Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பட்டமரம் பூக்குமா?
3 posters
Page 1 of 1
பட்டமரம் பூக்குமா?
பட்டமரம் அழுகிறது அட்டமியின் ஒளிநிலவு
.. விட்டமழைத் தூறலடி தங்கமே தங்கம் - இது
..... விதிஎழுதும் ஒருகவிதை தங்கமே தங்கம்
கட்டைவிரல் எழுகிறது தொட்டெடுக்க விழைகிறது
... ஒற்றைவிரல் பற்றிடுமோ தங்கமே தங்கம் - நல்
..... ஓசைஒரு கையசைவில் உள்ளதோ தங்கம்
திட்டுமணல் மேடைதனில் சின்னவிதை காய்கிறது
... கொட்டி வெயில் எறிக்கையிலே தங்கமே தங்கம் - அதில்
.....குருத்தெழுமோ வெடித்துமுகை கொள்ளுமோ தங்கம்
தட்டிநிலம் நடைபழகும் தளர்வுகொண்ட காலிரண்டும்
...முட்டியெழும் அலைகடலில் தங்கமே தங்கம் - அவை
..... மூழ்கிடாது மேல்நடந்து செல்லுமோ தங்கம்
நட்டநடு வீதியிலே நாலுபேர்கள் முன்னிலையில்
... சத்தியமும் பட்டபாடு தங்கமே தங்கம் - அது
.....நித்தியமோ நின்றிடுமோ தங்கமே தங்கம்
தொட்டவரும் வெட்டவரும் தீயவரால் துன்பமதைப்
...பட்டவரும் கொண்டவலி கொஞ்சமோ தங்கம் - அப்
.....பட்டுமலர் கொட்டி ரத்தம் பார்த்தையோ தங்கம்
எட்டவரும் கட்டைதனை ஏறிஉயிர் காக்கவென
... முட்டவழிந்தோடும் ஆற்றில் தங்கமே தங்கம் - நீர்
.....மூழ்கமுதல் எண்ணியவன் தங்கமே தங்கம்
கிட்டவரக் கட்டையல்ல கொத்தும் பெரும் அரவமெனில்
... எப்படிநீ தப்பிடுவாய் தங்கமே தங்கம் - இந்த
..... ஏழைவாழ்வு மப்படியே தங்கமே தங்கம்
சுட்டுநிலா எரிவதில்லை தோன்றும் வெயில் கறுப்புமில்லை
... குட்டிடவும் குனிந்தொருவன் நிற்பதேயில்லை -அந்தக்
.....குணமறிந்து நீயும் எழு தங்கமே தங்கம்
முட்டையிலே குதிரைவரும், முந்திரியில் பொன்விளையும்
... குட்டியானை பறந்துபோகும் என்றவர் தங்கம் - இப்போ
.....கூரையிலே கோழிகொள்ளப் படுவதோ துன்பம்
கட்டிச்சிறை யிடநினைந்து கையிலொரு விலங்கு கொண்டு
...எத்தனைதான் ஓடினாலும்தங்கமே தங்கம் - பொய்
..... இட்டுக் கட்டும்வித்தை கற்றோன் ஏய்க்கிறான் தங்கம்
தட்டிவாசல் கூட்டிவைத்து தண்ணிதெளித் தூபமிடு
... முத்துஒளித் தீபமொன்று ஏறுமாம் தங்கம் - இனி
..... முன்னெழுந்து விடியல் வரும் தங்கமே தங்கம்
பட்டமரம் பூக்குமடி பௌர்ணமியும் தோன்றுமடி
... விட்ட மழை இடி முழக்கம் காணுவோம் தங்கம் - இனி
..... விடியலெண்ணி பாய் சுருட்டி போடடி தங்கம்
தொட்டதெலாம் துலங்குமடி தூரஒளி தோன்றுமடி
...சட்டப்படி எங்கள்தமிழ் வெல்லுமாம் தங்கம் - அது
......எட்டியுயர் வான் வளரச்செய்குவோம் தங்கம்
கெட்டபகை கைபிடித்து கீழிருட்டு சிறையிருத்தி
...மற்றவர்கள் கேள்வி கேட்கத் தங்கமே தங்கம் - நாம்
..... மண்ணைத் தொட்டு வணங்கிடலாம் தங்கமே தங்கம்
பொட்டுமின்றிப் பூவுமின்றிப் போவதெங்கே நில்லுகொஞ்சம்
... சத்தியமே வெல்லுமடி தங்கமே தங்கம் - நீ
..... சத்தியமாய் கண்டிடுவாய் நம்தமிழீழம்
நீண்ட நாட்கள் வரவில்லை. இடையில் நிறைய கவிதைகள் எழுதிவிட்டேன். ஒவ்வொன்றாகப் பகிர்ந்து கொள்கிறேன்
அன்புடன்
கிரிகாசன்

kirikasan- உதய நிலா
- Posts : 30
Join date : 01/07/2011
Re: பட்டமரம் பூக்குமா?
நீண்ட நாட்கள் வரவில்லை. இடையில் நிறைய கவிதைகள் எழுதிவிட்டேன். ஒவ்வொன்றாகப் பகிர்ந்து கொள்கிறேன்
அன்புடன்
கிரிகாசன்
அன்புடன்
கிரிகாசன்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: பட்டமரம் பூக்குமா?
கவிதை நல்லாருக்கு! வாழ்த்துக்கள்...
ram73- பண்பாளர்
- Posts : 88
Join date : 13/06/2011
Location : சென்னை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum