Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கூடங்குளத்தில் போராட்டம் நடத்தும் உதயகுமார் பணம் வசூலிப்பது எப்படி ? புது விளக்கம்
Page 1 of 1
கூடங்குளத்தில் போராட்டம் நடத்தும் உதயகுமார் பணம் வசூலிப்பது எப்படி ? புது விளக்கம்
சென்னை: ""வரும் 30ம் தேதி, கூடங்குளத்தில் ஒப்பாரி போராட்டம்
நடத்துகிறோம். அன்று, கூடங்குளம் அணுமின் நிலைய மாதிரி வரைபடம் தீயிட்டு
எரிக்கப்படும்,'' என, அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் மிரட்டல்
விடுத்துள்ளார். மீனவர்கள், பீடித் தொழிலாளர்கள் தரும் பணத்தைக் கொண்டு
போராட்டம் நடத்துகிறோம் என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் உதயகுமார்
நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கிறிஸ்துவ அமைப்புகளிடமிருந்து பணம்
பெற்று, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நாங்கள் போராடுவதாகக்
கூறப்படுகிறது. இவ்வாறு கூறுபவர்கள், அதை நிரூபிக்க வேண்டும். எங்கள்
பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், இரண்டு வாரத்திற்கு ஒருமுறை, தங்கள்
வருவாயில், 10 சதவீதமும், பீடித் தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தில், 10
சதவீதமும் போராட்டத்திற்கு தருகின்றனர். கூடங்குளம், செட்டிக்குளம் பகுதி
மக்களும் நன்கொடை அளிக்கின்றனர். மத்திய அரசு தான், அமெரிக்கா, பிரான்ஸ்,
ரஷ்யா ஆகிய நாடுகளின் அணுசக்தி நிறுவனங்களிடம், "கமிஷன்' வாங்கிக் கொண்டு,
மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் செயல்படுகிறது. அடுத்த மாதம் நடைபெற உள்ள
முதல்வர்கள் மாநாட்டில், மத்திய அரசின் எரிசக்தி கொள்கை, அணுசக்தி கொள்கை
குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க முதல்வர் மம்தா, உத்தர
பிரதேச முதல்வர் மாயாவதி ஆகியோர், கேள்வி கேட்க வேண்டும். இதை வலியுறுத்தி,
அவர்களுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. வரும் 30ம் தேதி,
கூடங்குளத்தில் ஒப்பாரி போராட்டம் நடத்துகிறோம்; அன்று, கூடங்குளம் அணுமின்
நிலைய மாதிரி வரைபடம் தீயிட்டு எரிக்கப்படும். இவ்வாறு உதயகுமார்
கூறினார். அணுசக்தி எதிர்ப்புக் குழு உறுப்பினர்கள் முகிலன்,
எம்.பி.ஜேசுராஜ் ஆகியோர் உடனிருந்தனர். மாநில முதல்வர்களுக்கே உத்தரவு
போடும் வகையில் உதயகுமார், பேட்டியின் போது ஆவேசமாக பேசினார்.
மவுனம் ஏன்? : தமிழக
மாவட்டங்களில், நான்கு முதல், ஆறு மணி நேர மின் வெட்டு இருப்பினும்,
கூடங்குளம் விவகாரத்தில், தமிழக அரசு மவுனம் சாதிப்பதும், உதயகுமார்
போன்றோர் மீது தமிழக அரசு நடவடிக்கை ஏதும்
எடுக்காமல் இருப்பதும் ஏன் என்பது புதிராக உள்ளதாக, பொதுமக்கள் கருத்து
தெரிவிக்கின்றனர்.பணம் வசூல் கதை உண்மையா? : "அணு
உலைக்கு முதல்வர் ஆதரவு தெரிவிக்க வேண்டும்!' : "கூடங்குளம் அணுமின்
நிலையத்திற்கு ஆதரவான நிலையை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் எடுக்க வேண்டும்'
என, கூடங்குளம் அணுமின் நிலைய ஆதரவு மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர்,
சத்தியசீலன் வலியுறுத்தினார். இதுகுறித்து, மேலும் அவர் நிருபர்களிடம்
கூறியதாவது: நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், கூடங்குளம் அணுமின் நிலைய
எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதுடன், அணுசக்தி கழகத் தொழிலாளர்களை
மிரட்டுவதாகவும் தெரிகிறது. அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது இதுவரை,
100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளின் நிலை
குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டும், மாவட்ட காவல் துறை
ஆய்வாளர் கருணாசாகர் இதுவரை பதிலளிக்கவில்லை. மாவட்ட கலெக்டர் மற்றும்
காவல் துறை ஆய்வாளரின் போக்கை கண்டிக்கிறோம். தமிழக அரசு, நெல்லை மாவட்ட
கலெக்டர் மீது உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்; இல்லையெனில், மாவட்ட
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் விரைவில் நடத்தப்படும்.
கூடங்குளம்
அணுமின் நிலையத்தை திறக்க வலியுறுத்தி, வரும் 12ம் தேதி, நெல்லை ரயில்
நிலையத்திலிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை, மெழுகுவத்தி ஊர்வலம்
நடத்த உள்ளோம். புதுச்சேரி, காமராஜர் சிலை அருகில், வரும் 20ம் தேதி காலை
நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம்
பங்கேற்கிறார். 23ம் தேதி, மதுரை ரயில்வே கோட்ட வளாகத்திலும், 25ம் தேதி,
திருச்சி காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம்
முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். வரும் 30ம் தேதி, நாகர்கோவில் ரோட்டரி
சங்க வளாகத்தில், அணு உலை மாதிரி படத்தை வைத்து, சர்வ மதப் பிரார்த்தனை
நடைபெறும். இவ்வாறு சத்தியசீலன் கூறினார்.
ஒரே இடம்; இரண்டு
பிரிவு சென்னை, பத்திரிகையாளர் மன்றத்தில், நேற்று காலை, 11 மணிக்கு,
கூடங்குளம் அணுமின் நிலைய ஆதரவு மக்கள் இயக்கத்தினர், நிருபர்களை
சந்தித்தனர். இச்சந்திப்பு முடிந்த உடனே, அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார்
உள்ளிட்டோர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். கூடங்குளம் ஆதரவு, எதிர்ப்பு பிரிவினர் ஒரே இடத்தில் நிருபர்களை சந்தித்ததால், பத்திரிகையாளர் மன்ற வளாகம் நேற்று காலை, பரபரப்பாக இருந்தது.
கூடங்குளத்தில் லட்சக்கணக்கில் செலவு உதயகுமார் விடும், "கதை' : கூடங்குளம்
அணு உலையை எதிர்த்து நடத்தும் போராட்டத்துக்கு மீனவர்களிடமும், பீடித்
தொழிலாளர்களிடமும் வசூல் செய்து செலவு செய்வதாக உதயகுமார் கூறியுள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பணம் வசூல் செய்யவில்லை என்றும்
கூறியுள்ளார். ஆனால், உண்மை நிலை என்ன? கூடங்குளம் அணு உலைக்கு எதிரான
போராட்டம், 2011 ஜூலை மாதத்தில் தான் மும்முரமாக துவங்கியது. பின்,
ஆகஸ்டில் அரசு பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பின், செப்டம்பரில் இருந்து
தற்போது வரையிலும் தொடர்ந்து பல்வேறு வகையிலும் போராடி வருகின்றனர்.
கூடங்குளத்தில் நடக்கும் போராட்டங்களால் அங்கு, தொழில், வியாபாரம்
பாதிக்கப்பட்டது. இந்த போராட்டங்களுக்கு கூடங்குளம் மக்கள் அத்தனை ஆர்வம்
காட்டாததால், போராட்டக் களம், கடலோர மீனவர் கிராமமான இடிந்தகரைக்கு
மாறியது. இந்த போராட்டங்களுக்கு தினமும், குறைந்தபட்சம், 10 ஆயிரம் ரூபாய்
வரை செலவு ஏற்பட்டது. ஜெனரேட்டர், ஒலிபெருக்கி, சுற்றுவட்டார மக்களை
அழைத்து வர வாகனச் செலவு என, ஆரம்பத்தில், கிராமத்தினர் தாமாக முன்வந்து
செலவுத் தொகைக்கு பங்களிப்பை செய்தனர். ஆனால், தினம் தினம் போராட்டக்
களத்தில் இறங்கியதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை;
பெண்களும் பீடி சுற்றுவது உள்ளிட்ட கைத்தொழில்களை செய்ய முடியவில்லை. எனவே,
உதயகுமார் கூறுவதைப் போல போராட்ட கிராம மக்கள் தரும் பணத்தில் இத்தகைய
செலவுகளைச் செய்ய முடியாது.
மேலும், இடிந்தகரை போராட்டத்திற்கு முக்கிய
தலைவர்கள் வரும் போதெல்லாம் திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம்
ஆகிய இடங்களில் இருந்து பத்திரிகையாளர்கள், மீடியாக்களை வரவழைக்கின்றனர்.
இதற்கான வாகனச் செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் போராட்டக் குழுவினர்
தான் கொடுக்கின்றனர். உதயகுமார் உள்ளிட்டவர்கள் போராட்ட விளம்பரத்திற்காக
வெளியூர்களுக்கு செல்வது, போராட்டக்காரர்களை வாகனங்களில் வெளியூர்களுக்கு
அழைத்துச் செல்வது என, பல்வகையிலும் மாதந்தோறும் லட்சக்கணக்கில்
செலவிடப்படுகிறது.
எனவே, இதற்கெல்லாம் வெளிநாடுகளில் இருந்து தான் லட்சக்கணக்கில் பணம் வருவது ஊர்ஜிதமாகிறது.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மத்திய பிரதேசத்தில், தண்ணீருக்குள் நின்றபடி போராட்டம் நடத்தும் கிராம மக்கள். இந்தியர்களுக்கான சுதந்திரப் போராட்டம் இன்னும் முடிவடைய வில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது !
» கூடங்குளம் போராட்டம் - மம்தாவிடம் ஆதரவு கோரினார் உதயகுமார்!
» கூடங்குளத்தில் இன்று கடல் வழியாக முற்றுகை போராட்டம்
» உடன்பிறப்புக்கு சிறை நிரப்பும் போராட்டம்.. குடும்பத்துக்கு பதவி, பணம் நிரப்பும் போராட்டம்...
» இனிமேல் அணு உலை போராட்டம் வலுப்பெற முடியாது ’ கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பு : தயாராக இருக்க உத்தரவு
» கூடங்குளம் போராட்டம் - மம்தாவிடம் ஆதரவு கோரினார் உதயகுமார்!
» கூடங்குளத்தில் இன்று கடல் வழியாக முற்றுகை போராட்டம்
» உடன்பிறப்புக்கு சிறை நிரப்பும் போராட்டம்.. குடும்பத்துக்கு பதவி, பணம் நிரப்பும் போராட்டம்...
» இனிமேல் அணு உலை போராட்டம் வலுப்பெற முடியாது ’ கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பு : தயாராக இருக்க உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum