Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
100 வயது வாழ மூலிகைச்சமையல் !
Page 1 of 1
100 வயது வாழ மூலிகைச்சமையல் !
[You must be registered and logged in to see this image.]
நசநச'வென்று
மழை... சகதி... எங்கும் ஒரே ஈரம்.... மழைக் காலத்தைத் தொடர்ந்த
குளிரைத்தான் சொல்லுகிறேன். அந்த அசௌகரியத்துடன் தொடர்கதையாக நீளும்
வியாதிகள்....
பார்த்துப் பார்த்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினாலும் அக்கம்பக்கத்து குழந்தைகளிடமிருந்து இலவசமாக வாங்கி வரும் தொற்று நோய்கள்.
ஏன், பெரியவர்கள் கூட வெளியே போகும் போது, பொது இடங்களான மார்க்கெட், பஸ் பயணம், ரயில் பயணம் என்று உ[You must be registered and logged in to see this image.]டன் கடந்து செல்லும் மகானுபாவன்கள் இங்கிதம் இல்லாமல் நம்மீதே ‘அச்' என்று தும்மும் கொடுமையை என்னவென்று சொல்லுவது?
சரி... நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருந்தால் பரவாயில்லை.
‘முணுக்' என்றால் சுருண்டு நோயில் படுத்துவிடும் பிரகிருதியாக இருந்தால்...?
இதோ...
நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் சில சுவையான ரெசிபிகள். மேலும்
உபரியாக மற்ற உபாதைகளுக்கும் தீர்வாக சில செய்முறைகளும் உங்களுக்கே
உங்களுக்காகத்தான்!
ஆனியன் வசாக்கா டீ
தேவை
வெங்காயச் சாறு.... 1 கப்
ஆடா தோடை இலைச் சாறு... 1/2 கப்
கற்பூர வல்லி இலைச் சாறு... 1/4 கப்
பனங்கற்கண்டுத் தூள்... 1 மேஜைக்கரண்டி
செய்முறை
ஒரு கப் நீரைக் கொதிக்க விடவும்.
மேற்கண்ட சாறுகளை இத்துடன் சேர்க்கவும்.
ஒரு கொதி வரும் போது கற்கண்டுத் தூளைக் கலந்து காலை மாலை இரு வேளை பருகவும்.
என்ன பயன்?
நுரையீரலில் சேரும் சளியைக் கரைத்து வெளியேற்றும்.
உடலுக்கு
சூடான உணர்வு உருவாகும். குறிப்பாக குளிர் சுரம் வருவது போன்ற உணர்வு
இருக்கும்போது இதைப் பருகினால் உடல் ‘கலகல'வென்று லேசாக இருப்பது போல
உணரலாம்.
கல்லீரல் மேம்பட்டு செயல்படவும் ஆடா தொடா!
ஆஸ்துமாக்காரர்கள் குளிர்காலத்தில் கடும் அவதிப்படுவார்கள். இவர்[You must be registered and logged in to see this image.]களுக்கு இந்த ஆடாதோடை கலந்த சட்னி மிகவும் கை கொடுக்கும்.
எப்போதும்
சளி... எப்போதும் ஜுரம்... தலையில் தண்ணீர் கோர்த்து அவஸ்தை... ‘கொண
கொண'வென்று ஈனஸ்வரத்தில் ஒலிக்கும் குரல்... வெயில் காலம் என்று இல்லை...
மழைக் காலம் என்று இல்லை... எப்போதும் சளித் தொந்தரவுதான்...
இப்படி அலுத்துக் கொள்ளுவோர் எப்போதும் பயன்படுத்த வேண்டியது தூதுவளையைத்தான்!
தூதுவளை வெறும் சளி... ஜலதோஷத்துக்கானது என்று எண்ணிவிட வேண்டாம்... நல்ல நரம்பு டானிக் என்று கூட இது செயல்படுகிறது.
இதோ... தூதுவளையைப் பயன்படுத்தி ஒரு சூப்பர் ஃபுட்டிங்
[You must be registered and logged in to see this image.]
தேவை :
வறுத்த தினை மாவு - 1 கப்
சுத்தப்படுத்தி விழுதாக அரைத்து வேக வைத்த தூதுவளை - 1/4 கப்
வெல்லப்பொடி - 1/2 கப்
கிஸ்மிஸ் பழம் - 10
பொடித்த பாதாம் பருப்பு - 1 தேக்கரண்டி
பால் - 1/4 கப்
செய்முறை :
தினை மாவுடன் வெல்லப் பொடி, சுத்தப்படுத்தி விழுதாக அரைத்து வேக வைத்த தூதுவளை விழுது ஆகியவற்றை கொ[You must be registered and logged in to see this image.]ஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கலக்கவும். தேவையானால் சிறிது பால் தெளித்து உதிரி உதிரியாகக் கலக்கவும்.
இத்துடன் கிஸ்மிஸ் பழங்கள் மற்றும் பொடித்த பாதாம் பருப்பைக் கலந்து பரிமாறவும்.
மருத்துவ குணங்கள்
உறுதியான
உடல்கட்டைப் பெறலாம். உடல் சோர்வு இல்லாமல் தொடர்ந்து வேலை செய்யும்
சக்தியை அளிக்கும். சளி சேராமல் நுரையீரலைப் பாதுகாக்கும். நரம்புத் தள
ர்ச்சி இருப்போருக்கு நல்ல தீர்வு இந்த ஃபுட்டிங்.
[You must be registered and logged in to see this image.]
தேவை
ஆவாரம் பூ .... 1 கப்
பாசிப்பருப்பு ..... 1 மேஜைக்கரண்டி
தக்காளிச் சாறு.... 1/4 கப்
மிளகுத் தூள்... 1/2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் 1/4 கப்
உப்பு... ருசிக்கேற்ப
எண்ணெய்... 1/4 கப்
கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிதம் செய்ய.
செய்முறை
பாசிப்பருப்பை லேசாக வறுக்கவும். போதுமான நீர் சேர்த்து[You must be registered and logged in to see this image.] குழைய
வேக வைக்கவும். வாணலியை சூடாக்கி சுத்தப்படுத்திய பூவை சிறிது எண்ணெயில்
வதக்கவும், அதன் பின் தேங்காய்த் துருவலையும் வதக்கவும்.
மிக்ஸியில்
பருப்பை அரைத்து, அதன் பின் பூவை அரைத்து, தேங்காய்த் துருவலையும்
அரைக்கவும். பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைக்கவும்.
வாணலியில்
எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து அதில்
சீரகத்தைத் தாளித்து, இஞ்சியையும் லேசாக வதக்கவும். தக்காளிச் சாறை சேர்
த்து கொதிக்க விடவும். அரைத்த விழுதைச் சேர்த்து கிளறவும். மசித்த
பருப்பைக் கூட்டி நன்கு வெந்த தருணத்தில் அதில் உப்பு சேர்த்து இறக்கி
விடவும்.
இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என்று அனைத்துக்கும் மிகவும் சுவை சேர்க்கும் சட்னி இது.
என்ன பயன்?
இதயத்துக்கு மிகவும் பயன் அளிக்கும் ஆவாரம் பூ.
வயதானோர்
அடிக்கடி இரவில் சிறு நீர் கழிக்கும் உபாதை இருக்கும். இவர்கள் இரவில்
இந்த சட்னி சாப்பிட இந்த நிலை குறையும். இரத்தக் கடுப்பு நீங்கும்.
நீரிழிவு
தொடங்கி ஆளே உருக்குலைந்து அடையாளம் தெரியாமல் மெலிந்து, கண்ணின் கீழ்
கருவளையம், ஒட்டிய முகமாக அகோரப் பட்டிருப்பவர்கள் தகுந்த டயட்டில்
இருந்துகொண்டு ஆவாரம் பூவையும் பயன்படுத்தினால் இந்த தீவிரத் தாக்கம்
குறையக் காணலாம்.
ஆரம்பக் கட்டத்திலேயே ஆவாரம் பூவை உபயோகப்படுத்தினால், கண்பர்வை இழப்பைத் தவிர்க்கலாம்.
இரத்த சர்க்கரை அளவு குறைய ஆவாரம் பூ! கண் பார்வை தெளிவாக, மேனி பளபளக்க இயற்கையான வழி ஆவாரம் பூவை உட்கொள்ளுதல் என்பதை அறியவும்.
புதியதாகப் பறித்த பூவை பயன்படுத்துதல் நலம். அப்படி கிடைக்காவிட்டால் பூவை நிழலிலே உலரவைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
ஆப்பிளில்
பலவகை. அதில் கிரீன் ஆப்பிள் என்னும் பச்சை வண்ண ஆப்பிள் மிகவும்
அற்புதமானது. அது கிடைக்காவிட்டால் சிறிய சைஸ் நாட்டு ஆப்பிள் பயன்படு த்தி
ஒரு சூப்பர் ரைஸ் தயாரிக்கலாம்.
[You must be registered and logged in to see this image.]
தேவை
நறுக்கிய ஆப்பிள்.... 1 கப்
வேகவைத்த பச்சரிசி / சீரகச் சம்பா / பாசுமதி அரிசி சாதம்... 2 கப்
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம்
பச்சை மிளகாய் (நீளவாக்கில் கீறியது)
கெட்டியான தக்காளிச் சாறு... 1/4 கப்
இஞ்சி, பூண்டு விழுது... 1 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, சோம்பு.. தாளிக்க
முந்திரி, திராட்சை .... 10
நெய்... 2 மேஜைக்கரண்டி
செய்முறை :
அரிசியை
அதன் தரம் பொறுத்து ஊறவைத்து, கழுவி, நீர் வடித்து வைக்கவும். இதை
முக்கால் திட்டத்தில் வேக வைத்து பொலபொலவென்று உதிர்த்து வைக்கவும்.
அதிகம் இனிப்பில்லாத ஆப்பிள் பழத்தை மூன்று சென்டிமீட்டர் துண்டங்களாக நறுக்கி, சிறிது எலுமிச்சைச் சாறு விட்டு குலுக்கி வைக்கவும்.
வாணலியில் நெய்யைச் சூடாக்கி, முந்திரி திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
மீதமுள்ள நெய்யில் ஆப்பிள் துண்டங்களை மிதமாக வதக்கி எடுக்கவும்.
மீதமுள்ள
நெய்யில் சோம்பு, பட்டை, கிராம்பு, தாளிதம் செய்து வெங்காயத்தைக் கூட்டி
மிதமாக வதக்கவும். இத்துடன் தக்காளிச் சாறு சேர்த்து, உப்பு கூட்டி நன்கு
புரட் டவும்.
பச்சை வாடை போன பிறகு கொஞ்சம் கொஞ்ச[You must be registered and logged in to see this image.]மாக
சாதத்தைச் சேர்த்து புரட்டவும். மூடி போட்டு ஒரு நிமிடம் சிம்மில் வைத்து,
இறக்கும் போது முந்திரி, திராட்சையை சேர்த்து சூடாக சுவைக்கவும்.
சுவை மிகுந்த ஒரு பல் சுவை பண்டம் இது!
என்ன பயன்?
ஆப்பிளைப் பற்றி தனியாக விளக்க வேண்டுமா என்ன? ஊரறிந்த சிறப்பான பழம் இது.
குறிப்பாக வயிற்று பிரச்சனைகள் உள்ளோருக்கு ஆப்பிள் ஒரு வரப்பிரசாதம். (வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடக் கூடாது)
வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் திறன் ஆப்பிளுக்கு உண்டு. ஆப்பிளில் வைட்டமின்
ஏ, பி -1. பி -2, சி, இ, நியாசினன்,
மாலிக் ஆசிட், சிட்ரிக் ஆசிட் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன.
குழந்தைகளுக்கு ஆப்பிள் தரலாம். பற்சிதைவைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.
படிக்கும் குழந்தைகளுக்கு ஆப்பிள் தர அது மூளையையும், நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தி திறம்பட மிளிர வைக்கும்.
இரத்த சோகையை நீக்கி, ரத்த விருத்தி மற்றும் சுத்திக்கு ஆப்பிள் தொடர்ந்து சாப்பிடலாம்.
உடலுக்கு ஊட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தர தினசரி ஆப்பிள் சாப்பிடலாம்.
thanks:tamilsoures
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ஒரே புகைப்படத்தில் ஆறு தலைமுறையினர். 111-வயது,88-வயது,70-வயது,39-வயது,16 வயது,7 வாரம்.
» 24 வயது ஆண்மகனை சேர்த்து வைக்க போலீசிடம் உதவி கேட்ட 50 வயது பெண்
» 13 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற 45 வயது பொலிஸ் அதிகாரி கைது
» 17 வயது மாணவனுடன் 37 வயது ஆசிரியர் ஓட்டம்! துரத்தி பிடிக்கச் செல்கிறது பொலிஸ் படை!
» 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் : வயது முதியவர் கைது
» 24 வயது ஆண்மகனை சேர்த்து வைக்க போலீசிடம் உதவி கேட்ட 50 வயது பெண்
» 13 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற 45 வயது பொலிஸ் அதிகாரி கைது
» 17 வயது மாணவனுடன் 37 வயது ஆசிரியர் ஓட்டம்! துரத்தி பிடிக்கச் செல்கிறது பொலிஸ் படை!
» 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் : வயது முதியவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum