TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


Internet Fraud - இணையத்தள ஏமாற்று-2

2 posters

Go down

Internet  Fraud - இணையத்தள ஏமாற்று-2 Empty Internet Fraud - இணையத்தள ஏமாற்று-2

Post by sakthy Fri Oct 21, 2011 12:18 am

Internet Fraud - இணையத்தள ஏமாற்று.

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

உயிர் காக்கும் மருந்துகளில் கூட இரக்கமற்று இணையத்தளங்களில் ஏமாற்று செய்கிறார்களே என்று எழுதியிருந்தேன்.இதைப் படித்த எனக்கு தெரிந்த ஒருவர் தமிழகத்தில் இருந்து கண்ணீரை கடிதமாக்கி ஒரு மின் அஞ்சல் அனுப்பி இருந்தார்.சுலபமாக பணம் சம்பாதிக்கவும்,தங்கள் கஷ்டங்களை தீர்த்துக் கொள்ளவும் விரும்பும் பலர் நம்மிடையே இன்றும் என்றும் இருப்பதால்,படித்தவர்கள் கூட ஏமாறுகிறார்களே என்பதை எண்ண வேதனையாக இருக்கிறது.இந்த அப்பாவிகளை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் இணையத்தள நண்பர்களை எப்படி அழைப்பது? scams,fraud,corruption,fake செய்பவர்கள் என்பதா இல்லை......எப்படி?

அந்த அப்பாவி மனிதர் பல கஷ்டங்களில் சிக்கி தவித்த போது அவருக்கு ஒரு மின் அஞ்சல் வந்திருந்தது. தெய்வம் வழி காட்டியதாக எண்ணிய அவர் ஒரு தொகை கஷ்டப்பட்டு உழைத்து பெற்ற பணத்தை எடுத்துக் கொண்டு தலைநகர் டில்லிக்கு சென்றார். அங்கு முன்னரே குறிப்பிட்ட வெளிநாட்டு நண்பரிடம்(?) பணத்தை ஒப்படைத்து விட்டு திரும்பிய அவர் இன்று வரை தெய்வம் தரப் போகும் பெரும் பணத்திற்காக காத்திருக்கிறார். பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும் என்று கூறி ஒரு வாழ்த்து அட்டை மட்டும் வந்தது என்று குறிப்பிட்டு இருந்தார்.இவரைப் போல் பலர் ஏமாந்து இருக்கலாம்.

உங்கள் மின் அஞ்சல் முகவரி லாட்டரியில் தேர்வாகி இருப்பதாகவும் பல மில்லியன் டாலர்/பவுண்ட்ஸ் கிடைக்கும் எனவும்,அதற்காக ஒரு தொகை பணத்தை நீங்கள் முன்னராக செலவு தொகையாக அனுப்ப வேண்டும் அல்லது தங்கள் முகவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிப்பார்கள்.அதில் அவர்கள் முகவரியும் உண்மையானது போல அழகாக எழுதப்பட்டு இருக்கும்.இதை chain letters,pyramid scheme என்பார்கள்.இவற்றை படிக்கும் போது பொய் என யாரும் சொல்ல முடியாத அளவு உண்மைத்தன்மை இருக்கும்.
இப்படியான internet fraud,scams,fake பலவற்றை அறிந்திருப்பீர்கள்.அவற்றில் சிலவற்றை இங்கு தரலாம் என அண்ணுகிறேன்.

திடீரென உங்கள் முன் கணினி திரையில் - Congratulations! You've won என்று ஒரு செய்தி வந்து நிற்கும் .
மின் அஞ்சல்கள் பெரிய எழுத்துக்களில் (capital letters) எழுதப்பட்டு பெரும் தொகையான பணம் வங்க்கியில் உள்ளதாகவும் அதை மாற்றி வேறு இடத்தில் முதலீடு செய்ய உதவுமாறும், போன்ற செய்திகளுடன் மின் அஞ்சல் வரும்.இது Nigerian 419 crime ஆக சொல்லப்படும்.

microsoft,CBI,FBI, போன்ற தலைப்புடன் சில மின் அஞ்சல்கள் வரும் .ஆகா நமக்கும் பெரிய இடங்களில் இருந்தெல்லாம் கடிதம் வருகிறது என்று காலரை தூக்கி விட்டுக் கொள்வோம்.ஏமாற்றப்படுவோம்.

ICC போன்ற விளையாட்டுக்கள் ,online visa,passport, Dating,online jobs,paypal ,Tickets, work at home போன்ற வேறு சில ஏமாற்றுக்கள் சாதாரணமாக எப்போதுமே நம்மை தொடர்ந்து வரும்..

உங்கள் வங்கிக் கணக்கை,மின் அஞ்சல் கணக்கை இப்படி ஏதாவது, பரிசீலிக்கும்படியும் இல்லையேல் உங்கள் கணக்கு, your account will be terminated என்று மின் அஞ்சல் வரும். clever fake என்று சொல்லப்படும் இந்த அன்பான கடிதம் Phishing hacking ளில் அகப்பட்டு கணக்கு இலக்கம், பாஸ்வேட் திருடப்பாட்டு விடும்.

இந்த பக்கத்தின் Domain name renewal செய்யப்படவில்லை என்ற செய்தி வந்து உங்களை வேறு பக்கத்திற்கு அழைத்து சென்று phishing செய்யப்படும்.

spyware and key loggers என்று இன்னொரு வகை. Click fraud வகைக்குள் வரும் இதில், நீங்கள் உங்கள் விசைப்பலகையில் கணக்கு இலக்கமோ,பாஸ்வேட்டையோ அழுத்தும் போது இந்த நல்ல மனிதன் அவற்றை எடுத்து சென்று விடுவான்.

சுலபமாக பணம் அனுப்பி வைக்க குறைந்த செலவில் வழி என்று internet வங்கிகள்,சில இணையதளங்கள் தங்கள் அன்பையும் பாசத்தையும் கொட்டித் தீர்த்து தலையை நீட்டிக் கொண்டு வருவார்கள். இதன் மூலம் credit card மட்டுமல்ல பணமும் திருடப்படும்.

குறைந்த செலவில் வெளிநாடுகளுக்கு தொலைபேசி தொடர்பு என்று வந்து பணத்தை தயவு தாட்சணியம் இன்றி எடுத்து செல்லும் சில இணையங்களும், 190 ளில் தொடங்கும் இலக்கங்களும் இருக்கவே இருக்கிறது.

missed calls மற்றும் unknown இலக்கங்கள்,எஸ்‌எம்‌எஸ் எம்‌எம்‌எஸ் வந்து தொலைக்கும். ஆனால் நீங்கள் தொலைபேசியை எடுத்து விட்டாலோ உங்கள் கணக்கில் அவர்கள் விருந்து சாப்பிடுவார்கள்.

லாற்றறி சாரிட்டி அறக்கட்டளை என நம்பிக்கையான பெயர்களை,இயக்கங்களை வைத்து பணம் சேர்க்கும் சில தொண்டு நிறுவனங்கள் நல்லவர்கள் போல் வந்து காத்து நிற்பார்கள்.

நீங்கள் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு இணையத்தளதிற்கு சென்று கடைகளில் பார்ப்பது போல் சும்மா பார்ப்பீர்கள். உங்கள் கை சும்மா இருக்காமல் எதையாவது தட்டி தொலைக்கும். சில நாட்களின் பின் நீங்கள் கேட்காத பொருட்கள் வீட்டிற்கு வரும் இல்லையேல் உங்கள் பெயருக்கு பில் வரும். சில சமயம் நீங்கள் கேட்ட பொருட்களுக்கு பதில் விற்கப்படாத பொருட்கள்,தரம் குறைந்த பொருட்கள் வந்து சேரும்.நீங்கள் தான் ஏற்கனவே பணத்தை வங்கி அல்லது paypal மூல அனுப்பி விட்டீர்களே.

சோசியல் networks மூலம் பணம் திரட்டுவார்கள். சமீபத்தில் தமிழ்நாட்டில் பல இலட்சம் பணம் ஏமாற்றப்பட்டது தெரிந்ததே.

சில சமயம் நல்ல செய்திகளை,முக்கிய விபரங்களை பெற்றுக் கொள்ள fax செய்யும்படி கேட்பார்கள். நீங்களும் அந்த இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்துவீர்கள். செய்தி வரும்.ஆனால் அதிக பணம் தொலைபேசி கட்டணமாக போய் விடும்.

ஏதாவது பொருளை பெற அல்லது மென்பொருளை பெற இணையத்தளம் செல்வீர்கள். இலவச மின்பொருள் என்று இருக்கும் இல்லை வேறேதாவது வாங்க செல்லும் போது இறுதியில் terms and condition என்று வரும்.படிக்க பொறுமை இன்றி கண்ணை மூடிக் கொண்டு accept அல்லது yes,ok அழுத்துவீர்கள். பின் ஏமாறுவீர்கள்.நீங்கள் தான் அழுத்தி விட்டீர்களே.ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் உடனே internet crime போலீசாருக்கு அறிவித்தால் தப்பிக்க முடியும்.இல்லையேல்.......கோவிந்தா தான்?

மிகப் பிரபலமான ஒரு இணையத்தள முகவரியை microsoft,mozilla,google இப்படி ஏதாவது address bar,URL ல் எழுதுவீர்கள். அந்த சமயம் பார்த்து phishing,hacker வந்து நுழையும். இந்த இணையத்தளம் redirect என்று வந்து ஒரு blank website க்கு கொண்டு செல்லும். நீங்கள் ஒரு அப்பாவி காத்திருப்பீர்கள். ஐயோ பாவம் இதற்குள் உங்கள் கணினியில் இருந்து பல விஷயங்கள் எங்கோ போய் விடும்.

இதைவிட விளம்பரங்கள், stock market ஆகியவற்றாலும் ஏமாற்றுக்கள் தலைவிரித்து ஆடுகிறது.இவை மின் அஞ்சல் மூலமும் நடைபெறுகிறது.இதை pump and dump அன்று அழைக்கப்படுகிறது.

இன்னொரு ஏமாற்று ஒருவரின் அல்லது ஒரு மென்பொருள் அல்லது அலுவலகம் போன்றவற்றில் உள்ள தரவுகளை Data மாற்றி அமைப்பது. இதை Spoofing என்பர். இதுவும் ஒரு phishing வகையை சேர்ந்தது தான்.

இதே போல் caller ID வைத்து cellphone,VOIP மூலம் caller ID Spoofing மற்றும் email Spoofing உம் கூட நடைமுறையில் உள்ளதை மறந்து விடாது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்..

மிக அதிக பயங்கர fraud இணையத்தளங்கள் Nigeria, Russia, Philippines,Ghana,Ukrain நாடுகளில் இருந்து அல்லது அந்த நாடுகளுக்கு ஊடாக அழையா விருந்தாளிகளாக வருகின்றன. அதை அடுத்து சீனா,பிரிட்டன்,தாய்லாந்து,சிங்கப்பூர்,மலேசியா போன்ற பல நாடுகளை சொல்லலாம்.

அரசியல்வாதிகள்,சாமியார்கள்,நடிகர்கள் என்று பலரிடம் ஏமாறுவதைப் போல்,ஏமாற நாம் தயாரானால் ஏமாற்ற இல்லை உதவி செய்ய ஓடி வருவார்கள் எங்கள் மீது அக்கறை கொண்ட பலர்.

மீண்டும்..................அழையா விருந்தாளியாக வருகிறேன்...................சக்தி.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Internet  Fraud - இணையத்தள ஏமாற்று-2 Empty Re: Internet Fraud - இணையத்தள ஏமாற்று-2

Post by அருள் Fri Oct 21, 2011 6:49 am

நன்றி சக்தி .அனை வருக்கும் பயனுள்ள தகவல் . வாழ்த்துக்கள் சக்தி visil yes
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum