TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நீர் மட்டம் குறைக்கப்பட்டதால் தமிழகம் இழந்தது எவ்வளவு?

Go down

நீர் மட்டம் குறைக்கப்பட்டதால் தமிழகம் இழந்தது எவ்வளவு? Empty நீர் மட்டம் குறைக்கப்பட்டதால் தமிழகம் இழந்தது எவ்வளவு?

Post by ஜனனி Mon Dec 19, 2011 8:12 am

தேனி: முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 152 அடியில் இருந்து, 136
அடியாக குறைக்கப்பட்டதால், தென் மாவட்டங்களில், ஒரு லட்சத்து 44 ஆயிரம்
ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை இழந்து தரிசு நிலங்களாக மாறி உள்ளது.

பென்னிக்குக் கட்டிய பெரியாறு அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 155 அடி.
அணை பாதுகாப்பை கருதி நீர் மட்டத்தை 152 அடியாக பென்னிக்குக் நிலை
நிறுத்தினார். அணையின் குறைந்தபட்ச நீர் மட்ட உயரம் 136 அடி. அணையில் 136
அடிக்கு மேல் வரும் நீர் மட்டுமே மதகுகள் வழியாக கேரளாவிற்கு வெளியேறும்
வகையில், அணை அமைந்துள்ளது. அணையில் எப்போதுமே கிடக்கும் நீரின் அளவு 104
அடி. ஆக அணையில் 104 அடிக்கு மேல் உள்ள நீரை மட்டுமே நாம் பயன்படுத்த
முடியும். அதற்கு கீழ் உள்ள நீரை நாம் நினைத்தாலும் பயன்படுத்த முடியாது.
ஏனென்றால் அதற்கு கீழ் உள்ள தண்ணீர் வெளியேற வழியில்லை. அணையில் 152 அடி
தண்ணீர் தேங்கியிருக்கும் போது கூட நாம் 48 அடி நீரை மட்டுமே பயன்படுத்த
முடியும். இந்த நீரினால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்
மாவட்டங்களில் 2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது.
லோயர்கேம்ப் மின்நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர்கள் மூலம் தினமும் 140
மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.

அணை பலம் குறித்து கேரளா சந்தேகம் கிளப்பி, அதன் விளைவாக நீர் மட்டம்
152 அடியில் இருந்து குறைந்தபட்ச அளவான 136 அடியாக குறைக்கப்பட்டதால்
நமக்கு கிடைத்து வந்த நீரின் அளவு 18 டி.எம்.சி.,யில் இருந்து வெறும் 6
டி.எம்.சி.,யாக குறைந்தது. மீதம் 12 டி.எம்.சி., தண்ணீர் கேரளாவிற்குள்
சென்று விடுகிறது. ஆக தற்போது முல்லை பெரியாறு அணையில் மூன்றில் இரண்டு
பங்கு நீர் கேரளாவிற்குள் செல்கிறது. ஒரு பங்கு நீர் மட்டும்
தமிழகத்திற்கு கிடைக்கிறது. பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் உபரி
நீர் மூலம் கேரளாவில் இடுக்கி மின் நிலையத்தில் முழுமையாக இரண்டு
ஜெனரேட்டர்கள் ஆண்டு தோறும் மின் உற்பத்தி செய்கின்றன. அந்தளவுக்கு
தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் ஏக்கர்
நிலம் பாசன வசதி இல்லாமல் தரிசாக போய் விட்டது. மீதம் உள்ள 73 ஆயிரம்
ஏக்கரில் மட்டும் பாசனம் நடக்கிறது. அதிலும் 40 ஆயிரம் ஏக்கர் மட்டுமே
இருபோக சாகுபடி செய்ய முடிகிறது. 40 லட்சம் மக்கள் குடிநீருக்கு
சிரமப்படுகின்றனர். இதனால் ஏற்படும் இழப்பினை கணக்கிட்டால் ஸ்பெக்ட்ரம்
இழப்பினை போல் நீண்டு கொண்டே செல்லும்.அந்த அளவுக்கு உணவு உற்பத்தி, மின்
உற்பத்தி, கால்நடை வளர்ப்பு பாதிப்பு, மனித உழைப்பு இழப்பு, பால் பொருள்
உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவிற்கு கிடைத்த ஒரே ஆதாரயம் கூடுதல் மின் உற்பத்தி, தமிழகத்திற்கு
ஏற்பட்ட இழப்பு கணக்கில் அடங்காது. இதனை எல்லாம் கணக்கிட்டே சுப்ரீம்
கோர்ட் அணையின் நீர் மட்டத்தை மீண்டும் 142 அடியாக உயர்த்தலாம் என
உத்தரவிட்டது. அணை நீர் மட்டம் 136 அடியில் இருந்து 6 அடி உயர்த்தி, 142
அடியாக நிலை நிறுத்தப்பட்டால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு 1.5 டி.எம்.சி.,
தண்ணீர் மட்டுமே கூடுதலாக கிடைக்கும். இதன் மூலம் தரிசாக கிடக்கும் பல
ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் வசதியும், சில லட்சம் மக்களுக்கு
குடிநீரும் வழங்க முடியும். அணையில் நீர் மட்டத்தை 152 அடியாக
உயர்த்தினால் மட்டுமே மீண்டும் தென் மாவட்டங்கள் பழைய பொழிவினை பெறும்.
இதற்கு உரிய முயற்சிகளை சுப்ரீம் கோர்ட் மூலம் தமிழக அரசு மேற்கொள்ள
வேண்டும்.

பூகம்பத்தால் பாதிப்பில்லை: உலகில் மொத்தம் 23 ஆயிரம் அணைகள்
உள்ளன. உலகில் இதுவரை தென்னாப்பிரிக்காவில் உள்ள கரீபா அணை, கிரீஸிலுள்ள
கிரமிஸ்டா அணை, சீனாவில் உள்ள சிங்பெங்கியாங், குஜராத்தில் உள்ள புட்ஜ்
அணைகளில் மட்டுமே 6.5 ரிக்டர் வரை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு
பெரிய நிலநடுக்கத்திலும் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால் பெரியாறு அணை
அமைந்துள்ள பகுதியில் 2 ரிக்டர் அளவுக்கு மேல் இதுவரை நிலநடுக்கம்
ஏற்பட்டது இல்லை. அதிகபட்சம் 3.5 ரிக்டருக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட
வாய்ப்பும் இல்லை. எனவே தற்போதே அணையில் 152 அடி தண்ணீர் தேக்க முடியும்.
1901ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையும் 30 முறை நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது. அதுவும் பெரியாறு அணையில் இருந்து 25 கி.மீ., தொலைவிற்கு
அப்பால் மட்டுமே இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. எனவே நிலநடுக்கத்தால்
அணைக்கு பாதிப்பில்லை.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum