TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல்

Go down

முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Empty முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல்

Post by ஜனனி Sun Jan 08, 2012 6:58 am

சென்னை:நக்கீரன் இதழில் வெளியான, முதல்வர் ஜெயலலிதா தொடர்பான செய்திக்கு
எதிர்ப்பு தெரிவித்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள நக்கீரன் அலுவலகம்
தாக்கப்பட்டது.

நக்கீரன் இதழின் நேற்று வெளியான பதிப்பில், முதல்வர் ஜெயலிதா குறித்து
கட்டுரைச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்திக்கு எதிர்ப்பு
தெரிவித்து, காலை 10:30 மணிக்கு, 100க்கும் மேற்பட்டவர்கள், ஜாம் பஜார்,
ஜானி ஜான்கான் ரோட்டில் உள்ள நக்கீரன் தலைமை அலுவலகத்தின் முன் கூடி,
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அலுவலகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
அதில், அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்தன. காவலாளி சிவகுமார் உள்ளிட்ட
இருவருக்கு காயம் ஏற்பட்டது. கல் வீச்சு நடந்து கொண்டிருந்த போது,
அலுவலகத்தின் உள்ளே நக்கீரன் ஆசிரியர் கோபால், பத்திரிகையாளர்களுக்கு
விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். தாக்குதல் நடத்தியவர்களில் சிலர்,
அலுவலகத்திற்குள் நுழைந்தும் தாக்கினர். நக்கீரன் அலுவலக ஊழியர்கள் அவர்களை
விரட்டியதும், வெளியில் சென்று விட்டனர்.

தொடர்ந்து, அலுவலகத்தின் முன்பக்க கதவு இழுத்து மூடப்பட்டது. நக்கீரன்
அலுவலகத்தில் இருந்து போலீஸ் கமிஷனருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதால்,
திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பாஸ்கரன், உதவிக் கமிஷனர் செந்தில்குமரன்
தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
போலீசார், அனைவரையும் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில்
அடைத்து, பின் விடுவித்தனர். இதில், அசோக் எம்.எல்.ஏ., நக்கீரன்
அலுவலகத்திற்கு வெளியில் பூட்டு போட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால், உள்ளே இருந்த மற்ற பத்திரிகைகளின் நிருபர்கள் வெளியில் வர
முடியாமல் தவித்தனர்.கல் வீச்சில், நக்கீரன் அலுவலகத்தில்
நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள் சேதமடைந்தன.

நக்கீரன் இதழில் வெளியான செய்தி குறித்து, அ.தி.மு.க., மாணவரணியினர்,
ஜாம் பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தவிர, சென்னையில்
அண்ணா சாலை, கமிஷனர் அலுவலகம் அருகில் என பல இடங்களிலும் அ.தி.மு.க.,வினர்
கூடி, உருவ பொம்மை மற்றும் பத்திரிகை எரிப்பில் ஈடுபட்டனர்.அண்ணா சாலை,
அண்ணா சிலை அருகில் எம்.எல்.ஏ., கலைராஜன் கைது செய்யப்பட்டார். மேலும்,
அ.தி.மு.க., வழக்கறிஞர் ஜானகி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர்,
நேற்று பிற்பகல் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, நக்கீரன் இணை ஆசிரியர்
காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தனர்.

ஆதரவு தாருங்கள்: நக்கீரன் கோபால் வேண்டுகோள்!இதுகுறித்து,
நக்கீரன் ஆசிரியர் கோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:உயிருக்குப் பாதுகாப்போ,
உத்தரவாதமோ இல்லாத நிலையில், மனத் துணிவை மட்டும் ஆயுதமாகவும், கவசமாகவும்
கொண்டு நக்கீரன் குடும்பத்தினர் அனைவரும் அலுவலகத்தில் உள்ளோம்.இதழில்
வெளியாகும் செய்தி தொடர்பாக மாற்றுக் கருத்துக்கள் இருந்தால், சட்ட ரீதியான
நடவடிக்கைகள் எடுக்க வழி வகை உள்ளது. அதை எதிர்கொள்ளவும் நக்கீரன் தயாராக
இருக்கிறது.இந்த நெருக்கடியான நிலையில், பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட
ஊடக சகோதரர்கள், ஜனநாயகத்தில் நம்பிக்கை மிகுந்த அரசியல் கட்சித்
தலைவர்கள், சமுதாய அமைப்புகள் மற்றும் மனிதநேயர்கள் உள்ளிட்ட அனைவரின்
தார்மீக ஆதரவை நாடுகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நக்கீரன் செய்திக்கு பொன்னையன் மறுப்பு : ""நக்கீரன் இதழில்
முதல்வர் ஜெயலலிதா மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி
வெளியிடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அந்த இதழின் ஆசிரியர்,
வெளியீட்டாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அ.தி.மு.க.,
அமைப்புச் செயலர் பொன்னையன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:நக்கீரன் இதழில், ஜெயலலிதா மாட்டுக்கறி உண்பவர் என
வெளியிடப்பட்டுள்ளது முற்றிலும் பொய்யான செய்தி. அவர் எப்போதும்
மாட்டுக்கறி உண்பதில்லை.ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலராகக் கொண்டு வர,
கட்சியினர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பொய்யான செய்தியை வெளியிட்ட
நக்கீரன் ஆசிரியர், வெளியீட்டாளர் ஆகியோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை
எடுக்க வேண்டும். இவ்வாறு பொன்னையன் கூறியுள்ளார்.மாணவர் அணி: ஜெயலலிதா
மீது அவதூறு செய்தியை வெளியிட்ட நக்கீரன் இதழ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க
வேண்டும் என, அ.தி.மு.க., மாணவரணி கோரிக்கை விடுத்துள்ளது.

நக்கீரன் மீது தாக்குதல் கருணாநிதி கண்டனம் : "நக்கீரன்' அலுவலகம் தாக்கப்பட்டதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:ஒரு பத்திரிகையில், ஒரு முக்கிய பிரமுகரைப் பற்றி
அவதூறாகவோ, அசிங்கமாகவோ, அருவருக்கத்தக்க வகையிலோ, அவமானத்துக்கு உள்ளாகும்
வகையிலோ, எழுதினாலோ, செய்தி வெளியிட்டாலோ, அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து,
நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு சட்டத்தில் வழிவகைகள் இருக்கின்றன.அதற்கு
மாறாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், பதிலுக்குப் பதில் என்ற முறையில்
வன்செயல்களில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

குறிப்பாக, தற்போது, "நக்கீரன்' பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு
கட்டுரைக்காக, அந்த அலுவலகத்தில் நடந்துள்ள தாக்குதல், எத்தகைய வாதங்களை
அல்லது நியாயங்களை வேண்டுமானாலும் எடுத்து வைக்கலாம்.ஆனாலும்,
பாதிக்கப்பட்டோர், சட்டப்படி நீதிமன்றங்களில், தங்களுக்குள்ள நியாயங்களை
நிலை நிறுத்த முயற்சிக்க வேண்டுமேயல்லாமல், பத்திரிகையாளர்களையோ அல்லது
பத்திரிகை அலுவலகத்தையோ தாக்குவது, ஜனநாயக நாட்டில்
ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Sm-share-en








  • முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Gallerye_00491231_381379

  • முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Gallerye_004921948_381379

  • முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Gallerye_004926123_381379

  • முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Gallerye_004932637_381379

  • முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Gallerye_004939262_381379

  • முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Gallerye_005042624_381379

  • முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Gallerye_005048279_381379

  • முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Gallerye_005054117_381379

  • முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Gallerye_005100953_381379

  • முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Gallerye_005106784_381379

  • முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Gallerye_005113790_381379

  • முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Gallerye_005119402_381379

  • முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Gallerye_005126648_381379

  • முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Gallerye_00513260_381379

  • முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Gallerye_005140503_381379

  • முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Gallerye_00514891_381379

  • முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Gallerye_005154921_381379

  • முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கட்டுரை வெளியிட்ட நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் Gallerye_005159718_381379
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum