Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பா.ம.க., நிறுவனர் ராமதாசின் தம்பி உட்பட, இருவர் கைது செய்யப்பட்டனர்.
Page 1 of 1

செங்கல்பட்டு: தமிழக அமைச்சர் சண்முகம் உறவினர் கொலை வழக்கில், பா.ம.க.,
நிறுவனர் ராமதாசின் தம்பி உட்பட, இருவர் கைது செய்யப்பட்டனர். ஆறு
ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தில், இதுவரை அமைதியாக இருந்த சி.பி.ஐ.,
இப்போது திடீரென சுறுசுறுப்பாகியுள்ளது.
திண்டிவனத்தில், அமைச்சர் சண்முகம் வீட்டில், 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல்
ஓட்டுப்பதிவு அன்று, பா.ம.க.,வினர் புகுந்து, அங்கிருந்தவர்களை தாக்கினர்.
இதில், அமைச்சரின் உறவினர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். இது
தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி மற்றும் பலர்
மீது, சண்முகம், திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ராமதாஸ்,
அன்புமணி ஆகியோர் பெயரை விட்டுவிட்டு, மற்றவர்கள் மீது வழக்கு பதிவு
செய்து, 11 பேரை கைது செய்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன்
அன்புமணி ஆகியோர் பெயர் சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்த சண்முகம்,
சி.பி.ஐ., விசாரணை கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை
விசாரித்த கோர்ட், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி, சி.பி.ஐ.,
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 5ம் தேதி, முருகானந்தம் கொலை வழக்கு தொடர்பாக, விழுப்புரத்தைச்
சேர்ந்த கோபி, 28, இளஞ்செழியன், 32, தாளைமேடு பகுதியைச் சேர்ந்த குமரன்,
37, நடராஜன், பன்னீர்செல்வம், ஜெயராஜ், ஆனந்தகிருஷ்ணன், செந்தில்குமார்
ஆகியோரை, சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர். பின், அவர்களை காவலில் எடுத்து
விசாரித்தனர். நேற்று திண்டிவனத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் தம்பி
சீனுவாச கவுண்டர்,65, அவரது ஆதரவாளரான விழுப்புரத்தைச் சேர்ந்த
கருணாநிதி,50, ஆகியோரை கைது செய்தனர். இருவரும் நேற்று மாலை, செங்கல்பட்டு
தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, 15 நாள் கோர்ட் காவலில் வைக்கும்படி, நீதிபதி ஆனந்தி
உத்தரவிட்டார். "உடல்நிலை சரியில்லாததால், தங்களை மருத்துவமனையில்
அனுமதிக்க வேண்டும்'
என, இருவரும் நீதிபதியிடம் தெரிவித்தனர். "சிறை கண்காணிப்பாளரிடம் தகவல்
தெரிவியுங்கள். அவர் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார்' என, நீதிபதி
தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இருவரும், தங்களை கடலூர் சிறையில்
அடைக்கும்படி கோரினர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும், சென்னை புழல் சிறையில்
உள்ளதால், அங்கு தான் செல்ல வேண்டும் என, நீதிபதி கூறினார். ராமதாஸ் தம்பி
சீனுவாச கவுண்டர், சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரது
கைது, பா.ம.க., வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜாமின் மனு தள்ளுபடி: இவ்வழக்கில் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள
நடராஜன், கோபி, குமரன், இளஞ்செழியன், பன்னீர்செல்வம், ஜெயராஜ்,
அனந்தகிருஷ்ணன் ஆகியோர் ஜாமின் கோரி, செங்கல்பட்டு செசன்ஸ் கோர்ட்டில் மனு
செய்தனர். நேற்று, மனு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை இன்னும் முடிவு
பெறாததால், அவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என, சி.பி.ஐ., வழக்கறிஞர்
இளஞ்செழியன் வாதிட்டார். அதை ஏற்று, நீதிபதி சிவானந்த ஜோதி, ஜாமின் மனுவை
தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தைலாபுரத்தில் சி.பி.ஐ., நுழையுமா? ராமதாஸ் ஆலோசனை: அ.தி.மு.க.,
பிரமுகர் கொலை வழக்கில், அடுத்தடுத்து கைது படலம் அரங்கேறி வரும் நிலையில்,
தைலாபுரம் தோட்டத்திலும் சி.பி.ஐ., நுழையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற, பா.ம.க.,
நிறுவனர் ராமதாஸ், ஒசூரில் தங்கி அவசர ஆலோசனை நடத்தினார்.
கடந்த 2006ம் ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது, திண்டிவனத்தில் அ.தி.மு.க., பிரமுகர் முருகானந்தம் படுகொலை வழக்கில்,
பா.ம.க., நிறுவனர் ராமதாசின் சகோதரர் சீனு கவுண்டர் என்ற சீனிவாசன்,
அக்கட்சி முன்னாள் தலைமை நிலைய செயலர் கருணாநிதி ஆகியோர், நேற்று
சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், இவ்வழக்கின் வேகம்
அதிகரித்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இவ்வழக்கு, தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் முன்னாள்
மத்திய அமைச்சருமான அன்புமணியிடமும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை
நடத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, சி.பி.ஐ., குழு
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நுழையலாம் என கூறப்படுகிறது. சி.பி.ஐ.,
மூலம் கைது செய்யப்பட்டுள்ள சீனிவாசன், பா.ம.க.,வில் இருந்து விலகி,
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். ஆனால், கருணாநிதி திண்டிவனம் மாவட்ட
நிர்வாகியாக இருக்கிறார். இவ்வழக்கில், அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்ற
பரபரப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே, கிருஷ்ணகிரியில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க,
ராமதாஸ் நேற்று அங்கு சென்றிருந்தார். கைது குறித்த தகவல் கேள்விபட்டவுன்,
இக்கூட்டத்திற்கு வந்திருந்த கட்சி நிர்வாகிகள் சிலர் அதிர்ச்சி
அடைந்துள்ளனர். கூட்டம் முடிந்தவுடன், ஒசூரில் "ரூம்' போட்டு ராமதாஸ்,
பா.ம.க., தலைவர் மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை
நடத்தியுள்ளனர். அதேபோன்று, சென்னையில் அன்புமணியும், தனக்கு நெருக்கமான
நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» "விக்கி லீக்ஸ்' நிறுவனர் அசாஞ்சை கைது செய்ய லண்டன் போலீஸ் முடிவு
» கூடங்குளம் : போராட்டக் குழுவைச் சேர்ந்த இருவர் கைது
» தொழிலதிபரை மிரட்டி 100 கோடி கேட்ட Z டி வி பத்திரிகையாளர்கள் இருவர் கைது!
» பென்னாகரத்தில் தலைவர்கள் கார் மீது கல்வீச்சு - இருவர் கைது
» இந்தியாவை உளவு பார்க்க வந்த ஐ.எஸ்.ஐ உளவாளிகள் இருவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum