TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கேலிக்கு உரிய நோபெல் பரிசு. ஐயோ பாவம்.

Go down

கேலிக்கு உரிய நோபெல் பரிசு. ஐயோ பாவம். Empty கேலிக்கு உரிய நோபெல் பரிசு. ஐயோ பாவம்.

Post by sakthy Sat Nov 19, 2011 6:12 pm


உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

கேலிக்கு உரிய நோபெல் பரிசு. ஐயோ பாவம்.

தவறான ஒரு பாட்டுக்கு பரிசா என்று வாதாடினான் நக்கீரன்.ஆனால் தவறான முறையில் சில பரிசில்களை வழங்கி அவப் பெயரையும்,வயித்தெரிச்சலையும் கொட்டிக் கொண்ட நோபெல் பரிசை பார்த்து அழுவதா, சிரிப்பதா இல்லை இந்த உலகில் எல்லாம் நடக்கும் என்று கண்ணை மூடிக் கொள்வதா?

உலகத்திலேயே மதிப்பையும்,மரியாதையையும்,பணத்தையும் தரும் பரிசு நோபெல் பரிசு. இந்த நோபெல் பரிசு 1895 ல் ஆல்ஃபிரட் நோபெல் என்ற, டயனமைட்டை கண்டு பிடித்த இராசயண விஞ்ஞானியால் ஆரம்பிக்கப்பட்டு,1901 ல் இருந்து பௌதீகம்,இராசயணம்,உடலியல் மற்றும் மருத்துவம்,இலக்கியம்,சமாதானம் போன்றவற்றுக்கும், 1968 ல் இருந்து பொருளியலுக்கான நோபெல் பரிசையும் சுவீடன் ரிக்ஸ்,மத்திய, வங்கி இணைத்துக் கொண்டு,வழங்கப்பட்டு வருகிறது..சமாதானப் பரிசை நோர்வேயும்,மற்றவற்றை சுவீடனில் உள்ள நோபெல் கமிட்டியும் தெரிவு செய்து வழங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் 10 ல் சமாதானப் பரிசு ஓஸ்லோ, நோர்வேயிலும்,மற்றவை அதே நாளில் ஸ்டோக்கோல்ம்,சுவீடனிலும் வழங்கப்பட்டு வரும் இந்த பரிசை நிராகரித்தவர்களும்,பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டு பினார் அவர்கள் இறப்பினால் கொடுபட முடியாமல் போனவையும், உண்டு.

ஒரு தங்கப் பதக்கமும் பணமும் வழங்கும் இந்தப் பரிசின் பணத்தொகை, அந்த ஆண்டின் நோபெல் கமிட்டியின் வருமானத்தை பொறுத்து மாறுபடும். அம்மையார் மேரி குயுரே உட்பட நான்கு பேர் இரண்டு முறை பரிசை தட்டிக் கொண்டனர். இந்தப் பரிசு சிலருக்கு தவறாக சிபார்சு செய்யப்பட்ட சமயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கமிட்டியில் இருந்து பதவி விலக்கியவர்களும்,அரசியல் மற்றும் காரணங்களுக்காக பரிசை இழந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அதைவிட இன்றும் சர்ச்சைக்கு உரியதாக இருப்பது, சமாதான பரிசை வியட்நாம் பிரச்சனைக்காக 1973 ல் பெற்றுக் கொண்ட Henry Kissinger,மற்றும் இஸ்ராயேல்-பாலஸ்தீனிய பிரச்சனைகளுக்காக 1994 ல் பெற்றுக் கொண்ட Yasser Arafat,Shimon Peres,Yitzak Rabin ஆகியோரின் பரிசில்களாகும்.சமாதானத்திற்காக கீசிங்கேருடன் கூட்டாக பரிந்துரைக்கப்பட்ட லோ என்பவர், வியட்நாமில் உண்மையான சமாதானம் ஏற்படவில்லை எனக் கூறி பரிசை வாங்க மறுத்து விட்டார். அந்த சர்ச்சையால், நோபெல் கமிட்டி உறுப்பினர்கள் இருவரும் பதவியில் இருந்து விலகிக் கொண்டனர்.

இதையும் விட அதிக சர்ச்சையை கிளப்பியது,பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது போன்ற நிலையில் இருந்த, அமெரிக்க நாட்டின் தலைவர் பராக் ஒபாமாவிற்கு 2009 ல் வழங்கப்பட்ட பரிசாகும். ஆயுதங்களையும் கொடுத்து அடிபட வைத்து விட்டு சமாதானம் பேசிய ஒபாமாவிற்கு எப்படி கொடுக்கலாம் என்பது கேள்வியாக இன்றும் இருந்து வருகிறது.

பணமும்,அதிகாரமும்,பலமும்,சிபார்சும் இருந்தால் இந்த உலகில் என்னதான் நடக்காது என்பதற்கு தமிழ் நாட்டில் வழங்கப்பட்டு வரும் விருதுகள் சாட்சியாகிறதே. ஆடுகளத்திற்கு சிறந்த பட விருது, தனுசிற்கு சிறந்த நடிகர் விருது,எத்தனை சிறந்த கவிஞர்கள் இருந்தும் திரும்பத் திரும்ப வையிரமுத்துவிற்கு விருதுகளும்,பல ஆண்டுகளாக கண்களை மூடிக் கொண்டு இளையராஜாவை மறந்திருந்த பெரியோர்கள், இவை எல்லாம் சினிமா உலகின் பெருந்தன்மைகள். சினிமா உலகம் மட்டும் தான் உலகம் என்று, எத்தனை எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,கலைஞர்கள் எல்லோருமே மறக்கப்பட்டு,மறுக்கப்பட்டு விட்டார்களே என்ற ஆதங்கம் பலரின் மனதில் இருக்கத்தான் செய்கிறது.ஒபாமாவிற்கு கொடுத்த பரிசு பற்றி கேள்வி கேட்க முடியாதிருப்பது போல், இவற்றையும் கேட்க முடியாது மௌனியாக இருக்கும் தமிழகமே சிந்தி.
பொய்யான ஈழத்து செய்திகள், பாதிரி கஸ்பரின் ஏமாற்று, கனிமொழி, தி,மு.க. செய்திகள், இப்படி எத்தனை பொய்யான செய்திகள் வெளியிட்டிருந்தும் கூட கருணாதியின் கைக்குள் இருந்ததால்,நக்கீரன் ஆசிரியர் கோபாலிற்கு கருணாநிதியின் பாராட்டும்,விருதும், பக்க சார்பு என்பதை நிரூபிக்கவில்லையா?

1947 ஆம் ஆண்டுக்கான சமாதானப் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டும்,பரிசை உறுதிப் படுத்திய மூன்று நாட்களின் பின் 1948 ல், சுட்டுக் கொல்லப்பட்டதால், இறந்தவர்களுக்கு கொடுப்பதில்லை என்ற கமிட்டியின் விதிகளுக்கு அமைய, மகாத்மா காந்திக்கு சமாதானத்திற்கான நோபெல் பரிசு கிடைக்கவில்லை.காந்திக்கு நோபெல் பரிசை கொடுக்க முடியவில்லையே என்று அதை ஒரு கறையாக காண்பதாக இன்றும் கமிட்டியினர் தெரிவிக்கிறார்கள்.
இதை விட இலக்கியத்திற்காக 1964 ல் Jean-Paul Sartre உம்,1958 ல் Boris Pasternak உம்; 1973 ல் சமாதானத்திற்காக, லே தோவும், பரிசை வாங்க மறுத்தார்கள்.Richard Kuhn,Adolf Butenandt,Gerhard Domagk மூவரும் பரிசை வாங்க Adolf Hitler ஆல் தடை செய்யப்பட போதிலும்,இரண்டாம் உலக யுத்த முடிவிற்குப் பின் தங்கப் பதக்கம் தரப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
இதே போல் கொடுக்கப்பட வேண்டிய பலர் ஒதுக்கப்பட்டதும்,வேறு சிலரால் தட்டி செல்லப்பட்டதையும் நாம் மறக்க முடியாது. அப்படி தவறான முறையில் தட்டி செல்லப்பட்டதால் வாய்ப்பை இழந்த ஒரு சிலர் இவர்கள்.

கால்வின் சுற்று (Calwin Cycle) கேள்விப்பட்டு இருப்பீர்கள். தாவர உணவு தயாரிப்பு சுற்றில் வெளியிடப்படும் கரியமாலவாயு(C3 Cycle)பற்றியது. இந்த ஆராய்ச்சியை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்கள் Melvin Calvin, Andrew Benson and James Bassham இணைந்து கண்டு பிடித்திருந்தாலும், கல்வினுக்கு மட்டுமே நோபெல் பரிசு 1961 ளில் கொடுக்கப்பட்டது. ஆனாலும் சில விஞ்ஞானிகள் இன்றும் கூட Benson-Calwin Cycle என்றே அழைக்கிறார்கள். ஐயோ பாவம்.

இராசயணம் பௌதீகம் போன்றவற்றில் நாம் படித்த தனிம அட்டவணை (periodic table) ரஸ்சியா விஞ்ஞானி Dmitri Mendeleev என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. மேண்டேலீவ் கண்டு பிடித்த சில மாதங்களில் Julius Lothar Meyer என்பவர் சில மாற்றங்களுடன் கண்டு பிடித்திருந்தாலும் அவர் 1895ளில் இறந்து விட்டதால் பரிசு கிடைக்கவில்லை. ஆனாலும் 1907 வரை உயிருடன் இருந்த மேண்டேலீவ் ற்கு கிடைக்காமல் Henri Moissen ற்கு 1906 ளில் இராசணத்திற்கான நோபெல் பரிசு கிடைத்தது. ஐயோ பாவம் மேண்டேலீவ் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட போதிலும், பரிசு வழங்கப்பட்ட போது அவர் உயிருடன் இல்லாததால் கிடைக்கவில்லை.

பென்சிலின், திரேப்டொமைசின் (penicillin and streptomycin) என்று கேள்விப்பட்டிருப்போம். பக்ரீரியாக்களில், Gram - positive,Gram-negative bacteriaஇரண்டு வகை உண்டு. கிராம்-பாசிட்டிவ் ற்கு penicillin உம், TB போன்ற Gram-negative bacteria க்களுக்கு streptomycin உம் பாவிப்பார்கள். இந்த streptomycin ஐ கண்டு பிடித்தவர் கத்துக் குட்டியான Albert Schatz என்பவரானாலும் கூட அவரின் மேற்பார்வையாளராக இருந்த Selman Waksman என்பவர் 1952 ல் நோபெல் பரிசை தட்டிக் கொண்டார். ஐயோ பாவம் குருவை மிஞ்சிய சீடன் இருக்கவே கூடாது.

Pulsars என்ற துடிப்பலைகளை, Jocelyn Bell Burnell என்ற ஆராய்ச்சி மாணவர் முதலில் கண்டு பிடித்து தனது மேலாளருக்கு தெரிவித்திருந்தார்.ஆனாலும் Antony Hewish என்ற அந்த மேலாளர் 1974 ல் வேறொரு வானியல் ஆராய்ச்சியாளருடன், Sir Martin Ryle,சேர்ந்து நோபெல் பரிசை தட்டிக் கொண்டார். ஐயோ பாவம் அந்த மாணவர்.

கட்சி சார்பற்று சிறந்த பொருளாதார நிபுணர்களை கலந்து ஆலோசிக்காது, தன்னிச்சையாக விலைவாசி ஏற்றத்தில் முடிவெடுத்த ஜெயலலிதாவின் சிறுபிள்ளைத் தனமான முடிவு, சிறந்த நிபுணர்களின் திறமை,பங்களிப்பு நிராகரிக்கப்படுகிறது என்பதை சுட்டிக் காட்டுகிறதே. பாதிக்கப்படுவது அவர் அல்ல,ஒன்றும் தெரியாத அப்பாவி ஏழைகள்.
இப்படி பணம்,பதவி,அதிகாரம்,பலம்,சிபார்சுகளினால் எத்தனை நிபுணர்கள், சாத்னையாளர்கள் உலகிற்கு தெரியாமலேயே வாய்ப்புகளை இழந்து மறக்கடிக்கப்பட்டு விட்டார்களே என்ற மன ஆதங்கம் பலரிடம் இருக்கத் தான் செய்கிறது.
மனதை உறுத்தும் இப்படியான செயல்களுக்கு முடிவே இல்லையா? என்ற கேள்வியுடன் மீண்டும் அடுத்த வாரம்.........................சக்தி.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum