Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சாதுவாக இருந்த கோயில் யானை திடீரென பாகனை தந்தத்தால் குத்திக் கொன்றது! - கேரளாவில் சம்பவம்
Page 1 of 1
சாதுவாக இருந்த கோயில் யானை திடீரென பாகனை தந்தத்தால் குத்திக் கொன்றது! - கேரளாவில் சம்பவம்
சாதுவாக
நின்று கொண்டிருந்த கோவில் யானை, திடீரென அருகே இருந்த பாகனை தந்தங்களால்
குத்தியும், அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியும் கொன்றது. பக்தர்களின்
கண் முன்னால் நடந்த இச்சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கேரளா கொல்லம் மாவட்டம் கரிக்கோடு அருகே பேரூரில், கருநல்லூர் பகவதி
கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மார்கழி மாதம் 1ம் தேதி என்பதால், காலை
8:45 மணிக்கு, ஏழு வயதுடைய சிவன் என்ற கோவில் யானையை, பாகன்கள் விஜயன்,45,
விஷ்ணு,19, ஆகியோர் குளிப்பாட்டி, கோவிலுக்குள் அழைத்து வந்தனர்.
பாகன்களில் விஷ்ணு, காலை உணவுக்காக வெளியே சென்றார். கட்டிப்
போடப்படாமல் சாதுவாக நின்று கொண்டிருந்த யானையுடன் பாகன் விஜயன்
இருந்தார். அப்போது அங்கு வந்த பக்தர், யானையிடம் காசு கொடுத்தார்.
அது தும்பிக்கையால் பிடிக்க முடியாமல், கீழே விழுந்தது. அதை பார்த்த
பாகன் தன் கையில் இருந்த தடியால் யானையின் தும்பிக்கையில் ஓங்கி அடித்தார்.
ஆத்திரமடைந்த யானை திடீரென விஜயனை தந்தத்தால் குத்தியது. அவர் சுதாரிப்பதற்குள், யானை அவரை தும்பிக்கையால் தூக்கி சுழற்றி வீசியது.
சற்று தொலைவில் போய் விழுந்த அவருக்கு பலத்த காயமேற்பட்டு அலறினார்.அதை
பார்த்த பக்தர்கள் பலரும் அலறியதை கேட்டு, கோவில் நிர்வாகிகள் ஓடி வந்து
பாகனை கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பாகன் இறந்தார். அதற்குள் யானை, கோவிலை விட்டு
வெளியே சென்று அங்குள்ள மரத்தடியில், ஏதும் நடக்காதது போல் நின்றது.
காலை உணவுக்கு சென்ற பாகன் தகவலறிந்து ஓடி வந்து யானையை மரத்தடியில்
கட்டிப் போட்டார். காலை நேரத்தில் பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் கண்முன்
நடந்த இச்சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும்
ஏற்படுத்தியது.
பக்தர்கள் ஓட்டம்:கடந்த ஒரு மாதமாக, சபரிமலை
பாண்டித்தாவளம், பம்பை, பெரியானை வட்டம், ஐரேஞ்ச், ஹில்டாப், நிலக்கல்
ஆகிய பகுதிகளில், காட்டு யானைகள் நடமாடுவது வழக்கமாகி விட்டது.
தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு, நிலக்கல் பகுதியில்
20க்கும் மேற்பட்ட யானைகள், பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்ட இடத்தின்
அருகே வந்து, அமைதியாக நின்றுகொண்டிருந்தன.
அதை பார்த்த பயணிகள், அலறி அடித்து ஓடி விட்டனர். அவற்றில் சில
யானைகள், என்ன நினைத்ததோ தெரியவில்லை, திடீரென அங்கிருந்த மினி பஸ்கள்,
வேன் ஆகியவற்றின் கண்ணாடிகளை தாக்கி சேதப்படுத்தின.
அதற்குள் வனத் துறையினர் விரைந்து வந்து, பதிவு செய்யப்பட்டிருந்த
புலியின் உறுமலை ஒலிக்கச் செய்து, காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர்.
அடுத்த சில நிமிடங்களில், காட்டு யானைகள், பம்பையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலும், சக்கு பாலம் அருகேயும் நடமாடின.
அதை பார்த்த பக்தர்கள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதற்குள் யானை அங்கிருந்த சில பஸ்களின் கண்ணாடிகளை தாக்கி உடைத்தது.
வனக் காவலர்கள் விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்ததால், அங்கிருந்து
ஓடிய யானைகள், அடுத்த சில நிமிடங்களில், கேரள அரசு போக்குவரத்து கழக
பஸ்கள் நிறுத்துமிடத்தில் மீண்டும் தென்பட்டன.
அதை பார்த்து, பஸ்களில் அமர்ந்திருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.
மீண்டும் வனக் காவலர்கள் விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்தும்,
தீப்பந்தங்களை எறிந்தும், அவற்றை காட்டுக்குள் விரட்டினர்.
இவ்வாறு, காட்டு யானைகள் நிலக்கல் மற்றும் பம்பையில், நேற்று முன்தினம்
இரவு 7:30 மணி முதல் 10:30 மணி வரை, மூன்று மணி நேரம் பக்தர்களை
அச்சுறுத்தின.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» 27 வருடம் உடன் வாழ்ந்த பாகனை பிரிந்ததால் வாடும் ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானை..
» போதையில் ரோட்டில் விழுந்த பாகன்: எழும் வரை காவலாக இருந்த யானை
» சிதம்பரம் நடராஜர் கோயில்,காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்,காளஹஸ்தி ஆலயம் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பதை விளக்கும் படம்..
» இலங்கை ராணுவமே பாலச்சந்திரனைக் கொன்றது: பத்திரிக்கையாளர் மாநாட்டில் தகவல்
» அப்பாவி தமிழ்மக்களை கொன்றது உண்மைதான்! இலங்கை!
» போதையில் ரோட்டில் விழுந்த பாகன்: எழும் வரை காவலாக இருந்த யானை
» சிதம்பரம் நடராஜர் கோயில்,காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்,காளஹஸ்தி ஆலயம் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பதை விளக்கும் படம்..
» இலங்கை ராணுவமே பாலச்சந்திரனைக் கொன்றது: பத்திரிக்கையாளர் மாநாட்டில் தகவல்
» அப்பாவி தமிழ்மக்களை கொன்றது உண்மைதான்! இலங்கை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum