TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இந்திய அணிக்கு இன்னிங்ஸ் தோல்வி: சிட்னி டெஸ்டில் "சரண்டர்': ஆஸி., மீண்டும் அசத்தல்

Go down

இந்திய அணிக்கு இன்னிங்ஸ் தோல்வி: சிட்னி டெஸ்டில் "சரண்டர்': ஆஸி., மீண்டும் அசத்தல் Empty இந்திய அணிக்கு இன்னிங்ஸ் தோல்வி: சிட்னி டெஸ்டில் "சரண்டர்': ஆஸி., மீண்டும் அசத்தல்

Post by logu Sat Jan 07, 2012 7:28 am









இந்திய அணிக்கு இன்னிங்ஸ் தோல்வி: சிட்னி டெஸ்டில் "சரண்டர்': ஆஸி., மீண்டும் அசத்தல் Australia-Cricket_98


சிட்னி:
சிட்னி டெஸ்டில் சொதப்பலாக ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் இன்னிங்ஸ்
மற்றும் 68 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை தழுவியது. தொடரில்
ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய
அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில்
இந்தியா தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் சிட்னியில் நடந்தது.
இந்திய
அணி முதல் இன்னிங்சில் 191 ரன்கள், ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 659
ரன்கள் எடுத்து, "டிக்ளேர்' செய்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில்,
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து,
354 ரன்கள் பின்தங்கி இருந்தது.
அதிரடி ஆட்டம்:
நேற்று
நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. வழக்கத்துக்கு மாறாக துவக்கத்தில் இருந்தே
சச்சின், மிக வேகமாக ரன்கள் சேர்த்தார். ஹில்பெனாஸ் ஓவர்களில் பவுண்டரி
மழை பொழிந்தார் சச்சின். இதனால் முதல் 7 ஓவர்களில் 53 ரன்கள் எடுக்கப்பட,
ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
காம்பிர் "அவுட்':
இந்த
ஜோடியை பிரிக்க, கேப்டன் கிளார்க், சிடிலை அழைத்தார். இதற்கு உடனடி பலன்
கிடைத்தது. காம்பிர் 83 ரன்களுக்கு வெளியேறினார். பொறுப்பான ஆட்டத்தை
வெளிப்படுத்திய சச்சின், டெஸ்ட் அரங்கில் 65வது அரைசதம் அடித்தார்.
மறுமுனையில் லட்சுமண், 56வது அரைசதம் கடந்தார். இந்த நேரத்தில் "பார்ட்
டைம்' பவுலரான கிளார்க்கின் சுழலில், சச்சின் 80 ரன்னில் துரதிருஷ்டவசமாக
அவுட்டாகி, சதத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
திடீர் சரிவு:
பின்
லட்சுமண் 66 ரன்களுக்கு வெளியேறினார். அணியை மீட்பார் என்று
எதிர்பார்க்கப்பட்ட தோனி (2), விராத் கோஹ்லி அடுத்தடுத்து பெவிலியன்
திரும்பினர். 271 ரன்களுக்கு 3 விக்கெட் என்றிருந்த இந்திய அணி, அடுத்து 15
ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை (286/7) இழந்து தடுமாறியது.
அஷ்வின் அபாரம்:
கடைசி
கட்டத்தில் அஷ்வின், ஜாகிர் கான் ஜோடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த, 11
இன்னிங்ஸ்களுக்குப் பின் முதன் முதலாக இந்திய அணியின் ஸ்கோர் 300ஐ
தாண்டியது. ஹில்பெனாஸ், சிடில் "பவுன்சர்களை' துணிச்சலாக பவுண்டரிக்கு
அனுப்பினார் அஷ்வின். இவருக்கு "கம்பெனி' கொடுத்த ஜாகிர் கான், 35 ரன்கள்
எடுத்தார்.
தொடர்ந்து லியான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய அஷ்வின்,
அரைசதத்தை எட்டினார். இஷாந்த் (11) நீடிக்கவில்லை. கடைசியில் அஷ்வினும்
(62) அவுட்டாக, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆல்
அவுட்டாகி, இன்னிங்ஸ், 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா
சார்பில் ஹில்பெனாஸ் 5 விக்கெட் வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதை மைக்கேல்
கிளார்க் தட்டிச் சென்றார். ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட், வரும் 13ம் தேதி பெர்த்தில் துவங்குகிறது.

தோனி மோசம்
இந்திய
அணியின் வெற்றி கேப்டனாக இருந்த தோனி, தற்போது சொதப்புகிறார். இவரது
"பீல்டிங்' வியூகங்கள் எடுபடவில்லை. தவிர, பேட்டிங்கிலும் ஏமாற்றுகிறார்.
இவரது தலைமையில் அன்னிய மண்ணில், இதுவரை பங்கேற்ற 18 டெஸ்டில் 5ல் இந்தியா
வென்றது. 8ல் தோல்வியும், 5 போட்டி "டிரா' ஆனது.
தொடர்ந்து ஆறாவது தோல்வி
அன்னிய
மண்ணில் இந்திய அணியின் டெஸ்ட் தோல்விக்கு, இன்னும் விடிவுகாலம்
பிறக்கவில்லை. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடர்ந்து, 4 டெஸ்டிலும் தோற்றது
இந்திய அணி. தற்போது மெல்போர்ன், சிட்னி என, தொடர்ந்து ஆறாவது முறையாக
தோல்வியடைந்தது. இதில் மூன்று, இன்னிங்ஸ் தோல்வி.
மைதானம் மாதம்/ஆண்டு தோல்வி வித்தியாசம்
லார்ட்ஸ் ஜூலை/2011 196 ரன்கள்
நாட்டிங்காம் ஜூலை/ஆக.,/2011 319 ரன்கள்
பர்மிங்காம் ஆக.,/2011 இன்னிங்ஸ், 242 ரன்கள்
ஓவல் ஆக.,/2011 இன்னிங்ஸ், 8 ரன்கள்
மெல்போர்ன் டிச.,/2011 122 ரன்கள்
சிட்னி ஜன.,/2012 இன்னிங்ஸ், 68 ரன்கள்
காரணம் என்ன?
தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:
இங்கிலாந்து,
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பேட்ஸ்மேன்கள் போதிய அளவு ரன்கள் எடுக்கவில்லை.
பவுலர்களும் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. ரன்வேகத்தையும்
கட்டுப்படுத்தவில்லை. துவக்கத்தில் விக்கெட் விழுவதோடு சரி, அப்புறம்
அடுத்த புதிய பந்து எடுக்கும் வரைக்கும் காத்திருக்க வேண்டியது உள்ளது.
அதற்குள்
எதிரணி 300 ரன்களை தாண்டி விடுகிறது. இதன்பின் மீண்டு வருவது சிரமமாகி
விடுகிறது. சிட்னி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. முதல்
இன்னிங்சில் 350 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும். ஒருமுறை விரைவாக
அவுட்டாகி விட்டால், பின் மனநிலையே மாறிவிடுகிறது. பெர்த் டெஸ்டில்
வெற்றிபெற முயற்சிப்போம்.
கிளார்க் பாராட்டு
வெற்றி
குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,"" மந்தமான
ஆடுகளத்தில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவது கடினமான
காரியம். ஆனால் எங்கள் பவுலர்கள், தொடர்ந்து சிறப்பான முறையில் திறமை
வெளிப்படுத்தினர். சச்சினின் விக்கெட்டை கைப்பற்றியது திருப்புமுனையாக
இருந்தது,'' என்றார்.
பட்டின்சன் "அவுட்'
இந்திய
அணிக்கு மகிழ்ச்சியான விஷயம். முதல் இரண்டு டெஸ்டில் 11 விக்கெட்
வீழ்த்தி, நமது "டாப் ஆர்டர்' வீரர்களுக்கு பெரும் தொல்லையாக இருந்தவர்
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட்டின்சன். சிட்னி போட்டி முடிந்ததும்,
இவரது இடது கணுக்காலில் ஏற்பட்ட வலிக்காக, "எக்ஸ்-ரே', "ஸ்கேன்'
எடுக்கப்பட்டது. இதில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், எஞ்சியுள்ள தொடரில்
இருந்து நீக்கப்பட்டார். இவருக்குப் பதில் மிட்சல் ஸ்டார்க் அல்லது ரியான்
ஹாரிசிற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
பாடம் நடத்திய அஷ்வின்
ஆஸ்திரேலிய
தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்புகின்றனர்.
மெல்போர்ன், சிட்னி போட்டிகளின் நான்கு இன்னிங்சில் டிராவிட் 112 (68, 10
மற்றும் 5, 29), சேவக் 108 (67, 7 மற்றும் 30, 4), காம்பிர் 99 (3, 13
மற்றும் 0, 83), தோனி 88 (6, 23 மற்றும் 57*, 2), லட்சுமண் 71 (2, 1
மற்றும் 2, 66), விராத் கோஹ்லி 43 (11, 0 மற்றும் 23, 9) ரன்கள் தான்
எடுத்தனர். சச்சின் அதிகபட்சமாக 226 (73, 12 மற்றும் 41, 80) ரன்கள்
எடுத்துள்ளார்.
இந்த இரண்டு போட்டியிலும் சச்சினுக்கு அடுத்து
சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் எடுத்த 143 ரன்கள் (31, 30 மற்றும் 20, 62),
இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பாடம் நடத்தியது போல இருந்தது. ஆனாலும் தனது
முக்கிய பணியான பந்துவீச்சில் அஷ்வின் சோபிக்காதது ஏமாற்றமான விஷயமே.
மீண்டும் நழுவிய "100'
கடந்த
உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் சச்சின்
கடைசியாக சதம் (111) அடித்து இருந்தார். இதன் பின் தொடர்ச்சியாக 4 ஒருநாள்
மற்றும் 8 டெஸ்ட் போட்டிகளின் 19 இன்னிங்சில் ஏமாற்றி வந்தார். இதில் 8
முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்தார். இதில் இரு முறை 90 ரன்களை (91, 94)
தாண்டினார். நேற்றும் 80 ரன்கள் எடுத்து அவுட்டானது, ஏமாற்றமாக இருந்தது.
மிகப்பெரிய வெற்றி
ஆஸ்திரேலிய
அணி கடைசியாக 2010, ஜனவரியில் ஹோபர்ட்டில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான
டெஸ்டில் 231 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்குப் பின்
இப்போது தான் மிகப்பெரிய வெற்றியை (இன்னிங்ஸ், 68 ரன்கள் வித்தியாசம்)
பெற்றுள்ளது.
"ஒய் திஸ் கொலவெறி'
அன்னிய
மண்ணில், அசுரவேகப் பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் காலியாகிவிடுவது
வழக்கம். இது இங்கிலாந்தில் நிரூபணமானது. இதனை தெரிந்து கொண்டு மெல்போர்ன்,
சிட்னி டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய "வேகப்புயல்கள்' நம்மவர்களை புரட்டி
எடுத்தனர். அடுத்த போட்டி நடக்க உள்ள பெர்த் ஆடுகளமும் வேகத்துக்கு
ஒத்துழைக்கும். இங்கு நான்கு வேகங்களுடன் களமிறங்கப் போவதாக கூறி, நமது
வீரர்களின் வயிற்றில் இப்போதே புளியை கரைத்திருக்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன்
மைக்கேல் கிளார்க். இது குறித்து இவர் கூறுகையில்,""பெர்த் களத்தில்
பந்துகள் நன்கு "பவுன்ஸ்' ஆகும். நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற
வாய்ப்பு உள்ளது,''என்றார். ஏன் இந்த கொலவெறி கிளார்க்?
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய அணிக்கு அவமானம் * மூன்றாவது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி * "நம்பர்-' இடத்தை இழந்தது * தொடரை வென்றது இங்கிலாந்து
» இந்தியாவுக்கு மீண்டும் அவமானம்! * ஓவல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி * சச்சின்- மிஸ்ரா போராட்டம் வீண்
» இந்திய அணிக்கு மீண்டும் "அடி': இங்கிலாந்து அசத்தல் வெற்றி
» இந்திய அணிக்கு மரண "அடி!' * முதல் டெஸ்டில் படுதோல்வி
» இந்திய அணி "சரண்டர்! * வாட்சன், வார்னர் அதிரடி * ஆஸி., அசத்தல் வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum