Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உடற்பருமன் overweight and obesity
4 posters
Page 1 of 1
உடற்பருமன் overweight and obesity
சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு 24 உடற்பருமன் overweight and obesity
உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.
சமீபத்தில் ஒரு பேச்சரங்கத்தில் சென்னை,கோவை போன்ற நகரங்களில் இருந்து கலந்து கொண்ட, எடைக்குறைப்புக்கான ஆலோசனை நிலையங்கள், எடைக்குறைப்பையும்,உணவுக் குறைப்பையும்(diet) பற்றி பெரிதாக பேசிக் கொண்டிருந்தார்கள்.தங்களின் அனுபவங்களையும் அதனால் கிடைத்த வெற்றி பற்றியும் தெரிவித்தார்கள். ஆனால் கலந்து கொண்ட மக்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள், இவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்றும் தங்களுக்கு எதுவும் சரிவர வில்லை எனவும், பணம் கொடுத்து ஏமாந்ததாகவும் கூறிக் கொண்டிருந்தார்கள்.தங்களின் சொந்த அனுபவத்தை வைத்து மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுப்பதாகவும்,இவர்களில் பலர் உணவுக் கட்டுபாடு பற்றிய எந்தக் கல்வியையும் பெறவில்லை என்பதையும்,நடுவர் குறிப்பிட்டு,அவர்கள் வாயாலேயே அவர்கள் சொந்த அனுபவத்தை வைத்தே ஆலோசனை மையங்களை அமைத்து பணம் சம்பாதிப்பதை ஏற்றுக் கொள்ள வைத்தார். பல அப்பாவிகள் இப்படியான போலி உணவுக்கட்டுப்பாட்டு ஆலோசகர்(dietician )களால் ஏமாற்றப்பட்டும் கூட,அவர்களிடம் செல்பவர்கள் தொகை மட்டும், சாமியார்களிடமும், சோதிடர்களிடமும் செல்வது போல் குறையவே இல்லை.இது நம் நாட்டில் மட்டுமல்ல,எல்லா நாடுகளிலும் உள்ளது தான்.ஆனால் அமெரிக்கா, அமெரிக்கா தாங்க.சமீபத்தில் அமெரிக்காவில், ஒரே நாளில் 10 கிலோ குறைப்பதாக, டயட்டிங்-ஜிம் நிறுவனம் ஒன்று விளம்பரப்படுத்திய போது,மறு நாள் காலையில் விண்ணப்பங்களுடன் நின்ற கூட்டம் சொல்லவே முடியவில்லை.ஆச்சரியம்,எப்படித்தான் நம்புகிறார்களோ?
உணவுக்கட்டுப்பாடு என்று சொல்லிக் கொண்டு பழ இரசங்களை(பழரசங்கள் சிம்பிள் கார்போகைட்ரேட் வகையை சேர்ந்ததால் எமக்கு கிடைக்க வேண்டிய சக்தி போதிய அளவு கிடைக்காமல் சோர்வடையவும்,நோய் வரவும் காரணமாகிறது) குடித்துக் கொண்டு எடை குறைந்த பின்,மீண்டும் பழைய உணவுக்கு செல்வதால்,எடை மீண்டும் ஏறுவதும்,சிலருக்கு நோய்கள் வருவதும் கண்டறியப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் உணவுக்கட்டுப்பாட்டை(dieting) முற்றாக ஏற்றுக் கொள்வதில்லை.
எடை அதிகரிப்பு இன்று பலரை பாடாய் படுத்துகிறது என்பது உங்களுக்கு தெரிந்ததே.இந்த எடை அதிகரிப்பால், நான் உங்களிடம் வருவது போல், பல நோய்களும் அழையா விருந்தாளிகளாக வந்து சேர்ந்து விடுகிறது.அப்புறம் என்ன எடையையும் குறைக்க முடிவதில்லை,நோய்களையும் தீர்க்க முடிவதில்லை.எவ்வளவோ முயற்சிப்போம்,diet center என்றும்,ஜிம் என்று காற்றில்லாத உடற்பயிற்சி நிலையங்களுக்குப் போய் பணத்தையும் கொட்டுவோம்.ஆனாலும் பலனில்லை.எப்படி பலன் தரும்? இயற்கைக்கு மாறான எதுவும் நமக்கு எதிராகவே செயல்படும் என்பது தத்துவம்.
எடைகூடுதல் (overweight),குறிப்பிட்ட இடத்தில் சதைப்பிடிப்பு,கொழுப்பு சேருதல்,(obesity)அநேகமாக இடை,வயிற்றுப் பகுதியில்(waist to hip) ஏற்படுகின்றன என்பதையும்,ஏன் ஏற்படுகின்றன என்பதையும் தெரிந்து கொண்டாலே எடையதிகரிப்பு,சதைப்பிடிப்பை வெற்றி கொள்ளலாம். இந்த இடத்தில் நான் கடைப் பிடிக்கும் ஒரு சிறிய நடைமுறைச்செயலை சொல்வது பொருந்தும்.இது எடை குறைப்புக்காக மட்டும் அல்லாது,கட்டுப்பாடான உடல்,மன வளர்ச்சிக்கும்,மகிழ்ச்சிக்கும் உதவும் செயலாகும். பள்ளிக் குழந்தைகள் போல் ஒரு நேர அட்டவணை,காலையில் எழுதல், தியானம், உடற்பயிற்சி,உணவு,கணினி,இணையத்தளம் செல்லல், படித்தல், பல்கலைக்கழகம், வேலைக்கு செல்லல்,இப்படி நாளாந்த வேலைகளை,தேவைக்கேற்றபடி எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும், என்பதை திட்டமிட்டு,அட்டவணையை உங்கள் அறையில் வைத்து அதன் படி செய்து வாருங்கள்.முதலில் கஷ்டமாக இருந்தாலும் பழகி விட்டால், மகிழ்ச்சியாகவும்,சுறுசுறுப்பாகவும் இருப்பதை உணருவீர்கள்.இது உங்கள் நாளாந்த வேலைக்காக மட்டுமன்றி, உணவுக்கும் பொருந்தும்.
இந்த எடை அதிகரிப்பு மூன்று வகையாக, நோயால்,கட்டுப்பாடற்ற உணவால்,உளவியல் காரணங்களால்,உடற்பயிற்சி இன்மையால் ஏற்படுகிறது.நோய்களுக்கு இருதய நோய்,சக்கரை நோய்-2(type-2 diabetic), மருந்துகளின் பக்க விளைவு, தைரோய்ட்(Hypothyroidism),உயர்ந்த இரத்த அழுத்தம்(hypertension),எலும்பு நோய்(Osteoporosis) போன்றவற்றைக் கூறலாம். கட்டுப்பாடற்ற உணவு முறை(eating disorders),தயாரிக்கப்பட்ட உடனடி உணவு(fast food),எண்ணெய்,சிப்ஸ்,கொழுப்புள்ள உணவுகள்,மாப்பொருட்கள் அதிகரிப்பு, போன்றவையும், மன அழுத்தம்,தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்தல்,கணினியில் அதிக நேரம் இருத்தல்(இடையிடையே ஐந்து நிமிடம் எழுந்து சோம்பல் முறித்து,ஒரு நடை நடப்பது எடையதிகரிப்பை குறைக்கவும்,கண்ணிற்கும் சிறந்தது என்பது உங்களுக்கு தெரிந்ததே),அதிக யோசனை,குழந்தை பிறந்ததும் சிலருக்கு ஏற்படும் மனப் பாதிப்பு, புகை பிடித்தல்,மது,போன்ற உளவியல் காரணங்களையும் சொல்லலாம். Eating disorder என்பது அடிக்கடி அதிகமாக உண்பது,வழமையான உணவின் போது அதிகமாக உண்பது, கிடைக்கும் போது அதிகமாக உண்பதும்,கிடைக்காத போது உண்ணாவிரதம் இருப்பதுமாகும். பசித்தால் மட்டும் உண்பதும்,தாகம் எடுக்காமலே தண்ணீர் குடிப்பதும் அவசியம்.அவசரப்பட்டு உணவை உள்ளே தள்ளாதீர்கள். அனுபவித்து உண்பதால் உங்கள் உடல் செமிபாட்டு உறுப்புக்களை துரிதமடைய செய்யும்,நன்கு செமிபாடும் ஆகும்.
இந்த எடைக் குறைப்பை செயலாக்குவதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு முன் உயரத்திற்கேற்ப எடை சரியாக உள்ளதா எனக் கண்டறிய வேண்டும்.இதற்கு BMI (Body mass index) பயன்படும்.
நோய்கள் காரணம் என்றால் முதலில் நோயைக் கண்டறிந்து சிகிச்சை செய்வதால்,எப்படி சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோமோ அப்படி, எடையையும் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விடலாம்.மாப்பொருட்களை குறைப்பது,கொழுப்பு இல்லாத உணவு,cholosterol கட்டுபாடு,அடிக்கடி உண்பது, இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதலில் கொலஸ்டெரோல் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.உடல் செயற்பாட்டிற்கு,உணவு சேமிபாட்டிற்கு,ஹார்மோன்ஸ்,வைட்டமின் டி உருவாக தேவைப்படும் கொலஸ்டெரோல்,உடல் முழுவதும் எல்லா இடங்களிலும் பரவி உள்ள மெழுகு போன்ற கொழுப்பை ஒத்த பொருள்,ஈரலினால்(liver) தினமும் 1000mg வரை உற்பத்தி செய்யப்படுகிறது.நாம் உண்ணும் உணவிலும் அதிக கொலஸ்டெரோல் இருக்குமாயின்,அவை அளவுக்கு அதிகமாகி இருதய நோய்களுக்கு காரணமாகி விடுகிறது.
கொலோஸ்டெரோல்களில் HDL (high density lipoprotein cholosterol)என்ற நல்ல cholosterol ஐ சேர்ப்பதன் மூலமும், உடலுக்கு தீங்கு தரக் கூடிய தீய கொலோஸ்டெரோலை(LDL-low density lipoprotein cholosterol) குறைப்பதாலும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.ஒலிவெண்ணை,வேற்கடலையில் இருப்பது தீங்கு தராத கொலோஸ்டெரோலாகும். ஆனாலும் எண்ணையை சூடாக்கும் போது எண்ணையில் உள்ள கொழுப்பு அதிகரிப்பதால்,எண்ணையில் பொரித்து,வறுத்து செய்யும் உணவுகளை தவிர்ப்பதும், நல்லது.
பெருமைக்காகவும்,நாகரீகம் என்று கருதியும் சிலரைப் போல் உடற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி செய்வதை தவிர்த்து, இலகுவான உடற்பயிற்சிகளான நடப்பது நீந்துவது அனைவருக்குமே சிறந்த உடற்பயிற்சியாகும். விரதம் இருப்பது போல் எடையை குறைக்க உண்ணாவிரதம் இருப்பது,பின்னர் எதிர்மறையான பலனை தந்து விடும். சாதாரண உணவு,மரக்கறி உணவு வகைகள், நார் சத்துள்ள உணவு,ஆலிவ் எண்ணெய்,வேர்க்கடலை போன்றவற்றை சேர்ப்பதும்,கொழுப்புள்ள உணவுப் பொருட்கள்,நிலத்திற்கு கீழ் விளையும் கிழங்கு வகைகள்(காரட்,பீட்ரூட் சிறந்தவை) தவிர்ப்பதும் சிறந்தது.
சத்தியராஜ் குடும்பம் ஒரு சினிமாவில் பிடித்ததைப் போல் கல்யாண சமையல் சாதம், இன்று மட்டும் தான் என்று சொல்லிக் கொண்டு உள்ளே தள்ளுவதை,ஒரு பிடி பிடிப்பதை நிறுத்தி,வேண்டுமானால் குறைந்த அளவில் நான்கு முறை உணவை எடுக்கலாம். பொதுவாக அனைவரும் காலையில் இருந்து மாலை வரை ஏதோ,எப்படியோ உழைக்கிறார்கள்,வேலை செய்கிறார்கள். அதனால் காலை, மதியம் உணவு சிறிது அதிகம் இருப்பதில் தப்பில்லை,ஆனால் இரவில் நாம் வேலை எதுவும் செய்வதில்லை என்பதால் குறைந்த அளவு மாச்சத்தற்ற உணவை நித்திரைக்கு போவதற்கு மூன்று மணி நேரம் முன் முடித்துக் கொள்வதும்,பால் ஒரு முழுமையான உணவாதலால் இரவில் பால் குடிப்பதை தவிர்ப்பதும் நல்லது. இல்லையேல் இந்த உணவு செமிபாடானதும்,நாம் வேலை செய்யாததால்,வேலை செய்வதற்குரிய சக்தி தேவையற்றதாக இருப்பதால்,அவை உடலின் எங்கோ ஒரு இடத்தில் சாரணடைந்து, தொப்பை போன்றவற்றை, நம் காவல்துறையினருக்குப் போல் தந்து விடுவதும்,எடை அதிகரித்தும் விடுகிறது.
உண்ணும் உணவில் இருந்து எடுக்கப்படும் கார்போஹைட்ரேட்(carbohydrates) இரண்டு வகைப்படும்.சாதாரண சர்க்கரை(simple sugar/simple Carbohydrate) உடையது,இரண்டாவது சிறிது கொழுப்பு,நார்ச்சத்து, சேர்ந்த கூட்டு கார்போகைட்ரேட்(complex carbohydrates).இந்த carbohydrate நல்ல சக்தியை(energy) தரக் கூடியதாயினும், அதிகமானால் இரத்தத்தில் சர்க்கரையை(blood glucose) அதிகரிக்க செய்து விடும்.இந்த கார்போ, செமிபாடடையும் போது குளுக்கோசாக(Glucose) மாற்றப்பட்டு உடல் முழுவதும் சக்தியாக(energy) மாற்றப்பட கொண்டு செல்லப்படுகிறது.இதை பங்கிரியஸ்(pancreas ) இன்சுலினை சுரக்க செய்து கட்டுப்படுத்துகிறது.தேவைக்கு மேலான குளுக்கோஸ் glycogen ஆக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்பட்டு,சக்தி தேவைப்படும் போது மீண்டும் குளுக்கோசாக மாற்றப்பட்டு தொடர் செயலாக நம் உடலில் நடந்து வருகிறது.
நான் இப்போது டயட்டில் இருக்கிறேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் பெண்கள் பலரின் டையட்டிங்கின்(dieting) முடிவு பரிதாபமாக இருப்பதாகவும், டையடிங்கை தெரிவு செய்யாது இருப்பதே மேல் என்கிறார்கள், மருத்துவ ஆய்வாளர்கள்.ஏன்? டயட்டில் இருப்பவர்கள் வழமையான உணவுமுறையை விட்டு வெளியே வருவதால்,பசி ஏற்படும் போது வேறு உணவை தேடி செல்வதும்,மன உளைச்சலுக்கு ஆளாவதும்,டயட் காலம் முடிந்ததும் பழைய உணவு பழக்கத்திற்கு செல்வதும், முதலில் எடையை குறைத்தாலும்,அவர்களால் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு அவர்களின் மனக்கட்டுப்பாடு(willpower ) குலைந்து விடுவதால் சுலபமல்ல என்பதும்,சிலருக்கு அந்த உணவுக் கட்டுப்பாட்டுக் காலம் முடிந்ததும், நோய்கள் வருவதும்,உணவில் விருப்பமின்மையும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே dieting என்று பழரசங்களை எடுத்துக் கொள்வதை விட அளவான balance diet நல்ல பலனைத் தரும் என்கிறார்கள்.பழங்கள் உண்பதானால் உணவுக்கு ஒரு மணி முன்போ இரண்டு மணி பின்போ உண்பதும்,உணவு முடிந்ததும் நடப்பதோ தூங்குவதோ கூடாது.
கடுமையான dieting ற்கு பின் ஏற்படுவது போல்,ஜிம் என்ற fittness center(gym-gymnastics) உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்பவர்களிற்கு சில காலத்திற்குப் பின் தொடர்ந்து அவர்களால் உடற்பயிற்சியை தொடர முடியாததால், மனஅழுத்தம், நரம்புத்தளர்ச்சி, நோய்கள்,உடற் தளர்ச்சி போன்றவை ஏற்படுகிறது என்றும்,பலர் எடையையும் கூட்டிக் கொள்கிறார்கள் என்று சமீபத்தய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.பணத்தை கொட்டும் இந்த ஜிம்மினால் தசை நார்களை உறுதிப் படுத்த முடியுமே தவிர, எடையை நிரந்தரமாக குறைப்பதற்கோ,ஆரோக்கியத்திற்கோ உகந்ததல்ல என்பதும்,சில வருடங்களின் பின் பின்விளைவுகளைத் தரக் கூடியதும் என்று தற்போதய அமெரிக்க ஆராய்ச்சிகள் தெரிவிப்பதால், மேல் நாடுகள் பலவற்றில் indoor ல் இருந்து outdoor ல் செய்யும் சாதாரண ஜிம் ற்கு மாறி வருகிறார்கள். நீங்கள் என்ன ஆணழகன் போட்டிக்கா அல்லது மல்யுத்தம் செய்யவா போகிறீர்கள்.தினமும் நல்ல உடற்பயிற்சி நடப்பது,ஏன் வேலைக்கு,கல்லூரிக்கு,கடைத்தெருவுக்கு,நீங்களே சாமான்களை கைகளில் கொண்டு வருவது, குறைந்த தூரத்தையாவது நடந்து செல்லலாமே என்று ஆராய்ச்சி டாக்டர் Dorset,UK Dr.Jennifer Worden. Dr.Lousie Chang NY,USA தெறிவிக்கின்றனர்.நீங்கள் சில நாள் உடற்கட்டோடு வாழப் போகிறீர்களா அல்லது பல நாள் ஆரோக்கியமாக வாழப் போகிறீர்களா என்பதை நீங்களே முடி செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் வேலைக்கு சென்று சம்பளம் பெறுகிறீர்கள்,வருமானத்தை விட அதிகமாக செலவு செய்கிறீர்கள் அல்லது அதிகமாக வருமானம் வருகிறது,குறைவாக செலவு செய்கிறீர்கள்.இது நமது உடலுக்கும் பொருந்தும்.எப்படி?
நீங்கள் உணவின் மூலம் எடுக்கும் கலோரியின் அளவும்,பயன்படுத்தும்(metabolizes) சக்தியின்(energy)அளவும் சரியாக இருந்தால்,எடை கட்டுப்பாடாக இருக்கும்.கலோரியின் அளவு கூடி,சக்தியின் அளவு குறைந்தால்,எடை அதிகரிப்பும்,கலோரியின் அளவு குறைந்து சக்தியின் அளவு கூடியும் இருந்தால் எடை குறையவும் செய்யும்.அதாவது அதிக உணவும், குறைந்த உடற்பயிற்சியும் எடை அதிகரிப்புக்கு காரணமாகிறது.
இதைவிட பரம்பரை;அதிக உணவு;உணவு உண்ணும் நேரத்திற்கான இடைவெளி,(குறைந்த உணவை நாலு ஐந்து முறை சம நேர இடைவெளியில் உண்பவர்கள்,மூன்று முறை அதிக உணவை உண்பவர்களை விட, எடையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள் என்று ஆய்வு அறிக்கை சொல்கிறது);ஆண்களை விட பெண்களின் கலோரி எரிப்பு மெதுவாக நடப்பதால்(slow metabolizes),காரணம் உடற் தசைகளே (muscle)அதிக கலோரிகளை எரிக்கிறது என்பதால்,பெண்களின் எடை விரைவாக அதிகரிக்கிறது;கூட்டு காபோஹைட்ரேட்(complex carbohydrates) உணவுகளான தவிட்டுடன் கூடிய அரிசி,பழங்கள்,தானியங்கள்,மரக்கறி சேர்த்துக் கொள்ளாது,தனி கார்போகைட்ரேட் (simple carbohydrates)ஆன குளிர் பானம்,பீர்,வைன்,dessert,சர்க்கரை சேர்த்துக் கொள்வதும்;,சில மருந்துகளின் பாவனை;கவலை,போன்றவற்றால் அதிக உணவை எடுப்பது போன்றவை எடை அதிகரிப்புக்கு காரணிகளாகின்றன.
எடை அதிகரிப்பால் வரக்கூடிய நோய்களையும்(hypertension,stroke,sleep apnea,osteoarthritis,gout arthritis,gallstones,prostate in men,uterus in women,breast cancer,high cholosterol,diabetes type 2 )கவனத்தில் கொண்டு எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது அவசியம்.
கடுங்கொழுப்புக்களான(saturated fat) மிருகக்கொழுப்பு,இறைச்சி,பாலுணவு களை குறைப்பதும், மென்கொழுப்புக்களான(unsaturated fat) ஆலிவ்,மீன்,பருப்பு வகைகளை(nuts)சேர்த்துக் கொள்வதும், அதே சமயம் உடம்பில் உள்ள கொழுப்பு(bodyfat) நமக்கு ஓரளவு தேவைப்படுகிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.குளிர் காலத்தில்,குளிர்ப் பிரதேசங்களில் உடல் உஷ்ணமாக வைத்திருப்பதற்கு இந்த கொழுப்பே பயன்படுகிறது.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே.
தலைவலி,வயிற்றுவலி,முதுகுவலி என்று மாத்திரைகளை (pain killer) பாவிக்காது, அந்த வலிகளின் காரணத்தை அறிவதால் நிரந்தரமாக நோயை,வலியை அகற்றிவிட முடியும் என்பதால் முதலில் காரணங்களை அறியுங்கள்,பின் தீர்க்கும் வழியை தெரிவு செய்யுங்கள். போலிகளிடம் அகப்பட்டு வாழ்க்கையை பாலைவனமாக்கி விடாதீர்கள்.
டயபிடிக் என்ற நீரிழிவு நோயை முற்றாக குணப்படுத்த ஆங்கில ஆயுர்வேத,சித்த,யுனானியில் இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை.ஆனாலும் புதிய மருத்துவ முறை ஒன்று வருகிறது.
அந்த தகவலுடன் நாளை மீண்டும் ........................Dr.சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: உடற்பருமன் overweight and obesity
சக்தி அவர்களுக்கு வணக்கம் . 15 நாட்களுக்கு முன் blood sugar 158 என்று இருந்தது . பிறகு சாப்பாட்டில் control பண்ண சொன்னார்கள் .இப்பொழுது 128 உள்ளது . நான் எந்த மாத்ரி உணவு உட்கொள்வது என்று சொன்னால் நன்றாக இருக்கும்
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: உடற்பருமன் overweight and obesity
உபோயோகமான பதிவு நன்றி டாக்டர் சக்திக்கு...
ram73- பண்பாளர்
- Posts : 88
Join date : 13/06/2011
Location : சென்னை
Re: உடற்பருமன் overweight and obesity
[You must be registered and logged in to see this image.]
ram73 wrote:உபோயோகமான பதிவு நன்றி டாக்டர் சக்திக்கு...
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?

» Animals with Obesity - Awareness Photos
» குழந்தையைப் பாதிக்குமா அப்பாவின் உடற்பருமன்?
» Animals with Obesity - Awareness Photos
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum