Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எழுத்தாளர் ருஷ்டி வீடியோவுக்கு தடை : இலக்கிய விழாவில் பரபரப்பு
Page 1 of 1

ஜெய்ப்பூர்: சர்ச்சைக்குரிய ஆங்கில நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி பேசிய
வீடியோ காட்சிகள், முஸ்லிம்களின் போராட்டத்தின் காரணமாக இலக்கிய விழாவில்
நேற்று திரையிடப்படவில்லை. இதனால், பெரும் சலசலப்பும், சர்ச்சைøயும்
எழுந்தது. இந்தியாவில் பிறந்து பிரிட்டனின் குடியுரிமை பெற்றவர் சல்மான்
ருஷ்டி. பல ஆங்கில நாவல்களை எழுதிய சிறந்த எழுத்தாளர். இதற்காக, இவர்
புக்கர் விருதை பெற்றார். 1988ல், "சாத்தானின் கவிதைகள்' என்ற புத்தகத்தை
எழுதினார். முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இந்த நூல்
அமைந்ததால், ஈரான் தலைவர் அயதுல்லா கோமெனி, ருஷ்டிக்கு மரண தண்டனை
அறிவித்தார். இதற்கு பிறகு, ருஷ்டி பல ஆண்டு காலம் பிரிட்டனில் தலைமறைவு
வாழ்க்கை நடத்தினார். சர்ச்சைக்குரிய இந்த புத்தகம் இந்தியாவிலும் தடை
செய்யப்பட்டது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற
இலக்கிய திருவிழாவுக்கு அவர் ழைக்கப்பட்டிருந்தார். "தாருல் உலூம்
தியோபந்த்' உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம் மத
தலைவர்களும் ருஷ்டியின் இந்திய வருகையை எதிர்த்தனர்.
"ருஷ்டி
இந்தியா வந்தால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும். மும்பையை சேர்ந்த
நிழல் உலக தாதாக்கள் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளனர்' என, மகாராஷ்டிரா
மற்றும் ராஜஸ்தான் போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து, ஜெய்ப்பூர் இலக்கிய
விழாவில் கலந்து கொள்வதை ருஷ்டி தவிர்த்தார். "என்னை இந்த விழாவில் கலந்து
கொள்வதை தடுக்கவே, ராஜஸ்தான் போலீசார் இதுபோன்ற கதையை புனைந்துள்ளனர்' என,
ருஷ்டி தன் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். இதில் ராஜஸ்தான்
முதல்வர் கெலாட் சாமர்த்தியமாக செயல்பட்டிருப்பதாக இலக்கிய விழாவில்
பங்கேற்ற பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே, ஜெய்ப்பூரில் இலக்கிய
திருவிழா நேற்று நிறைவு பெற்றது. இந்த விழாவில், ருஷ்டியின் உரையை
வீடியோவில் ஒளிபரப்ப விழா ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
வீடியோ
காட்சிக்கு தடை : நேற்று மதியம் 3.45 மணியளவில் "மிட் நைட்ஸ் சைல்ட்' என்ற
நாவலை பற்றி ருஷ்டியின் அனுபவ உரை ஒளிபரப்ப ஏற்படாகியிருந்தது. இதை
தெரிந்து கொண்ட முஸ்லிம் அமைப்பினர் இலக்கிய விழா நடக்கும் பகுதியில்
நுழைந்து, "ருஷ்டியின் வீடியோ காட்சியை ஒளிபரப்பக் கூடாது' என, போராட்டம்
நடத்தினர்.
இதனால், அங்கு பதட்டம் ஏற்பட்டது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை
ஏற்படும் சூழல் உள்ளதால், ருஷ்டியின் வீடியோ காட்சியை ரத்து செய்யும்படி
போலீசார் அறிவுறுத்தினர். வேறு வழியில்லாத நிலையில், விழா ஏற்பாட்டாளர்கள்
இந்த வீடியோ காட்சியை ரத்து செய்தனர். அதுமட்டுமல்லாது ருஷ்டியின் வீடியோ
காட்சி இணைப்பும் அரசால் துண்டிக்கப்பட்டது.
இலக்கிய விழா நடக்கும்
இடத்தை அளித்த ராம்பிரதாப் சிங் குறிப்பிடுகையில், ""என் இடத்தை சுற்றிலும்
போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளனர். என்னுடைய சொத்து அமைந்த பகுதியில்
வன்முறை ஏற்படுவதை விரும்பவில்லை; என்னுடைய குடும்பத்தினரும், குழந்தைகளும்
இந்த இடத்தில் தான் உள்ளனர். எனவே, வீடியோ காட்சியை அனுமதிக்க முடியாது,''
என்றார். முன்னதாக திட்டமிட்டபடி வீடியோ காட்சி ஒளிபரப்பப்படும் என, விழா
நிர்வாகி சஞ்சய் ராய் கூறியிருந்தார்.
வீடியோ காட்சி ரத்தானது
குறித்து சஞ்சய் ராய் குறிப்பிடுகையில், ""சல்மான் ருஷ்டியின் முகத்தை
திரையில் காட்டுவதை கூட நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம்'' என,
போராட்டக்காரர்கள் எங்களிடம் கூறினர். இது துரதிருஷ்டவசமானது. முட்டாள்
தனமான சூழலால் மீண்டும் நாங்கள் பேச்சுரிமை சுதந்திரத்துக்கு எதிரான
போராட்டத்தில் பின் தங்கியுள்ளோம். விழா திடலில் கூடியுள்ளவர்களை
பாதுகாக்க, நாங்கள் போராட்டக்காரர்களின் நிபந்தனைகளுக்கு பணிய வேண்டியதாக
விட்டது. எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போராட்டக்காரர்கள், விழா
நடக்கும் இடத்திலேயே தொழுகை நடத்தினர். ருஷ்டியின் வீடியோ ஒளிபரப்பினால்
அதிகப்படியான பாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என, துணை கமிஷனர்
வீரேந்திர ஜாலா கூறினார். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை
ஏற்படுத்தியது. எங்கள் மனம் மிகவும் புண்பட்டுள்ளது' என்றார்.
ஓட்டு
வங்கி அரசியல் : ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்
மைனாரிட்டி மக்கள் சிலர் உயிரிழந்தனர். இதையெல்லாம் மூடி மறைக்கவும், உத்தர
பிரதேச தேர்தலில் முஸ்லிம்களின் ஓட்டுகளை பெறவும், இலக்கிய திருவிழாவில்
ருஷ்டியின் வீடியோ காட்சியை அரசு துண்டித்துள்ளது. இதன் மூலம் இன்டர்நெட்
தணிக்கை முறையை திணிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இலக்கிய விழாவுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருப்பதாக
தெரிவித்த மாநில அரசு, போராட்டக்காரர்களை விழா பந்தலுக்குள் நுழைய விட்டது
எப்படி? இது முன்கூட்டியே திட்டமிட்ட செயல். ஓட்டு வங்கிக்காக காங்கிரஸ்
அரசு, தரம் தாழ்ந்து செயல்படுகிறது.
- பிரகாஷ் ஜவேத்கார், பா.ஜ., தகவல் தொடர்பாளர்

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இலங்கையில் இலக்கிய விழாவா? புயலாக சீறுகிறார் எழுத்தாளர் அருந்தத
» சினிமா நடிகையுடன் விழாவில் பங்கேற்ற சர்ச்சைக்குரிய இந்திய எழுத்தாளர்
» அமைச்சர்களுக்காக இயக்கப்படும் ரயில்கள் : அரசு விழாவில் அ.தி.மு.க., எம்.பி., பரபரப்பு
» பட விழாவில் பரபரப்பு : மனிஷா கொய்ராலா போதையில் ஆட்டம்
» பிரபாகரன் மீது ஆணையாக வாக்களித்த மக்களுக்கு பணியாற்றுவேன்: பதவியேற்பு விழாவில் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum