Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புயலால் கடலூரில் கடுமையான சேதம்: மத்தியக் குழு கருத்து
Page 1 of 1
புயலால் கடலூரில் கடுமையான சேதம்: மத்தியக் குழு கருத்து
கடலூர் மாவட்டம் வாழப்பட்டு கிராமத்தில் புயலால்
சேதம் அடைந்த வாழைத் தார்களை, திங்கள்கிழமை வந்த மத்தியக் குழுவிடம்
காட்டும் விவசாயிகள். (வலது) தனக்கு ஏற
கடலூர், ஜன. 9: கடலூர் மாவட்டத்தில் "தானே' புயலால் மிகக் கடுமையான சேதம்
ஏற்பட்டுள்ளதாக அந்த மாவட்டத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்த மத்தியக் குழு கருத்துத்
தெரிவித்துள்ளது.
தானே புயலால் கடலூர் மாவட்டத்தில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. நெல், மணிலா,
கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களும் தென்னை, முந்திரி, மா, பலா உள்ளிட்ட மரங்களும்
குடிசைகள், சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன் மின் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் சேதங்களை மத்திய உள்துறை இணைச் செயலாளர் லோகேஷ் ஜா
தலைமையிலான மத்திய அரசு அதிகாரிகள் குழுவினர் திங்கள்கிழமை பார்வையிட்டனர்.
பாதிக்கப்பட்ட பல விவசாயிகள், குழுவினரிடம் கதறி அழுது குறைகளை எடுத்துக் கூறினர்.
விவசாயிகளைச் சந்தித்த குழு: வான்பாக்கம் கிராமத்தில் சம்பா நெல் முற்றிலும்
சேதம் அடைந்து கிடப்பதை குழுவினர் பார்வையிட்டனர். அப்போது குழுவினரிடம் கோதண்டராமன்
என்ற விவசாயி கூறுகையில், "10 ஏக்கருக்கு மேல் நெல் முற்றிலும் அழிந்து விட்டது.
கரும்பும் சேதம் அடைந்து விட்டது.
விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மின் விநியோகம் சீரடையவில்லை.
பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து மாநில அரசு அதிகாரிகள் சரியாக கணக்கெடுப்பு
நடத்தவில்லை. அரசு அதிகாரிகள் தவறான புள்ளி விவரங்களைத் தெரிவிக்கிறார்கள். உண்மை
நிலை அரசுக்கு சொல்லப்படவில்லை' என்றார்.
வான்பாக்கத்தில் பயிர் சேதங்களை மத்தியக்குழு பார்வையிட்டபோது, ஸ்ரீதர் என்ற
விவசாயி கதறி அழுதார். தனது 10 ஏக்கரில் இருந்த தென்னை மரங்கள் அனைத்தும்
விழுந்துவிட்டதாகத் தெரிவித்தார். தனது வாழ்வாதாரமே விழுந்து விட்டதாகவும் அவர்
கூறினார்.
மத்தியக் குழுவினர் நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரம், வான்பாக்கம், மேல்
பட்டாம்பாக்கம், மேல்மாம்பட்டு, சாத்திப்பட்டு, தாழங்குடா, சில்வர் பீச், கேப்பர்மலை
நீரேற்று நிலையம் உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர். அந்தப் பகுதிகளில்
பாதிக்கப்பட்ட பயிர்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.
ரூ. 5 ஆயிரம் கோடி இழப்பு: மத்தியக் குழுவுடன் வந்திருந்த தமிழக அரசு உயர்
அதிகாரி ஒருவர் கூறுகையில், "தானே புயல் சேதம் ரூ. 5 ஆயிரம் கோடியைத் தாண்டும்.
அதில் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சேதம் மட்டும், ரூ. 4 ஆயிரம் கோடிக்கு மேல்
இருக்கும்' என்றார்.
பாதிப்பு அதிகம்தான் - மத்தியக் குழு கருத்து: மத்தியக் குழுத் தலைவர் லோகேஷ்
ஜா கூறுகையில், "புயல் பாதிப்பு கடலூரில் மிகக் கடுமையாக உள்ளது. இயற்கை பேரிடரால்
பாதிக்கப்பட்ட பகுதி என்று இந்த மாவட்டத்தை அறிவிப்பது குறித்து, இப்போதைக்கு
எதுவும் சொல்ல முடியாது. அது பற்றி ஆலோசிக்கப்படும்.
மத்திய ஊரக மின் வாரியத்தை வரவழைப்பது குறித்து மாநில அரசுடன் கலந்து
ஆலோசித்துதான் முடிவெடுக்க இயலும்.
பாதிப்புகளும் பாதிக்கப்பட்ட பகுதிகளும் அதிகமாக இருப்பதால், புயல் பாதிப்பு
பற்றிய அறிக்கையை மத்திய அரசிடம் உடனே அளித்துவிட முடியாது. கால அவகாசம் வேண்டும்.
புயல் நிவாரணப் பணிகளில் மாநில அரசு தன்னால் இயன்ற அளவுக்கு சிறப்பாகச் செயல்பட்டு
உள்ளது' என்றார்.
தமிழக அரசின் வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் ராஜகோபால், வருவாய் நிர்வாக
ஆணையர் ஞானதேசிகன், தோட்டக் கலைத்துறை ஆணையர் சந்தோஷ் பாபு, மீன் வளத்துறை இயக்குர்
ராஜேந்திர ரத்னு, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் விஜயகுமார், நகராட்சிகளின் நிர்வாக
ஆணையர் வினோத் காம்ளே, சிறப்பு அலுவலர் எஸ்.கே.பிரபாகர், கடலூர் மாவட்ட புயல்
நிவாரண சிறப்பு அலுவலர் அபூர்வா, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி, மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் பகலவன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்று இருந்தனர்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஜி-20 நாட்டு தலைவர்கள் கருத்து வேறுபாடு : ஒருமித்த கருத்து ஏற்படுத்த பெரும் திணறல்
» நிவாரணத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி: மத்தியக் குழுவிடம் கோருகிறது தமிழகம்
» கோஸ்டாரிக்காவில் கடுமையான பூகம்பம்.....
» கடலூரில் இலங்கை தமிழர்களுக்காக வாலிபர் தீக்குளித்தார்
» கடலூரில் இளம்பெண் காரில் கடத்தி கற்பழிப்பு!!
» நிவாரணத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி: மத்தியக் குழுவிடம் கோருகிறது தமிழகம்
» கோஸ்டாரிக்காவில் கடுமையான பூகம்பம்.....
» கடலூரில் இலங்கை தமிழர்களுக்காக வாலிபர் தீக்குளித்தார்
» கடலூரில் இளம்பெண் காரில் கடத்தி கற்பழிப்பு!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum