TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


டிராவிட், சேவக் அபாரம்! *சச்சின் 100வது சதம் நழுவியது *இந்திய பேட்ஸ்மேன்கள் பதிலடி

Go down

டிராவிட், சேவக் அபாரம்! *சச்சின் 100வது சதம் நழுவியது *இந்திய பேட்ஸ்மேன்கள் பதிலடி Empty டிராவிட், சேவக் அபாரம்! *சச்சின் 100வது சதம் நழுவியது *இந்திய பேட்ஸ்மேன்கள் பதிலடி

Post by logu Wed Dec 28, 2011 7:38 am









டிராவிட், சேவக் அபாரம்! *சச்சின் 100வது சதம் நழுவியது *இந்திய பேட்ஸ்மேன்கள் பதிலடி Sachin_68


மெல்போர்ன்:
மெல்போர்ன் டெஸ்டில், 73 ரன்களில் அவுட்டான சச்சின், தனது 100வது சர்வதேச
சதம் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் ஒரு முறை நழுவவிட்டார். சேவக், டிராவிட்
அரைசதம் அடிக்க, இந்திய அணி வலுவான இலக்கு நோக்கி முன்னேறுகிறது.
ஆஸ்திரேலிய பவுலர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
ஆஸ்திரேலியா
சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்
பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 6
விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது.
ஜாகிர் அபாரம்:
நேற்று
இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. ஜாகிர் "வேகத்தில் ஹாடின் (27), சிடில்
(41) வெளியேறினர். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 72 ரன்கள்
சேர்த்தது.அடுத்து வந்த பென் ஹில்பெனாஸ் (19), நாதன் லியான் (6), அஷ்வின்
"சுழலில் சிக்கினர். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்களுக்கு
"ஆல்-அவுட் ஆனது. ஜேம்ஸ் பட்டின்சன் (18) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா
சார்பில் ஜாகிர் கான் 4, உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 3 விக்கெட்
கைப்பற்றினர்.
சேவக் அரைசதம்:
பின்,
முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு, கவுதம் காம்பிர் (3)
ஏமாற்றினார். சேவக், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாதன் லியான்
சுழலில் பவுண்டரி அடித்த இவர், டெஸ்ட் அரங்கில் தனது 30வது அரைசதம்
அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த போது, பட்டின்சன்
வேகத்தில் சேவக் (67) போல்டானார்.
சதம் நழுவல்:
பின்
இணைந்த டிராவிட், சச்சின் ஜோடி அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக சமாளித்து, அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
ஹில்பெனாஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டிராவிட், டெஸ்ட் அரங்கில் தனது
63வது அரைசதம் அடித்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த சச்சின்,
தனது 64வது அரைசதம் அடித்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 117
ரன்கள் சேர்த்த போது, பீட்டர் சிடில் வேகத்தில் சச்சின் (73) போல்டானார்.
இதனால் 100வது சர்வதேச சதம் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் ஒரு முறை
கோட்டைவிட்டார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில்
இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்து, 119 ரன்கள் பின்தங்கி
இருந்தது. டிராவிட் (68) அவுட்டாகாமல் இருந்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் ஹில்பெனாஸ், பட்டின்சன், சிடில் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இன்று
டிராவிட், லட்சுமண், தோனி உள்ளிட்டோர் பொறுப்பாக ஆடும் பட்சத்தில், இந்திய
அணி வலுவான ஸ்கோரை பெற்று, ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி
கொடுக்கலாம்.

சூப்பர் ஜோடி
மூன்றாவது
விக்கெட்டுக்கு சச்சின்-டிராவிட் 117 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம்
டெஸ்ட் அரங்கில் 100 ரன்களுக்கு மேல் 20வது முறையாக எடுத்தனர்.
* சச்சின் (3,224), லட்சுமணுக்கு (2,279) அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிராவிட், 2 ஆயிரம் ரன்களை கடந்து (2,040) அசத்தினார்.
*
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, அதன் சொந்த மண்ணில் சச்சின் (1,595),
லட்சுமணுக்கு (1,081) அடுத்து, டிராவிட்டும் ஆயிரம் ரன்களை (1,040)
கடந்தார்.
* மெல்போர்ன் மைதானத்தில் ஜாகிர் கான் தனது சிறந்த பவுலிங்கை
(4/77) பதிவு செய்தார். தவிர, கும்ளே (111 விக்.,), ஹர்பஜன் (90), கபில்
தேவ் (79), பிரசன்னா (57), பிஷன் சிங் பேடி (56), ஷிவ்லால் யாதவை (55)
அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 50 விக்கெட் (16 டெஸ்ட்) வீழ்த்திய
வீரர் என்ற பெருமை பெற்றார்.
* மெல்போர்னில் பி.கே.சென்னுக்கு (1947-48)
பிறகு, ஒரு இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான இரண்டாவது இந்திய
விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார் தோனி(4 கேட்ச்).

8,000 ரன்கள்
நேற்று
சேவக் 20வது ரன்னை எடுத்த போது, டெஸ்ட் அரங்கில் 8000 ரன்கள் என்ற
மைல்கல்லை எட்டினார். இதன்மூலம், இந்த இலக்கை எட்டிய ஐந்தாவது இந்திய வீரர்
என்ற பெருமை பெற்றார். சர்வதேச அளவில் 23வது வீரரானார்.
எட்டாயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்கள்:
வீரர் போட்டி ரன் 100/50
சச்சின் 185 15,256 51/64
டிராவிட் 161 13,162 36/63
கவாஸ்கர் 125 10,122 34/45
லட்சுமண் 131 8626 17/55
சேவக் 93 8047 22/30
* மெல்போர்ன் மைதானத்தில் சேவக் 3 இன்னிங்சில் 273 ரன்கள் எடுத்தார். இங்கு இவரது சராசரி 91.
* ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 8 டெஸ்டில் விளையாடிய சேவக், இதுவரை 900 ரன்கள் (2 சதம், 4 அரைசதம்) எடுத்துள்ளார்.

சேவக்-பட்டின்சன் மோதல்
எதிரணி
வீரர்களை வம்புக்கு இழுப்பது ஆஸ்திரேலியாவுக்கு வாடிக்கை. இது நேற்றும்
அரங்கேறியது. ஆட்டத்தின் ஏழாவது ஓவரின் 4வது பந்தில் ஒரு ரன்னுக்காக ஓடிய
போது சேவக்கின் தோள்பட்டை, பட்டின்சன் தனது முழங்கையால் சேவக்கின்
தோள்பட்டை பகுதியில் இடித்தார். இதனால் ஆத்திரமடைந்த சேவக், கடுமையான
வார்த்தைகளால், பேட்டை உயர்த்தி பட்டின்சனை நோக்கி ஏதோ கூறினார். இதற்கு
பட்டின்சனும் பதிலடி கொடுக்க, வார்த்தை போர் ஆரம்பமானது. பின் . மற்றொரு
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பீட்டர் சிடிலும், பட்டின்சனுடன் இணைந்து
வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக, தென் ஆப்ரிக்க அம்பயர் எராஸ்மஸ்,
சேவக்கை அழைத்து சமாதானப்படுத்தினார்.

இரண்டாவது இடம்
இந்திய
வீரர் டிராவிட் நேற்று 63வது அரைசதம் அடித்தார். இதன்மூலம் டெஸ்ட்
அரங்கில், அதிக முறை 50 அல்லது அதற்கு மேல் ரன் எடுத்த வீரர்கள் வரிசையில்,
இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இதுவரை டிராவிட், 99 முறை
இச்சாதனை படைத்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (98 முறை)
மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் இந்திய "மாஸ்டர்
பேட்ஸ்மேன் சச்சின் 115 முறை (51 சதம்+64 அரைசதம்) உள்ளார்.

மீண்டும் ஏமாற்றம்
சதத்தில்
சதம் அடிக்கும் வாய்ப்பை சச்சின் மீண்டும் ஒருமுறை தவறவிட்டார். இதுவரை 99
சதம் (51 டெஸ்ட் + 48 ஒருநாள்) அடித்துள்ள இவர், கடைசியாக கடந்த மார்ச்
மாதம், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார்.
அதன்பின் 4 ஒருநாள், 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவரால், ஒருமுறை கூட
சதம் அடிக்க முடியவில்லை. இதில் ஒருநாள் போட்டியில் இரண்டு (53, 85),
டெஸ்டில் ஐந்து (56, 91, 76, 94, 73) முறை அரைசதம் கடந்து அவுட்டானார்.

கண்டம் தப்பிய இந்திய வீரர்கள்
நேற்றைய
ஆட்டத்தில், இந்திய வீரர் டிராவிட் 65 ரன்கள் எடுத்திருந்த போது, பீட்டர்
சிடில் பந்தில் போல்டானார். ஆனால், சிடிலின் பந்துவீச்சு குறித்து
சந்தேகமடைந்த அம்பயர், மூன்றாவது அம்பயரிடம் கேட்டார். "ரீப்ளேயில்,
"நோ-பால் வீசியது தெரியவர, டிராவிட் கண்டம் தப்பினார்.
* துவக்க வீரர்
சேவக், இரண்டு முறை தப்பினார். இவர், 54 ரன்கள் எடுத்திருந்த போது, நாதன்
லியான் வீசிய பந்தை தூக்கி அடிக்க, அதனை டேவிட் வார்னர் கோட்டை விட்டார்.
இதேபோல, 58 ரன்கள் எடுத்திருந்த போது பட்டின்சன் வீசிய பந்தை அடிக்க, அதனை
விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் நழுவவிட்டார்.

அஷ்வின் நம்பிக்கை
அஷ்வின்
கூறுகையில்,""முதல் இன்னிங்சில் இந்திய அணியின் பேட்டிங் ரசிக்கும் படியாக
இருந்தது. சச்சின் எப்படியும் சதம் அடித்து விடுவார் என்று நினைத்தேன்.
ஆனால் கடைசி ஓவரில் அவுட்டானது ஏமாற்றமாக உள்ளது. லட்சுமண், டிராவிட் அனுபவ
ஆட்டம் இந்திய அணிக்கு கைகொடுக்கும். இன்றும் சிறந்த முறையில் பேட்
செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இரண்டாவது இன்னிங்சிலும் விக்கெட் வேட்டை
தொடரும், என்றார்.


logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum