TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஊடக தர்மம் எது?நக்கீரன் நக்கீரனா?

2 posters

Go down

ஊடக தர்மம் எது?நக்கீரன் நக்கீரனா? Empty ஊடக தர்மம் எது?நக்கீரன் நக்கீரனா?

Post by sakthy Mon Jan 23, 2012 5:40 pm

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

ஊடக தர்மம் எது?
ஏசுவார்கள், எரிப்பார்கள் அஞ்சவேண்டாம்!; உண்மையை எழுது! உண்மையாக எழுது!!’
யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளின் சிந்தனைத் துளிகள் இவை, ஹவாய் ஆதீனத்தில் படித்தது.

இன்றைய பல ஊடகங்களின் நிலையை எண்ணிப் பார்க்கும் போது ஊடக தர்மம் என்றால் என்ன என்ற கேள்வியை பலரும் கேட்கவே செய்கிறார்கள்.அது பற்றி சிறியதாய் சொல்ல முற்பட்டதற்கு காரணம்,விடுமுறையில் என் குடும்பத்தினரை சந்திக்க தமிழ் நாடு சென்றிருந்த போது, நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதை நாம் நேரில் காண முடிந்தது.இதற்கு ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் கீழ்த்தரமாக எழுத முற்பட்டதே காரணம் என்று சொல்லப்பட்டது.ஜே யின் முந்தைய ஆட்சியில் நக்கீரனுக்கு ஏற்பட்ட அடக்குமுறை தான் இந்த எழுத்துக்கு காரணம் என்பது தெரிந்ததே.ஜே யின் ஆட்சி முடிந்து தி.மு.க. ஆட்சி பதவிக்கு வந்ததும்,ஜே க்கு எதிரான போர் முழக்கமாக நக்கீரன் கோபால் அறிவித்து தொடர் கட்டுரையாக எழுத ஆரம்பித்தார்.அதற்கு கருணானிதி தூபம் போட்டு விருதுகளையும் வழங்க ஆரம்பித்ததும், நக்கீரன் புகழ் மயக்கத்தில் பல செய்யாத குற்றங்களையும் சுமத்த ஆரம்பித்தார்.இதை நடு நிலையாளர்கள் எடுத்துக் கூறிய போதும்,பதவி மயக்கம் ஆட்சியின் பாதுகாப்பு போன்றவை அவரை சிந்தித்து செயல்பட விடவில்லை.

அந்த நாட்களில் நக்கீரன் ஈழத் தமிழர்களை வைத்து விற்பனையை அதிகரிக்க பொய்யான செய்திகளையும் வெளியிட்டது.புலிகளின் தளபதி ராமுடன் பேட்டி,சென்னை விமான நிலையத்தில் அரபு நாடுகளில் இருந்து வந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை சந்தித்தது,தேசியத் தலைவர் கொலை செய்யப்படவில்லை என்று தன் இஸ்டப்படி சில ஆய்வுகளை வெளியிட்டது,கூடவே பாதிரி கஸ்பரை கூட்டு சேர்த்து விடுதலை புலி தலைவர்கள்,போராட்டங்கள் பற்றிய பொய்யான செய்திகளை எழுத செய்தது போன்ற பலவற்றை சாட்சியங்களாக சொல்லலாம்.இது தவிர தவறான தேர்தல் கணிப்பீடு, தி.மு.க.விற்கு ஆதரவான பொய் பிரச்சாரம்,கருணானிதி குடும்பம் ஊழலே செய்யவில்லை என்ற ஒரு மாயையை மக்களிடம் ஏற்படுத்த முனைந்தது, நித்தியானந்தர் விடயத்தில் நடந்து கொண்ட தவறான அணுகுமுறை போன்றவையும் தொடர்ந்தன. உண்மையை சொல்வதற்கு பதில் ஒரு பக்க சார்பான செய்திகளை வெளியிட்டு, விற்பனையை கூட்டுவதற்காக ஊடக தர்மத்தை மீறியதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் தவறு செய்ததற்காக ஒரு ஊடகத்தின் மீது, ஆட்சியின் காவலர்களே அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது,ஏற்றுக் கொள்ள முடியாதது. இருப்பினும் நக்கீரன் தன்னை நக்கீரனாக மாற்றிக் கொள்ளுமா?

விடுதலை புலிகளுக்கு என்ற ஒரு தலைமை இல்லாத நிலையில் எதையும் யாரும் சொல்லலாம் என்ற ஒரு நிலை வந்ததும், இன்று எப்படிப்பட்ட செய்திகள் வருகின்றன என்பதை நீங்களே தெரிந்திருப்பீர்கள்.விடுதலைப் போராட்டத்திற்கு துணை போன சில ஊடகங்களே தற்போது போராட்டத்தின் மீதும் போராளிகள் மீதும் சேறு பூச முனைவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இந்த இடத்தில் ஊடக தர்மம் என்ன? ஒரு இனத்தை அழிக்க,காட்டிக் கொடுக்க சிலவற்றை மறைத்தாக வேண்டும்,மறந்தாக வேண்டும்.இல்லையேல் இன ஒற்றுமை குலையும்,இன அழிவிற்கு வித்திடும். அது எதிரிகளுக்கு சாதகமாகி விடும்.இங்கே உண்மை அவசியமா இல்லை இனம் முக்கியமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஈழப் போரின் போது ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டதும்,ராஜபக்சே ஆட்சியில் 30 ற்கு மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதும்,ஊடகங்கள் தணிக்கை செய்யப்பட்டதும் வரலாறு.
ஊடக தர்மம் என்றால், ஒருபக்க சார்பாக செய்திகளை வெளியிடுவதா, விற்பனைக்காக பொய்யான செய்திகளை மக்கள் முன் வைப்பதா,உண்மையான செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வதா,மக்களை வழி நடத்தி காப்பாற்றி செல்வதற்காக சில உண்மைகளை மறைப்பதா, அரசுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட நபருக்கு கட்சிக்கு நிறுவனத்திற்கு சார்பாக நடந்து கொள்வதா?எது ஊடக தர்மம்?

முதலில் ஊடகங்களில் யார் உள்ளடக்கப்படுகிறார்கள்?
பத்திரிகை,தொலைக்காட்சி,வானொலி,இணையத் தளங்கள்,சினிமா,மக்களில் ஒரு பகுதியினரும்,சில நிறுவனங்களும் ஊடகங்களாக செயல்படுகிறார்கள்.இதில் இணையத்தளங்களும்,சினிமாவும் மிகப் பெரிய ஊடகங்களாக மக்களை மறைமுகமாகவும்,தொலைக்காட்சி,பத்திரிகைகள் மக்களை நேரடியாகவும் பாதிப்படைய செய்கின்றன. இதை சாதகமாக வைத்து நல்லவர்களும் கெட்டவர்களும் வல்லவர்களாக செயல்பட்டு சாதித்து தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.சினிமாவை வைத்து சமூகத்தை சீரழித்த கதையையும், ஆட்சியை பிடித்த சரித்திரங்களையும் மறக்க முடியாது. நடிகைகளைப் பற்றி எழுதியதால் துடித்து எழுந்த நடிகர் கூட்டத்தையும் அவர்கள் பேசிய பேச்சுக்களையும் எப்படி மறப்பது. நடிகர்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல என்ற பாரதிராஜாவின் கருத்தே நினைவுக்கு வருகிறது.

அதே சமயம் தற்போதய தமிழ் சினிமா ஊடகம் சொல்வது போல், மக்களுக்கு விரும்பியதைக் கொடுப்பது அல்ல ஊடகத்தின் தர்மம்.மக்களுக்கு எப்போது என்ன தேவைப்படுகிறது என்பதை அறிந்து,அதை உண்மையுடனும் நடுனிலையுடனும் பொறுப்புடனும் அவ்ர்களிடம் கொண்டு செல்வதே ஊடக தர்மம்.எடுத்துக்காட்டாக ஈழப் போரின் போது ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டதால் உண்மை மக்களிடம் வெளி நாடுகளிடம், மனித உரிமை ஆர்வலர்களிடம் சென்றடையவில்லை என்பதையும்,தெரிந்த பல உண்மைகள் கூட ஊடகங்களால் அன்று உரிய முறையில் கொண்டு செல்லப்படாததையும் கருத்தில் கொள்ளலாம். அந்த மிருகத்தனமான இனப்படுகொலை உரிய முறையில் உடனே கொண்டு செல்லப்பட்டு இருந்தால் நிலைமை வேறாகி இருந்திருக்கும்.தற்போது காலம் கடந்து கொண்டு வரப்படும் உண்மைகள் எந்த அளவிற்கு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் என்பது கேள்விக் குறியே.ஆனாலும் அன்று வெளிவராத செய்திகளினால் தமிழர்கள் கொடுத்த விலை ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்களும்,வன்முறைகளும் பலாத்காரங்களும், இழப்புக்களும், துன்புறுத்தல்களும்,கலாச்சார சீரழிவுகளும் தான்.அதனால் தான் எதை எப்போது எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஊடகங்கள் எண்ணிப் பார்த்து செயல்படுவது அவசியமாகிறது.

இனக்கலவரம்,சாதி மதக் கலவரங்களின் போது ஒரு ஊடகம் உண்மை என்று கூறிக் கொண்டு செய்திகளை வெளியிடுவது தர்மமாகாது. இதனால் இந்தக் கலவரங்கள் தூண்டப்பட்டு அழிவுகளையே கொண்டு வரும்.இப்படியான சமயங்களில் ஊடகங்கள் அமைதி காத்து தேவையான செய்திகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து, கலவரங்கள் முடிந்த பின் உண்மைகளை நடுனிலையுடன் பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.இல்லையேல் உயிர் உடமை அழிவுக்கு ஊடகங்களே காரணமாகி விடும்.ஈழப் போரையும், சாதி,மத,கோஸ்டி கலவரங்களையும் ஒப்பிட்டு செயல்படுவது பொருந்தாது. ஈழப் போரின் உணவுத் தட்டுப்பட்டையும்,ஹையிற்றி இயற்கை அனர்த்தத்தின் போது ஏற்பட்ட நிலை,சுனாமி அனர்த்தங்கள் போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும். இவற்றை சாதி மதக் கலவரங்களுடன் சேர்த்து பார்க்கக் கூடாது. .ஈழப் போரின் போது அடக்குமுறை அமைதி காத்ததால் இலட்சக் கணக்கான உயிர்கள் பலியாகின.அதே சமயம் சாதிக் கலவரங்களின் போது அமைதி காத்து சிலவற்றை மறைத்து தேவையானவற்றை வெளியே கொண்டு வருவதால் பல உயிர்களை காப்பாற்றிட முடியும்.இந்த உண்மைகள் பின்னர் வெளிக்கொணரப்படலாம்.என் சாதிக்காரனை கொலை செய்து விட்டான் என்று ஒருவன் கூக்குரலிட்டால் ஏற்படும் நிலை என்ன என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தமிழக சினிமா என்ற ஊடகம் பழைய படங்களில் 90 வீத்ததை நல்ல படங்களாகவும், 10 வீதத்தை தரம் குறைந்த கதையில்லாத படங்களாகவும் தந்தது.ஆனால் இன்றைய சினிமாவோ எதிர்மாறாக 10 நல்ல படங்களையும் 90 தரம் குறைந்த படங்களையும் தருகிறது.சமூகத்தை படம் பிடித்து காட்டுவதாக கூறி,பணத்திற்காகவும் விருது புகழுக்காகவும் தயாரித்து வெளியிடும் படங்களால் இன்றைய நிலை எப்படி மாறி உள்ளது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. வன்முறை,பலாத்காரம்,மாமன் மருமகளிடம் தொடர்பு,சினிமா பாணி போல் கடத்தல்,தந்தை மகளை பலாத்காரம் என்று இப்படியான சினிமாக்களால் இந்தக் குற்றங்கள் அதிகரிக்கின்றன.இப்படியான குற்றங்கள் அன்று நடக்கவில்லை என்று வாதிட முடியா விட்டாலும்,சாதிக் கலவரங்கள் போல் பரவிடாது தவிர்க்கப்பட்டன. ஆனால் இன்று சினிமா இணையத்தளங்கள் போன்றவை அனைத்தையும் வெளிக் கொணர்வதால் தூபம் போடப்பட்டு வளர்க்கப்படுகின்றன.புகைத்தலும் மதுவும் இல்லாத சினிமாவைத் தர முடியாதா? அதை பார்த்து மதுவுக்கும் புகைத்தலுக்கும் ஆளானவர்களை,பெண்களும் கூட, எண்ணிப் பார்க்க ஏன் சினிமா என்ற ஊடகம் மறுக்கிறது? மதுவால் சீரழிந்த குடும்பங்களின் கண்ணீர் கதையை ஏன் மறைக்கிறது?இங்கே தான் சினிமா என்ற ஊடகத்தின் தர்மம் எண்ணிப் பார்க்கப்பட வேண்டும்.

அன்று, தமிழில் பொருள் கண்டார்,தமிழால் பொருள் கண்டார்,
இன்று,புகழை வாங்க தமிழை விற்கிறான்,பூந்தமிழை எங்கே கற்கிறான்,
விற்றவன் படைக்கிறான் சரித்திரம்,தமிழை கற்றவன் பார்க்கிறான் தரித்திரம்...வாலி.

இந்த நிலையில் சென்ற ஆண்டு அமெரிக்காவில் இணையத்தளங்களுக்காக கொண்டு வரப்பட்ட தணிக்கைமுறை, இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த முயற்சிக்கப்படும், SOPA,Stop Online Pracy Act and PIPA,Protect IP Act பற்றி கூகிள்,மொசில்லா,யாகூ போன்ற பலவும் இணையத்தள பார்வையாளர்களும் சங்கடத்தில் எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளனர். இதுவும் ஊடகங்களுக்கான வாய்ப்பூட்டாகவே கருதப்படுகிறது. அமெரிக்காவில் எதிர்ப்புக் குரல் வந்ததால்,இந்தியா தணிக்கை கொண்டு வராது என்று கூறினாலும்,ஒரு நாள் வரத்தான் போகிறது.
சட்டம் கொண்டு வரும் அரசுகள், கைத்தொலைபேசியும் சில ஊடகங்களும் ஆபாச வன்முறைகளுக்கும்,சமூக விரோத செயல்களுக்கும் துணை போவதை எப்படி கட்டுப் படுத்துவது என்பதை சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.கட்டுப்படுத்துவது என்று கூறிக் கொண்டு வாய்ப்பூட்டு போட்டு விடக் கூடாது.

இப்படி தங்களைக் காப்பாற்ற அரசுகள் கொண்டு வரும் ஊடக தடை சட்டங்கள்,
அவர்கள் பதவியில் இல்லாத போது அவர்கள் மீதே பாயும் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லையா? இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளை கொடுத்த கருணானிதியின் ஊழல்களை, அதே இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் தேர்தலின் போது அவரின் ஊழல்களை காட்டிக் கொடுத்து விட்டன.என்னால் கொடுக்கப்பட்டவை எனக்கே வேட்டு வைத்து விட்டதே என தேர்தலின் போது அவர் புலம்பியதை யாரும் மறந்திருக்க முடியாது.

தனிப்பட்ட முறையில் தாக்குவதோ,வசைபாடுவதோ,உண்மை நடு நிலை என்று சில செய்திகளை வெளியிட்டு கலவரங்களை தூண்டுவதோ,சமூக அமைப்பை தவறான வழியில் கொண்டு செல்வதோ ஊடக தர்மம் ஆகாது.சமூகத்தை காப்பாற்ற மக்களுக்கு தேவையானவற்றை கொடுப்பதே ஊடகங்களின் கடமையாகும்.மக்கள் கேட்பதை கொடுப்பதானால் கொலைகாரன் ஆயுதம் கேட்பான்,காமுகன் ஆபாசப் படங்கள் கேட்பான்,பாலியல் பலாத்காரம் செய்ய நினைப்பவன் Rape ற்கும்,Date Rape ற்கும் வழிமுறை கேட்பான்.எதை ஊடகங்கள் கொடுக்கப் போகின்றன?

அதே சமயம் தனிப்பட்ட ஒருவர் இன்னொருவரை வசைபாடி எழுதுவதற்கும் பேசுவதற்கும்,ஊடகங்கள் எழுதுவதற்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளது என்பதை உணர வேண்டும்.ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டோ தணிக்கை முறையோ வராது இருக்க வேண்டுமானால் உண்மை நடு நிலையுடன் பழிவாங்கும் செயலை மறந்து செயல்பட வேண்டும்.

மேலும் சில நடந்த சம்பவங்களை சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஈழப் போரில் சிங்களம் செய்த பொய்யான ஊடகப் பரப்புரை, புலிகள் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது.ஹிற்லரின் propaganda, இலட்சக்கணக்கான யூதர்களின் உயிரைக் காவு கொண்டது.இந்தியாவில் நடந்த மதக் கலவரங்களும்,தமிழ் நாட்டில் நடந்த சாதி மதக் கலவரங்களினாலும் ஏற்பட்ட அழிவுகளும் வெறுப்புணர்ச்சியும்,இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரங்களில் ஒரு இடத்தில் ஏற்பட்ட கலவரம் அரச ஊடகங்களால் பரப்பப்பட்டதால் நாடு முழுவதும் பரவி பல ஆயிரம் உயிர்கள் அழிந்தன.(தாத்தா சொன்ன கதை என்ற கட்டுரயில் இது பற்றி எழுதி இருந்தேன்)

நல்லதை சொன்னதால் நல்ல பத்திரிகைகள் இணயத் தளங்கள்(this website will not be functioning anymore) பல முடங்கின. அதற்காக ஊடக தர்மத்தை மறந்து செயல்படலாமா என்பதை நல்லவர்கள் சிந்திக்க வேண்டும்.

அதே சமயம் நம்முடைய கடமையையும் மறக்கக் கூடாது.மறந்தால் நெல்லின் களை போல் தீமைகள் நுழைந்து நல்லவற்றை அழித்து விடும்.நல்ல இணையத் தளங்கள்,பத்திரிகைகள் போன்ற ஊடகங்களை மட்டுமல்லாது நல்ல மனிதர்களையும் இனம் கண்டு விழிப்புடன் நடப்பது நம் கடமை. ஒரு செய்தியை சொல்லி மீண்டும் அடுத்த வாரம்.
ஜப்பான்காரன் எங்கு சென்றாலும் ஜப்பான் மொழியிலும்,சீனாக்காரன் சீன மொழியிலும், ஜேர்மன்காரன் ஜேர்மனிலும் பிரெஞ்சுக்காரன் பிரெஞ்சிலும் பேசுகிறான். தமிழன் எங்கும் தமிழை பேச வெட்கப்படுகிறான்,செல்லும் இடங்களில் ராஜ மரியாதை பெற தமிழை விற்கிறான்,மற்றவன் தங்களை மதிக்க மாட்டான் என எண்ணுகிறான்.இதற்கு அப்துல் கலாமும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்து விட்டார்.சிங்களத்தில் பேசி சிங்களத்தை குளிரப்பண்ணி விட்டார்.சிங்கள கிராமிய மேம்பாட்டிற்கு தன் வாழ்வை அர்ப்பணிப்பதாக உறுதி அளித்தும் இருக்கும், ஈழத் தமிழர் இன படுகொலையின் போது வாயை திறக்காத அந்த போலி,பெரிய மனிதன்.எப்படி சொல்வேனம்மா.
இணையத்தில் கிடைத்த சிறிய இடத்தில் முடிந்தவரை தந்துள்ளேன்.

நன்றியுடன்......................................சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஊடக தர்மம் எது?நக்கீரன் நக்கீரனா? Empty Re: ஊடக தர்மம் எது?நக்கீரன் நக்கீரனா?

Post by அருள் Mon Jan 23, 2012 9:01 pm

ஊடக தர்மம் எது?நக்கீரன் நக்கீரனா? 471843 ஊடக தர்மம் எது?நக்கீரன் நக்கீரனா? 471843 ஊடக தர்மம் எது?நக்கீரன் நக்கீரனா? 471843
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum