Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கூகுள் தன் 13 வது பிறந்த நாளைக் கொண்டாடியது
3 posters
Page 1 of 1
கூகுள் தன் 13 வது பிறந்த நாளைக் கொண்டாடியது
சென்ற
செப்டம்பர் 27ல் கூகுள் தன் 13 வது பிறந்த நாளைக் கொண்டாடியது. ஏதேனும்
சிறப்பு பெற்ற நாளாக இருந்தால், அதற்கேற்ற வகையில் தன் கூகுள் இலச்சினையை
வடிவமைத்து வழங்குவது கூகுள் தேடுதளத்தின் சிறப்பாகும். இதனைத் தன்
ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கூகுள் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டில், தன்
பெயரான கூகுள் என்ற சொல்லுக்குப் பின்னர் ஓர் ஆச்சரியக் குறியினை அமைத்து
டூடுலாகக் (Doodle) காட்டியது கூகுள் நிறுவனம். (ஆங்கிலத்தில் Doodle
என்பது, பொறுப்பின்றி எதனையேனும் கிறுக்கலாக அமைக்கும் சொல்லைக்
குறிக்கும்.) அத்துடன் இலச்சினையே மறைக்கும் அளவிற்கு பிறந்தநாள் கேக்,
அன்பளிப்புகள், தொப்பிகள் மற்றும் பலூன்கள் இருந்தன. இனி, கூகுள் நடந்து
வந்த பாதையைப் பார்க்கலாம்.
1998: கூகுள் தன் பிறந்த நாளை
செப்டம்பர் 27ல் கொண்டாடினாலும், செப்டம்பர் 15 அன்று தான், கூகுள்
தளத்தின் இணையப் பெயர் பதியப்பட்டது. நிறுவனமாக உருவானது செப்டம்பர் 4.
இரண்டு முறை இந்த இரண்டு தேதிகளை விலக்கி, கூகுள் தன் பிறந்த நாளை
செப்டம்பர் 7ல் கொண்டாடியது. தன் தளத்தில் இதனை ஒரு டூடுலாக அமைத்தது அதன்
நான்காவது பிறந்த நாள் (2002) கொண்டாடிய போதுதான். Larry Page and Sergey
Brin ஆகிய இருவர் தான், இந்நிறுவனத்தை ஒரு கார் ஷெட்டில் ஆரம்பித்தனர்.
சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தை நிறுவியர்களில் ஒருவர், இதில் ஒரு லட்சம்
டாலர் தொடக்க முதலீடாகத் தந்தார்.
1999: சில மாதங்களே கார்
ஷெட்டில் கூகுள் இயங்கியது. ஜூன் 1999ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக, 2
கோடியே 50 லட்சம் டாலர் மூலதன நிதியைக் கொண்டதாக கூகுள் வளர்ந்தது.
2000: அதிசயப்படத்தக்க வகையில்,
கூகுள் நிறுவனத்திற்குப் போட்டியாக இயங்கிய யாஹூ நிறுவனம், கூகுளின் சர்ச்
இஞ்சினைப் பயன்படுத்தப்போவதாக அறிவித்து செயல்படுத்தியது. கூகுள்
தளத்தைத் தேடலுக்குப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை, ஒரு நாளில் 10
கோடியைத் தாண்டியது. இதனைத் தொடர்ந்து தனக்கு வருமானம் ஈட்டித் தரும்
AdSense புரோகிராமினைக் கூகுள் தொடங்கியது.
2001: கூகுள் ஒரு பன்னாட்டு
நிறுவனமாக இயங்கத் தொடங்கியது. முதல் முதலாக ஜப்பானில், டோக்யோவில் தன்
அலுவலகக் கிளையைத் தொடங்கியது. Eric Schmidt இதன் தலைமை நிர்வாகியாகப்
பொறுப்பேற்று, நிறுவனத் தை வளர்ச்சியில் இமாலய மாற்றங்களைக் கொண்டு
வந்தார்.
2002: புதிய சேவைகளை இணைத்து
இலவசமாகவே வழங்கும் Google Labs தொடங்கப்பட்டது. ஷாப்பிங் தேடல்களுக்கு
Froogle உருவானது. தொடர்ந்து Google News தொடங்கப் பட்டது.
2003: பைரா லேப்ஸ் (Pyra Labs)
நிறுவனத்தினை வாங்கி, வலைமனை (Blogs) வசதியைத் தரத் தொடங்கியது. இப்போது
கூகுள் புக் சர்ச் (Google Book Search) என்று அழைக்கப்படுகின்ற கூகுள்
பிரின்ட்ஸ் வசதி தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான நூல்கள் அதன் டிஜிட்டல்
வடிவில் இலவசமாகக் கிடைத்தன.
2004: கூகுளின் தேடல் அட்டவணை
பொருட்களின் எண்ணிக்கை (Search Index) 800 கோடியைத் தாண்டியது. கூகுள்
ப்ளெக்ஸ் என்ற தன் சொந்தக் கட்டடத்திற்கு கூகுள் தன் அலுவலகத்தினை
மாற்றியது. இந்த ஆண்டில் கூகுள் மேற்கொண்ட சிறப்பான மாற்றம், இணைய மெயில்
வசதியான, ஜிமெயில் தளத்தைத் தன் ரசிகர்களுக்கு வழங்கியதுதான். இமெயில்
சந்தையில் மட்டுமின்றி, மனித குல வரலாற்றிலும், இது ஒரு பெரிய மாற்றத்தை
ஏற்படுத்தியது.
2005: கூகுள் மேப்ஸ் மீது தன்
கவனத்தை கூகுள் திருப்பியது. அத்துடன் கூகுள் ரீடர் மற்றும் கூகுள்
அனலிடிக்ஸ் என்ற இரு வேறு வசதிகளும் அறிமுகமாயின. Gmail, Blogger and
Search ஆகியவற்றின் மொபைல் பதிப்புகளுக்கும் அடிப்படை அமைக்கப்பட்டது.
2006: யு-ட்யூப் வசதியை
வாங்கியது கூகுள் நிறுவனம். கூகுள் மேப்ஸ் விரிவு படுத்தப்பட்டது. கூகுள்
டாக்ஸ், ஜிமெயில் ஆகியவற்றின் வாடிக்கையாளர் எண்ணிக்கை புயல் வேகத்தில்
உயர்ந்தது. கூகுள் மேப்ஸ் உடன் இணைந்து, கூகுள் தெரு நிலை போட்டோ சேவையினை
வழங்கியது.
2008: ஆப்பிள் நிறுவனத்தின்
ஐ-போனுடன் போட்டியிடும் வகையில், மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை
வெளியிட்டது. குரோம் பிரவுசரை வெளியிட்டு, பிரவுசர் யுத்தத்தில் முன்னிலை
இடம் பிடித்தது.
2009: தேடல், பிரவுசர் மற்றும்
ஜிமெயில் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் பயன்படுத்து பவர் அனைவரையும் மடக்கிப்
பிடிக்க, தன் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது கூகுள்.
2010: இணைய வெளியில் நீட்டத்
தொடங்கிய தன் கரங்கள் தரும் சேவையினைப் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
ஏற்படுத்திக் கொண்டு, ஒரு மிகப் பெரிய பலவானாக கூகுள் மாறியது.
2011: மோட்டாரோலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, தன் நிறுவனத்தின் சேவைத் தளத்தில் பெரிய விரிவாக்கத்தினை கூகுள் ஏற்படுத்தியது.
கடந்த 13 ஆண்டு காலத்தில், அனைத்து மக்களின் வாழ்வை எளிதாகவும், பொருள்
பொதிந்ததாகவும் மாற்றுவதில் கூகுள் மிகப் பெரிய அளவில் உழைத்துள்ளது. ஒரு
சில தவறுகளை கூகுள் ஏற்படுத்தி இருக்கலாம்; ஆனால் அவை தன்னைத் திருத்திக்
கொள்ள ஏற்பட்டவையாக கூகுள் ஏற்றுக் கொண்டு தொடர்ந்து பல வசதிகளை மனித
இனத்திற்குத் தந்துள்ளது. "கெட்டதாக இருக்காதே, கெட்டவற்றிற்குத் துணை
போகாதே' (“Don’t be evil”) என்ற தன் இலட்சியத்தை நடைமுறைப்படுத்துவதில் தன்
நேரம் பலம் அனைத்தையும் கூகுள் செலவழித்து வெற்றியும் கண்டுள்ளது. இந்த
வெற்றி இனியும் தொடரும் என்ற நம்பிக்கை கூகுள் நிறுவனத்திற்கு
மட்டுமின்றி, நமக்கும் ஏற்பட்டுள்ளது. வளரட்டும் கூகுள்! வாழ்த்துவோம்

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: கூகுள் தன் 13 வது பிறந்த நாளைக் கொண்டாடியது
கண்டிப்பா வாழ்த்தலாம்... நமக்கு கூகிள் அளிக்கும் பல இலவச சேவைகளை கணக்கிடமுடியாது.
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
ram73- பண்பாளர்
- Posts : 88
Join date : 13/06/2011
Location : சென்னை
Re: கூகுள் தன் 13 வது பிறந்த நாளைக் கொண்டாடியது
ram73 wrote:கண்டிப்பா வாழ்த்தலாம்... நமக்கு கூகிள் அளிக்கும் பல இலவச சேவைகளை கணக்கிடமுடியாது.
வாழ்க வளமுடன்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய தலை ஒட்டிப் பிறந்த சகோதர சகோதரி! (காணொளி இணைப்பு)
» 14வது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றது கூகுள்
» உங்களுடைய பிறந்த நாளுக்கும் வாழ்த்துகளை கூறும் கூகுள்
» ஃபிரில்ப்: சென்னையிலிருந்து ஒரு கூகுள்!
» ரத்துச் செய்யப்பட்டது கூகுள் ரீடர் - இதுவரை நிறுத்தப்பட்ட கூகுள் சேவைகள் ஒரு கண்ணோட்டம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum