Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை: ஜெ.,வுக்கு உம்மன் சாண்டி கடிதம்
Page 1 of 1

திருவனந்தபுரம்: "தமிழகத்தில், மலையாளிகள் மீது நடத்தப்படும்
தாக்குதல்களை, மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும்; அவர்களுக்கு
பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கேரள
முதல்வர் உம்மன் சாண்டி கடிதம் மூலம், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால், இரு மாநிலங்களிலும் பதட்டம் நிலவி
வருகிறது. இந்நிலையில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி, நேற்று முதல்வர்
ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில், மலையாளிகள் மற்றும் அவர்களது நிறுவனங்கள் மீது நடத்தப்படும்
தாக்குதல்கள், தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழகத்தில், மலையாளிகளுக்கு
பாதுகாப்பு அளிக்க வேண்டும். மலையாளிகளுக்கு எதிராக, குற்ற நடவடிக்கைகளில்
ஈடுபடுவோர் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள், கேரளாவில் அவமானப்படுத்தப்பட்டதாக
எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது. கேரளாவில், தமிழர்களுக்கு முழு
பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளையும், கட்டுப்பாட்டுடன்
நடந்து கொள்ள வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளோம்.
இரு மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணிக்கவும், அமைதி நிலவவும்,
இரு மாநில முதல்வர்களும் சேர்ந்து, கூட்டாக அறிக்கை வெளியிடவேண்டும். இரு
மாநில மக்களின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில்,
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் சென்றுள்ளது துரதிருஷ்டமானது.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வரும் யாரும் தாக்கப்படுவதில்லை. அதற்கான
நடவடிக்கைகளை, எங்கள் மாநில அரசு எடுத்துள்ளது. கேரளா - தமிழக எல்லையில்,
போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, குமுளியிலும்,
இதர பதட்டம் நிறைந்த பகுதிகளிலும், பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
இருந்தாலும், அதையும் மீறி, அவ்வப்போது தவறான தகவல் பரப்பப்படுகிறது. அது
தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கேரளாவின் தோட்டத் தொழில் துறையில்,
ஏராளமான தமிழர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள், மாநிலத்தில் பொருளாதார
வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து, சபரிமலை
அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் தாக்கப்படவில்லை. மாறாக,
கேரளத்தினரின் செயல்பாடுகளால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
போலீசாரும் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை அளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில், கேரளாவைச் சேர்ந்த
ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அதேபோல, கேரளாவைச் சேர்ந்த நிறைய
பேர், தமிழகத்தில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களுக்கு எல்லாம், பாதிப்பு எதுவும் ஏற்படுமோ என, கேரளாவில் உள்ள
அவர்களின் குடும்பத்தினர் அஞ்சுகின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள
கேரளத்தவர்களுக்கு எதிராக, யாரும் வன்முறையில் ஈடுபடாமல் நீங்கள்
பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள சில செய்தி நிறுவனங்கள்,
முற்றிலும் தவறான, பொருத்தமற்ற படங் களை வெளியிட்டு, மக்களை பரபரப்புக்கு
ஆளாக்குகின்றன. இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும்
நல்லெண்ணத்தை, கேரளா எப்போதும் மதிக்கிறது. இவ்வாறு உம்மன் சாண்டி
கடிதத்தில் கூறியுள்ளார்.
"சட்டம் நிறைவேற்ற தயார்': பெங்களூரில் நேற்று நடந்த தென்
மாநிலங்களின் முதல்வர் கள் கூட்டத்தில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி
பங்கேற்றார். தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் கலந்து
கொண்டார். அப்போது, பன்னீர் செல்வத்தை சந்தித்த, உம்மன் சாண்டி, முல்லைப்
பெரியாறு விவகாரம் குறித்து பேசினார். இதன்பின் உம்மன் சாண்டி,
செய்தியாளர்களிடம் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில்
சர்ச்சை ஏற்பட்டதற்கு பின், இரு மாநிலங்களின் தலைவர்களுக்கு இடையே நடந்த
முதல் சந்திப்பு இது. இந்த விவகாரத்தில் கேரளாவின் கருத்து என்ன என்பதை,
தமிழக நிதி அமைச்சரிடம் எடுத்துக் கூறினேன்.
முல்லைப் பெரியாறு அணையை பொறுத்தவரை, கேரளாவுக்கு பாதுகாப்பு,
தமிழகத்துக்கு தண்ணீர் என்பது தான், எங்களின் நிலை. இதை அவரிடம்
தெரிவித்தேன். முல்லைப் பெரியாறு தண்ணீர், தமிழகத்துக்கு தேவை என்பதை
நாங்கள் உணர்ந்துள்ளோம். எங்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் ஆகியவை
தமிழகத்தில் இருந்து தான் வர வேண்டும். இதனால், இந்த விவகாரம், எங்களின்
கவலையும் கூட. அதே நேரத்தில், இந்த அணை, 115 ஆண்டுகளுக்கு முன், பழைமையான
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டது. அணையின் பாதுகாப்பு தன்மை
குறித்து, இங்குள்ள மக்கள் கவலைப்படுகின்றனர். கேரள மக்களின்
பாதுகாப்பிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். வேண்டுமானால்,
தமிழகத்துக்கு தண்ணீர் அளிப்பதை உறுதி செய்யும் வகையில், கேரள சட்டசபையில்
சட்டம் நிறைவேற்றவும் தயார் என, தமிழக அமைச்சரிடம் கூறினேன். இவ்வாறு
உம்மன் சாண்டி கூறினார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» கருணாநிதிக்கு உம்மன் சாண்டி கடிதம்
» புதிய அணை கட்டியே தீர வேண்டும்: உம்மன் சாண்டி
» முல்லைப் பெரியாறில் புதிய அணை: உம்மன் சாண்டி
» கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவர்களுக்கு மாபெரும் பாராட்டு விழாவே நடத்தலாம்
» கேரளாவின் உம்மன் சாண்டி அரசு சூரிய மின்சக்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டனர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum