TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நாட்டின் வளர்ச்சிக்கு அணுமின்சார உற்பத்தி அவசியம். அப்துல் கலாமின் ஆய்வுக் கட்டுரை. -

Go down

நாட்டின் வளர்ச்சிக்கு அணுமின்சார உற்பத்தி அவசியம். அப்துல் கலாமின் ஆய்வுக் கட்டுரை. - Empty நாட்டின் வளர்ச்சிக்கு அணுமின்சார உற்பத்தி அவசியம். அப்துல் கலாமின் ஆய்வுக் கட்டுரை. -

Post by mmani Tue Nov 08, 2011 7:53 pm

நாட்டின் வளர்ச்சிக்கு அணுமின்சார உற்பத்தி அவசியம். அப்துல் கலாமின் ஆய்வுக் கட்டுரை. - Resize_20111108044525

கூடங்குளம்
அணு மின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்டு வரும்
போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த அணு மின் நிலையத்தை அறிவியல்
விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் ஆய்வு
செய்துள்ளார்.

அத்துடன், விஞ்ஞானி v.பொன்ராஜ் உடன் இணைந்து
இந்தியா 2030-க்குள் எரிசக்தி சுதந்திரம் பெற எந்த அளவுக்கு அணுசக்தி
முக்கியம் என்பதை பல மாதங்கள், தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்துள்ளார். அதன்
அடிப்படையில், ஆராய்ச்சி கட்டுரையையும், ஆய்வின் முடிவுகளின்
விளக்கத்தையும் அவர் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் அப்படியே:



நாட்டின் வளர்ச்சிக்கு பாதுகாப்பான அணுமின்சார உற்பத்தி மிகவும் அவசியம்

தமிழகத்திலே
உள்ள கூடங்குளத்தில் அமைந்துள்ள 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய
வேண்டி, செயல்பட தயாராகிக்கொண்டு இருக்கும் நிலையில் அணுசக்தியைப்
பற்றியும், அதன் விளைவுகளைப்பற்றியும் நாட்டில் சில விவாதம் நடந்து வரும்
இவ்வேளையில், சில உண்மைகளையும், அணுசக்தியின் நன்மைகளைப் பற்றியும்,
இயற்கைச் சீற்றங்களினால் அதற்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றியும்,
அணுஉலைகளின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு போன்ற விஷயங்களை அறிவார்ந்த
முறையில் அணுகி, அதைப்பற்றி ஒரு தெளிவான கருத்தை என் அனுபவத்தோடு, உலக
அனுபவத்துடன் ஆராய்ந்து அதை நம் மக்களுடன் பகிர்ந்து கொள்ள
விரும்புகிறேன்.

திருநெல்வேலி மாவட்டத்து மக்கள் அறிவார்ந்த
மக்கள், அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, அங்கே படித்து, அங்கிருந்து
மட்டுமல்லாமல் உலகின் அனைத்து பகுதிகளிக்கும் சென்று தங்களது
அறிவாற்றாலால் அனைத்து மக்களையும், நாட்டையும் வளப்படுத்தும் மக்கள் தான்
திருநெல்வேலியை சேர்ந்த மக்கள்.

அதைப்போலவே தமிழகம் இன்றைக்கு ஒரு அறிவார்ந்த நிலையில் வளர்ந்து,
மாநிலத்தை வளப்படுத்தி, நாட்டை வளப்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு
எடுத்துக்காட்டாக பல்வேறு திறமைகளில் சிறப்பான ஒரு எடுத்துக்காட்டான
மாநிலமாக தமிழகம் திகழ வேண்டிய வளர்ச்சிப்பாதையில் உள்ளது. அப்படிப்பட்ட
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், இன்னும் ஒரு சில ஆண்டுகளில்
இந்தியாவிலேயே வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாற ஏதுவான சூழ்நிலை நிலவுகிறது.
அதற்கு முக்கிய அவசியமான கட்டமைப்பு என்ன. அதுதான் மின்சாரம், மின்சாரம்,
மின்சாரம்.

எப்படிப்பட்ட
மின்சாரம், மக்களை பாதிக்காத, ஆபத்தில்லாத அணுமின்சார உற்பத்தி தான் அதன்
முக்கிய லட்சியம். இந்தியாவிலேயே ஒரே இடத்திலே 2000 மெகாவாட்
மின்உற்பத்தி, இன்னும் சில ஆண்டுகளில் 4000 மெகாவாட் மின் உற்பத்தி
அணுமின்சாரம் மூலம் நடைபெற இருக்கிறது என்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய
செய்தி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒரு அரும் பெரும் செய்தி,
இந்தியாவில் இது முதன் முறையாக நடைபெற இருக்கிறது. கிட்டத்தட்ட ரூ20,000
கோடி முதலீடு திருநெல்வேலி மாவட்டதிற்கு வர வாய்ப்பு உள்ளது. அது உற்பத்தி
செய்யும் மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீகித மின்சாரம்
தமிழகத்திற்கு கிடைக்க இருக்கிறது. எனவே வளமான திருநெல்வேலி மாவட்டம்,
வளமான கூடங்குளம் பகுதி, வலிமையான தமிழகத்தை நாம் அடையவேண்டும். .
அப்படிப்பட்ட லட்சியத்தை நோக்கி நாம் செல்லும் போது, ஜனநாயக நாட்டில்
அணுசக்தி மின்சார உற்பத்தி பற்றி இயற்கையாக பலகருத்துக்கள் ஏற்பட வாய்ப்பு
உள்ளது.

அதாவது அணுசக்தி
மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு உருவாகியுள்ள எதிர்ப்பை மூன்று
விதமாக பார்க்கலாம். ஒன்று கூடங்குளம் பகுதியில் வாழும் மக்களுக்கே
ஏற்பட்டுள்ள உண்மையான கேள்விகள், இரண்டாவது பூகோள - அரசியல் சக்திகளின்
வர்த்தகப் போட்டிகளின் காரணமாக விளந்த விளைவு ( Dynamics of Geo-political
and Market forces), "நாமல்ல நாடுதான் நம்மை விட முக்கியம்" என்ற ஒரு
அரிய கருத்தை அறிய முடியாதவர்களின் தாக்கம்.

முதலாவதாக
மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களது நியாயமான
சந்தேகங்களை வகைப்படுத்தி, அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்வது மிகவும்
முக்கியம். மக்களின் மற்றும் மக்களின் கருத்தால் எதிரொலிக்கும் கேள்விகள்
தெளிவாக்கி அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது இரண்டாவது முக்கியம்.
இந்தியாவின் முன்னேற்றத்தை விரும்பாத, வளர்ச்சியை பிடிக்காதவர்களின்
முயற்சியை பற்றியும், அவர்களின் அவதூறு பிரசாரங்களைப் பற்றியும் மத்திய,
மாநில அரசுகள் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே முதலில் மக்களின் கேள்விகள்
என்ன? அவர்களின் நியாயமான பயம் என்ன? என்பதை பார்போம்.

1. ஜப்பான்
புக்குஸிமா அணுஉலை எரிபொருள் சேமிப்பு கிடங்கில் சுனாமியால் கடல் நீர்
சென்றதால், ஏற்பட்ட மின்சார தடையால் நிகழ்ந்த விபத்தை தொலைக்காட்சியில்
பார்த்த மக்களுக்கு நியாயமாக ஏற்பட்ட பயம் தான் முதல் காரணம்.

2. இயற்கை சீற்றங்களினால் அணுஉலை விபத்து ஏற்பட்டால், அதனால் கதிரியக்க
வீச்சு ஏற்பட்டால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அதனால்
தைராய்டு கோளாறுகள், நுரையீரல் புற்று நோய், மலட்டுத்தன்மை போன்றவைகள்
வரும் என்று மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

3. அணு சக்தி கழிவுகளை சேமித்து வைப்பது ஆபத்து, அணுசக்தி கழிவுகளை கடலில்
கலக்கப்போகிறார்கள், அணுசக்தியால் உருவாகும் வெப்பத்தினால் உருவாகும்
நீராவியினாலும், அணுசக்தி கழிவை குளிர்விக்க பயன் படும் நீரை மீண்டும்
கடலில் கலந்தால் அதனால் மீன் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும். 500
மீட்டருக்கு மீன் பிடித்தலுக்கு தடை விதிக்கப்படும் என்றும், அதனால்
மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், என்ற பயம் நிலவுகிறது.

4. அணு உலையில் எரிபொருள் மாதிரியை இரவில் நிரப்பும் பொழுது வழக்கமாக ஏற்படும் சத்ததால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு விட்டது.

5. அணு உலையில் இயற்கைச் சீற்றத்தாலோ, கசிவாலோ விபத்து ஏற்பட்டால்,
உடனடியாக அப்பகுதி மக்கள், 90 கிலோ மீட்டர் தூரம் 2 மணி நேரத்திற்குள்
வெளியேற்றப்படவேண்டும் என்று சொல்கிறார்கள், சோதனை ஒட்டம் செய்து
பார்க்கும் போது மக்களை உடனடியாக வெளியேற சொன்னதினால் மக்களுக்கு பயம்
ஏற்பட்டு விட்டது. ஒருவேளை விபத்து நேர்ந்தால், சரியான சாலை வசதி,
போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் , மக்கள் கதிர்வீச்சு ஆபத்து ஏற்பட்டால்
தப்புவதற்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை, மக்கள்
எப்படி தப்ப முடியும்.

6.
10000 பேருக்கு வேலை வாய்ப்பு செய்து தரப்படும் என்று கூறினார்கள், ஆனால்
அந்த பகுதியை சேர்ந்த 35 பேருக்குதான் வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது, ஏன்
வேலை வாய்ப்பை அளிக்கவில்லை

7. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வரும் என்று சொன்னார்கள், கடல்
நீரை சுத்திகரித்து நல்ல தண்ணீர் கிடைக்கும் என்று சொன்னார்கள், இரண்டும்
கிடைக்கவில்லை.

இது
போன்று பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது, சரியான
கேள்விகளும் உண்டு, மிகைப்படுத்தப்பட்ட கேள்விகளும் உண்டு ஆனால் இந்த
கேள்விகளுக்கு சரியான பதிலை தரவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.
மக்களின் மனதில் பய உணர்வை ஏற்படுத்திவிட்டு எவ்வித விஞ்ஞான
முன்னேற்றத்தையும் மக்களுக்கான முன்னேற்றத்திற்கான வழியாக ஏறெடுத்துச்செல்ல
முடியாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

அணுசக்தி துறையோடு எனக்கு இருந்த 20 வருட அனுபவத்தின் காரணமாகவும்,
அணுசக்தி விஞ்ஞானிகளோடு எனக்கு இருந்த நெருக்கமான தொடர்பாலும், சமீப
காலங்களில் இந்தியாவிலும், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் அணுசக்தி,
துறையை சேர்ந்த ஆராய்ச்சி நிலையங்களுக்கு சென்று அங்கு பணிபுரியும்
விஞ்ஞானிகளுடனும், தொழில் நுட்ப வல்லுனர்களுடனும் கலந்துரையாடிய
அனுபவத்தாலும், கடந்த 4 வருடங்களாக இந்திய கடற்கரை ஒரம் அமைந்துள்ள எல்லா
அணுசக்தி உற்பத்தி நிலையங்களுக்கும் சென்று, அந்த அணுசக்தி நிலையங்களின்
உற்பத்தி செயல் திறனை பற்றியும் அதன் பாதுகாப்பு அம்சங்களை பற்றி மிகவும்
விரிவாக ஆராய்ந்துள்ளேன்.

அதுமட்டுமல்ல கூடங்குளம் அணுமின் நிலையத்தையும் பார்வையிட்டு அதன்
பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் பல்வேறு காரணிகளைப்பற்றி அதாவது
கடலோரத்தில் உள்ள இந்திய அணுமின் சக்தி நிலையங்களுக்கும் மற்ற நாடுகளில்
உள்ள அணுமின் நிலையங்களுக்கும் என்ன வித்தியாசம், அதன் ஸ்திர தன்மை,
பாதுகாப்பு தன்மை பற்றியும், இயற்க்கை பேரிடர் மற்றும் மனித தவறின் மூலம்
ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதை எப்படி சரி செய்ய முடியும் அதன் தாக்கத்தை
சமன் செய்யவும் செய்யப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் பற்றியும், செய்ய
வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளேன்.

அத்துடன் என்னுடைய இருபதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணத்தின் போதும்,
ஆராய்சி நிலையங்களிலும், கல்வி போதிக்கும் என்னுடைய பணி மூலமாகவும் செய்த
ஆராய்சிகளின் விளைவாகவும், அணுசக்தியைப்பற்றியும், எரிசக்தி
சுதந்திரத்தைப்பற்றிய அறிவியல் சார்ந்த விளக்கங்களயும் ஆராய்ச்சி
விளக்கங்களை விரிவாக விவாதித்தோம். அதன் விளைவாக நான் எனது நண்பர்
v.பொன்ராஜ் அவர்களுடன் சேர்ந்து இந்தியா 2030-க்குள் எரிசக்தி சுதந்திரம்
பெற எந்த அளவிற்கு அணுசக்தி முக்கியம் என்பதை பல மாதங்கள், தொடர்ச்சியாக
ஆராய்ச்சி செய்ததின் பயனாக இந்த ஆராய்ச்சி கட்டுரையை ஆய்வின் முடிவுகளின்
விளக்கத்தை மக்களுக்கு தெரிவிக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்த ஆய்வின் முடிவுகளையும், என்னுடைய கருத்தையும் பார்ப்பதற்கு முன்பாக உங்களுடன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அதாவது, கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லனை
கிடையாது. காட்டாற்று வெள்ளமென வரும் அகண்ட காவிரியை தடுத்து நிறுத்த
அந்தகாலத்து தொழில் நுட்பத்தை பயன் படுத்தி முதல் நூற்றாண்டில் (1 Century
AD) கல்லனை கட்டினானே கரிகாலன். எப்படி முடிந்தது அவனால், வெள்ளமென வரும்
காவிரியால் கல்லனையை உடைந்து மக்களின் பேரழிவுக்கு காரணமாகிவிடும் என்று
நினைத்திருந்தாலோ, பூகம்பத்தால் அணை உடைந்து விடும் என்று கரிகாலன்
நினைத்திருந்தால் கல்லனை கட்டியிருக்க முடியாது.

ஆயிரம் ஆண்டுகளாகியும் நம் கண்முன்னே சாட்சியாக இருக்கிறதே ராஜ ராஜ சோழன்
கட்டிய தஞ்சை பெரிய கோவில். சுனாமியினால் கடல் கொண்டு அழிந்த பூம்புகார்
போன்று, பூகம்பத்தின் காரணமாக, பெரிய கோவில் அழிந்து விடும் என்று
நினைத்திருந்தால், தமிழர்களின் மாபெரும் கட்டிட கலையை உலகிற்கே பறைசாற்றும்
விதமாக, எடுத்துக்காட்டாக இருக்கும் பெரிய கோவில் நமக்கு
கிடைத்திருக்குமா.

ஹோமி
பாபா முடியாது என்று நினைத்திருந்தால், கதிரியக்கம் மக்களைப்
பாதித்திருக்கும் என்று நினைத்திருந்தால், இன்றைக்கு 40 ஆண்டுகளாக
பாதுகாப்பான அணுமின்சாரத்தை 4700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி
செய்திருக்க முடியாது, மருத்துவதுறையிலே கேன்சர் நோயால் அவதிப்படும்
மக்களுக்கு ஹீமோதிரெபி அளித்திருக்க முடியாது, விவசாயத்தின் விளைபொருளின்
உற்பத்தியை பெருக்கி இருக்க முடியாது. உலக நாடுகளே இந்தியாவை மதிக்கும்
வண்ணம் அணுசக்தி கொண்ட ஒரு வலிமையான நாடாக மாற்றியிருக்க முடியாது. எனவே
முடியாது என்று நினைத்திருந்தால், ஆபத்து என்று பயந்திருந்தால் எதுவும்
சாத்தியப்பட்டிருக்காது.


ஏன் கதிரியக்கத்தை முதன் முதலாக பிட்ச் பிளன்ட் (two uranium minerals,
pitchblende and torbernite (also known as chalcocite).) என்ற உலோகத்தை
தன் தலையில் சுமந்து அதை பற்றி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தாரே மேடம்
மேரி க்யூரி. தனக்கே ஆபத்து அதனால் வரும் என்று தெரிந்தும் ஆராய்ச்சியின்
நல்ல பயன் உலகத்திற்கு செல்ல வேண்டும் என்று, தொடர்ந்து ஆராய்ச்சி செய்து
முதன் முதலாக கதிர்வீச்சிற்கு வேதியலிலும், கதிர்இயக்கத்திற்கு
இயற்பியலிலும் 2 நோபல் பரிசைப்பெற்று, அந்த கதிரியக்கத்தாலேயே தன்
இன்னுயிரை இழந்தாரே.


அதுவல்லவா தியாகம். தன்னுயிரை இழந்து மண்ணுயிரை காத்த அன்னையல்லவா மேடம்
க்யூரி. இன்றைக்கு அந்த கதிரியக்கத்தால் எத்தனை கேன்சர் நோயாளிகள்
ஹீமோதெரபி மூலம் குணப்படுத்தப்படுகிறார்கள், விவசாயத்திற்கு தேவையான
விதைகளை கதிரியக்கத்தினை பயன்படுத்தி அதன் விளைச்சலை அதிகரிக்க முடிகிறதே.
இன்றைக்கு அணுசக்தியினால் உலகம் முழுதும் 4 லட்சம் மெகாவாட் மின்சாரம்
உற்பத்தி செய்யப்படுகிறதே. அதே போல் அணுசக்தியில் யாருக்கும் நாம்
சளைத்தவர்கள் இல்லை என்று சாதித்து காட்டினோமே, அந்த வழியில் நண்பர்களே
முடியாது என்று எதுவும் இல்லை.

முடியாது, ஆபத்து, பயம் என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது.
அப்படிப்பட்ட இயலாதவர்களின் கூட்டத்தால், உபதேசத்தால் வரலாறு படைக்கப்பட
வில்லை. வெறும் கூட்டத்தால் மாற்றத்தை கொண்டுவர முடியாது. முடியும் என்று
நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது, மாற்றம் இந்த
உலகிலே வந்திருக்கிறது.


இந்தியா வல்லரசாகும் என்று தவறான கருத்து பரப்ப படுகிறது, வல்லரசு என்ற
சித்தாந்தம் என்றோ போய்விட்டது. 2020க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற
வேண்டும் என்பது தான் நம் மக்களின் லட்சியம். எனவே நண்பர்களே, முடியும்
என்ற நம்பிக்கை கொண்ட 60 கோடி இளைஞர்கள் தான், இந்தியா 2020க்குள் வளர்ந்த
நாடாக உழைக்க முடியும், 2030க்குள் இந்தியா எரிசக்தி சுதந்திரத்தை அடைய
உழைக்க முடியும். என்னால் முடியும் என்றால், நம்மால் முடியும், நம்மால்
முடியும் என்றால் இந்தியாவால் முடியும்.

உறக்கதிலே வருவதல்ல கனவு, உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு. எனவே
அந்த கனவோடு, அந்த நம்பிக்கையோடு நாம் உழைத்தால் தான் எண்ணிய இலக்கை அடைய
முடியும். அதில் பல வெற்றிகளும் உண்டு, பிரச்சனைகளும் உண்டு, அதை
சமாளிக்கும் திறமையும் இந்தியாவிற்கு உண்டு. எனவே ஒவ்வொரு பிரச்சனையும்,
நமக்கு படிப்பினையும், மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தையும், மிகுந்த
தன்னிறைவையும், ஆராய்ச்சியில் மேம்பாடும், நாட்டிற்கு பெருமையையும்,
மக்களுக்கு நன்மையையும், பொருளாதார வளர்ச்சியையும், மக்களின்
வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவதாகத்தான் அமைந்துள்ளது.

இந்த உணர்வோடு, நாம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பையும்,
மக்களின் நியாயமான கேள்விகளையும், உண்மையான பயத்தையும் போக்கும் வகையில்
ஒவ்வொன்றாக பார்ப்போம். அதாவது ஒரு அணுமின் நிலையத்தைப்பற்றியும் அதன்
பாதுகாப்பை பற்றி நாம் முக்கியமாக பார்த்தோமேயானால், நான்கு பாதுகாப்பு
விஷயங்கள் முக்கியமானவை.

1. Nuclear Criticality Safety
- நீடித்த தொடர் அணுசக்தி கதிர்வீச்சினால் எதிர்பாராத விதமாக விபத்து
நேர்ந்தால் அதில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய தொழில்
நுட்பம்

2. Radiation Safety -
அணுக்கதிர் வீச்சுள்ள எரிபொருள்களை எப்படி கையாளுவது என்பது பற்றியும்,
உலக தரத்திற்கேற்ப அதை எப்படி எந்த முறையில் பாதுகாப்பாக உபயோகிப்பது
என்பது பற்றிய வழிமுறை

3. Thermal Hydraulic safety -
அணுஉலையில் எரிபொருளை குளிர்விக்கும் அமைப்பு மின்சார தடையால்
இயங்கவில்லை என்றால், அதை எப்படி மின்சாரம் இல்லாமலேயே இயங்க வைத்து
மாற்று மின்சாரம் வரும் வரை உருகி வெப்பநிலை கூடி வெடிக்காமல் தடுக்கும்
அமைப்பை எப்படி மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் இயக்குவது.

4. Structural integrity Safety? அணுஉலையும்
அது தொடர்பான மற்ற அமைப்புகளின் கட்டமைப்பையும், அது அமைக்கப்பெறும்
இடத்தின் வலிமையையும், இயற்கைப்பேரிடர் நேர்ந்தாலும் அதை எப்படி நிலைத்து
நிற்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற வழிமுறை

இந்த நான்கு
அமைப்புகளும் முறையாக அமைக்கப்பட்டிருக்கிறதா, தரத்துடன்
அமைக்கப்பட்டிருக்கிறதா என்று தான் முதலில் பார்க்கவேண்டும். கூடங்குளம்
அணுஉலை பற்றிய எங்களது முக்கியமான முதல் ஆய்வின் படி இந்த நான்கு
பாதுகாப்பு விதிமுறைகளும், சரியான விதத்திலே அமைக்கப்பட்டிருக்கிறது, அது
சோதித்தும் பார்க்கப்பட்டிருக்கிறது, பரிசோதனையில் அது நன்றாக
செயல்படுகிறது என்பது உறுதியாகி இருக்கிறது. 3வது பாதுகாப்பு
கூடங்குளத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்பு பாதுகாப்பாகும். எனவே
கூடங்குளம் மக்களுக்கு அணுஉலையின் பாதுகாப்பை பற்றி நானோ அளவு கூட சந்தேகம்
வேண்டாம். பாதுகாப்பை பற்றிய விரிவான விளக்கத்தை பின்னால் ஒவ்வொன்றாக
பார்ப்போம்.

முறையான பாதுகாப்பு அனுமதியுடன் கூடக்குளம் அணுமின் நிலையம்

ஒரு அணுஉலையை நிறுவுவதற்கு இடத்தை தேர்ந்தெடுக்கும் முன்பாக மிக கடுமையான
தேர்வு முறை பின் பற்றப்படுகிறது. அந்த இடத்தில், அதாவது பூகம்பத்தின்
விளைவுகள் எப்படி இருக்கும், அது எவ்வித பூகம்ப வரையரைக்குள் வரும், அதன்
பூகோளத்தன்மை, அடிப்படை அமைப்பு, பூகம்பம் வந்தால் ஏதேனும் பாதிப்பு
நிகழுமா இல்லையா, பாறைகளின் தன்மை எப்படி இருக்கிறது, சுனாமி வர வாய்ப்பு
உண்டா, அப்படி வந்தால் அது எப்படி பட்ட தன்மையானதாக இருக்கும், வெள்ளம்,
மழை, பக்கத்தில் உள்ள அணைக்கட்டு உடைந்தால் அதனால் பாதிப்பு ஏற்படுமா,
விமான நிலையம் பக்கத்தில் இருக்கிறதா இல்லையா, நச்சு மற்றும் வெடிக்கும்
தன்மையுள்ள பொருள்கள பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்க இடம் இருக்கிறதா
இல்லையா, இராணுவ அமைப்புகள் அருகில் உள்ளனவா, அந்த பகுதியில்
சுற்றுச்சூழல் அமைப்பு எவ்விதம் அமைந்துள்ளது, கடல் உயிரனங்களின்
வாழ்வாதாரம், தேவையான பரந்த நிலப்பரப்பு, தண்ணீர், மின்சாரத்தேவை
இருக்கிறதா இல்லையா போன்ற பல்வேறு காரணிகளை ஆராய்ந்து தான் அணுஉலை அமைக்க
ஒரு இடத்தை அரசு தேர்வு செய்கிறது. இதில் ஏதாவது ஒன்று குறை இருந்தால் கூட
அந்த இடம் அணு மின்சார உற்பத்திக்கு ஏதுவான இடம் இல்லை என்ற முடிவுக்கு
வந்து, அதற்கான அங்கீகாரம் கிடைக்காது.

எனவே அணுஉலை அமைக்கும் முன்பாகவே இத்தகைய அம்சத்தையும் ஆராய்ந்து பார்த்து
முடிவு எடுத்த பின்புதான் கூடம்குளம் இடம் அணுஉலை அமைப்பிற்கான
Environmental Impact Assessment (EIA),

அதாவது இந்த அணு உலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றத்தைப்பற்றி ஒரு
மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் மற்றும் அதன் தொடர்புடையோர்
கருத்தரிந்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் 2006
ம் ஆண்டின் வழிமுறைப்படி தேவையான பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிகள்
செய்யப்பட்டு அதற்கான AERB Code of Practice on Safety in Nuclear Power
Plant Sitting வழிமுறைப்படி, இடம் தேர்வுக்கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டு
அரசு அதற்கு முறைப்படி அனுமதி கொடுத்துள்ளது. எனவே, அணுஉலை சம்மந்தமாக
செய்யப்படும் எந்த ஒரு அனுமதியும் எவ்வித சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்காத
வகையில் அரசு மிக கடினமான வரைமுறைகளுடன் நிறைவேற்றி இருக்கிறது. ஜப்பான்
புக்குஸிமா விபத்திற்கு பிறகு பூகம்பமும், சுனாமியும் ஒன்று சேர்ந்து
வந்தாலும் கூட கூடங்குளம் அணு உலை தாங்கும்.

தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பகுதி பற்றிய அச்சம் தேவையற்றது (Exclusion and sterilization zone)

அணுஉலையை சுற்றி 1.5 கிலோமீட்டர் தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பான பகுதி,
அங்கு தான் குடியிருப்பு தடைசெய்யப்பட்ட பகுதி, அந்த பகுதி அணுஉலைக்கான
இடத்திற்குள்ளேயே வருவதால், அதற்கு வெளியே குடியிறுக்கும் மக்களை
வெளியேற்றுவது என்ற கேள்விக்கு இடமில்லை.

இதற்கடுத்தாற்போல், வரக்கூடிய பகுதி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள
சுத்திகரிக்கப்பட்ட பகுதியாகும். அங்கு ஏற்கனவே வசிக்கும் மக்கள்
எப்பொழுதும் போல் இருக்க, அந்த மக்கள் தொகை பெருக்கம் இயற்கையாக வளர எவ்வித
கட்டுப்பாடும் இல்லை. ஆனால் பாதுகாப்பு காரணம் கருதி அந்த பகுதியில்
அதிகமான மக்கள் புதிதாக குடியேறுவது, அந்த 5 கிலோமீட்டர் பகுதிக்குள் புதிய
தொழிற்சாலைகள் போன்றவை உருவாவது தான் கட்டுப்படுத்தப்பட வேண்டும், அதனால்
அதிக மக்கள் குடியிருப்பு, அதாவது 20000 மக்கள் தொகைக்கும் மேல், அந்த
பகுதியில் ஏற்படுத்தப்படக்கூடாது என்பது ஒரு வழிகாட்டு நெறிமுறை தானே தவிர,
கட்டாயம் இல்லை.

அணுஉலையின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம்

ஆனால் கூடங்குளம் அணுஉலை மிகவும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகளோடு,
3ம் தலைமுறையை சேர்ந்த பாதுகாப்பு வசதிகள் இந்தியாவின் வலியுறுத்தலின்
பேரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது Passive Heat Removal System (PHRS)
என்பது ஏற்படுத்தப்பட்டுள்ளது, ஒரு வேளை சிக்கலான சூழ்நிலையில் மின்சாரம்
தடைபட்டாலோ, குளிர்விக்கப்பட்ட நீர் கிடைக்க தடை ஏற்பட்டாலோகூட,
உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருளை பாதுகாத்து வைக்க ஏதுவான வகையில் PHRS
செயல்படும். அதாவது "thermo siphon effect" மூலம் பம்ப் செய்யாமலேயே,
மின்சாரம் இல்லாமலேயே தண்ணீரை மேலே செலுத்தி குளிர்ஊட்டக்கூடிய வகையில்
கூடங்குளத்திலே முதன் முறையாக இந்தியாவின் வலியுறுத்தலின் பேரில் இந்த
தொழில் நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலும், அணுமின் நிலையத்தின் எரிபொருளான மேம்படுத்தப்பட்ட
யுரேனியம், சுற்றச்சூழலில் கதிர்வீச்சை வெளிப்படுத்தி விடாமல் இருக்கவும்,
உருகிவிடமால் தடுக்கவும், உருகும் தாதுக்களால் அணுஉலைக்குள்ளேயே ஏற்படும்
கதிர்வீச்சையும் தடுக்கும் வகையிலும், கடும் விபத்து அணுஉலையில் ஏற்பட்டு
அணு உலை எரிபொருள் உருகும் நிலை ஏற்பட்டால் கூட அதைத்தடுக்கும் வகையில்
கோர் கேட்சர் "core catcher" என்ற தொழில் நுட்ப வசதியை கூடங்குளத்தில்
ஏற்படுத்தி உள்ளார்கள். எரிபொருள் உருகி அணுஉலையின் அழுத்தக்கலனை (Reactor
pressure vessel), மீறி வெளியேறினால், நீயுட்ரானை உறிஞ்சும் பொருளான
(Boron) போரான் அதிக அளவில் உள்ள Matrix மேட்ரிக்ஸில் வந்து விழும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது. போரானுடன், எரிபொருளில் இருந்து கசியும் நீயுட்டரான்
சேரும் பொழுது, அணுசக்தி தொடர் கதிரியக்க சக்தி செயல் இழந்துவிடும்.
இப்படிப்பட்ட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கொண்ட அணுமின் உலைதான்
கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதை நான் என் கண்கூடாக கண்டு,
விஞ்ஞானிகளுடன் விவாதித்து, உணர்ந்துள்ளேன்.

அதாவது 1.20 மீட்டர் கனமுள்ள சிமிண்டால் ஆன கான்கீரீட் வளையம்
அமைக்கப்பட்டிருக்கிறது. விபத்து ஏற்பட்டாலும் கூட, வெளிப்புற
சுற்றுச்சூழலில் கதிர்வீச்சை கசிய விடாமல் இருக்கும் படி, இந்த தடிமனான
கான்கீரீட் வளையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. எதிர்பாராத சம்பவம் ஏதும்
நிகழ்ந்து விட்டாலும் கூட, அணுஉலையைக் குளிர்விக்க ஒவ்வொரு அணுமின் நிலைய
உலை கட்டித்திலும் மிகப் பெரிய ரசாயணக் கலவை கொண்ட 12 நீர் தேக்கக்
தொட்டிகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

மின் சப்ளை துண்டிக்கப்பட்டு விட்டால், அதை எதிர் கொள்ள 6 மெகாவாட் மின்
சக்தி கொண்ட 4 டீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒருவேளை ஏதிர்பாராத
காரணத்தால் எரிபொருள் உருகி வழிந்தாலும், அதை உள்வாங்கிக்கொள்ள வசதியாக
பல லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள தண்ணீர் தொட்டிகள் அணுமின்
உலைக்கட்டிடத்தின் அடியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர ஹைட்ரஜனை
ஈர்த்துக்கொள்ள வசதியாக இரு அணுஉலைக்கட்டிடங்களிலும், தலா 154 ஹைட்ரஜன்
ரீகம்பெய்னர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே அணுஉலைக்குள் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியை மீறி எவ்வித
ஆபத்தும் மக்கள் வசிக்கும் பகுதிக்கு பரவாமல் தடுக்கக்கூடிய வகையில் தான்
கூடங்குளம் அணுஉலை மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்
அமைக்கப்பட்டுள்ளது. இது இன்றைக்கு உலகிலேயே இருக்கும் மேம்பட்ட பாதுகாப்பு
வசதியை விட பன்மடங்கு பாதுகாப்பு மற்றும் தடுப்பாற்றல் கொண்ட அம்சம்,
எனவே பாதுகாப்பைப்பற்றிய அச்சம் மக்களுக்கு வேண்டாம். அதைப்பற்றிய கவலையை
விட்டு விடுங்கள், அதைப்பற்றிய பயம் கூடங்குளம் பகுதி மக்களுக்கு
வேண்டாம்.

பூகம்பத்தையும் தாங்கும் உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருள் பாதுகாப்பு கட்டிடம்

உபயோகப்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருளை பாதுகாத்து வைக்கும் சேம்பருக்கு
400 சதவிகிதம் மாற்று மின்சக்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
அதுமட்டுமல்ல, மின்சாரம் தடைபடும் பட்சத்தில் டீஸல் மூலம் தொடர்ந்து
நாட்கணக்கில், மாதக்கணக்கில் செயல்பட ஏதுவாக செயல்படும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அணுஉலைக்கு உள்ளே பூமிக்கு கீழே 20
அடி ஆழத்தில், Spent Fuel Storage Pond (SFSP) கட்டப்பட்டுள்ளது, எனவே
ஒவ்வொரு வருடமும் அதில் 54 எரிபொருள் கட்டமைப்புகள் அதன் உபயோகம் முடிந்த
நிலையில் அணுஉலையில் இருந்து பிரிக்கப்பட்டு, அதில் புதிய எரிபொருள்
கட்டமைப்புகள் அணுஉலையில் வைக்கப்படும்.

இந்த கட்டமைப்பு, 582 ஏரிபொருள் கட்டமைப்புகளை 8 வருடங்கள் வரை பாதுகாத்து
வைக்க ஏதுவான வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நமது இந்திய யுரேனியத்தை 75
சதவிகிதம் மறுசுழற்சி முறையில் பயன் படுத்த கூடிய மேம்படுத்தப்பட்ட இந்திய
தொழில் நுட்பம் நமது அணுமின் நிலையங்களில் உள்ளது. எனவே இதன் மூலம் 75
சதவீகிதம் நாம் மறு சுழற்சி மூலம் திரும்பவும் பயன்படுத்த இயலும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இந்த உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருள்
வைக்கும் கட்டிடம் 6 ரிக்டர் ஸ்கேல் அளவுள்ள பூகம்பத்தை தாங்கும் சக்தி
படைத்தது, அப்படியே பூகம்பம் ஏற்பட்டால் கூட இது தானாக பாதுகாப்பாக
நின்றுவிடக்கூடிய வல்லமை பொருந்தியது. ஆனால் பூகம்ப வாய்ப்பு மிக குறைவுள்ள
2 ம் பகுதியான கூடங்குளத்தில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு
மிக மிக குறைவு.

அணுக்கழிவுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?

அணுஉலையில் உபயோகப்படுத்தப்படும் திடக்கழிவுகள் அதாவது காட்டன்,
கையுறைகள், மெயின்டன்ன்ஸ் ஸ்பேர் பார்ட்ஸ்கள், ரெஸின்கள் மற்றும்
வென்டிலேஸனுக்கு அதாவது காற்றோற்றத்திற்கு தேவையான பைபர்கள். இந்த
கழிவுகளை ஒருவேளை கதிர்வீச்சு தாக்கியிருந்தால் அதை மறுசுழற்சி செய்து அதை
சிமிண்ட் உடன் கலந்து ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் ட்ரம்களில் அடைத்து அதை திட
கழிவு வைப்பு கட்டிடத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்படும்.
இந்த கழிவைப்ப பாதுகாத்து வைக்கும் கட்டிடத்தில் 7 வருடங்களுக்கு
பாதுகாத்து வைக்க இயலும்.

அதற்கு பின் மறு சுழற்சி செய்து அதை திரும்ப பயன்படுத்த இயலும்.
திரவக்கழிவுகளை திடக்கழிவுகளாக மாற்றி, மேற்கூறிய முறையில் பாதுகாக்க
இயலும். எனவே அணுஉலைக்கழிவு என்பது கதிர்வீச்சை ஏற்படுத்தக்கூடிய எரிபொருள்
அல்ல, அணுஉலையில் உபயோகப்படுத்தக்கூடிய மற்ற பொருள்கள் சார்ந்த கழிவுகள்
என்பது தான். எனவே அணுக்ககழிவுகள் கடலில் கழக்கப்பட வில்லை.

சுற்றுச்சூழலில் கதிர்வீச்சு ஏற்படும் அபாயம் உண்டா?

கடந்த 40 வருட அணுஉலை அமைப்பில் இந்தியாவின் அனுபவத்தில், சுற்றுச்சூழலில்
அணுக்கதிர்வீச்சு அணுஉலை அமைந்த இடத்திலோ, அதைச்சுற்றியுள்ள 30
கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள பகுதியிலோ, சுற்றுச்சூழலில் எப்பொழுதும்
இருக்கும் இயற்கையான கதிர்வீச்சின் அளவை விட மிகுதியானதில்லை. அதன் அளவை
தொடர்ந்து கண்காணித்து கொண்டு வருவது அணுமின் நிலையத்தின் வேலையில் ஒரு
பகுதியாகும். எனவே கடந்த கால வரலாற்றில் கதிர்வீச்சின் அளவு
அனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் குறைந்து தான் காணப்பட்டிருக்கிறது.
கூடங்குளத்தை பொருத்தவரை மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம்
அமைக்கப்பட்டு இருப்பதால் சுற்றுச்சூழல் கதிர் வீச்சிற்கு உள்ளாகும் என்ற
கேள்விக்கே இடமில்லை.


கடந்த 40 வருட அணுஉலை அமைப்பில் இந்தியாவின் அனுபவத்தில், சுற்றுச்சூழலில்
அணுக்கதிர்வீச்சு அணுஉலை அமைந்த இடத்திலோ, அதைச்சுற்றியுள்ள 30
கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள பகுதியிலோ, சுற்றுச்சூழலில் எப்பொழுதும்
இருக்கும் இயற்கையான கதிர்வீச்சின் அளவை விட மிகுதியானதில்லை. அதன் அளவை
தொடர்ந்து கண்காணித்து கொண்டு வருவது அணுமின் நிலையத்தின் வேலையில் ஒரு
பகுதியாகும். எனவே கடந்த கால வரலாற்றில் கதிர்வீச்சின் அளவு
அனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் குறைந்து தான் காணப்பட்டிருக்கிறது.
கூடங்குளத்தை பொருத்தவரை மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம்
அமைக்கப்பட்டு இருப்பதால் சுற்றுச்சூழல் கதிர் வீச்சிற்கு உள்ளாகும் என்ற
கேள்விக்கே இடமில்லை.
மீன்வளத்திற்கு எவ்வித ஆபத்தும் இல்லை

அணுமின் நிலையத்தில் குளிர்ந்த தண்ணீர் தேவை என்பது தெரிந்த ஒன்றுதான்.
அணுஉலையில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு நீராவி வேண்டும், அதற்கு தண்ணீர்
தேவை. நீராவியை திரும்பவும் குளிரூட்டவும் தண்ணீர் தேவை. இந்த
உபயோகத்திற்கு பின், அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர்,
கடல் நீரின் வெப்பத்தைவிட 5 டிகிரி சென்டிகிரேட் கூடுதலாக இருக்கும், இது
வரையறுக்கப்பட்ட அளவான 7 டிகிரி சென்டிகிரேடுக்கும் கீழ் தான் இருக்கிறது
என்று ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

இதனால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படாது, கடல்வாழ் உயிரினங்களுக்கு
எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, இந்த சோதனையை 7 பல்கலைக்கழகங்கள்,
National Institute of Oceanography (NIO), Central Electro Chemical
Research Institute (CECRI) போன்றவைகள் சோதனை செய்து, கடலில் கலக்கும்
அணுஉலையின் நீரால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்திருக்கிறது.
இதுவரை தாரப்பூர், கல்பாக்கம் அணுஉலைகள் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது,
அதனால் மீன் வளத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை. எனவே அணுமின்
நிலையத்தின் நீர் கழிவுகளால் எவ்வித வெப்ப மாறுபாட்டாலோ எவ்வித பாதிப்பும்
மீன்வளத்திற்கு ஏற்பட வாயப்பில்லை. கடலோரத்தில் உள்ள அனைத்து அணுஉலகளின்
ஆய்வின் படி மீன் வளம்பாதித்தாகவோ, அதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டார்கள்
என்றோ ஆய்வறிக்கை சொல்லவில்லை. மீன் வளம் குறையாமல் இருக்க பாதாள சாக்கடை
கழிவுகளை சுத்தப்படுத்தி தான் கடலில் கலக்கவேண்டும். அதுதான் மிகவும்
முக்கியம்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நீங்கள் மாணவ மாணவிகளா?அப்துல் கலாமின் பத்துக் கட்டளைகள்.
» ஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்
» 1,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள்
» இவை உலகத்தை குலுக்கியவை என்றால். ஈழத்தில் நடந்தவை உலுக்கவில்லையா..? - ஆய்வுக் கண்ணோட்டம்
» ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் மண்ணில் புதைகிறது ஆய்வுக் குழுவின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் P

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum