TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது!!

Go down

பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது!! Empty பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது!!

Post by ஜனனி Sun Dec 18, 2011 7:36 am

திருச்சி தொழில்
அதிபருக்கு பேஸ்புக்கில் பழக்கமான இளம்பெண் ஒருவர், அவரை பணம் கேட்டு
மிரட்டினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளம்பெண்ணை
கைது செய்தனர்.

கம்ப்யூட்டர் வந்த பிறகு உலகம் சுருங்கி விட்டது. அதுவும் இன்டர் நெட்
இணைப்பு இருந்தால் உலகத்தை உள்ளங்கைக்கே கொண்டு வந்து விடலாம். இளைய
தலைமுறையினர் எந்த தகவலை பெற வேண்டும் என்றாலும், புதிய விஷயங்களை அறிந்து
கொள்ள வேண்டும் என்றாலும் இன்டர் நெட்டை தான் பயன்படுத்துகிறார்கள்.

பல சமூக வலைதளங்களை இப்போது எல்லோரும் பயன்படுத்தத்தொடங்கி உள்ளனர்.
இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் தவறான பாதையிலும் சிலர் செல்ல
வழிவகை ஏற்பட்டு விடுகிறது. சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் ஒரு பெண்
தொடர்புகளை ஏற்படுத்தி பலரை ஏமாற்றி பணம் பறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது!! Abnaya01

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பை
சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான
தொழில் செய்துவருகிறார். இணையதள பிரியரான முருகன், பேஸ்புக்கில் தன்னுடைய
முழு விபரங்களையும், தொழில் பற்றியும் பதிவு செய்துள்ளார்.

மேலும் பேஸ்புக்கில் இவருக்கு ஏராளமான டாக்டர்கள் மற்றும்
தொழில்அதிபர்கள் நண்பர்களாக உள்ளனர். இந்த நிலையில் கரூர்
ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அபிநயா என்கிற அனுஷ்கா (வயது 23) பேஸ்புக்கில்
முருகனை பற்றிய தகவல்களை அறிந்து இ.மெயில் மற்றும் செல்போன் எண்ணிற்கு
எஸ்.எம்.எஸ். அனுப்பியும், பேஸ்புக்கில் நண்பராக ஆட் செய்து
அறிமுகப்படுத்திக்கொண்டார்.

அப்போது அபிநயா தன்னை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை கல்லூரியில்
படித்துவருவதாகவும், விடுதியிலே தங்கி கல்லூரிக்கு சென்று வருவதாகவும்
கூறியுள்ளார்.

பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது!! Abnaya02

மேலும் தனது தந்தை கரூர் பகுதியை சேர்ந்த பிரபல அரசியல்வாதி எனவும்
தனக்கு ரூ.350 கோடிக்கு சொத்து இருப்பதாகவும் இன்னும் திருமணம் ஆகவில்லை
என்றும் கூறியுள்ளார்.

முதலில் அபிநயா, தன்னை ஒரு நபர் காதலித்து ஏமாற்றி விட்டதாகவும்,
அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள இருப்பதாகவும் கூறி உள்ளார்.

இதனால் முருகன், அபிநயாவிற்கு அறிவுரைகள் கூறி அவரை
சமாதானப்படுத்தினார். அதனைதொடர்ந்து முருகனும், அபிநயாவும் பேஸ்புக்கில்
சாட் செய்தும், அவ்வப்போது செல்போனிலும் சகஜமாக பேசினர்.

இவர்களது பழக்கம் நாளுக்கு நாள் வளர்ந்தது. இந்த நிலையில் கடந்த சில
நாட்களுக்கு முன்பு முருகனை காதலிப்பதாகவும், தன்னை திருமணம்
செய்துக்கொள்ளாவிட்டால் நமது பழக்கத்தை வெளி உலகிற்கு எடுத்துக்கூறி
அசிங்கப்படுத்தி விடுவதாகவும், இல்லையென்றால் சொத்தில் பாதியை கொடுத்துவிட
வேண்டும் என முருகனை, அபிநயா மிரட்டத்தொடங்கினார்.

பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது!! Abnaya03

பேஸ்புக்கில் சாதாரணமாக பழகியது இப்படி வில்லத்தனமாகி விட்டதே என பதறி
போன முருகன் அவரிடம் பின்பு தொடர்பை துண்டித்தார். இதற்கிடையில் அபிநயா,
முருகனின் தொழில்நிறுவனங்களுக்கு நேரில் சென்று முருகனை தான் திருமணம்
செய்து கொள்ளப்போவதாகவும், தனக்கு மரியாதை தர வேண்டும் என அங்கு பணியில்
இருப்பவர்களை மிரட்டி சென்று உள்ளார்.

மேலும் முருகனையும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தொடர்ந்து போனில்
வற்புறுத்தினார். இதனால் பயந்துபோன முருகன் இது குறித்து கோட்டை அனைத்து
மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பேஸ்புக்கில் முருகனிடம் பழக்கத்தை ஏற்படுத்திய அபிநயா, அவரை
மட்டுமல்லாமல் டாக்டர்கள், தொழில் அதிபர்களை ஏமாற்றி பணம் பறித்தது
தெரியவந்ததுள்ளது.

பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது!! Abnaya04

அபிநயா தனது பேஸ்புக் அக்கவுண்டில் தான் பெரிய கோடீசுவரி என்றும்
தனக்கு ரூ.350 கோடிக்கு சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால்
பலர் இவரிடம் ஆசையுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கடைசியில் பணத்தை இழந்து
இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அபிநயாவின் முகவரி போலியானதும், அவர் மருத்துவகல்லூரி மாணவி
இல்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அபிநயாவை பிடிக்க
போலீசார் வியூகம் அமைத்தனர். அவர் எந்த ஊரில் தங்கி இருக்கிறார் என்பதை
கண்டுபிடிக்க முடியவில்லை.

அதனால் முருகன் மற்றும் அவரது நண்பர்களை வைத்து அபிநயாவை செல்போனில்
தொடர்பு கொண்டு நைசாக பேசி திருச்சிக்கு வரவழைத்தனர். அப்போது அபிநயா
திருச்சி வந்தார்.

அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். உடனடியாக அவரை
திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1ல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு
இளங்கோவன் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர்.

பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது!! Abnaya05

மேலும் போலீசார் அபிநயா குறித்த விபரங்களை சேகரித்தும், பேஸ்புக் மூலம்
வேறுயாரிடமும் இதுபோன்று பணம் கேட்டு மிரட்டி உள்ளாரா? எனவும் விசாரித்து
வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அபிநயாவை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1ல்
ஆஜர்படுத்துவதற்காக திருச்சி கோர்ட்டிற்கு நேற்று மதியம் அழைத்து வந்தனர்.

அப்போது கோர்ட் வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே அபிநயா கோர்ட்டுக்குள் வர மறுத்து அழுது புரண்டு அடம்பிடித்தார்.

பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது!! Abnaya06

அப்போது அபிநயா நிருபர்களிடம் கூறியதாவது:

எனது தந்தை கரூரில் பிரபல அரசியல்வாதி. எனது அம்மா தமிழ்செல்வி
இறந்துவிட்டார். தற்போது நான் பிரச்சினையில் சிக்கி உள்ளதால் எனது தந்தை
என்னை அவரது மகள் இல்லை என கூறுகிறார்.

இணையதளம் மூலம் முருகன் எனக்கு பழக்கமானதில் 2 பேரும் நெருங்கி பழகி
காதலித்தோம். நானும், அவரும் காதலித்து பழகியதற்கு செல்போன் பேச்சும்,
என்னுடைய இ மெயில் உள்ள கடிதங்களும் ஆதாராங்களாக உள்ளன. அவரையும் போலீசார்
விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கோர்ட்டு வளாகத்தில் கைதான அபிநயா அழுது புரண்டு அடம்பிடித்தால்
வக்கீல்கள் ஏராளமானவர்கள் கூடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து போலீசார் அவரை அழைத்து சென்று மாஜிஸ்திரேட்டு முன்பு
ஆஜர்படுத்தினர்.

பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது!! Abnaya07
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum