Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்னையை விரைவில் தீருங்கள்: அப்துல் கலாம்
Page 1 of 1

சென்னை: ""கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையை அரசியல் ரீதியாகவும்,
செயல்திட்ட ரீதியாகவும் விரைவில் தீர்க்க வேண்டியது அவசியம். இதற்காக நாடு
தழுவிய பிரசாரம் ஒன்றையும் துவக்க வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன்
சிங்கிற்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்னாள் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி
டாக்டர் அப்துல்கலாம் எழுதியுள்ள கடிதம் விவரம்: கடந்த நவம்பர் 5 மற்றும்
6ம் தேதிகளில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை நேரில் பார்த்து,
விஞ்ஞானிகள், பொறியாளர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினேன். அணுமின் நிலைய
தொழில்நுட்பங்களை, பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்தேன். கதிரியக்க
பாதுகாப்பு, உள்கட்டமைப்பு பாதுகாப்பு, தெர்மோ ஹைட்ராலிக் பாதுகாப்பு
உள்ளிட்ட தொழில்நுட்பங்களில், இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளதை அறிந்தேன்.
அதன்பின் கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பதில் ஏற்படும் காலதாமதம்
குறித்து கவலைப்படும், அப்பகுதிகளை மக்களை சந்தித்துப் பேசினேன். அப்போது,
அணுமின் நிலையத்தை திறப்பதில் ஏற்படும் காலதாமதத்தால் தாங்கள் வேலை
இல்லாமல் இருப்பது, அணுமின் நிலையத்திற்காக கையகப்படுத்திய நிலத்திற்கு
இழப்பீடு தருவதில் ஏற்படும் தாமதம், அணுமின் நிலைய பாதுகாப்பு மற்றும்
முக்கியத்துவம் குறித்து, முறையான விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளாதது
குறித்து, என்னிடம் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
"தினமலர்' கட்டுரை: நாட்டின் சிறந்த வளர்ச்சிக்கு அணுமின் சக்தி
தான் நுழைவாயில். அணுமின் சக்தியின் அவசியம் மற்றும் பாதுகாப்பு குறித்து,
"தினமலர்' நாளிதழில், 39 பக்கங்கள் கொண்ட ஆய்வுக் கட்டுரை எழுதினேன்.
அதில், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க, அந்தப்
பகுதியில் மேற்கொள்ள வேண்டிய மக்கள் முன்னேற்ற திட்டங்கள் குறித்து, 10
அம்ச கருத்துருவை மத்திய அரசுக்கு தெரிவித்தேன். மேலும், அணுசக்தி தொடர்பான
21வது சர்வதேச கருத்தரங்கில் பேசும் போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தின்
பாதுகாப்பு அம்சங்களை விளக்கினேன்.
சிறந்த பாதுகாப்பு அம்சம்: உலகில் 29 நாடுகளில் உள்ள, 539 அணு
உலைகளில், 14 ஆயிரம் ஆண்டு கால அணுமின் சக்தி உற்பத்தி அனுபவங்கள் உள்ளன.
இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ( ஏ.இ.ஆர்.பி.,), பாபா அணு ஆராய்ச்சி
மையம் மற்றும் ஐ.ஐ.டி., நிறுவனம், மத்திய மின்சார ஆணையம், மின் கொதிகலன்
வாரியம் ஆகியவற்றை சேர்ந்த நிபுணர்கள் 7,000 மனித நாட்கள் வரை செலவிட்டு,
கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் அணு உலைகளின் பாதுகாப்பு பற்றி ஆய்வு
செய்துள்ளனர். சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் வழிகாட்டுதல்படி, உயர்
தொழில்நுட்பம் கொண்ட "3 பிளஸ்' வகையைச் சேர்ந்த வி.வி.இ.ஆர்., ரக உலைகள்
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையம் மூன்றாம்
தலைமுறை பிரிவைச் சேர்ந்தது. தரமான டிசைன் மற்றும் உயர் பாதுகாப்பு
அம்சங்களைக் கொண்டது.
தொடரும் போராட்டம்: தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும்
கையாண்ட பிறகும், கூடங்குளம் மின் நிலையத்திற்கு எதிராக போராட்டம்
தொடர்கிறது. கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தை தீர்க்க, மேலும்
நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென, தமிழக அரசும் கேட்டுக் கொண்டுள்ளது.
எனவே, கூடங்குளம் பிரச்னையை தீர்க்க, நாம் மேலும் காலதாமதம் செய்தால்,
அணுசக்திக்கு எதிரான மக்களின் உணர்வுகள் மேலும் அதிகரித்து பிரச்னையை
ஏற்படுத்தும். ஆகையால், கூடங்குளம் பிரச்னையை அரசியல் ரீதியாகவும்,
செயல்திட்ட ரீதியாகவும் விரைவில் தீர்க்க வேண்டியது அவசியம். அத்துடன்,
அணுசக்தி ஆதரவாக, தேசிய அளவிலான பிரசாரம் ஒன்றையும் துவக்க வேண்டியது
கட்டாயம். மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்களுடன் சேர்ந்து இவற்றை
மேற்கொள்ள வேண்டும்.
பொதுக் கொள்கை: அதேநேரத்தில், அணு உலைகள் அமைக்கப்படும் பகுதிகளை
மேம்படுத்துவதற்காக, ஒரு பொது கொள்கை ஒன்றையும் உருவாக்க வேண்டும்.
அணுமின் நிலையங்களால் பாதிக்கப்படும் மற்றும் இடம் பெயரும் மக்களுக்கு
இழப்பீடு தரவும், அவர்களுக்கு விரைவாக மறுவாழ்வு அளிக்கவும், தற்போதுள்ள
அரசின் செயல்பாட்டு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியம். அந்த
அடிப்படையில், கூடங்குளம் பிரச்னையை விரைவில் தீர்ப்பதற்கான சில யோசனைகளை
முன்வைக்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கலாம் கூறியுள்ளார்.
அமல்படுத்த வேண்டிய செயல் திட்டங்கள்: கூடங்குளம் அணுமின்
நிலையத்தைச் சுற்றியுள்ள 50 முதல் 60 வரையிலான கிராமங்கள் பயன்பெறும்
வகையில், 200 கோடி ரூபாய் மதிப்பிலான "புரா' (நகர வசதிகளை கிராமப்
பகுதிகளுக்கு அளித்தல்) திட்டத்தை, 2015ம் ஆண்டுக்கு முன் விரைந்து
செயல்படுத்த, மத்திய அரசும், இந்திய அணுமின் கழகமும் பரிசீலிக்க வேண்டும்.
* கூடங்குளத்தை சுற்றி, 30 கிலோ மீட்டர் சுற்றளவிலுள்ள
கிராமங்களை நான்கு வழிச் சாலை மூலம் ஒன்றிணைத்து, அந்தச் சாலையை,
திருநெல்வேலி - கன்னியாகுமரியை இணைக்கும் தங்க நாற்கரச் சாலையுடன் சேர்க்க
வேண்டும்.
* கூடங்குளத்தை சுற்றி, 30 முதல் 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்
பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவி, அதில் குறைந்தது 10 ஆயிரம் பேருக்காவது
நேரடி வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். இதற்கு முன்வரும்
தொழில்முனைவோருக்கு, 25 சதவீத மானிய வட்டியுடன் வங்கிக்கடன் வழங்க
வேண்டும்.
* கூடங்குளம் கடலோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு பசுமை வீடுகள்,
அடுக்குமாடி வீடுகள், சமூக நலக்கூடம் மற்றும் விளையாட்டு மைதான வசதிகளை
ஏற்படுத்தித் தர வேண்டும். மீனவர்களுக்கு உதவும் வகையில், அதிவேகமாக
செல்லும் படகுகள், கப்பல் இறங்கு தளம், மீன்பதப்படுத்தும் மையம், மீன்கள்
இருப்பும் வைக்கும் மையம் போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
* கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு, தினமும்
குறைந்தது ஒரு கோடி லிட்டர் கொள்ளளவில், சுத்திகரித்த குடிநீர் வழங்க
ஏற்பாடு செய்ய வேண்டும்.
* தேவைப்பட்டால், கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள
பகுதியினருக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பேச்சிப்பாறையிலிருந்து
குடிநீர் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
* உலகத்தரம் வாய்ந்த 500 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை
கூடங்குளம் பகுதியில் அமைக்க வேண்டும். பரிசோதனை கூட வசதிகள் கொண்ட இரண்டு
நடமாடும் (மொபைல்) மருத்துவமனைகளையும் உருவாக்க வேண்டும். கூடங்குளம்
மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு, "டெலிமெடிசின்' (தகவல்
தொழில்நுட்பம் மூலம் தொலைதூர, உள்ளடங்கிய பகுதிகளுக்கு மருத்துவ வசதிகள்
கிடைக்க ஏற்பாடு செய்தல்) கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
* கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கிராமத்தின் குழந்தைகள் சிறந்த
கல்வி பெற, விடுதிகளுடன் கூடிய மத்திய, மாநில அரசு பாடத்திட்டத்தில்
இயங்கும் உயர்தர கல்வி தரும் பள்ளிக்கூடங்கள் அமைக்க வேண்டும்.
* அனைத்து கிராமங்களுக்கும் இணையதளம் மற்றும் அகண்ட அலைவரிசை வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
* அணுமின் கழகம் மற்றும் கிராம மக்களுக்கு இடையே நல்லுறவு
தொடரும் வகையில், தேசிய அளவில் சிறந்த திறமை வாய்ந்த மக்கள் தொடர்பு
குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். அதோடு, பேரிடர் மேலாண்மை மையங்கள்
நிறுவப்பட்டு அவற்றின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட
வேண்டும். மக்களுடன் தொடர்பு கொள்வதற்காக, இந்திய அணுசக்தி கழகம்,
கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இந்திய அணுமின் நிறுவனம் ஆகியவை
இணைந்து, ஓர் ஆலோசனைக் குழுவை அமைத்து, மக்களுடன் தொடர்பில் இருக்க
வேண்டும்.
* ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் இளைஞர்கள் அடையாளம்
கண்டறியப்பட்டு, கூடங்குளம் நிலையத்தில் பணிபுரிவதற்கான பயிற்சிகளுக்காக
தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு போதிய உயர் கல்வி அளித்து அவர்களை
பணியில் அமர்த்திக் கொள்ள வேண்டும்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக அரசுக்கு அறிக்கை: கலாம்
» அப்துல் கலாம் சமாதியில் அஞ்சலி செலுத்திய 'உடுமலை கலாம்'!
» அப்துல் கலாம் ஒரு ஹிட்லர்
» அப்துல் கலாம் - இது தற்செயலா?
» அப்துல் கலாம் -காணொளி -

Permissions in this forum:
You cannot reply to topics in this forum