Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை: ஜெ., கோரிக்கை
Page 1 of 1

சென்னை: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு
படையை நிறுத்த வேண்டும் என, பிரதமரை நேரில் சந்தித்து, முதல்வர் ஜெயலலிதா
வலியுறுத்தினார்.
அரசு முறை பயணமாக சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, ராஜ்பவனில்
நேற்று மாலை, முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார். இந்த சந்திப்பு 40 நிமிடம்
நடந்தது. அப்போது, 16 பக்க அறிக்கையை முதல்வர் ஜெயலலிதா, பிரதமரிடம்
கொடுத்தார்.
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: முல்லைப்
பெரியாறு அணை பலமாக உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்
கொள்ளலாம் என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை செல்லாதாக்க,
கேரள அரசு நீர்பாசனத் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, அணையின்
நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க முடிவு செய்தது. இதை எதிர்த்து, தமிழக
அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அண்மையில் அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள்
குறித்து ஆய்வு செய்ய, அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவை சுப்ரீம் கோர்ட்
நியமித்தது. அந்தக் குழு ஆய்வு செய்து, அணை பலமாக உள்ளது என, அறிக்கை
அளித்தது. ஆனால் கேரள அரசு, சொந்த நெருக்கடி காரணமாக, முல்லைப் பெரியாறு
அணை பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறது. அதற்கு
வலு சேர்க்கும் விதமாக, இம்மாதம் 9ம் தேதி, கேரள சட்டசபையில், அணையின்
நீர் மட்டத்தை 120 அடியாகக் குறைப்பது என்றும், பழைய அணையை உடைத்து விட்டு
புதிய அணை கட்டுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் கடந்த
நான்கு மாதங்களாக அணை அருகில் 22 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக தொடர்
பிரசாரம் செய்து வருகிறது.
இது உண்மைக்கு மாறானது. இந்திய வானிலை மையத்தின் கூற்றுப்படி, நான்கு
சிறிய நில அதிர்வுகள் மட்டும் ஏற்பட்டுள்ளது. அணை இருக்கும் இடத்திற்கும்,
சிறிய நில அதிர்வு நடந்த இடத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை தெளிவுபட
தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை உடைந்து, வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டு, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வாதத்தில் துளியளவும்
உண்மை இல்லை என்பது பலமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு
அணைக்கு நிகராக உள்ள கல்லணை அணையில் இன்றளவும், சிறு சேதாரம் இன்றி
கம்பீரமாகத் தான் உள்ளது. இதன் பாதுகாப்பு குறித்து யாரும் அச்சப்படவில்லை.
கேரள அரசின் திட்டமிட்ட பொய் பிரசாரத்தால், தமிழகத்தவர்களின் சொத்துகள்
அடித்து நொறுக்கப்படுகின்றன. எனவே, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு
கருதி, மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என, கடிதத்தின்
வாயிலாக தங்கள் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு வந்துள்ளேன். மேலும்,
தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட இடங்கள் ஆக்கிரமிப்பு
செய்யப்பட்டிருப்பது தொடர்பாக தலையிடுமாறும் கேட்டுக் கொண்டு இருந்தேன்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதித்து, அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக
உயர்த்துமாறு, தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்களின் தலைமையின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை
ஆணையம், முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதன் கீழ் உள்ள பகுதிகளில்
எதிர்பாராத சம்பவங்களை எதிர்கொள்ளும் திட்டத்தை வகுக்க குழு அமைத்திருப்பது
தேவையற்றது. எனவே, முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தாங்கள் தலையிட்டு
தீர்வு காண வேண்டும் என, தமிழக அரசு சில கோரிக்கைகளை முன் வைக்கிறது.
* சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி, முல்லைப் பெரியாறு அணையின்
நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என, தாங்கள் கேரள அரசுக்கு
வலியுறுத்த வேண்டும்.
* தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு
செய்யப்பட்ட பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என, உத்தரவிட
வேண்டும்.
* முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு கருதி, அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை உடனடியாக நிறுத்த வேண்டும்.
* தேசிய பேரிடர் ஆணையம் அமைத்த வல்லுனர் குழுவை திரும்பப் பெற உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு மசோதா விவகாரம்
* தமிழகத்தில் பொது வினியோகத் திட்டம் சிறப்பாகச் செயல்படுகிறது.
இதற்காக தமிழக அரசு, 5 கோடி ரூபாய் மானியமாக வழங்கி வருகிறது. மத்திய உணவு
பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றினால், தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் நிலை
உள்ளது. இந்த மசோதாவில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
மேலும், தமிழக அரசின் நிதிச் சுமையைக் குறைக்க 1,500 கோடி ரூபாய் வழங்க
வேண்டும்.
* இந்திய மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில் பாரம்பரியமாக உள்ள மீன்
பிடிக்கும் உரிமையை பாதுகாப்பதோடு, அதை உறுதி செய்ய வேண்டும். மேலும்,
மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் முகத்துவாரங்களில் ஆழப்படுத்தும் பணி
மேற்கொள்ள, ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும்.
* தமிழக அரசு நிதிச்சுமையில் இருந்து மீள, சிறப்பு நிதி, பொது விற்பனை
வரி குறைக்கப்பட்டுள்ளதால், தமிழ அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பை சரி
செய்ய, இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும்.
* புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திற்காக வழங்க வேண்டிய மானியம் 455.16
கோடி ரூபாய் வழங்க வேண்டும். மத்திய மின் தொகுப்பில் இருந்து,
தமிழகத்திற்கு 1,000 மெகா வாட் மின்சாரம், மின்சார அமைச்சகம்
பரிந்துரைத்தபடி முதல்கட்டமாக 2,752.40 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
முதல்வர் கோரிக்கையில் கூடங்குளம் இல்லை: சென்னை ராஜ்பவனில்
நேற்று மாலை, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து, முதல்வர் ஜெயலலிதா
16 பக்க கோரிக்கை அளித்த போதிலும், கொழுந்து விட்டு எரியும் கூடங்குளம்
அணு உலை பிரச்னை சம்பந்தமாக அந்த கோரிக்கை மனுவில் எதுவும்
குறிப்பிடப்படவில்லை. கூடங்குளம் அணு உலையில் விரைவில் உற்பத்தி துவங்கும்
என, பிரதமர் ஏற்கனவே தெரிவித்துள்ள போதிலும், அது பற்றி தமிழக அரசு
சார்பில் கோரிக்கை வைக்காதது, அணு உலை ஆதரவு போராட்டக்காரர்களுக்கு சற்று
ஏமாற்றம் அளித்துள்ளது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பெரியாறு அணை துளை அடைக்கும் தொழில் நுட்பம்: கேரளா வியப்பு
» பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு கோரிக்கை : டிரிபியூனல் அமைக்க
» முல்லை பெரியாறு விவகாரம்: தமிழக அரசு கோரிக்கை தள்ளுபடி
» முல்லைப் பெரியாறு நிபுணர் குழு நிறுத்தி வைப்பு : முதல்வர் கோரிக்கை ஏற்பு
» மாவோயிஸ்டுகள் பந்த் அழைப்பு:பாதுகாப்பு ஏற்படுத்த கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum