Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நீங்களும் மருத்துவராகலாம் 1
2 posters
Page 1 of 1
நீங்களும் மருத்துவராகலாம் 1
இரத்தப்பரிசோதனையில் தைரோயிட்.
உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.
மனிதனாக வாழுங்கள் உண்மையை அறிவீர்கள்,மாக்களாக,அப்பாவிகளாக வாழுங்கள் ஏமாற்றப்படுவீர்கள். கணினி போன்ற பொருட்களை வாங்கும் போது அதைப் பற்றி ஓரளவாவது தெரிந்திருந்தால் நாம் ஏமாற மாட்டோம்.கிராமத்தில் இருந்து ஒருவர் ஏதாவது வாங்க பட்டணம் வருவார்,வாங்கும் பொருளைப் பற்றி எதுவும் தெரியா விட்டால் வியாபாரி ஏமாற்றி அவர் தலையிலே கட்டி விட்டு விடுவார். எந்த விசயமானாலும் ஓரளவு தெரிந்திருந்தால் ஏமாற வழியும் இருக்காது,ஏமாற்றவும் மாட்டார்கள்.எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முயற்சிப்போம்.ஆனால் நமது உடல் பற்றிய சாதாரண விஷயங்கள் கூட நமக்கு தெரிவதில்லை.ஏன் நாம் என்றும் மார்க்கண்டேயனாக இருக்கப் போகிறோம் என்ற எண்ணமா இல்லை கனவா?
தைரோயிட் நோய் சிலருக்கு வரும்,ஆனாலும் அதிக அக்கறை எடுக்க மாட்டார்கள். ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாகவும்,குழந்தைகளுக்கும் வரக் கூடிய இந்த தைரோயிட்டை,இரத்தப் பரிசோதனையில் எப்படி கண்டு பிடிகிக்கிறார்கள்?
இதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?
நமது உடலின் கழுத்தின் கீழ் இரு பக்கங்களிலும் இருப்பது இந்த தைரோயிட் சுரப்பிகள் அல்லது கேடய சுரப்பிகள்.இந்த சுரப்பிகள் தைரோயிட் ஹார்மோன்களை முக்கியமான triiodothyronine(T3),thyroxine(T4), calcitonin(கல்சிய சமநிலையை பேணவும்),சுரக்கிறது.இந்த T3,T4 இரண்டையும் மூளையில் இருந்து சுரக்கும் Thyrotropin-Releasing-Hormone(TRH) ம் Thyroid-stimulating-hormone(TSH)உம் கட்டுப்படுத்துகிறது. இரத்தத்தில் அதிக தைரோயிட் ஹார்மோன்கள் இருக்கும் போது மூளையில் உள்ள பிட்டியூட்டறி(pituitary) சுரப்பி குறைவான TSH ஐயும்,குறையும் போது கூடிய அளவு TSH ஐயும் அனுப்பி தைரோயிட் ஹார்மோன்கள் இரத்தத்தில் சமநிலையாக இருப்பதற்கு தூண்டுதலாக இருக்கிறது.நம் உடம்புக்குள் எல்லா உறுப்புக்களும் மூளையின் சொற்படி கேட்டு நடந்தாலும்,நாம் இந்த உலகில், போடா போ புண்ணாக்கு என்று எதையும் கேட்பதில்லை ஏன்?
T3,T4 செயல்பாட்டிற்கு அயடின் (Iodine) தேவைப்படுவதால் நீங்கள் பாவிக்கும் உப்பு அயடின் கலந்ததா என்பதை கவனித்து பாவிக்கவும்.தைரோயிட் சுரப்பிக்கு தேவைப்படும் அயோடினின் அளவு நாட்டுக்கு நாடு வித்தியாசப்பட்டாலும்,சாதாரணமாக 60 முதல் 150 mcg அளவு 14 வயதிற்கு மேற்பட்டோருக்கு போதுமானது. இந்த T3,T4 ,நமது உடலின் வளர்ச்சி வேகம்,உடலின் வளைசிதைமாற்றம்(metabolism)உடற் செயல்பாடுகள்,உஷ்ண மாற்றம்,கடுமையான இதயத் துடிப்பு,இரத்த அழுத்த உயர்வு,மற்றும் பல உடற் பகுதிகளின் செயற்பாட்டிற்கும், மற்ற ஹார்மோன்களால் உடல் எப்படி உருப்படியாக வேலை செய்கிறதா இல்லையேல் படுத்துத் தூங்குகிறதா என்பதையும் கவனித்து கட்டுப் படுத்துகிறது.
தைரோயிட் தொழிற்பாடு கூடுதலாக(overactive) இருந்தால் அதிக ஹார்மோனையும்(முடிவு hyperthyroidism என்பர்),தைரோயிட் தொழிற்பாடு(underactive) குறைவாக இருந்தால் குறைவான அளவு ஹார்மோன்களையும்(hypothyroidism என்பர்) சுரக்கும்.
தைரோயிட் ஹார்மோன்களின் குறைவு( hypothyroidism) முதியவர்களுக்கும்,அதிகமாக பெண்களுக்கும்,ஏன் எல்லா வயதினருக்கும் கூட வரும் இதன் குணங்கள் - களைப்பும் அதிக தூக்கமும்,குளிர்வது போன்ற உணர்வு,சருமம் காய்ந்து இருப்பது,தலைமுடி உதிர்தல்,தொண்டை கட்டியிருப்பது போன்றும்,குரல் கரகரப்பும்,மன அழுத்தம்,மனசோர்வு,ஞாபகசக்தி குறைவு,மனத்தை ஒருநிலைப்படுத்த முடியாமை,மலட்டுத்தன்மையை ஏற்படுத்தல்,எடை கூடுதல்,மலச்சிக்கல்,மன சிக்கல்,மாதவிடாய் சிக்கல்,குறைந்த இதயத் துடிப்பு(Hypotonie),போன்றவையாகும்.அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த குணங்கள் மாறுபட்டு காணப்படும்.அதே சமயம் தைரோயிட் ஹார்மோன்கள் குறைந்து/கூடும் போது வீக்கமும்(nodule), முடிச்சுக்களும்(கழலை-multinoduler-goiter) நோய் பற்றிய கவனையின்மையாலும்,சில சமயம் பரம்பரையாகவும் ஏற்பட்டும் விடுகிறது.இதை சிறந்த மருத்துவர் விரல்களினால் உணர்ந்தும், இல்லையேல் ஸ்கான் பண்ணியும் கண்டறியலாம். இதற்கு இரத்த பரிசோதனையில் TSH மற்றும் FT4(free thyroxine 4) இன் அளவை தெரிந்து கொள்வார்கள்.
அதிக அளவு தைரோயிட் ஹார்மோன்கள்(overactive, hyperthyroidism )சுரப்பதால் உடல் வேலைகளை துரிதப்படுத்தும் போது -பதற்றம்(nervous,emotional), நடுக்கம்,நித்திரைக் குறைவு,வளமைக்கு மாறாக அதிக வியர்வை,அதிக பசி ஆனால் எடை குறைதல்,அசதி,இதயத் துடிப்பு அதிகரிப்பு(Hypertonie),வயிற்றோட்டம்,குறைவான மூச்சிழுப்பு,முடி உதிர்தல் அல்லது மெல்லிய தலைமயிர்,தசை வலி,சுரப்பி வீங்குதல்,மாதவிடாய் இடைவெளியை மாற்றுவதால் கர்ப்பம் அடைவதில் சிக்கலும்,பிரசவ காலத்தில் சிக்கலையும் ஏற்படுத்தலாம்.இந்த அதிக அளவு ஹார்மோன் சுரக்கும் நிலை உள்ளவர்கள் மீன் போன்ற கடலுணவையும்,ஐயோடின் கலந்த உப்பு,கடல் உப்பு,மற்றும் ஐயோடின் உள்ள உணவுகளான பால் பொருட்கள் தவிர்ப்பது நலம்.
இந்த தைரோயிட் ஹார்மோன்களின் அளவை கண்டறிய TSH அளவை, இரத்த பரிசோதனையில் அல்லது TRH சோதனை மூலம் கண்டறிவார்கள். TRH சோதனையில் மருத்துவர் ஒரு குறிப்பிட்ட அளவு TRH(200 µg-microgramm)ஐ இரத்த நரம்பின் ஊடாக ஏற்றி 30 நிமிடங்களுக்கு முன்னும் பின்னும் இருக்கும் அளவை கண்டறிவார்.பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி எடுக்கும் முடிவில் உங்களுக்கோ,தெரிந்தவருக்கோ தைரோயிட் பரிசோதனை செய்யப்பட்டால் பரிசோதனை முடிவுகளில்,கீழே காட்டியபடி TSH இருக்கும்.
TSH - 0,27 - 2,50 mlU/l (milli international Unit)என்று இருப்பதை காணலாம்.
TRH - 2,5 - 25 mU/l
பொதுவாக TSH சோதனையையே செய்வது வழக்கம்.
Higher TSH = underactive-Hypothyroidism (அதிகTSH அளவு= தைரோயிட் ஹார்மோன்கள் குறைவு
Lower TSH (0,27ற்கு கீழ்) = overactive - Hyperthyroidism(குறைந்த TSH அளவு=அதிக ஹார்மோன்)
கற்பகால தைரோயிட்,அடிக்கடி மாறுபடும் பரிசோதனை அளவுகள்,போன்ற சில சமயங்களில், மருத்துவர்கள் TSH உடன் கூடுதலாக T4,T3,freeT4,free T3,antibodies போன்ற மேலதிக பரிசோதனைகளை செய்வார்கள்.
TSH அளவு குழந்தைகளுக்கும்,இளம் வயதினருக்கும் சிறிது கூடுதலாக இருக்கும் என்பதால் சிலர் 2,50 ற்குப் பதிலாக 3,1 µU/ml(microUnit) ; என்றும் சிலர் 4,0 ல் இருந்து 5,0 வரையும் கணக்கெடுக்கின்றனர்.
ஆனாலும் இதில் உள்ள ஒரு சிக்கலையும் சொல்லி விடுகிறேன். மனிதன் தான் சொல்வதே சரியானது என்று அடம் பிடிப்பான். இதற்கு மருத்துவ உலகமும் விதி விலக்கல்ல. சில மருத்துவ பரிசோதனைகள் வாழும்,பிறந்த நாடு,இனம்,பரம்பரை இவற்றால் மாறுபடுகின்றன.அது போல் மேற் சொன்ன முடிவுகளிலும் மிகச் சிறிய மாற்றம், நாடுகள்,மருத்துவ பரிசோதனை நிலையங்கள்,மருத்துவர்கள் பொறுத்து இருக்கவே செய்கிறது. NACB(National Academy of Clinical Biochemistry) மற்றும் பல மருத்துவ பரிசோதனை நிலையங்களும் மேற் சொன்ன அளவை (0.24 -2.5mlU/l)சர்வதேச ரீதியாக சென்ற ஆண்டு ஏற்றுக் கொண்டன.
இதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இரத்த அழுத்தம்(குருதி அழுத்தம்). எல்லோருக்கும் இரத்தஅழுத்தம் இருப்பினும்,நாட்டுக்கு நாடு இந்த அளவில் வேறுபாடு இருப்பதால்
110/65(border) ~120/80(normal) ~ 140/90(border) mmHg சாதாரணம் என்கிறார்கள்.
100/65 (Systolic/Diastolic mmHg)எனும் போது குறைந்த அழுத்தம்(Hypotension) என்றும்,
140/90 ஆகும் போது உயர் அழுத்தம்(Hypertension) என்பர். ஆனாலும் இந்த அழுத்தம் நமது செயல்கள்,உண்வு சிந்தனை காரணமாக அடிக்கடி மாறுகிறது என்பதால்,உடனடியாக முடிவு செய்யாது குறைந்த அல்லது உயர் அழுத்தம் தொடர்ந்து இருந்தால் மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்.இதற்காக மருத்துவர்கள் 24 மணி நேர தொடர் அழுத்தத்தை கவனிக்கிறார்கள். இந்த அழுத்தத்தை மருத்துவரும்,நாம் வீட்டிலும் அளந்து கொள்ளலாம்.அத்துடன் கணினியில் PC/MD Mouse,(இரண்டும் இணைந்த) மூலமும்,கை விரலை மவுஸ் மொனிட்டரில் வைக்கும் போது அளக்கப்படும்.
இதயத்துடிப்பு- மருத்துவர் மற்றும் பரிசோதனை நிலையங்கள் தவிர நாம் வீட்டிலும், Heart beat Indicator mouse என்ற கம்பியூற்றர் மவுஸ் மூலமும், உங்கள் கை பெருவிரலை மவுஸில் வைக்கும் போது இருதய துடிப்பு கணக்கிடப்படுகிறது,சாதாரண நிலையில், காலையில் எழுந்தவுடன் அளந்தால்(resting pulse),
60-80 bpm (beat per minute) ஆக இருக்கும்.ஆகக் கூடிய இருதய துடிப்பு பெரியவர்களுக்கு(10-15 வித்தியாசப்படலாம்)
கூடிய உடற்பயிற்சியை ஒருவர் செய்யும் போது இருக்கக் கூடிய அதி கூடிய இதயத் துடிப்பு பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.ஆனாலும் பலர் பல வேறு விதமாக கணக்கிடுகிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பெண்கள் 226 -(மைனஸ்) உங்கள் வயது(வருடத்தில்)= ஆகக் கூடிய, age adjusted max.HR(HeartRate)
ஆண்கள் 220-உங்கள் வயது(வருடத்தில்) = age adjusted max.HR(HeartRate).
நாடித்துடிப்பு-(Pulse) உங்கள் முதல் இரண்டு விரல்களினால்(ஆயுர்வேதத்தில் ஆள்காட்டி,நடு,மோதிர விரல்களைப் பாவிப்பர்) பத்து வினாடிகள் எண்ணி, அதை ஆறால் பெருக்கி அல்லது 15 வினாடிகள் எண்ணி நான்கால் பெருக்கி வருவது ஒரு நிமிட நாடித்துடிப்பு. குழந்தைகளுக்கு அதிகமாகவும்,13 வயதுக்கு மேல் சாதாரண நிலையில்,
60~70~100 (அதாவது 60 ற்கும் 100 ற்கும் இடையில்)ஆகவும் இருக்கும். இதுவும் வேலை,உடற்பயிற்சி செய்யும் போது,அதிகரிக்கும்.
நாடித்துடிப்பை,இதயத்துடிப்பை நாமாகவே ஓரிரு நிமிடங்களில்,மருந்து,மாத்திரை இன்றி , கட்டுப்படுத்தி வைத்திருக்க Autogenous Training (self generating)பழகிக் கொள்ள வேண்டும்.இந்தப் பயிற்சியை ஐரோப்பிய,அமெரிக்க,ஜப்பான்,சீனா நாடுகளில் மருத்துவர்களும்,சில தனியார் பயிற்சி நிலையங்களும் கற்றுத் தருகின்றன.
மூச்சு எடுத்தல் 12 வயதிற்கு மேற்பட்டவர்களின் சாதாரண எண்ணிக்கை ஒரு நிமிடத்திற்கு 12 ல் இருந்து 20 வரையும்(breaths per minute),குழந்தைகளுக்கு அதிகமாகவும் இருக்கும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள். நரம்பின் ஊடாக மூளையில் இருந்து மூளைக்கு செல்லும் இரத்த ஓட்ட துடிப்பின் வேகம் 120m/sec.நமது இருமலின் வேகம் 900km/h.நமது மூக்கு 10000 வேறுபட்ட மணங்களை கண்டறியும் சக்தி கொண்டது.
அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகளின்படி கிடைத்த தகவல் இது.
சாதாரண மனிதன் தினமும் 3000 - 4000 தடவைகள் அடி எடுத்து (steps)நடக்கிறான்.ஆயிரம் ஸ்டெப்ஸ் 10 நிமிட நடைக்கு சமம்.நாம் தினமும்,19 வயதிற்கு மேற்பட்டவர்கள், 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும், இது 30 நிமிட உடற்பயிற்சிக்கும்,8 கி.மீ(5 miles) நடப்பதற்கும் சமமானது. ஒரு ஸ்டெப்(step) = 76.2 cm(2.5 feet). இப்படி நடக்கும் போது 300 முதல்400 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.செய்யலாமே. நண்பர்களுடன் காதலியுடன் பேசிக் கொண்டு,மீடியா பிளேயரில் பாட்டுக் கேட்டுக் கொண்டு,இயற்கைக் காட்சிகளை இரசித்துக் கொண்டு,கடைதெருவில் உள்ள கடைகளை பார்த்துக் கொண்டு நடக்கலாமே. இன்றே 3000 த்தில் இருந்து ஆரம்பித்து ஒவ்வொரு வாரமும் 500 ஸ்டெப்ஸ் அதிகரியுங்கள்.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
மீண்டும் அடுத்த வாரம்......................Dr. சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: நீங்களும் மருத்துவராகலாம் 1
மிகவும் payanulla thagavel
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» நீங்களும் ஹேக் செய்யப்படலாம்?
» நீங்களும் வானொலி அமைக்கலாம்.
» நீங்களும் வெப்டிசைனர் ஆகலாம் வாங்க....!
» கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
» நீங்களும் முதலாளி ஆகலாம் வாங்க...!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum