TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சேவக் சாதனை * ஒருநாள் போட்டியில் அதிக ரன் * இந்தூரில் இந்தியா இமாலய வெற்றி * தொடரை கைப்பற்றி அசத்தல்

Go down

சேவக் சாதனை * ஒருநாள் போட்டியில் அதிக ரன் * இந்தூரில் இந்தியா இமாலய வெற்றி * தொடரை கைப்பற்றி அசத்தல் Empty சேவக் சாதனை * ஒருநாள் போட்டியில் அதிக ரன் * இந்தூரில் இந்தியா இமாலய வெற்றி * தொடரை கைப்பற்றி அசத்தல்

Post by ஜனனி Fri Dec 09, 2011 7:47 am









சேவக் சாதனை * ஒருநாள் போட்டியில் அதிக ரன் * இந்தூரில் இந்தியா இமாலய வெற்றி * தொடரை கைப்பற்றி அசத்தல் Virender-Sehwag-large_10


இந்தூர்: இந்தூர்
ஒருநாள் போட்டியில் விஸ்வரூபம் எடுத்தார் இந்திய கேப்டன் சேவக். வெஸ்ட்
இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இவர், 219 ரன்கள் குவித்து உலக சாதனை
படைத்தார். இவரது அதிரடி கைகொடுக்க, 153 ரன்கள் வித்தியாசத்தில் அபார
வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 3-1 என கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள
வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று
வருகிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என
முன்னிலையில் இருந்தது. நான்காவது போட்டி இந்தூரில் நடந்தது.
தொடர்ந்து
நான்காவது முறையாக "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சேவக், இம்முறை
பேட்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் உமேஷ் யாதவிற்கு பதில் ராகுல்
சர்மா அறிமுக வாய்ப்பு பெற்றார்.
"சூப்பர்' துவக்கம்:
கடந்த
மூன்று போட்டிகளில் பார்த்திவ் படேல் சரியான துவக்கம் தராததால், இம்முறை
வழக்கமான சேவக், காம்பிர் ஜோடி களமிறங்கியது. இதற்கு நல்ல பலன்
இருந்தது.காம்பிர் பவுண்டரிகளாக விளாச, சேவக் சிக்சர் மழை பொழிந்தார்.
இதனால், ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. காம்பிர் ஒருநாள் அரங்கில் 28
வது அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 176 ரன்கள் சேர்த்த போது,
காம்பிர் (67) ரன் அவுட்டானார்.
ரெய்னா அரைசதம்:
பின்
சேவக்குடன் ரெய்னா இணைந்தார். அதிரடியில் மிரட்டிய சேவக், 69 பந்தில் சதம்
கடந்தார். சமீபத்தில் "பார்ம்' இல்லாமல் தவித்து வந்த ரெய்னா (55), தனது
20வது அரைசதம் அடித்து, ரன் அவுட்டானார்.
இரட்டை சதம்:
ஜடேஜா
(10) நிலைக்கவில்லை. மறுமுனையில் தொடர்ந்து மிரட்டலான ரன்குவிப்பை
வெளிப்படுத்தினார் சேவக். இவர் 170 ரன்கள் எடுத்த போது கிடைத்த "கேட்ச்'
வாய்ப்பை சமி கோட்டை விட்டார். இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட சேவக்,
ரசலின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, ஒருநாள் அரங்கில் முதன் முறையாக இரட்டை
சதம் அடித்து அசத்தினார்.
149 பந்துகளில் 219 ரன்கள் (25 பவுண்டரி, 7
சிக்சர்) எடுத்த போது, சிக்சருக்கு ஆசைப்பட்டு பிடிபட்டார். ரோகித் சர்மா
27 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 418 ரன்கள்
குவித்து, ஒருநாள் அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. விராத்
கோஹ்லி (23), பார்த்திவ் படேல் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
ராகுல் கலக்கல்:
இமாலய
இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, பாவெல் (7) அதிர்ச்சி தந்தார்.
சிம்மன்ஸ் (36) நீடிக்கவில்லை. பின், "வில்லனாக' உருவெடுத்த ராகுல் சர்மா,
சாமுவேல்ஸ் (33), ஹயாத் (11), அதிரடி போலார்டை (3) போல்டாக்க, இந்திய
அணியின் வெற்றி எளிதானது. ரசல் (29), சமி (2), ராம்பால் (10) இம்முறை
கைவிட்டனர். ரோச் 7 ரன்கள் எடுத்தார்.
ஒருமுனையில் விக்கெட் சரிந்த
போதும், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராம்தின், அரைசதம் அடித்து
ஆறுதல் தந்தார். இவர் 96 ரன்கள் எடுத்து அவுட்டாக, வெஸ்ட் இண்டீஸ் அணி 49.2
ஓவரில் 265 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
----
சமி பரிதாபம்
பொதுவாக
"டாஸ்' போட்டு முடிந்தவுடன் யார் வென்றாலும், இரு கேப்டன்களும் கை
கொடுத்துக் கொள்வர். நேற்று தொடர்ந்து நான்காவது முறையாக சேவக் "டாஸ்'
வென்றார். இதையடுத்து வெறுத்துப் போன சமி, சேவக் கைகொடுக்க வந்த போதும்,
அதை ஏற்காமல் சிரித்துக்கொண்டே விலகிக் கொண்டார். இருப்பினும் அவரது
முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.
---
8000 ஆயிரம் ரன்கள்
நேற்று
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 206 ரன்கள் எடுத்த போது, சர்வதேச ஒருநாள்
அரங்கில் சேவக் 8 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்திய அளவில் சச்சின் (18,111),
கங்குலி (11,363), டிராவிட் (10,889), அசார் (9,378), யுவராஜ் (8,051)
ஆகியோருக்கு அடுத்து, ஆறாவதாக சேவக் (8,025) இந்த இலக்கை எட்டியுள்ளார்.
உலகளவில் 24 வது வீரர் ஆவார்.
--
இரட்டை சதம் எப்படி
சர்வதேச
ஒருநாள் அரங்கில் 140 பந்துகளில் சேவக், இரட்டை சதம் அடித்தார். இதற்கு
முன் சச்சின், 147 வது பந்தில் தான் 200 ரன்கள் எடுத்தார். சேவக் 200
ரன்களை கடந்த விதம்:
பந்துகள் ரன்கள்
41 50
69 100
112 150
140 200
---
கடவுள் என் பக்கம்
சேவக்
கூறுகையில்,""இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைப்பேன் என்று கனவிலும்
நினைத்தது இல்லை. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சமீபத்தில் சரியாக
விளையாடாத நிலையில், இந்த போட்டிக்காக எனது "பேட்டிங் ஸ்டைலை' மாற்றிக்
கொள்ளவில்லை. நான் கொடுத்த "கேட்ச்சை' சமி கோட்டைவிட்ட போதே, கடவுள்
என்பக்கம் இருந்தார் என்று தெரிந்தது,'' என்றார்.
--
319, 219
டெஸ்டில்
"டிரிபிள்' சதம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த, உலகின் முதல்
வீரர் என்ற பெருமை பெற்றார் சேவக். இவர் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக
சென்னை டெஸ்டில் 319 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 219 ரன்களும்
எடுத்துள்ளார். தவிர, இந்திய அளவில் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு
இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரரும் இவர் தான்.
---
அறிமுக அபாரம்
நேற்றைய
போட்டியில் அறிமுகமான இந்தியாவின் ராகுல் சர்மா, முதல் மூன்று ஓவர்களின்
கடைசி பந்திலும், மூன்று விக்கெட்டுகளை "போல்டு' செய்து அசத்தினார். கடந்த
ஐ.பி.எல்., தொடரில் அசத்திய இவரது முகத்தின் நரம்புகள் பாதிக்கப்பட்டு,
கண்பார்வை குறைவு ஏற்பட்டது. இதிலிருந்து மீண்ட இவர், சிறந்த "லெக்
ஸ்பின்னராக' ஜொலித்தார்.


ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சேவக் சாதனை: டில்லி அசத்தல் வெற்றி!* வீழ்ந்தது ராஜஸ்தான் அணி
» காமன்வெல்த் போட்டியில் அதிக தங்கம் வென்று இந்தியா சாதனை
» வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி - இந்திய வீரர் பின்னி சாதனை ...
» தோனியின் சதம் வீணானது : சென்னை ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் ‌வெற்றி
» சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum