TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 3:35 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வைகுண்ட ஏகாதசி விரதத்தின் மகிமை

Go down

வைகுண்ட ஏகாதசி விரதத்தின் மகிமை Empty வைகுண்ட ஏகாதசி விரதத்தின் மகிமை

Post by ஜனனி Fri Jan 06, 2012 7:41 am

நிரஞ்சனாவைகுண்ட ஏகாதசி விரதத்தின் மகிமை Niranjana-_3-150x150

மார்கழி மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் வருவது வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதம் மிக சக்தி வாய்ந்தது என்று புராணங்களில் சொல்லப்படுகிறது

ஏகாதசி எப்படி உருவானது

சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற
(முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். இதனால்
விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள் படும் துன்பத்தை
எடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர் புரிந்தார்.
இந்த போர் பல வருடங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. இதனால்
சோர்வடைந்த ஸ்ரீமந் நாராயணன், ஒரு குகையில் நன்றாக உறங்கினார். அப்போது
அவர் உடலில் இருந்து ஒரு பெண் சக்தி தோன்றி, போர் நடக்கும் களத்திற்கு
சென்று, அந்த அசுரர்களை வீழ்த்திவிட்டு மீண்டும் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமே
திரும்பி வந்தது.

தன் எதிரில் ஒரு பெண் தேவதை நிற்பதை கண்டு
அந்த தேவதை தன் உடலில் இருந்து வெளிப்பட்டது என்பதையும் உணர்ந்து, அந்த
தேவதை அசுரர்களை அழித்ததையும் தெரிந்து, அதனை வாழ்த்தி, “ஏகாதசி” என்று
பெயர் சூட்டினார்.

“நீ தோன்றிய இந்த நாளில், யார் என்னை
நினைத்து விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு நீ துணை இரு. பக்தர்களின்
வாழ்க்கையில் சகல நன்மைகளையும் அருள வேண்டும்.” என்று ஆசி வழங்கி, பிறகு
அந்த ஏகாதசியை மீண்டும் தன்னுள் ஐக்கியபடுத்திக்கொண்டார் ஸ்ரீமந்
நாராயணன்.

ஏகாதசி விரதத்தின் மகிமை

ருக்மாங்கதன் என்ற அரசர் இருந்தார். அவர்
ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி தெரிந்துக் கொண்டார். அதனால் தன் நாட்டு
மக்கள் யாவரும் பாவத்தில் இருந்து விடுபட்டு, புண்ணியம் பெற வேண்டும் என்ற
எண்ணத்தில் ஏகாதசி விரதத்தை கட்டாயமாக மக்கள் அனைவரும் அனுசரிக்க வேண்டும்
என்று அரசாங்க உத்தரவிட்டார். அத்துடன் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்காதவர்கள்
ராஜதண்டனைக்கு ஆளாவார்கள் என்றும் ஆணையிட்டார். இதனால் எட்டு வயது
குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை அரசாங்கத்துக்கு பயந்தே ஏகாதசி விரதத்தை
கடைபிடித்தார்கள்.

ஏகாதசி விரதத்தின் மகிமையால் நல்ல பலன் கிடைத்தது. நாடும், அந்நாட்டு மக்களும், அரசரும் சுபிக்ஷமாக வாழ்ந்தார்கள்.

அரசரால் திண்டாடிய மோகினி

அரசர் ருக்மாங்கதன், தன் நாட்டு மக்களை
கட்டாயப்படுத்தி ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க சொன்னதால் துஷ்டமோகினிக்கு
வேலை இல்லாமல் போனது. ஆம். யார் ஏகாதசி விரதம் இல்லாமல் இருக்கிறார்களோ
அவர்களுக்கு கஷ்டத்தை தர வேண்டிய துஷ்ட தேவதைக்கு, அரசர் ருக்மாங்கதன்
நாட்டில் மட்டும் அதற்கு வேலை இல்லாமல் போனது. காரணம் மக்கள் அனைவரும்
ஏகாதசி விரதத்தை அரசருக்கு பயந்து நிறைவேற்றினார்கள். பொறுத்து பொறுத்து
பார்த்த மோகினி, கடைசியில் விஷ்ணுபகவானிடம் ருக்மாங்கதனை பற்றி புகார்
சொன்னாள்.

தன் பக்தனான ருக்மாங்கதன், தன்
நாட்டுமக்கள் மேல் அதிக பிரியத்துடன் இருப்பதால் இப்படி செயல்படுகிறான்
என்பதை உணர்ந்த ஸ்ரீவிஷ்ணுபகவான், ருக்மாங்கதன் முன் தோன்றி,

“நீ யாரையும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க
வேண்டும் என்று கட்டாயபடுத்தக்கூடாது. ஏகாதசி விரதம் என்பது புண்ணியத்தை
கொடுக்ககூடியது. புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று யாருக்கு விதி
இருக்கிறதோ அவர்களே விரதத்தை கடைபிடிப்பார்கள். இயற்கைக்கு விரோதமாக நீ
யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம்.” என்று தன் பக்தனான அரசர்
ருக்மாங்கதனுக்கு சொன்னார் ஸ்ரீவிஷ்ணுபகவான்.

இப்படி பாவத்தை போக்கி புண்ணியம்
தருவதுதான் ஏகாதசி விரதத்தின் மகிமை. ஏகாதசி விரதம் யார் இருக்கவில்லையோ
அவர்களிடம்தான் துஷ்ட மோகினிக்கு வேலை என்கிறது புராணம்.

நோய்வாய்பட்டவர்கள் விரதத்தை கடைபிடிக்க முடியுமா?

ஏகாதசி விரதம் கட்டாயமாக கடைபிடிக்க
வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆனால் வியாதியால் அவதிப்படுபவர்கள் ஏகாதசி
விரதத்தை கடைபிடிக்க முடியாதல்லவா.? ஆகவே நோய்வாய்பட்டு விரதத்தை
கடைபிடிக்க இயலாதவர்கள் ஏகாதசி விரததன்று உணவு சாப்பிடும் முன்னதாக இறைவனை
வணங்கிய விட்டு சாப்பிடலாம் எனகிறது சாஸ்திரம்.

ஏகாதசி விரதத்தை எப்படி கடைபிடிப்பது?

ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று, உணவு சாப்பிட்டு இறைவனுடைய வைகுண்ட ஏகாதசி விரதத்தின் மகிமை Bhakநாமத்தையும்,
விஷ்ணு புராணம் போன்ற புராணங்களையும், மந்திர ஸ்தோத்திரங்களையும்,
பாடல்களையும் உச்சரிக்க வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் பெருமாள்
கோயிலுக்கு சென்று, சொர்க்கவாசல் வழியாக இறைவனை வணங்கி தரிசித்துவிட்டு,
அன்று நாள்முழுவதும் இறைவனுடைய நாமத்தையும், பாடல்களையும், புராணங்களையும்
படிக்க வேண்டும்.

மறுநாள் துவாதசி அன்று கோவிலுக்கு சென்று
இறைவனை தரிசித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி இறைவனுக்கு நெல்லிக்காய்,
அகத்திகீரை போன்றவை சமைத்து படைத்து பூஜித்த பிறகு, ஒருவருக்காவது
அன்னதானம் செய்த பிறகு சாப்பிட வேண்டும்.

விரதத்தை கடைபிடித்தவர்கள் நெல்லிக்காய்,
சுண்டக்காய், அகத்திகீரை போன்றவற்றை பல்லில் படாமல் சாப்பிடவேண்டும்.
சாப்பிடும் முன் இறைவனுடைய நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

இதனால் புண்ணியம் கிட்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் முன்னோர்களின் சாபமும் நீங்கிடும்.

சொர்க்கவாசல் உருவானகதை

விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில்
இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள்
தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள்.
இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள். அதனால்
விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க
முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது,
கைடபருடன் போர் செய்தார். ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல்
அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.

“பகவானே…தங்களின் சக்தியால் நாங்கள்
உருவானதால் எங்களுக்கு நீங்கள் கருனை காட்ட வேண்டும்.” என்ற பணிவாக கூறி
வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த
அசுர சகோதரர்கள். தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று
என்னி அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர்.

“எம்பெருமானே…தாங்கள் வைகுண்ட ஏகாதசி
நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்)
தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து
வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த
பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்.” என்று
கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். .அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு,
வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும்
நிகழ்ச்சி இனிதே நடைபெறுகிறது.

இந்த ஏகாதசி நன்னாளில், “ஓம் நமோ நாராயணாய என்று உச்சரித்து, பெருமாளை தரிசித்து பாவங்கள் நீங்கி, ஸ்ரீமகாலஷ்மியின் அருளையும் பெறுவோம்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum