TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


லட்சுமண், தோனி அசத்தல் சதம்! *வலுவான நிலையில் இந்தியா *வெ.இண்டீஸ் ஏமாற்றம்

Go down

லட்சுமண், தோனி அசத்தல் சதம்! *வலுவான நிலையில் இந்தியா *வெ.இண்டீஸ் ஏமாற்றம் Empty லட்சுமண், தோனி அசத்தல் சதம்! *வலுவான நிலையில் இந்தியா *வெ.இண்டீஸ் ஏமாற்றம்

Post by ஜனனி Wed Nov 16, 2011 7:41 am









லட்சுமண், தோனி அசத்தல் சதம்! *வலுவான நிலையில் இந்தியா *வெ.இண்டீஸ் ஏமாற்றம் Laxman_76


கோல்கட்டா:
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் லட்சுமண், கேப்டன் தோனி
சதம் அடிக்க, இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. பவுலிங், பேட்டிங்கில்
வெஸ்ட் இண்டீஸ் அணி ஏமாற்றம் அளித்தது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ்
அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. டில்லியில்
நடந்த முதல் டெஸ்டில் வெற்றி கண்ட இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது டெஸ்ட், கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
டிராவிட்
(119) சதம் அடித்து கைகொடுக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி
முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 346 ரன்கள் எடுத்திருந்தது. லட்சுமண்
(73) அவுட்டாகாமல் இருந்தனர்.
லட்சுமண் அபாரம்:
நேற்று
இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு
யுவராஜ் சிங் (25) ஏமாற்றினார். அடுத்து வந்த கேப்டன் தோனியுடன் இணைந்த
லட்சுமண், அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டேரன் சமி பந்தில் ஒரு
சூப்பர் பவுண்டரி அடித்த லட்சுமண், டெஸ்ட் அரங்கில் தனது 17வது சதத்தை
பதிவு செய்தார்.
தோனி அசத்தல்:
மறுமுனையில்
அபாரமாக ஆடிய கேப்டன் தோனி, டேரன் சமி, சாமுவேல்ஸ் பந்தில் தலா ஒரு
சிக்சர் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்,
டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதத்தை பூர்த்தி செய்தார். சதம் அடித்தபின்
அதிரடி ஆட்டத்துக்கு மாறிய தோனி, பிராத்வைட், கீமர் ரோச் பந்தையும்
விட்டுவைக்கவில்லை. இவர், 181 பந்தில் 144 ரன்கள் (5 சிக்சர், 10 பவுண்டரி)
எடுத்து அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த லட்சுமண், 150 ரன்னை
கடந்தார்.
இமாலய இலக்கு:
முதல்
இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 631 ரன்கள் எடுத்து "டிக்ளேர்'
செய்தது. லட்சுமண் (176), அஷ்வின் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
மோசமான துவக்கம்:
பின்
முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அட்ரியன் பரத் (1)
மோசமான துவக்கம் அளித்தார். பிராத்வைட் (17) பெரிய அளவில் சோபிக்கவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 34 ரன்கள்
எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக, இரண்டாம் நாள் ஆட்டம்
முடிவுக்கு வந்தது. கிர்க் எட்வர்ட்ஸ் (12), டேரன் பிராவோ (4) அவுட்டாகாமல்
இருந்தனர்.
தற்போது 597 ரன்கள் பின்தங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி,
இந்திய "சுழல்' சூறாவளியை சமாளித்து, "பாலோ-ஆனை' தவிர்க்கவே கடுமையாக போராட
வேண்டியிருக்கும்.

அசார் சாதனை சமன்
நேற்று
லட்சுமண், டெஸ்ட் அரங்கில் தனது 17வது சதத்தை பதிவு செய்தார். இது,
கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் இவர் அடித்த ஐந்தாவது சதம். இதன்மூலம்,
இங்கு அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை முன்னாள் கேப்டன்
அசாருடன் (5 சதம்) பகிர்ந்து கொண்டார்.
* லட்சுமண்(176*), ஈடன் கார்டன்
மைதானத்தில் தனது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை பெற்றார். முன்னதாக கடந்த
2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்கள் எடுத்தார்.
* வெஸ்ட்
இண்டீசுக்கு எதிராக நான்காவது சதத்தை பதிவு செய்தார் லட்சுமண். இதன்மூலம்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில்
நான்காவது இடத்தை முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாத்துடன் பகிர்ந்து
கொண்டார். முதல் மூன்று இடங்களில் கவாஸ்கர் (13 சதம்), வெங்சர்க்கார் (6
சதம்), டிராவிட் (5 சதம்) ஆகியோர் உள்ளனர்.

நான்காவது அதிகபட்சம்
வெஸ்ட்
இண்டீசுக்கு எதிராக முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 631 ரன்கள்
எடுத்து "டிக்ளேர்' செய்த இந்திய அணி, ஈடன் கார்டன் மைதானத்தில் தனது
நான்காவது சிறந்த ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக ஆஸ்திரேலியா (657/7
டிக்ளேர், 2001), தென் ஆப்ரிக்கா (643/6 டிக்ளேர், 2010), ஆஸ்திரேலியா
(633/5 டிக்ளேர், 1998) ஆகிய அணிகளுக்கு எதிராக இங்கு நடந்த டெஸ்டில்
சிறந்த ஸ்கோரை பெற்றது.
* இது, ஈடன் கார்டனில் வெஸ்ட் இண்டீசுக்கு
எதிராக பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக கடந்த 1987ல், இங்கு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 565 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
*
இது, இந்திய அணியின் 12வது சிறந்த ஸ்கோர். கடந்த 2009ல் மும்பையில்
இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்டில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 726 ரன்கள்
(டிக்ளேர்) எடுத்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. தவிர இது, வெஸ்ட்
இண்டீசுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். கடந்த
1979ல், கான்பூரில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 644 ரன்கள்
எடுத்து "டிக்ளேர்' செய்தது.

சூப்பர் ஜோடி
நேற்று
224 ரன்கள் சேர்த்த இந்தியாவின் தோனி-லட்சுமண் ஜோடி, கோல்கட்டா ஈடன்
கார்டன் மைதானத்தில் இரண்டாவது முறையாக ஏழாவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள்
சேர்த்தது. முன்னதாக கடந்த ஆண்டு இங்கு நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான
டெஸ்டில் ஏழாவது விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல்
இருந்தனர்.
* இது, டெஸ்ட் அரங்கில் 7வது விக்கெட்டுக்கு பதிவு
செய்யப்பட்ட, எட்டாவது சிறந்த ஸ்கோர். முன்னதாக கடந்த 1955ல்,
பிரிட்ஜ்டவுனில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீசின்
அட்கின்சன், தீபியாசா ஜோடி 7வது விக்கெட்டுக்கு 347 ரன்கள் சேர்த்தது.

முதலிடம்
நேற்று
176 ரன்கள் எடுத்த லட்சுமண், ஈடன் கார்டன் மைதானத்தில் 10 டெஸ்டில் 1217
ரன்கள் (5 சதம், 3 அரைசதம்) எடுத்துள்ளார். இதன்மூலம் இந்தியாவில் உள்ள ஒரு
மைதானத்தில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடம்
பிடித்தார். இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்ட கவாஸ்கர், மும்பை, வான்கடே
மைதானத்தில் 11 டெஸ்டில் 1122 ரன்கள் எடுத்தார்.
* கோல்கட்டா ஈடன்
கார்டன் மைதானத்தில், தனது 5வது சதத்தை பதிவு செய்த லட்சுமண், இந்தியாவில்
உள்ள ஏதேனும் ஒரு மைதானத்தில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில்
இணைந்தார். முன்னதாக அசார் (கோல்கட்டா), கவாஸ்கர் (மும்பை-வான்கடே),
சச்சின் (சென்னை) ஆகியோர் தலா 5 சதம் அடித்துள்ளனர்.

தோனியின் அதிர்ஷ்டம்
நேற்று
தோனிக்கு அதிர்ஷ்டம் அதிகமாகவே இருந்தது. 13 ரன்கள் எடுத்த போது, கீமர்
ரோச் பந்தில் விக்கெட் கீப்பர் கார்ல்டனிடம் பிடிபட்டார். ஆனால் இது "நோ
பாலாக' அமைந்தது. கீமர் ரோச்சின் அடுத்த ஓவரிலும், 16 ரன்கள் எடுத்த
நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கீப்பரிடம் பிடிபட்டார். இதுவும் "நோ பால்' ஆனது.
இரு முறை தப்பிய தோனி, 144 ரன்கள் எடுத்த போது, அதே கீமர் ரோச் பந்தில்,
அதே கார்ல்டனிடம் பிடிபட்டு, பெவிலியன் திரும்பினார்.


ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» லட்சுமண், தோனி சதம்: இந்தியா ஆதிக்கம்
» இந்தியா அசத்தல் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
» இந்தியாவுக்கு இமாலய இலக்கு! * பிரையர் அசத்தல் சதம் * டிராவிட், லட்சுமண் நம்பிக்கை
» ஹர்பஜன் அசத்தல் சதம்* மீண்டும் கைகொடுத்தார் லட்சுமண்* முதல் டெஸ்ட் "டிரா' ஆனது
» இந்திய பந்துவீச்சும் அம்போ! * மைக்கேல் கிளார்க் இரட்டை சதம் * வலுவான நிலையில் ஆஸி.,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum