவும் அரிதாக மாறியிருக்கிறது;
ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு நேரத்தில் மின் தடை அமல்படுத்தப்படுவதால்,
தொடர்களைத் தொடர்ந்து பார்க்கவே முடியாத நிலை உள்ளது. பல ஆண்டுகளாக "ஜவ்வாக' இழுத்தடிக்கப்படும் "சீரியல்'களைக் கூட, விடாமல்
பார்த்து வந்த பெண்களுக்கு, மின் தடையால் இந்த "சீரியல்'களிலிருந்து
தற்காலிக விடுதலை கிடைத்துள்ளது. ஏதோ ஒரு காரணத்தால், ஒரு நாள் "சீரியல்' பார்க்காவிட்டாலும், பக்கத்து
வீட்டிலோ, தூரத்து உறவிடமோ விசாரிப்பதற்கான வாய்ப்பும் இப்போது இல்லை.
சென்னையைத் தவிர்த்து, தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட தினமும் பகலில் பத்து
மணி நேரம் மின் தடை என்பதால், எந்தப் பகுதியிலுமே, யாருமே எந்த "டிவி'
நிகழ்ச்சியையும் பார்க்க முடிவதில்லை; இதனால், இந்த நிகழ்ச்சிகளின்
"டி.ஆர்.பி., ரேட்டிங்' படு பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது;
மக்களால் பார்க்க முடியாத நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம் கொடுக்கவும்
நிறுவனங்கள் யோசிக்கின்றன.
வினாடிக் கணக்கில் கணக்கிட்டு, "டிவி'
நிகழ்ச்சிகளுக்கு
விளம்பரக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, தினமும் லட்கணக்கிலும்,
மாதத்துக்குக் கோடிக்கணக்கிலும் விளம்பரதாரர்கள் செலவு செய்கின்றனர்.
ஆனால், இந்த விளம்பரங்களை சென்னை நகரிலுள்ள மக்கள் மட்டுமே பார்க்கும் நிலை
உள்ளது; மற்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு இவற்றைப் பார்ப்பதற்கான
வாய்ப்பேயில்லை. உள்ளூர் சேனல்களின் நிலைமை, இன்னும் மோசமாகியுள்ளது.
ஏனெனில், ஒவ்வொரு நகரிலும் பத்து, பதினைந்து என்ற எண்ணிக்கையில் உள்ளூர்
சேனல்கள் நடத்தப்படுகின்றன. இதனால், விளம்பரங்கள் வாங்குவதற்கு கடுமையான போட்டி உள்ளது. இந்த
போட்டியால், விளம்பரக் கட்டணமும் குறைக்கப்பட்டு வருகிறது.
மின்தடையால், "சேட்டிலைட்' சேனல்களையே பார்க்க முடியாத மக்கள், உள்ளூர்
சேனல்களைப் பார்ப்பது மிகமிக அரிது; அதிலும், வீட்டில் மின்சாரம் இருக்கும்
நேரத்தில், கேபிள் ஒளி பரப்பு அறையில் மின்சாரம் இருப்பதில்லை. இப்போது
வாங்கும் கட்டணத்தில், ஜெனரேட்டர் வைத்து இயக்கும் நிலையில், கேபிள் "டிவி'
ஆபரேட்டர்கள் இல்லை. இதன் காரணமாக, "டிடிஎச்' வாங்குவோரின் எண்ணிக்கையும்
அதிகரித்து வருவதாக
கேபிள் "டிவி' ஆபரேட்டர்கள் புலம்பத் துவங்கியுள்ளனர். இதை வாங்கிப்
பொருத்தினாலும், வீட்டில் மின்சாரம் இருக்கும் நேரத்தில் மட்டுமே, "டிவி'
பார்க்க முடிகிறது என்பதால், "டிவி' நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நேயர்களின்
எண்ணிக்கை, பெருமளவில் குறைந்துள்ளது. ஒட்டு மொத்தமாக, பல ஆண்டுகளாக
சின்னத்திரையின் அடிமைகளாக இருந்த பெரியவர்களும், குழந்தைகளும், இப்போது
வெளியுலகிற்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளும்
வீட்டிற்குள் முடங்காமல், வெளியே விளையாடச் செல்வதும் அதிகரித்துள்ளது;
தொடர் மின் தடையால், சமூகத்துக்கு விளைந்துள்ள ஒரே நன்மை இது மட்டுமே.
குறுஞ்செய்தியில் குறும்பு! தமிழக அரசு விலையில்லா மின் விசிறி,
மிக்சி, கிரைண்டர் கொடுத்து விட்டு, தினமும் பத்து மணி நேர மின் தடையையும்
அமல்படுத்தியுள்ளது. இதைக்கிண்டலடிக்கும் விதமாக, "முதல்வரே, இலவச மிக்சி,
கிரைண்டர் வேண்டாம், வீட்டுக்கு ஒரு யு.பி.எஸ்., கொடுங்க, சிட்டிசன்,
தமிழ்நாடு' என்ற எஸ்.எம்.எஸ்., வேகமாகப் பரவி வருகிறது.
- எக்ஸ்.செல்வக்குமார் -
Similar topics
» இலவச லேப்டாப், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆடு, மாடு சிறப்பு திட்டங்களை முதல்வர் தொடங்கினார்!
» தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா: பெண்களுக்கு இலவச மின் விசிறி, மிக்சி, கிரைண்டர்
» இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி கலெக்டர்கள் மேற்பார்வையில் வழங்கப்படும்: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு
» கிரைண்டர் அல்லது மிக்சி - தி.மு.க., : கிரைண்டர் + மிக்சி - அ.தி.மு.க.,
» ஒவ்வொரு ரேஷன் கார்டிற்கும் மிக்சி, மின்விசிறி, கிரைண்டர்: ஒரே "பேக்கேஜ்' ஆக வழங்க உத்தரவு
» தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா: பெண்களுக்கு இலவச மின் விசிறி, மிக்சி, கிரைண்டர்
» இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி கலெக்டர்கள் மேற்பார்வையில் வழங்கப்படும்: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு
» கிரைண்டர் அல்லது மிக்சி - தி.மு.க., : கிரைண்டர் + மிக்சி - அ.தி.மு.க.,
» ஒவ்வொரு ரேஷன் கார்டிற்கும் மிக்சி, மின்விசிறி, கிரைண்டர்: ஒரே "பேக்கேஜ்' ஆக வழங்க உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum