Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உதிரப்போக்கை நிறுத்தும் உதிரம்!
Page 1 of 1
உதிரப்போக்கை நிறுத்தும் உதிரம்!
மனிதனைக்
கீறினால் ரத்தம் வரும். மரத்தைக் கீறினாலும் ரத்தம் வருமா? வருகிறதே...
உதிர வேங்கை மரத்தைக் கீறினால் கையை வெட்டியது போல் ரத்தம் வழிகிறது.
பெண்களின்
உதிரப்போக்குப் பிரச்னைக்கு மாமருந்தாகச் சொல்கிறார்கள் இந்த மரத்தை!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழப்புனல்வாசல்
கிராமத்தில்தான் பொக்கிஷமாக உயர்ந்து நிற்கிறது இந்த உதிர வேங்கை.
உள்ளூர்வாசியான
பழனியப்பன், ''இது முருகக் கடவுளின் மரம். வள்ளியைத் திருமணம்
செய்துகொள்வதற்காகத் திடீரென மரமாகி நாடகம் நடத்துவார் முருகன். அப்போது
வேடன் ஒருவன் அந்த மரத்தின் மீது அம்பை எய்ய, மரத்தில் இருந்து ரத்தம்
கசிந்து ஓடும். அப்போதுதான் அது மரம் அல்ல; முருகப் பெருமான் என்பது
தெரியும். அந்த மரம்தான் உதிர வேங்கை!
வயசுக்கு
வந்த பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்னை, அளவுக்கு அதிகமான
உதிரப்போக்கு. அதனைக் குணமாக்கும் தன்மை இந்த மரத்தின் பட்டைகளுக்கு
இருக்கிறது. பட்டையைக் காரம் தீண்டாத அம்மியில் அரைத்து, பாலில் கலந்து [You must be registered and logged in to see this image.]காலையில்
வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உதிரப்போக்கு உடனே நின்றுவிடும். இது
கர்ப்பப்பையைச் சுத்தப்படுத்தும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்
சக்தியும் இந்தப் பட்டைக்கு உண்டு!'' என்றவர், அரிவாளால் ஒரு பட்டையை மெள்ள
வெட்டி எடுத்தார். அடுத்த கணமே மரத்தில் இருந்து ரத்தம்போன்ற திரவம்
கசிய ஆரம்பித்தது.
''வெட்டுப்பட்ட
இடத்தில், சாணத்தை வைத்துப் பூசிவிட்டால், ரத்தம் வருவது கட்டுப்படும்;
மரமும் பட்டுப்போகாது. கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருக்கிற இந்த உதிர
வேங்கை மரத்தை, நாங்க ரொம்பக் கவனமாகப் பாதுகாத்து வருகிறோம். இந்த
உதிரவேங்கை மரத்தை கிளையை வெட்டிப் புதைத்துவைத்தோ, ஒட்டு முறையிலோ
உருவாக்க முடியாது. அதுவே தானாக முளைத்தால்தான் உண்டு. குறிஞ்சி மலர் போல
12 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே இது காய் காய்க்கும்!'' என்று
மலைக்கவைக்கிறார்.
தமிழ்ச்செல்வி
என்பவர், ''இது சாமி மரம். கல்யாணம் ஆகாதவங்க இந்த மரத்தின் பட்டையை
வெட்டக் கூடாது. ஒரு முறை உதிர வேங்கை மரத்தை ஒருத்தர் விலை கொடுத்து
வாங்கி மரத்தை வெட்டிட்டார். ரத்தம் ஆறு போல ஓடிக்கிட்டே இருந்துச்சு.
'மனுஷனை வெட்டினாக்கூட இந்த அளவுக்கு ரத்தம் கொட்டாதே’ன்னு ஊரே புலம்பித்
தவிச்சிட்டோம்!'' என்கிறார் மரத்தை அணைத்தபடி.
சித்த
மருத்துவரான தஞ்சாவூர் இளமாறன், ''ரத்தப்போக்கு நோய்க்கு உதிர வேங்கை
மரத்தின் பட்டை அற்புதமான மருந்து. இந்தப் பட்டையை 4 கிராம் அளவில்
எடுத்து 50 மில்லி அளவு சூடான நீரில் இரவு ஊறவைத்துவிட வேண்டும். காலையில்
அந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சீதபேதி, ரத்தபேதிக்கும் இது சிறந்த மருந்து!'' என்கிறார் உற்சாகமாக.
சர்க்கரை நோயைத் தடுக்கும்!
உதிர
வேங்கை மரத்தைக் கீறினால் எப்படி ரத்தம் வருகிறது? தஞ்சை மருத்துவக்
கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியரும், சிறுநீரக மருத்துவருமான மோகன்தாஸ்,
''உதிர வேங்கையை தாவரவியலில் 'பீரோகார்பஸ் இண்டிகஸ்’ என்பார்கள்.
மரத்தில் இருக்கும் 'ரெட் கிரிஸ்டல்’கள்தான் ரத்தம்போல் வரும் சாறுக்குக்
காரணம். அதோடு, டானிக் ஆசிட், அமினோ ஆசிட் என பல்வேறு சத்துப் பொருட்கள்
அந்த மரத்தில் இருக்கின்றன. உதிரப்போக்குக்கு மட்டும் அல்லாது,
பெண்களுக்கு ஏற்படும் அடிவயிற்று வலிக்கும் இது அற்புதமான மருந்து.
ஜப்பானில் இதன் இலைகளைப் பயன்படுத்தி கேன்சரைத் தடுக்கும் ஆன்ட்டி
ட்யூமரைத் தயாரிக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மரம் இதுதான்.
இதில் நார்ச் சத்தும், செரிமானத் தூண்டுதலும் அதிகம் இருப்பதால், சர்க்கரை
நோயைத் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. இது உதிரத்தை உறையவைப்பதால்,
மன்னர்கள் காலத்தில் வெட்டுக் காயங்களுக்கும் இதைத்தான் மருந்தாகப்
பயன்படுத்தி இருக்கிறார்கள்'' என்றார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தாய்ப்பால் நிறுத்தும் முறை
» தனது மின்னஞ்சல் சேவையினை நிறுத்தும் பேஸ்புக்
» குடியை நிறுத்தும் மரபணு: ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு
» மூளையின் செயல்பாடுகளை நிறுத்தும் ஆப் சுவிட்ச்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு...
» இதயத்துடிப்பை நிறுத்தும் அழகான மனித உடலில் வரைய பட்ட ஓவியங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum