Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
முதலுதவியளிக்க கற்றுக்கொள்ளுங்கள்!
Page 1 of 1
முதலுதவியளிக்க கற்றுக்கொள்ளுங்கள்!
[You must be registered and logged in to see this image.]ஆரம்பத்திலேயே
ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறோம். ஒரு கையேடு இருந்தால் போதும்.
எல் லா சந்தர்ப்பங்களில் நாமாகவே சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று
நினைத்துவிடாதீர்கள். காரணம், சிகிச்சை முறைகள் நபருக்கு நபர்,
சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். ஆனாலும், சில பொதுவான விதிகளை மட்டும் இங்கே
தொகுத்துள்ளோம்.
முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று:
1. உயிரைப் பாதுகாக்க வேண்டும்.
2. நிலைமை மோசமாவதைத் தடுக்க வேண்டும்.
3. சீக்கிரத்தில் குணமளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
எல்லாவற்றையும்
விட முக்கியமானது தைரியம். பாதிக்கப்பட்டவர்களைத் தேற்றி, ஆறுதல் சொல்ல
வேண் டும். பயப்படக் கூடாது. தவிரவும், வேறு சில பொறுப்புகளும் உள்ளன.
1. உடனடியாக நிலைமையை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். பதற்றப்படக் கூடாது. தகுந்த உதவி கிடைக்க உதவ வேண்டும்.
2. தீ
விபத்தில் சிக்கிக் கொண்ட ஒருவருக்கு முதலுதவி அளிக்க வேண்டும் என்றால்
முதலில் முதலுதவி அளிக்க முன்வருபவருக்குத் தன்னைப் பாதுகாக்கத்
தெரிந்திருக்க வேண்டும். பிறகு, பாதிக்கப்பட்டவர். பிறகு, அருகில்
இருப்பவர்.
3. பாதிப்பின் தன்மையை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
4. உடனுக்குடன்
சிகிச்சை அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டி
ருக்கும் பட்சத்தில், தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மீது நம் கவனம்
முதலில் திரும்ப வேண்டும்.
5. சம்பந்தப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள
மருத்துவமனைக்கோ, வீட்டுக்கோ, மருத் துவரிடமோ அழைத்துச் செல்ல ஏற்பாடு
செய்ய வேண்டும். தக்க வாகனங்களைத் தயார் செய்ய வேண்டும்.
6. மருத்துவ உதவி கிடைக்கும் வரை சம்பந்தப்பட்டவருக்கு அருகேயே இருக்க வேண்டும்.
7. நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும்.
தீக்காயம் தீவிர காயம்
சிகிச்சை முறை:
● 10 நிமிடங்களுக்கு ஓடும் நீரில் காயத்தைக் காண்பிக்கவும்.
● ஆம்புலன்ஸைத் தொடர்பு கொள்ளவும்.
● பாதிக்கப்பட்டவரைக் கீழே படுக்க வைக்கவும். அவரை சௌகரியமான நிலைக்குக் கொண்டு செல்லவும்.
● பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது [You must be registered and logged in to see this image.]வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும்.
● கடிகாரம், நகை போன்ற தோலில் ஒட்டக்கூடிய பொருள்களை உடனடியாக அகற்றி வி டுங்கள்.
● நல்ல சுத்தமான முறையில் காயத்தை மூடி வைக்கவும்.
சிறிய காயங்கள்
சிகிச்சை:
பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும்.
தபால்
தலை அளவை விட பெரிய அளவில் தீக்காயம் ஏற்பட்டிருந் தால், மருத்துவ
உதவிபெற வேண்டியது அவசியம். பெரிய தீக்காயங்களுக்கு உடனடி மருத்துவ
சிகிச்சை அத்தியாவசியம்.
துணிகளில் தீப்பற்றிக் கொண்டால்
● பதற்றப்பட்டு ஓடவேண்டாம். அப்படிச் செய்தால் தீ வேகமாகப் பரவும்.
● தீக்காயம் ஏற்பட்டவரை உடனடியாகத் தரையில் படுக்க வைக்கவும்.
● தீக்காயம் ஏற்பட்டவரை கனமான கோட்டாலோ, போர்வையாலோ சுற்றவும். நைலான் வகைகளைக் க ண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
● பற்றிக்கொண்ட தீ அணையாமல் எரிந்து கொண்டிருந்தால், கீழே படுக்க வைத்து உருட் டலாம்.
அனைத்து விதமான தீக்காயங்களுக்கும் பொதுவான விதிமுறைகள்
● ஆயின்மெண்ட், க்ரீம், களிம்பு வகைகளை பயன்படுத்தவே கூடாது.
● பிளாஸ்திரி வகைகளை பயன்படுத்தக் கூடாது.
● கொப்புளங்களை உடைக்கக் கூடாது.
பெரியவர்களுக்கு ஏற்படும் திடீர் நோய்ப்பிடிப்பு
வலிப்பு நோய்
காக்கை
வலிப்பு என்று பரவலாக அழைக்கப்படும் வலிப்பு நோய் ஏற்படும் போது
உடலிலுள்ள பல தசைகள் சுருங்குகின்றன. மூளையில் ஏற்படும் மின் [You must be registered and logged in to see this image.]அதிர்வுகளின் விளைவு இது. வலிப்பு ஏற்படும் போது, நினைவு தப்பிப் போகும். பாதிக்கப்பட்ட நபர் மூர்ச்சையடைந்து விடுவார்.
வலிப்பு நோய் எதனால் ஏற்படுகிறது?
● தலைக் காயத்தினால்
● மூளை பாதிக்கும் நோய்களால்
● மூளையில் பிராணவாயு, குளுக்கோஸ் அளவு குறையும் போது
● விஷம் சாப்பிடுவதால், மது அருந்துவதால்
வலிப்பு
நோய் திடீர் என்று தாக்கும். தாக்குவதற்கு முன்னால் சில அறிகுறிகளைக்
கண்டுகொள்ளலாம். புதிய சுவை, புதிய வாசத்தை உணர முடியும். வலிப்பு எந்த
வகையில் வந்தாலும் சரி, எப்போது வந்தாலும் சரி, உடனடியாக சில விஷயங்களை
நாம் செய்தாக வேண்டும். முதலில், அவர்களுக்குக் காற்றோட்டம் தேவை. அதை
ஏற்படுத்தித் தர வேண்டும். பிறகு, அவரது நாடித் துடிப்பையும் சுவாசத்தையும்
சரிபார்க்க வேண்டும். சுற்றியிருக்கும் பொருள்களால் சேதம் ஏற்படுவதைத்
தவிர்க்க வேண்டும்.
கண்டுபிடிப்பது எப்படி?
பொதுவான காரணிகள்
● திடீரென மயக்கமடைதல்
● ஆர்ச் வடிவில் பின்புறம் வளைதல்
● தாக்குப்பிடிக்க முடியாமல் திணறல், வலிப்பு ஏற்பட்டால் கீழ்க்கண்ட மாற்றங்கள் நிகழும்
● சத்தம் போட்டுக்கொண்டே திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுதல்
● அசைவில்லாமல் இருத்தல்
● சுவாசம் தடைபடுதல்
● திணறல், தாடைகள் இறுகுதல், இரைச்சலுடன் கூடிய சுவாசம், உதட்டையோ நாக்கையோ கடித்தல், கட்டுப்பாட்டை இழந்து விடுவது.
● சில நிமிடங்களில் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்புதல். என்ன நடந்தது என்பதையே உணராமல் இருத்தல்.
● சோர்வடைந்து, உடனே தூங்குதல்.
முதலுதவி செய்பவரின் பணி
● காயமடையாமல் பாதுகாக்க வேண்டும்.
● நினைவு தப்பிப் போனால், அருகிலுருந்து கவனித்துக் கொள்ளுதல்.
● உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை.
● சம்பந்தப்பட்டவர் கீழே விழ நேர்ந்தால், அவரைத் தாங்கிப் பிடித்தல்.
● காற்றோட்டம் ஏற்படுத்தலாம். கும்பல் கூடாமல் பார்த்துக் கொள்ளுதல்.
● கூரான பொருள்கள், சூடான பானங்கள் போன்றவை அருகில் இல் லாமல் பார்த்துக் கொள்ளுதல்.
● எப்போது வலிப்பு ஆரம்பித்தது என்று குறித்து வைத்துக்கொள்ளுதல்.
● அவரது தலையைப் பாதுகாக்க வேண்டும். முடிந்தால் தலையணையில் அவரது தலையைச் சாய்த்து வைக்கலாம்.
● கழுத்துப் பகுதியில் உள்ள இறுக்கத்தைத் தளர்த்தலாம்.
வலிப்பு நின்றவுடன் என்ன செய்ய வேண்டும்?
● காற்றுக் குழாயைத் திறந்து சுவாசம் சீராக இருக்கிறதா என்று பார்க்கலாம்.
● சுவாச மீட்பும் மார்பை அழுத்தும் செயலையும் (அடிப்படை உயிர்பாதுகாப்பு முறை) செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
● அவர் சீராக சுவாசித்துக் கொண்டிருந்தால் குணமடைவதற்குத் தோதான நிலையில் அவரைச் சாய்த்துப் படுக்க வைக்கவும்.
● நாடித் துடிப்பு, சுவாசம் இரண்டையும் தொடர்ந்து கவனிக்கவும்.
● எத்தனை நேரம் வலிப்பு நீடிக்கிறது என்று குறித்து[You must be registered and logged in to see this image.] வைத்துக் கொள்ளவும்.
கவனம்
● நிலைமை மோசமாக இருந்தால் மட்டுமே அவரை வேறொரு பகுதிக்கு அழைத்துச் செ ல்லலாம்.
● அவரது வாயில் எதையும் திணிக்கக் கூடாது.
● பலவந்தப்படுத்தி அவரை அமைதிப்படுத்த முயற்சி செய்ய வேண்டாம்.
எச்சரிக்கை
கீழ்க்கண்ட முறையில் ஏதாவது நடந்தால் உடனடியாக ஆம்புலன்ஸைத் தொடர்பு கொள்ளவும்.
● பத்து நிமிடங்களுக்கு மேல் அவர் பேச்சு மூச்சின்றி இருந்தால்
● ஐந்து நிமிடங்களுக்கு மேல் வலிப்பு தொடர்ந்தால்
● முதல் முறையாக வலிப்பு ஏற்பட்டால், தொடர்ந்து வலிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந் தால்.
● வலிப்பு வந்ததன் காரணத்தை அவர் உணராது போனால்
மயக்கம்
மூளைக்குப் போய்ச் சேர வேண்டிய ரத்தம் போதிய அளவு போகாமல் போனால் மயக்கம் ஏற்படுகிறது. குறுகிய காலம் மட்டுமே இது ஏற்படும்.
மயக்கத்தால்
பெரிய ஆபத்து இல்லை என்று சொல்லி விட முடியாது. எதற்காக மயக்கம்
ஏற்பட்டது என்பதை உணர முடியாத பட்சத்தில் உடனடி மருத்துவ உதவி பெற வே
ண்டியது அவசியம்.
எப்படிச் சமாளிக்கலாம்?
1. பின்புறமாக சாய வைக்கலாம். கால்களை உயர்த்தி விடுவது நல்லது.
2. காற்றுக் குழாயைச் சரிபார்க்கவும். வாந்தி வருகிறதா என்று கவனிக்கவும்.
3. சுவாசம்,
இருமல் போன்றவை இருக்கிறதா என்று பார்க்கவும். இல்லையென்றால் சிறிசிஸி
ஐத் தொடங்கவும். தகுந்த உதவி வரும் வரை அல்லது பாதிக்கப்பட்டவரின் நிலைமை
சீராகும் வரை சிறிசிஸிஐத் தொடரவும்.
4. தலை மட்டத்தை விட உயரமாகக்
காலை உயர்த்தவும். இப்படிச் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீரடையும்,
இறுக்கமாக உடைகளைத் தளர்த்துங்கள். ஒரு நிமிடம் அவகாசம் கொடுத்துப்
பாருங்கள். விழித்துக் கொள்ளவில்லை என்றால் அவசர சிகிச்சைப் பிரிவை
நாடவும்.
அதீத ரத்தப் போக்கு
பாதிக்கப்பட்டவரின்
ரத்தப் போக்கை நிறுத்த முயற்சி செய்வதற்கு மு ன்னால் உங்கள் கைகளைச்
சுத்தமாகக் கழுவிக் கொள்வது நல்லது. முடிந்தால், கையுறை அணிந்து
கொள்ளுங்கள். கிருமிகள் தொற்றிக் கொள்வதைத தவிர்க்கலாம். ஏதேனும் பாகங்கள்
பிதுங்கி வெளியில் வந்து விட்டால் அவற்றை மீண்டும் உள்ளே தள்ள முயற்சி
செய்ய வேண்டாம். கட்டுப்போட்டு மட்டும் வைக்கவும். தவிரவும், கீழ்க்கண்ட
வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்.
1. கீழே படுக்க வைக்கவும். உடலைவிட
தலையைச் சற்றுத் தாழ்த்தி வைப்பது நல்லது. கால்களையும் உயர்த்தி
வைக்கவும். இப்படிச் செய்தால் ரத்தம் மூளைக்குள் வேகமாகப் பாய்ந்தோடுவதைத்
தடுக்கலாம். எந்த இடத்திலிருந்து ரத்தம் பெருகுகிறதோ அந்த இடத்தைக்
கொஞ்சம் உயர்த்தியது போல் தூக்கி வைத்தால் நல்லது.
2. கையுறை
அணிந்து கொண்டபின், காயத்திலுள்ள அழுக்குகளை நீக்கலாம். உள்ளே குத் திக்
கிடக்கும் பொருளை பலவந்தமாக இழுக்க முயலக்கூடாது. காயத்தைச் சுத்தப்படுத்த
முயற்சி செய்ய வேண்டாம்.
3. ரத்தம் வரும் இடத்தை அழுத்திப் பிடிக்க
வேண்டும். கட்டுப்போட்டு நிறுத்தலாம். அல்லது கையுறை அணிந்த கையால்
அழுத்திப் பிடிக்கலாம்.
4. ரத்தப் போக்கு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்க வேண்டும்.
5. கட்டுப்போட்ட பின்னும் ரத்தப் போக்கு தொடர்ந்தால் கட்டைப் பிரிக்க முயற்சி செய்ய வேண்டாம்.
6. ரத்தப்
போக்கு நிற்காத பட்சத்தில் குருதிக் குழாயை (arteries & veins)
அழுத்திப் பிடிக்கலாம். முழங்கைக்கும் அக்குளுக்கும் இடைப்பட்ட பகுதியில்
கைக்கு உண்டான குருதிக் குழாய் உள்ளது. காலுக்கான குருதிக் குழாய்
முட்டிக்கும் இடுப்புக்கும் மத்தியில் உள்ளது. இவற்றை அழு த்திப்
பிடிக்கலாம்.
7. ரத்தப்போக்கு நின்றுவிட்டதே என்பதற்காக போட்டு
வைத்திருந்த கட்டைப் பிரிப்பது சரியல்ல. உடனடியாக, அவரை மருத்துவமனைக்குக்
கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.
8. உட்புறமாக ரத்தக் கசிவு இருந்தால் அவசர சிகிச்சைப் பிரிவை அணுகுவது தான் ஒரே வழி.
சில அறிகுறிகள்
● காது, மூக்கு, மலக்குடல், பெண்ணின் கருப்பை, வாய்க்குழாய் போன்ற பகுதிகளிலிருந்து ஏற்படும் ரத்தக் கசிவு.
● இருமும் போது, வாந்தி எடுக்கும் போது ரத்தம் வெளிப்படுதல்.
● கழுத்தில், மார்பில், அடி வயிறு போன்றவற்றில் அடிபட்டால் ரத்தம் கசிதல்.
● மார்பு, வயிறு, [You must be registered and logged in to see this image.]மண்டை ஓட்டை ஊடுருவி அடிபட்டால்
● வயிற்றுத் தசைகள் இறுக்கமடைந்தால், சுருங்கினால்
● எலும்பு முறிவு ஏற்பட்டால்
● ஜில்லிடும் தோல் பகுதி, தளர்ச்சி, சோர்வு, அதிர்ச்சி
அதிர்ச்சி
அதிர்ச்சி
ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உதாரணமாகச் சொல்லலாம். இழப்பு, அலர்ஜி,
தொற்று, இன் னபிற. அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களை இனம் காண சில
அடிப்படைகள்.
தோல் ஜில்லிட்டு இருக்கும். வெளுத்துப் போய் காணப்படும்.
நாடித் துடிப்பு குறையும். சுவாசம் சீராக இருக்காது. அல்லது வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். ரத்த அழுத்த அளவு குறையும்.
கண்கள் எதையோ வெறித்துப் பார்த்தபடி இருக்கும். கண் விழி அகன்று இருக்கும்.
மயக்கமடைந்த
நிலையிலோ அல்லது விழிப்புடனோ இருப்பார்கள். விழிப்புடன் இருந்தால்,
குழப்பத்துடன், வலுவிழந்து காணப்படுவர். பதட்டம் அதிகரிக்கும்.
சில முக்கிய அறிகுறிகள்
● வெளிறிய தன்மை
● ஜில்லிட்ட தேகம்
● அதிகரித்த நாடித் துடிப்பு
● பதற்றம்
● தாகம்
● சுகவீனம்
அடிபட்டதால் அதிர்ச்சியடைந்தவர்களை என்ன செய்ய வேண்டும்?
● மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளலாம்.
● சாய்ந்த நிலையில் படுக்க வைக்கலாம்.
● நாடித் துடிப்பு, இருமல், சுவாசம் இயல்பாக இருக்கிறதா என்று பார்க்கவும். இல்லை என் றால் சிறிசிஸிஐத் தொடங்கவும்.
● தோதான நிலைக்கு அழைத்துச் செல்லவும். இறுக்கமான உடைகளைத் தளர்த்தவும். தாகம் என்று கேட்டால் கூடத் தண்ணீர் தர வேண்டாம்.
● ரத்தத்துடன் வாந்தி எடுத்தால், அவரைக் கவனமாக மீட்பு நிலைக்கு எடுத்துச் செல்லவும்.
● காயத்துக்கு மருத்துவ உதவி பெற்றுத் தரவும்.
மூக்கு வழியாக ரத்தம் கசிதல்
பரவலான
சங்கதி இது. குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் பெ ரும்பாலும் மூக்கின்
உட்புறத்திலிருந்துதான் (ஷிமீஜீtuனீ) ரத்தக் கசிவு ஏற்படும்.
வயதானவர்களுக்கும்
நடுத்தர வயதுக்காரர்களுக்கும் கூட மூக்கின் உட்புறத்திலிருந்து ரத்தம்
கசியலாம். அதே சமயம், ஆழமான கசிவாகவும் இருக்கலாம். இறுக்கமாகிப் போன
ரத்தக் குழாய் காரணமாகவோ அல்லது அதிக ரத்த அழுத்தத்தின் காரணமாகவோ கூட
இந்தக் கசிவு ஏற்பட்டிருக்கலாம். பல சமயங்களில் இந்தக் கசிவை நிறுத்த
முடியாது. தேர்ந்த மருத்துவ சிகிச்சை தேவை.
என்ன செய்யலாம்?
● உயர்த்திய நிலையில் இருந்தால் ரத்தக் கசிவு நிற்கலாம்.
● ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு மூக்கைக் கிள்ளுவது போல் அழுத்திப் பிடிக்கலாம். அந்தச் சமயத்தில், வாய் வழியாக சுவாசிக்கலாம்.
● மூக்கைச் சிந்தக் கூடாது. கீழே குனியவும் கூடாது.
உடனடி அவசர சிகிச்சை எப்போது தேவைப்படும்?
● 20 நிமிடங்களுக்கும் அதிகமாக ரத்தப் போக்கு இருந்தால்
● மீண்டும் மீண்டும் ரத்தக் கசிவு ஏற்பட்டால்
● கீழே விழுந்ததாலோ தலையில் அடிபட்டதாலோ மூக்கில் ரத்தக் கசிவு ஏற்பட்டால்.
வெளிப்புறப் பொருள்கள்
காது
வெளிப்
பொருள்கள் காதில் சிக்கிக் கொண்டால் வலி அதிகரிக்கும். கேட்கும் திறன்
குறையும். ஏதேனும் பொருள் காதில் சிக்கிக் கொண்டால், உடனடியாகக்
கண்டுபிடித்து விடலாம். குழந்தைகளால் இது முடியாது.
என்ன செய்யலாம்?
● குச்சி போன்ற பொருள்களால் காதைக் குடைவது தவறு. அப்படிச் செய்தால் சிக்கிக்கொண்ட பொருள் உள்ளே போய்விடக் கூடும்.
● காதில் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரியும்படி இருந்தால். லாவகமாக அதை வெளியில் எடுக்க முயற்சி செய்யலாம்.
● மெதுவாகத் தலையைச் சாய்த்துப் பொருளை கீழே விழ வைக்க முயற்சி செய்யலாம்.
● ஏதேனும்
பூச்சி புகுந்துவிட்டால், மினரல் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைக் காதில்
மிதக்க விடலாம். காது மடலால் மெலிதாக அசைத்து அந்தப் பூச்சியை எண்ணெயில்
விழ வைக்கலாம். பூச்சி மிதக்க ஆரம்பித்தவுடன் வெளியில் எடுக்க முயற்சி
செய்யலாம்.
பூச்சியைத் தவிர பிற பொருள்களை வெளியில் எடுக்க, எண்ணெயைக் காதில் ஊற்றக்கூடாது.
அப்படியும் பிரச்னை தீரவில்லை என்றால் மருத்துவ உதவி பெறுவது அவசியம்.
கண்:
என்ன செய்யலாம்?
● கையைக் கழுவிக்கொள்ளவும்.
● நன்றாக வெளிச்சம் உள்ள பகுதியில் சம்பந்தப்பட்டவரை உட்காரச் சொல்லவும்.
● கண்ணில்
சிக்கிக் கொண்ட பொருள் தென்படுகிறதா என்று பார்க்கவும். இமையை
கீழ்ப்புறமாக மடக்கி அவரை மேலே பார்க்கச் சொல்லவும். மேல்புற இமையைப்
பிடித்துக் கீழப்புறமாக அவரைப் பார்க்கச் சொல்லவும்.
● கண் இமையில் அந்தப் பொருள் சிக்கியிருந்தால் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு வெளியில் எடுக்கலாம்.
கவனம்:
● கருவிழியில் சிக்கியிருக்கும் பொருளை வெளியில் எடுக்க முயற்சி செய்ய வேண்டாம்.
● கண்ணை கசக்க வேண்டாம்.
அவசர சிகிச்சை எப்போது பெறலாம்?
● வெளியில் எடுக்க முடியாத பட்சத்தில்
● கரு விழியில் சிக்கிக் கொண்டால்
● பார்வை சரிவரத் தெரியாமல் அவர் அவதிப்பட்டால்
● வலி இருந்தால்
● சிக்கிக் கொண்ட பொருளை வெளியில் எடுத்த பின்னும் எரிச்சல் இருந்தால்
மூக்கு :
வெளிப்புறப் பொருள் மூக்கில் நுழைந்துவிட்டால்
● உபகரணங்களைக் கொண்டோ, பஞ்சைக் கொண்டோ வெளியில் அகற்ற முயல வேண் டாம்.
● மூச்சை உள்ளிழுக்க வேண்டாம். வாய் வழியாக சுவாசிக்கலாம்.
● மெதுவாக மூக்கைச் சிந்துவதன் மூலம் பொருளை வெளியேற்றலாம். கண்ணுக்குத் தெரியும் பொருளாக இருந்தால் Tweezers [You must be registered and logged in to see this image.](கிடுக்கி) கொண்டு வெளியில் அகற்றலாம்.
● முயற்சி தோல்வியடைந்தால், உடனடி மருத்துவ உதவி அவசியம்.
தோல் :
தோலில் ஏதேனும் குத்தி விட்டால், ஜிஷ்மீமீக்ஷ்மீக்ஷீs கொண்டு அகற்றலாம் குத்திய இடத்தை சோப், தண்ணீர் கொண்டு கழுவலாம்.
தோலை ஊடுருவி முழுமையாக உள்ளே சென்றுவிட்டால்?
● சோப், தண்ணீர் விட்டுக் கழுவவும்.
● நெருப்பில் காட்டப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியை எடுத்துக் கொள்ளவும்.
● மெலிதாக தோலில் செருகி, குத்திய பொருளை மேல்நோக்கி நகர்த்தலாம்.
● தென்பட்டு விட்டால், பொருளை வெளியில் எடுத்து விடலாம். சில சமயம், பெரிதுபடுத்திக் காட்டும் பூதக் கண்ணாடி தேவைப்படலாம்.
● குத்தப்பட்ட பகுதியைக் கழுவி காயவிடவும். ஆன்டிபயாடிக் களிம்பு தடவலாம்.
● இயலவில்லை என்றால், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்.
மாரடைப்பு
இதயத்துக்கு
வந்து சேர வேண்டிய ரத்தமும், பிராண வாயுவும் தடைபட்டால் மாரடைப்பு
ஏற்படும். மாரடைப்பு வந்தால் 15 நிமிடங்களுக்கு நெஞ்சு வலி நீடிக்கும்.
சில சமயம் எந்த அறிகுறியும் இல்லாமலும் இருக்கும். பெரும்பாலானோருக்குச்
சில நாள்கள் அல்லது வாரங்களுக்கு முன்பாகவே அறிகுறிகள் தெரிந்து விடும்.
பொதுவான ஒரு அறிகுறி, நீடித்த நெஞ்சு வலி.
பிற அறிகுறிகள்
● இதயத்தின் மத்தியில் வலி, அழுத்தம், பிசைவதைப் போன்ற உணர்வு.
● மேற்புற வயிற்றில் நீடித்த வலி.
● நெஞ்சிலிருந்து பரவி, தோள்பட்டை, கழுத்து, தாடை, பற்கள், கைகள் என்று பரவும் வலி.
● குறைந்த சுவாசம்
● மயக்கம், தலை கிறுகிறுத்தல்
● கொட்டும் வியர்வை
என்ன செய்யலாம்?
அவசர சிகிச்சைப் பிரிவை நாடவும்
மயக்கமடைந்தால் சிறிசிமிஐத் தொடங்கவும். அதை மருத்துவரிடம் தெளிவுபடுத்திவிட வேண்டும்.
மிருகங்களால் ஏற்படும் உபாதைகள் கடி, கொட்டு
வீட்டுப்
பிராணிகளால் அதிகம் ஏற்படும் உபாதை இது. பூனையை விட நாய் அதிகம்
கடிக்கும். ஆனால், பூனைக் கடியும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியதே.
தடுப்பூசி போடப்படாத வீட்டுப் பிராணிகளாலும், பழக்கப்படாத பிராணிகள்
கடிப்பதாலும் ‘வெறிநாய்க்கடி’ நோய் ஏற்படுகிறது. நாயைவிட வௌவால், நரி
போன்ற மிருகங்களால் இந்நோய் அதிகம் பரவும். முயல், அணில் போன்றவை
ஆபத்தற்றவை.
என்ன செய்யலாம்?
சிறிய காயம் : தோலை அதிகம்
துளைக்காத மெலிதான கடி என்றால் பயப்பட வேண்டாம். காயத்தை சுத் தமாக சோப்,
தண்ணீர் கொண்டு கழுவலாம். கிருமிநாசினி போடலாம். கட்டு கட்டலாம்.
பெரிய
காயம் : தோலைத் துளைத்த கடியாக இருந்தால், ரத்தம் பெருகினால், சுத்தமான
துணி கொண்டு ர த்தத்தைக் கட்டுப்படுத்தி உடனடி மருத்துவ சிகிச்சை பெற
வேண்டும்.
பரவும் நோய் :
வீக்கம், சிவப்பதால், அதிக வலி இருந்தால் உடனடி மருத்துவ உதவி பெற வேண்டும்.
வெறிநாய்க்கடி
இருக்குமா என்ற சந்தேகம் இருந்தால், அல்லது கடித்த பிராணியைப் பற்றி
தெரியாமல் இ ருந்தால், மருத்துவ உதவி பெற வேண்டும். பத்து வருடங்களுக்கு
ஒரு முறை ஜிமீtணீஸீus ஷிலீஷீt பெற்றுக் கொள்வது நல்லது.
மனிதக்கடி
சில
சமயங்களில், விலங்குகளை விட மனிதர்கள் கடிப்பதால் ஏற்படும் பாதிப்பு
தீவிரமடைந்து விடுகிறது. காரணம் மனிதர்களின் வாயில் உள்ள பாக்டீரியாக்கள்.
என்ன செய்யலாம்?
● ரத்தக் [You must be registered and logged in to see this image.]கசிவு இருந்தால் அழுத்திக் கட்டுப்படுத்தவும்
● கிருமி நாசினி உபயோகிக்கவும்
● கட்டு கட்டலாம்
● அவசர மருத்துவ உதவி
பூச்சிக்கடி, கொட்டு
பூச்சிக்கடி,
கொட்டு மூலம் தோலில் விஷத் தன்மை பரவும். எரிச்சல், அலர்ஜி ஏற்படும். பல
சமயங்களில், இவை பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. சில சமயம்,
காய்ச்சல், மூட்டு வலி ஏற்படலாம். சிலருக்கு ம ட்டுமே தீவிர பாதிப்புகள்
(Anaphylaxis
) ஏற்படலாம். அறிகுறிகள் : வீக்கம், அதிர்ச்சி,
சுவாசிப்பதில் தடை. தொல்லை தருபவை என்று பார்த்தால் தேனீ, குளவி, நெருப்பு
எறும்பு போன்றவை. சிலந்தி, மூட்டைப் பூச்சி, கொசு போன்றவைகளால் பாதிப்பு
அதிகமில்லை.
மெல்லிய பாதிப்புகளுக்கு:
● கொட்டு வாங்காமல் இருக்க, பாதுகாப்பான பகுதிக்குச் செல்லவும்.
●
கிரெடிட் கார்டு போன்ற தட்டையான பொருளால் கொடுக்கை சீவி விடவும். பிறகு,
கடி வாயை சோப் தண்ணீர் போட்டு கழுவிவிடவும். கொடுக்கை பிடுங்கி எடுக்க
முயற்சி செய்ய வேண்டாம். விஷம் பரவும்.
● வீக்கமும் வலியும் அதிகரிக்காமல் இருக்க ஐஸ் துண்டால் ஒத்தடம் கொடுக்கலாம். தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம்.
கடுமையான விளைவுகளுக்கு
கீழ்க்கண்ட விளைவுகள் இருந்தால், உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவைத் தொடர்புகொள்ளவும்.
● சுவாசிப்பதில் சிரமம்
● மயக்கம்
● குழப்பம்
● எரிச்சல்
● உதடு, தொண்டை வீக்கம்
● கிறுகிறுப்பு
● அதிகப்படியான இதயத் துடிப்பு
● குமட்டல், வாந்தி
பாதிக்கப்பட்டவருடன் இருக்கும் பட்சத்தில் கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்.
● அலர்ஜிக்காக ஏதாவது மருந்தை கையில் வைத்திருக்கிறாரா என்று பார்க்கவும்
● படுக்க வைக்கவும், கால்களைத் தலையைவிட உயர்த்தி வைக்கவும்.
● இறுக்கமான உடைகளைத தளர்த்தவும். போர்வையால் அவரைப் போர்த்தவும். குடிக்க எதுவும் தர வேண்டாம்.
● வாயில் ரத்தக்கசிவு இருந்தால் அல்லது அவர் வாந்தி எடுத்தால், பக்கவாட்டாக அவரைப் படுக்க வைக்கவும். மூச்சுத் திணறாமல் இருக்கும்.
● சுவாசம், இருமல் சீராக இல்லை என்றால், சிறிசிஸிஐத் தொடங்கவும்.
பாம்புக் கடி
பெரும்பாலான பாம்புகள் ஆபத்தற்றவை. ஆபத்தான சில இந்தியப் பாம்புகள்
● இந்திய கோப்ரா
● ராஜ நாகம்
● Banded Krait H Slender Coral Snake H Russell
Viper H SawScaled
Viper H Common Krait
பாம்புகளிடம் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். சீண்டி விடுவதால் மட்டுமே பெரும்பாலான பாம்புகள் கடிக்கின்றன.
பாம்புக் கடி ஏற்பட்டால்
● அமைதியாக இருங்கள்
● பாம்பைப் பிடிக்க முயற்சி செய்ய வேண்டாம்.
●
கடிபட்ட இடத்திலிருந்து விஷம் பரவாமல் இருக்க loose splint
உபயோகிக்கவும். ரத்த ஓட்டத்தை அது கட்டுப்படுத்தக் கூடாது என்பதால் சற்று
தளர்வான நிலையிலேயே இருப்பது நல்லது.
● வீக்கம் பரவாமல் இருக்க நகைகளை உடனடியாக அகற்றுங்கள்.
● காயத்தை வெட்டியெடுக்க வேண்டாம்
● விஷத்தை உறிஞ்சி எடுக்க வேண்டாம்.
● உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.
விஷம்
ஒருவருக்கு விஷத்தன்மை பரவியிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க சில அறிகுறிகள்
● உதட்டில், வாயில் எரிச்சல், சிவப்பாக மாறுதல்
● சுவாசத்தில் இரசாயன நெடி அடித்தல்
● உடலில், உடையில் உள்ள வாசனை, கறை
● காலி மருந்து பாட்டில், சிதறியிருக்கும் மாத்திரைகள்
● வாந்தி, சுவாசத் தடை, குழப்பம்.
கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.
பி மயக்கம்
பி சுவாசத் தடை
பி வலிப்பு
உதவிக்காகக் காத்திருக்கும் வேளையில்
பி கார்பன் மோனாக்சைட் போன்ற ஆபத்தான வாயுக்களை [You must be registered and logged in to see this image.]அவர் சுவாசித்திருந்தால், உடனடியாக அவரை நல்ல காற்றோட்டமான பகுதிக்குக் கொண்டு செல்லவும்.
●
வீட்டில் கழுவப் பயன்படுத்தும் இரசாயனத்தையோ அல்லது வேறு இரசாயனத்தையோ
அருந்திவிட்டால், அந்த இரசாயன பாட்டிலிலுள்ள லேபிளைப் படிக்கவும்.
தெரியாமல் அதை அருந்திவிட் டால் என்ன செய்ய வேண்டும் என்று அதில்
அச்சிடப்பட்டிருக்கும் அல்லது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.
●
உடையிலோ, கண் அல்லது தோலிலோ விஷம் சிதறியிருந்தால், உடைகளைக் களைந்து
விடவும்.கண்ணை, தோலை குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.
● காலி பாட்டிலையும் கையோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.
கவனம் :
வாந்தி வருவதற்காக எதையாவது தர முயற்சி வேண்டாம்.
மின்சாரம் தாக்குதல்
மின்சாரம்
தாக்குதலின் விளைவு வோல்டேஜின் அளவுக்கு ஏற்ப மாறுபடும். தவிரவும்,
மின்சாரம் எந்த வழியாக உடலில் பாய்ந்தது என்பதையும் கவனிக்க வேண்டும்.
கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.
● மாரடைப்பு
● மூச்சு விட முடியாத நிலை
● வலிப்பு
● மரத்துப் போதல்
● மயக்கம்
● இதயத் துடிப்பில் மாறுதல் (Arrhythmias)
மருத்துவ உதவி கிடைக்கும் வரை என்ன செய்யலாம்?
● தொட வேண்டாம்
● சுவிட்சை உடனடியாக அணைத்து விடவும். பிளாஸ்டிக், மரப் பொருள்களால் மின்சாரம் தாக்கிய பகுதியை நகர்த்தலாம்.
●
சுவாசம், இருமல், அசைவைக் கவனிக்கவும். தேவைக்கு ஏற்ப சிறிசிஸிஐத்
தொடங்கவும். கீழே படுக்க வைக்கவும். தலையை விட கால்களை உயர்த்தி
வைக்கவும்.
எச்சரிக்கை
● வெறும் கைகளால் அவரைத் தொட வேண்டாம்.
● ஒயர்களிலிருந்து தீப்பொறி காணப்பட்டால், 20 அடிக்குப் பின்னால் நகர்ந்து விடவும்.
● மிகவும் ஆபத்தான நிலையில் அவர் இல்லாத பட்சத்தில், அவரை வேறு இடத்துக்கு நகர்த்திச் செல்ல வேண்டாம்.
வெப்பம் தொடர்பான அறிகுறிகள்
சுளுக்கில் (CRAMPS) ஆரம்பித்து, அயர்ச்சி, வெப்பத்தாக்குதல் என்று பல அறிகுறிகள் உள்ளன.
வெப்பச் சுளுக்கு (CRAMPS) அதிகம் வலிக்கும். போதிய அளவு நீராகாரம் இல்லாததால் ஏற்படலாம்.
என்ன செய்யலாம்?
● ஓய்வு
● பழச்சாறு அருந்தலாம்
● 1 மணி நேரத்துக்கு அதிகமாக நீடித்தால் மருத்துவ உதவி.
வெப்ப அயர்ச்சி
கடினமான பணிகளுக்குப் பிறகு ஏற்படும்
● மயக்கம்
● வாந்தி
● அதிக வியர்வை
● கருத்த மேனி
● குறைந்த ரத்த அழுத்தம்
● குளிர்ந்த தோல்
● மெலிதான காய்ச்சல்
என்ன செய்யலாம்?
● நிழலான பகுதிக்கு நகர்த்திச் செல்லலாம்
● படுக்க வைக்கலாம். கால்களை தலைமாட்டிலிருந்து உயர்த்தி வைக்கலாம்.
● உடைகளைத் தளர்த்தலாம்.
● குளிர்ந்த நீரைப் பருகத் தரலாம்
● விசிறி விடலாம். குளிர்ந்த நீரால் ஒத்தடம் தரலாம்.
●
கவனமான கண்காணிப்பு அவசியம். வெப்பத் தாக்குதல் ஏற்படாமல் பார்த்துக்
கொள்ள வேண்டும். 102 டிகிரிக்கு மேலாகக் காய்ச்சல் இருந்தால், மருத்துவ
உதவி பெற வேண்டியது அவசியம்.
வெப்பத் தாக்குதல் :
வெயிலில்
கடுமையான வேலைகள் செய்வதால் ஏற்படும். வயதானவர்களுக்கும் வியர்வை
வெளியேறாதவர்களுக்கும் அதிகம் ஏற்படும். வெப்பத் தாக்குதல் ஏற்பட்டால்
வியர்வை வெளியேறும் ஆற்றலும்,[You must be registered and logged in to see this image.] சீதோஷ்ண நிலையை கட்டுப்படுத்தும் ஆற்றலும் மறைந்து விடுகின்றன. 104 டிகிரிக்கு மேலே போனால் வெப்பத் தாக்குதல் ஏற்படலாம்.
பிற அறிகுறிகள்
● விரைவான அல்லது குறைச்சலான சுவாசம்
● அதிகரித்த அல்லது குறைந்த ரத்த அழுத்தம்
● வியர்வை நின்று போதல்
● எரிச்சல், குழப்பம், மயக்கம்
என்ன செய்யலாம்?
● நிழலான பகுதிக்கு அழைத்துச் செல்லலாம்
● மருத்துவ உதவி பெறலாம்
● தண்ணீர் தெளிக்கலாம். விசிறி விடலாம்.
தலைக் காயம்
கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.
● தலை அல்லது முகத்திலிருந்த ரத்தக் கசிவு
● சுயநினைவுச் சிக்கல்
● கண்களுக்குக் கீழே காதுக்குப் பின்னால், நிறம் மாற்றம்
● குழப்பம்
● சுவாசத் தடை
● சமனற்ற நிலை
● அயர்ச்சி, கை, கால் முடங்கிப்போதல்
● கண் விழி அளவு மாறுதல்
● தொடர் வாந்தி
● பேசுவதில் தடுமாற்றம்.
தீவிர தலைக் காயம் ஏற்பட்டால்
● படுக்க வைக்கவும். தலை, தோள்பட்டை உயர்ந்த நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
● நேரடியாக இல்லாமல், சுத்தமான துணி மூலம் அழுத்தம் கொடுத்து ரத்தக் கசிவை நிறுத் தலாம்.
● சுவாசத்தில், எச்சரிக்கை உணர்வில் குளறுபடி இருக்கிறதா என்று கவனிக்கவும்.
முதுகுத் தண்டு காயம்
முதுகுத்[You must be registered and logged in to see this image.] தண்டில் காயம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரை அசைக்க, நகர்த்த வேண்டாம். மீறினால், இயக்கமே முடங்கிப் போக வாய்ப்புண்டு.
முதுகுத் தண்டு பாதிப்புக்குச் சில அறிகுறிகள்
● தலை காயம், சுய நினைவு இல்லாமை
● கழுத்தில், பின்புறத்தில் பலத்த வலி
● கழுத்தைத் திருப்ப முடியாமல் தவித்தல்
● பலகீனம், உணர்ச்சியற்றுப் போகும் நிலை, முடக்குவாதம்
● கழுத்து வேறு மாதிரியாக திரும்பி இருத்தல்
என்ன செய்யலாம்?
● உடனடி மருத்துவ உதவி
● அதே நிலையில் அவரை வைத்திருத்தல், கழுத்து அசையாமல் இருக்க, கழுத்தைச் சுற்றி போர்வையை வைத்தல்.
● சுவாசம், இருமல், இயக்கம் இவற்றில் பிரச்னை என்றால் சிறிசிஸிஐ தொடங்கவும்.
● வாந்தி எடுத்தால், இரண்டு பேராகச் சேர்ந்து அவரை ஒருக்களித்த நிலையில் படுக்க வைக்கவும்.
எலும்பு முறிவு
விபத்து மூலமாக எலும்பு முறிவு ஏற்பட்டால் அல்லது கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.
● செயல்படாத நிலையிலிருந்தால், சுவாசம் தடைப்பட்டால், CPC தொடங்கவும்.
● அதிக ரத்தப் போக்கு
● மெலிதாகத் தொட்டால் கூட அதீத வலி
● உடல் பாகம், மூட்டுத் தோற்றம் மாறுதல்
● அடிபட்ட பகுதியின் நுனி (கை என்றால் விரல் நுனி) நீலமாக மாறுதல்
●
கழுத்தில், தலையில், பின்புறத்தில் முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற
சந்தேகம் வந்தால், மருத்துவ உதவி பெறும் வரை கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்.
● ரத்தப் போக்கை உடனடியாக நிறுத்தவும்
● அடிபட்ட இடத்தைச் செயலற்றதாக மாற்றவும்
● ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கவும்
● சுவாசிப்பதில் தடை இருந்தால், படுக்க வைக்கவும், உடலைவிட [You must be registered and logged in to see this image.]தலை தாழ்வாக இருக்கு மாறு பார்த்துக் கொள்ளவும்.
சுளுக்கு
தசைகள்
(Ligaments) அளவுக்கு அதிகமாக இழுக்கப்படும் போது, சுளுக்கு
ஏற்படுகிறது. கணுக்கால், முழங்கால் பகுதிகளில் அதிகம் சுளுக்கு ஏற்படும்.
அதிக வலி இருந்தால் சுளுக்கின் தீவிரமும் அதிகம் என்று புரிந்து
கொள்ளலாம். சிறிய அளவிலான சுளுக்கு என்றால்,
● சுளுக்கு மேலும் தீவிரமடையாமல் இருக்க Splints, Crutches போன்றவற்றைப் பயன்ப டுத்தலாம்.
● வலிக்கும் பகுதியைத் தவிர பிற பகுதிகளின் இயக்கத்தைத் தடை செய்ய வேண்டாம்.
● ஐஸ் ஒத்தடம் கொடுக்கவும்.
● எலாஸ்டிக் கொண்டு இறுக்கமாகக் கட்டலாம்.
● வீங்காமல் இருக்க பாகத்தை உய
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum