Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மதுரை கருத்துக் கேட்பு மேடையில் தர்ணா: மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு
Page 1 of 1

மதுரை: மின் கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான மனுக்கள் மீது, மதுரையில்
பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்த போது, மேடையில் வழங்கிய
மனுக்களுக்கு ரசீது வேண்டும், இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும், என
வலியுறுத்தி, மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் இருந்த மேடையில்
இருவர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தென் மாவட்ட அளவில் நடந்த இக்கூட்டத்தில், ஒழுங்கு முறை ஆணைய
உறுப்பினர்கள் வேணுகோபால், நாகலசாமி, செயலாளர் குணசேகரன் பங்கேற்றனர். தென்
மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், சங்க நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள்
கூட்டத்தில் மின்தடை குறித்தும், கட்டண உயர்வு கூடாது எனவும்
வலியுறுத்தினர்.
* மணிமாறன் (மடீட்சியா தலைவர்): தங்கு தடையில்லாமல் மின்சாரம்
வழங்கவேண்டும். மதுரையில் 8 மணி நேரம் மின்தடை செய்து, சென்னையில் ஒரு மணி
நேரம் மட்டும் தடை செய்வது சரியான நடவடிக்கை இல்லை. மின்வெட்டு என்றாலும்
சீரானதாக தமிழகம் எங்கும் இருக்கவேண்டும். மின்தட்டுப்பாடு தீரும்
வரையிலும் மின்விடுமுறை அளிக்க வேண்டும்.
* சுபாஷ் சந்திரபோஸ் (உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க துணை
தலைவர்): மின்கட்டணத்தை 100 சதவீதம் முதல் 300 சதவீதம் வரை உயர்த்த முடிவு
செய்துள்ளனர். இந்த கட்டண உயர்வை மக்கள் தாங்க மாட்டார்கள். 8 மணி முதல் 14
மணி நேரம் வரை மின்தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் சில தொழில்
நிறுவனங்களில், ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டால் அதற்கும் வரி என்பது, வெந்த
புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும்
தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. தொலைநோக்கு பார்வை இல்லாதால் தான்
இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
* ஜெகதீசன் (தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர்): மின்வெட்டு
தீரும் வரை மின்கட்டண உயர்வு குறித்து பரிசீலனை செய்யக்கூடாது.
மின்இழப்பீட்டின் அளவுகளை குறைக்க முயற்சிக்க வேண்டும்.
மின்தட்டுப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கூடங்குளம்
அணுமின் நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
* நன்மாறன் (முன்னாள் எம்.எல்.ஏ.,): மின் கட்டணத்தை எந்த
சூழலிலும் உயர்த்தக்கூடாது. மின்வாரியத்தின் இழப்பை மக்கள் ஏற்படுத்தியது
அல்ல. நீங்கள் தான் ஏற்படுத்தினீர்கள். கட்டண உயர்வு என்பதை இனி பொறுத்துக்
கொள்ள முடியாது. தனியார்கள் வரிகள் பாக்கி வைத்துள்ள நிலையில் அவற்றை
கண்டு கொள்ளாமல், மக்கள் மீது தொடர்ந்து விலை உயர்வை திணிப்பது சரியானது
அல்ல. இல்லாத "கரண்டிற்கு' ஏன் காசு கேட்கிறீர்கள்.
கூச்சல் குழப்பம்: ""மின்வாரியத்தில் அனைத்து வகையான சட்டங்களும்
உள்ளன. குடிசைத் தொழிலாக உள்ள கைத்தறிக்கு, யூனிட் ஒன்றிற்கு கட்டணம்
ரூ.1.80 என்று இருக்கும் நிலையில், விசைத்தறிகளுக்கு 500 யூனிட் இலவச
மின்சாரம் வழங்கப்படுகிறது,'' என கிருஷ்ணமூர்த்தி என்பவர் பேசினார். இவரது
கருத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மேடையில் இருந்து அவரை கீழே
இறங்கும்படி சத்தமிட்டனர். தொடர்ந்து சங்கங்களின் உறுப்பினர்களுக்கு
மட்டும் ஏன் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கிறீர்கள், தனிநபர்களையும்
பேசவிடுங்கள் என கூச்சலிட்டாறு மேடையை நோக்கி கூட்டத்தினர் முன்னேறினர்.
போலீசார் சமாதானப்படுத்தினர்.
திரும்பிப் போ... திரும்பிப்போ: மின்வாரிய நிதி மன்றும் கணக்கு
அலுவலர் சங்க பொதுச் செயலாளர் லெனின், ""மின்வாரியம் நஷ்டத்தில்
செயல்படுவதாக கணக்கு காட்டப்பட்டு வருகிறது. இலவசமாக வழங்கும்
மின்சாரத்தையும் கணக்கிட வேண்டும்,'' என கூறினார். இதற்கு எதிர்ப்பு
கிளம்பியது. கண்துடைப்புக்கு நடத்தும் இந்த கருத்துக் கேட்பு கூட்டம்
தேவையில்லாதது. திரும்பி போ... திரும்பி போ.. என சத்தமிட்டவாறு மேடையை
நோக்கி முன்னேறினர். போலீசார் அமைதிப்படுத்தினர். தொடர்ந்து பல அமைப்புகளை
சேர்ந்தவர்கள் கட்டண உயர்வு கூடாது என்பதை வலியுறுத்தி பேசினர்.
கடும் பாதுகாப்பு: கூட்டத்திற்கு, காலை 9 மணி முதல் மக்கள்
வரத்துவங்கினர். பைகளுடன் வந்த நபர்களை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார்
சோதனை செய்தனர். துணை கமிஷனர் திருநாவுக்கரசு தலைமையில் மூன்று உதவி
கமிஷனர்கள், ஐந்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார்
அரங்கத்திற்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரங்கத்தின் வெளியே
ஒழுங்குமுறை ஆணையத்திற்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய நோட்டீஸ்கள்
வினியோகித்தவர்களை போலீசார் துரத்தினர்.
மேடையில் தர்ணா: தினமலர் இதழுடன் மேடையில் வந்த வக்கீல் ராஜா,
""தமிழகத்தில் 8 மணி நேரம் மின்வெட்டு என தினமலர் செய்தி வெளியிட்டது.
அதற்கு மின்வாரியம் பதில் அளிக்கவில்லை. சோலார் விளக்குகளுடன் அமைக்கும்
வீடுகளுக்கு மானியம் அளிக்க வேண்டும். இந்த கருத்துக் கேட்பு கண்துடைப்பு.
எனக்கு வழங்கப்பட்ட 4 நிமிடத்தில் 2 நிமிடம் நான் பேசினேன். மீதமுள்ள 2
நிமிடத்தில் நான் இங்கு அளித்த மனுவிற்கு ரசீது கொடுக்க வேண்டும்,'' எனக்
கூறி மேடையில் தர்ணா செய்தார். போலீசார் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச்
சென்றனர். அவருக்கு ஆதரவாக பலர் கூச்சல் எழுப்பினர். அதன் பின் அவருக்கு
மட்டும் ரசீது வழங்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த
ஆபிரகாம், "திராட்சை தோட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க
வேண்டும்,' என வலியுறுத்தி மேடையில் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்து
அமர்ந்தார். அவரையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மின் கட்டணத்தை உயர்த்த கடும் எதிர்ப்பு : மின் இழப்பு, திருட்டை தடுக்க யோசனை
» நள்ளிரவில் அமலுக்கு வந்தது பஸ் கட்டண உயர்வு : பயணிகள் கடும் எதிர்ப்பு!
» பதவி பறிப்புக்கு எதிர்ப்பு: குடும்பத்தோடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி!
» டீசல் விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு : ஆகஸ்ட் 1 முதல் ஸ்டிரைக் நடத்த பரிசீலனை
» மின் கட்டண எதிரொலி: எண்ணெய் விலை உயர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum