Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சேலம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வின் ஆட்டம் அதிகரிப்பு: உண்மை தொண்டர்கள் பரிதாபம
Page 1 of 1

சசிகலா கும்பலுடன், நெருங்கிய தொடர்பில் இருந்த, சேலம் மாநகர் மாவட்ட
செயலர் செல்வராஜின் ஆதிக்கம், தற்போது மேலும் அதிகரித்துள்ளது. தன்னை
எதிர்ப்பவர்கள், கட்சியில் வளர கூடாது என, தலைமைக்கு புகார்களை அனுப்பி,
கட்சியில் உள்ள உண்மை விசுவாசிகளை ஓரம் கட்டி வருகிறார். சேலம்
அ.தி.மு.க.,வை காப்பாற்ற வேண்டும் எனக்கோரி, போயஸ் கார்டனை முற்றுகையிடும்
முடிவில் கட்சியினர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க.,
கோட்டையான சேலம், சில ஆண்டுகளுக்கு முன், தி.மு.க.,வின் கைப்பாவையாக
செயல்பட்ட சிலரால், கை நழுவிப்போனது. மீண்டும், அ.தி.மு.க., கோட்டையாக
மாற்றுவதற்கு, நிர்வாகிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு கைகூடவில்லை.
2009 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் வசம் இருந்த சேலம் லோக்சபா தொகுதி,
அ.தி.மு.க., வசமானது.அதன் பின் நடந்த சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல்
போன்றவை, அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக அமைய, சேலம் மாவட்டம் அ.தி.மு.க.,
கட்டுப்பாட்டுக்குள் வந்தது.சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ்,
தற்போது மாநகர் மாவட்ட செயலராக உள்ளார். ஒருங்கிணைந்த புறநகர் மாவட்ட
செயலராக, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி உள்ளார்.மற்ற
மாவட்டங்களை விட, சேலம் மாவட்ட அ.தி.மு.க.,வில் தான் கோஷ்டி பூசல் அதிகம்.
எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், வெங்கடாசலம், அமைச்சர் பழனிசாமி ஆகியோர் ஒரு
கோஷ்டியாகவும், செம்மலை எம்.பி., எஸ்.கே.செல்வம், விஜயலட்சுமிபழனிசாமி
ஆகியோர், தங்களுக்கென தனி தனி கோஷ்டி அமைத்தும்
செயல்படுகின்றனர்.இவர்களுடைய நடவடிக்கையால், கட்சி நிர்வாகிகளும்,
தொண்டர்களும் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலின் போது,
கட்சிக்கு உண்மையாக உழைத்த, 50க்கும் மேற்பட்டோர், எம்.எல்.ஏ., செல்வராஜ்
மூலம் பழிவாங்கப்பட்டனர். சசிகலா அண்ட் கோவுடன் இருந்த நெருக்கத்தால், அவரை
ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தது. தனக்கு வேண்டாதவர்களை, கட்சியில்
இருந்து நீக்கினார். அவர் குறித்து யாராவது புகார் கொடுக்க சென்றால், அந்த
புகார் மனு அவருக்கே திரும்பி வந்தது. முதல்வர் மீது விசுவாசமுள்ளவர்கள்,
செல்வராஜின் நடவடிக்கையால் வேதனையில் உள்ளனர்.சமீபத்தில், முன்னாள்
எம்.எல்.ஏ., வெங்கடாசலம், சேலம் மேற்கு சட்டசபை தொகுதி செயலர்,
கே.சி.செல்வராஜ் ஆகியோர் நீக்கப்பட்டனர். என்ன காரணம் என்றே தெரியாத
அளவில், அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
வெங்கடாசலத்துக்கு மாநகர் மாவட்ட செயலர் பதவி கிடைத்து விடும் என்ற நிலை
உருவானதால், முதல்வருக்கு பொய்யான தகவல்களை அனுப்பி, அவரை செல்வராஜ்
நீக்கியுள்ளார் என, கட்சியினர் கூறி வருகின்றனர்.வெள்ளைக்கல் கடத்தலில்,
சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., வெங்கடாசலம் ஈடுபட்டு வருவது குறித்து,
கட்சி பிரமுகர்கள் பலரும் புகார் கூறினர். வெள்ளை கல் கடத்தலுக்கு,
கே.சி.செல்வராஜ் தடையாக இருப்பதாக கூறி, மாவட்ட செயலர் மூலம்,
கே.சி.செல்வராஜை கட்சியில் இருந்து நீக்க பரிந்துரை செய்து, அவரை நீக்கி
விட்டனர் என்கின்றனர் அ.தி.மு.க.,வினர்.
இரவு, பகல் பாராது உழைத்த
நிர்வாகிகள், தொண்டர்கள், பொய்யான தகவலால் கட்சியில் இருந்து
வெளியேற்றப்படுவதால், கட்சியில் உள்ள உண்மையான அ.தி.மு.க.,வினர் நொந்துபோய்
உள்ளனர். நீக்கப்பட்டவர்களிடம், கட்சி தலைமை எவ்வித விளக்கமும்
கேட்பதில்லை. அதனால், எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், வெங்கடாசலம் ஆகியோர்
தங்கள் இஷ்டம் போல் பழிவாங்குகின்றனர் என்கின்றன ரத்தத்தின்
ரத்தங்கள்."சேலம் அ.தி.மு.க.,வை காப்பாற்றக்கோரி, போயஸ் கார்டனை
முற்றுகையிட உள்ளோம்' என, கட்சியின் மூத்த நிர்வாகிகளும், மாநகர் மாவட்ட
செயலரால் பாதிக்கப்பட்டவர்களும் தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
இது உளவுத்துறை மூலம், அ.தி.மு.க., தலைமையின் காதுக்கும் எட்டியுள்ளது.
"தவறு இருந்தால் கார்டனில் உயிர் விடுகிறோம்' : கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, கே.சி.செல்வராஜ் கூறியதாவது:
என்ன காரணத்துக்காக நான் நீக்கப்பட்டேன் என்பது எனக்கு இதுவரை
தெரியவில்லை. என் மீது தவறு இருந்தால், போயஸ் தோட்டத்திலேயே உயிரை விடவும்
நான் தயாராக இருக்கிறேன். 20 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்துள்ளேன். எங்களைப்
போன்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ள முதல்வர், கண் திறக்க
வேண்டும் என்றார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் கூறியதாவது: ஒவ்வொரு
நாளும் மனவேதனையுடன் உள்ளேன். என்ன காரணத்துக்காக நீக்கினர் என
தெரியவில்லை. மாநகர் மாவட்ட செயலர் செல்வராஜிடம் கேட்டபோது, "முதல்வர்
எடுத்த முடிவு. நான் என்ன செய்வது? 30ம் தேதி வரை பொறுத்துக் கொள். அதன்
பின் பார்க்கலாம்' என்றார். அமைச்சரையும் சென்று சந்திக்க முடியாது.
முதல்வர் எங்களை அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என்பதற்காக, வாரம் ஒரு
முறை சென்னை சென்று, கடிதம் வழங்கி வருகிறேன். எங்கள் மீது குற்றம்
இருந்தால், நான் உயிரை இழக்கவும் தயாராக உள்ளேன்.சேலம் மாநகராட்சி மேயர்
தேர்தலின் போது, ஒவ்வொரு வார்டிலும் சென்று எப்படி பிரசாரம் மேற்கொள்ள
வேண்டும் என்பதை, மேயருடன் இருந்து செய்தேன். எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில்,
"சூது வென்று விட்டது, என்றும் "அம்மா' வழியில்' என, பேனர் வைத்திருந்தேன்.
அதை கிழித்தெறிந்து விட்டனர். மாநகர் மாவட்ட செயலர் பதவி கிடைக்கும்
என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. எப்போதும் முதல்வரின் விசுவாசமிக்க
தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்.இவ்வாறு வெங்கடாசலம் கூறினார்.
"என்னை இழுக்காதீர்கள்' : சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., வெங்கடாசலம் கூறியதாவது:
முதல்வர் எடுக்கும் முடிவு. அதில் நான் என்ன சொல்ல இருக்கிறது? உளவுத்துறை
மூலம் தகவல் கிடைத்து, அதன் பேரில் தான், அவர் நடவடிக்கை எடுப்பார்.
யாரைப் பற்றியும் நாம் அவரிடம் புகார் கூற முடியாது. இந்த பிரச்னையில்
என்னை இழுக்காதீர்கள் என்றார்.
இது தொடர்பாக, சேலம் மாநகர் மாவட்ட
அ.தி.மு.க., செயலரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான, எம்.கே.செல்வராஜை,
மொபைலில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "அண்ணன் கூட்டத்தில் இருக்கிறார்.
இப்போது, அவரிடம் பேச முடியாது. நீங்கள் பேசிய தகவலை, அவரிடம்
தெரிவிக்கிறேன்' எனக் கூறி, அவரது உதவியாளர் பிரகாஷ், இணைப்பை
துண்டித்தார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» பலே கருணாநிதி. ஐந்து பஸ்களுக்கு மேல் அடித்து நொருக்கிய சேலம் தொண்டர்கள்.
» சேலம் மாவட்டத்தில் முதலிடம் பெற்றவர்கள்
» காங்கயத்தில் மீண்டும் ஜெ., : தொண்டர்கள் எதிர்பார்ப்பு
» சேலம் திமுக ஆர்ப்பாட்டத்தில் கோஷ்டி மோதல்
» சுறுசுறுப்பாகும் தே.மு.தி.க., தொண்டர்கள்; சூடுபிடிக்கும் தேர்தல் பணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum