TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இந்தியாவுக்கு இமாலய வெற்றி! * தோனி, ரெய்னா அபாரம் * "சுழலில்' சுருண்டது இங்கிலாந்து

Go down

இந்தியாவுக்கு இமாலய வெற்றி! * தோனி, ரெய்னா அபாரம் * "சுழலில்' சுருண்டது இங்கிலாந்து Empty இந்தியாவுக்கு இமாலய வெற்றி! * தோனி, ரெய்னா அபாரம் * "சுழலில்' சுருண்டது இங்கிலாந்து

Post by அருள் Sat Oct 15, 2011 7:44 am








இந்தியாவுக்கு இமாலய வெற்றி! * தோனி, ரெய்னா அபாரம் * "சுழலில்' சுருண்டது இங்கிலாந்து Dhoni-large_10


ஐதராபாத்: ஒருநாள்
தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. நேற்று நடந்த முதலாவது
போட்டியில் இங்கிலாந்தை 126 ரன்கள் வித்தியாசத்தில் "சூப்பராக'
வீழ்த்தியது. அஷ்வின், ரவிந்திர ஜடேஜா சுழலில் சிக்கிய இங்கிலாந்து அணி 174
ரன்களுக்கு சுருண்டது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து
போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி, ஐதராபாத்தில்
உள்ள ராஜிவ் சர்வதேச மைதானத்தில் நேற்று நடந்தது. இப்போட்டியில்,
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிமுகப்படுத்திய,
ஒருநாள் போட்டிக்கான புதிய விதிமுறைகள் முதன் முறையாக பின்பற்றப்பட்டன.
"டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.
துவக்கம் மோசம்:
இந்திய
அணி துவக்கத்தில் திணறியது. பார்த்திவ் படேல் (9) "ரன்-அவுட்' ஆனார்.
படுமந்தமாக ஆடிய ரகானே (15) சோபிக்கவில்லை. காம்பிர் (32) விராத் கோஹ்லி
(37) ஓரளவுக்கு ரன் சேர்த்தனர்.
ரெய்னா அபாரம்:
பின் இணைந்த சுரேஷ்
ரெய்னா, கேப்டன் தோனி ஜோடி தூள் கிளப்பியது. துவக்கத்தில் நிதானமாக ஆடிய
ரெய்னா, பின் அதிரடிக்கு மாறினார். பிரஸ்னன் வீசிய ஆட்டத்தின் 38வது ஓவரில்
அடுத்தடுத்து ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த இவர், ஒருநாள் அரங்கில்
தனது 18வது அரைசதம் அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த
போது, ரெய்னா 61 ரன்களுக்கு(2 சிக்சர், 5 பவுண்டரி) அவுட்டானார்.
தோனி அரைசதம்:
அடுத்து
வந்த ரவிந்திர ஜடேஜாவுடன் இணைந்த தோனி, பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார்.
அவ்வப்போது "பவுண்டரி' அடித்து நம்பிக்கை அளித்த தோனி, ஒருநாள் அரங்கில்
தனது 42வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஜடேஜா,
சமீத் படேல் வீசிய ஆட்டத்தின் 45வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு
"சிக்சர்' அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஜடேஜா (27), ரன்-அவுட்'
ஆனார்.
சவாலான இலக்கு:
அடுத்து
வந்த அஷ்வினும் (8), "ரன்-அவுட்' ஆனார். தொடர்ந்து அதிரடி காட்டிய தோனி,
அணியின் ஸ்கோரை வலுவாக்கினார். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 300
ரன்கள் எடுத்தது. தோனி 87 ரன்களுடன் (ஒரு சிக்சர், 10
பவுண்டரி)அவுட்டாகாமல் இருந்தார்.
குக் அரைசதம்:
கடின
இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கீஸ்வெட்டர் (7) ஏமாற்றினார்.
அஷ்வின் "த்ரோவில்' கெவின் பீட்டர்சன்(19) "ரன் அவுட்' ஆனார். பின் இணைந்த
அலெஸ்டர் குக், ஜோனாதன் டிராட் ஜோடி போராடியது. குக், ஒருநாள் அரங்கில்
தனது 9வது அரைசதம் அடித்தார்.
"சுழல்' ஜாலம்:
மூன்றாவது
விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த போது, ஜடேஜா சுழலில் குக் (60)
அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டிராட் (26), ஜடேஜாவிடம்
பறிகொடுத்தார். அடுத்து வந்த ரவி போபரா (8), அஷ்வின் சுழலில் சிக்கினார்.
பயிற்சி ஆட்டத்தில் அதிவேக சதம் அடித்த பேர்ஸ்டோவ் (3), ஜடேஜா பந்தில்
வெளியேறினார்.
சுலப வெற்றி:
அடுத்து
வந்த டிம் பிரஸ்னன் (4), அஷ்வின் சுழலில் "ஸ்டம்பிங்' ஆனார். உமேஷ் யாதவ்
வேகத்தில் சுவான் (8), சமித் படேல் (16) நடையை கட்டினர். கடைசியாக
களமிறங்கிய டெர்ன்பாக் (2), அஷ்வினிடம் சரணடைய, இங்கிலாந்து அணி 36.1
ஓவரில் 174 ரன்களுக்கு சுருண்டு, மோசமான தோல்வி அடைந்தது.
சுழலில் அசத்திய அஷ்வின், ரவிந்திர ஜடேஜா தலா 3, வேகத்தில் மிரட்டிய உமேஷ் யாதவ் 2, பிரவீண் குமார் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருதை தோனி தட்டிச் சென்றார்.
இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் 17ம் தேதி டில்லியில் நடக்கவுள்ளது.
--------------------
மிகப் பெரிய வெற்றி
நேற்று
126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இங்கிலாந்துக்கு
எதிராக இரண்டாவது மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக கடந்த
2008ல் ராஜ்காட்டில் நடந்த போட்டியில், இந்திய அணி 158 ரன்கள்
வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
அப்பாடா...!
சமீபத்தில்
இங்கிலாந்து மண்ணில் 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு "டுவென்டி-20'
போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. முன்னதாக வெஸ்ட் இண்டீசுக்கு
எதிராக 2 ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்தது. மொத்தம் 10 சர்வதேச
போட்டிகளில் தொடர்ந்து சந்தித்த தோல்விக்கு பின், தற்போது தான் வெற்றிப்
பாதைக்கு திரும்பியுள்ளது. நீ...ண்ட இடைவெளிக்கு பின் வெற்றியை ருசித்துள்ள
கேப்டன் தோனி, முதல் போட்டியிலேயே இங்கிலாந்துக்கு சரியான பதிலடி
கொடுத்துள்ளார். வரும் போட்டிகளிலும் இவரது வெற்றிநடை தொடரட்டும்.
ரெய்னா "3000'
நேற்று
இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, 7வது ரன் எடுத்த போது ஒருநாள் அரங்கில் 3000
ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 61 ரன்கள் எடுத்த இவர், இதுவரை 126
ஒருநாள் போட்டிகளில் 3 சதம், 18 அரைசதம் உட்பட 3,054 ரன்கள் எடுத்துள்ளார்.


அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவுக்கு இமாலய வெற்றி! * ஹர்பஜன் "சுழலில்' இங்கிலாந்து காலி
» மொயீன் அலி சுழலில் சுருண்டது இந்தியா: இங்கிலாந்து அபார வெற்றி
» இந்தியாவுக்கு நான்காவது வெற்றி! * கோஹ்லி, ரெய்னா அசத்தல் * மீண்டும் வீழ்ந்தது இங்கிலாந்து
» இந்திய அணி இமாலய வெற்றி : தினேஷ் கார்த்திக் அபார சதம்: 65 ரன்னுக்கு சுருண்டது ஆஸி.,
» சென்னை அணியில் தோனி, ரெய்னா நீடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum