Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கேரளம் பணியும்வரை தமிழகம் தணியாது: வைகோ
Page 1 of 1
கேரளம் பணியும்வரை தமிழகம் தணியாது: வைகோ
சென்னையில் வியாழக்கிழமை நடந்த "தாமிரவருணி சமூக -
பொருளியல் மாற்றங்கள்' நூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) உலகத்
தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன
சென்னை,
டிச. 29: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளம் பணியும் வரை தமிழகத்தில்
கொதிப்பு தணியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.பாசனப்
பொறியியல் வல்லுநரான மறைந்த பழ.கோமதிநாயம் எழுதிய "தாமிரவருணி சமூக -
பொருளியல் மாற்றங்கள்' என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை தேவநேயப்
பாவாணர் நூலக அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.பழ.கோமதிநாயகம்
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனின் சகோதரர் ஆவார். இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு
கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நூலை வெளியிட தமிழக பசுமை இயக்கத் தலைவர் வி.ஜீவானந்தம் பெற்றுக்கொண்டார்.விழாவில்
வைகோ பேசியது: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளம் அக்கிரமமாகச்
செயல்படுகிறது. பெரியாறு இரு மாநில மக்களின் வாழ்வாதாரத்துக்கு
அடிப்படையானதாகும். அணை விவகாரத்தில் வெள்ளைக்காரர்களோடு 999
ஆண்டுகளுக்கு தமிழகம் ஒப்பந்தம் செய்துள்ளது செல்லாது என்று கேரளத்தினர்
சொல்கின்றனர். ஆனால் கேரள அரசு 1970 -ம் ஆண்டு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டுள்ளதை கோமதிநாயகம் நூலில் குறிப்பிட்டு வாதிடுகிறார். 999-ம்
ஆண்டுகளுக்குப் பிறகும் மேலும் 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தைப்
புதுப்பிக்க வேண்டும் என்பதுதான் உண்மையான ஒப்பந்தமாகும் என்பதையும் அவர்
கூறியுள்ளார்.அணையைப் பாதுகாக்கும் உரிமையை கேரளத்துக்கு தமிழக அரசு விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது.2006-ம்
ஆண்டு நில அதிர்வால் அணைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கேரள அரசு
புரளியைக் கிளப்ப இருக்கிறது என்று மத்திய உளவுத் துறை மத்திய அரசை
எச்சரித்தது. இதற்குப் பிறகும் இதுவரை அணைக்கு மத்தியப் பாதுகாப்பு
கொடுக்கப்படவில்லை. கேரள அமைச்சர் ஜோசப் அணையை உடைத்து, அதில் உள்ள
கற்களைக் கொண்டு சாலை அமைப்போம் என்று பேசுகிறார்.இதையெல்லாம்
மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் வேடிக்கைதான் பார்க்கின்றன. இந்த
விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் கொதிப்பு நிலையில்
இருக்கின்றனர்.முல்லைப் பெரியாறு அணையை உடைக்க மாட்டோம், புதிய அணை
கட்டமாட்டோம் என்று கேரளம் சொல்லும் வரை தமிழகத்தில் கொதிப்பு தணியாது
என்றார் வைகோ.பழ.நெடுமாறன்: 1979-ம் ஆண்டு முல்லைப் பெரியாறு
விவகாரம் தொடர்பாக என் தம்பியிடம் குறிப்புகள் பெற்றே சட்டப்பேரவையில் நான்
பேசினேன். அந்தக் குறிப்புகளால் அப்போது தமிழகமே அதிர்ந்தது. என் தம்பியை
அறியாத கட்சிக்காரர்களே இருக்க மாட்டார்கள். நதி நீர்ப் பிரச்னை, மணல்
பிரச்னை உள்பட அனைத்துப் பிரச்னைகளையும் அவரிடம் அனைவரும் ஆலோசிப்பர். பிரபாகரன்
அழைப்பின் பேரில் ஈழத்துக்குச் சென்று 100 பேருக்கு நீரியல் துறை தொடர்பாக
பயிற்றுவித்து வந்தார். இது தொடர்பாக அவரே புத்தகம் தயாரித்து அங்கு
கொண்டு சென்றார். இந்த ரகசியம் எனக்கும் என் தம்பிக்கு மட்டுமே தெரியும்
என்றார் அவர்.ஆர்.நல்லகண்ணு: முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு
உள்பட அனைத்து நதிகளிலும் பிரச்னை உள்ளது. இந்தப் பிரச்னைகளை விருப்பு
வெறுப்பின்றி கோமதி நாயகம் ஆயந்து தந்திருக்கிறார்.சமூகத்தின்
ஒட்டுமொத்த நலனைப் பற்றியே கருத்தில் கொண்டு வாழ்ந்தவர் கோமதிநாயகம்
என்றார் அவர் விழாவில் கோமதிநாயகம் நினைவுச் சொற்பொழிவுக்கான வைப்புநிதியாக
ரூ.50 ஆயிரம் மதுரை திருவள்ளுவர் கழகத்துக்கு அளிக்கப்பட்டது. பத்திரிகையாளரும்,
முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்யப்பட்ட இந்த ஆங்கில நூலை தமிழாக்கம்
செய்தவருமான எம்.பாண்டியராஜன் வரவேற்புரையாற்றினார். பாவை பப்ளிகேஷன்
பொதுமேலாளர் தி.ரத்தினசபாபதி நன்றி கூறினார்.
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» மே 28-ல் கேரளம் செல்லும் அனைத்து பாதைகளிலும் மறியல்: வைகோ
» 'கேரளம்' என பெயர் மாறுகிறது கேரளா
» மே 28-ல் கேரளம் செல்லும் வாகனங்கள் மறிப்பு: ம.தி.மு.க.
» கூடங்குளத்தில் 500 மெகா வாட்: கேரளம் கோரிக்கை
» சிறுமி அர்ச்சகர் ஆனார் வழிகாட்டுகிறது கேரளம்
» 'கேரளம்' என பெயர் மாறுகிறது கேரளா
» மே 28-ல் கேரளம் செல்லும் வாகனங்கள் மறிப்பு: ம.தி.மு.க.
» கூடங்குளத்தில் 500 மெகா வாட்: கேரளம் கோரிக்கை
» சிறுமி அர்ச்சகர் ஆனார் வழிகாட்டுகிறது கேரளம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum