TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மத்தியில் பணக்கார அமைச்சர் கமல் நாத்துக்கு ரூ.263 கோடி சொத்து

Go down

மத்தியில் பணக்கார அமைச்சர் கமல் நாத்துக்கு ரூ.263 கோடி சொத்து Empty மத்தியில் பணக்கார அமைச்சர் கமல் நாத்துக்கு ரூ.263 கோடி சொத்து

Post by ஜனனி Sun Sep 04, 2011 7:08 am

மத்தியில் பணக்கார அமைச்சர் கமல் நாத்துக்கு ரூ.263 கோடி சொத்து Large_306620
புதுடில்லி:பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களின்
சொத்துப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக, நகர்ப்புற
மேம்பாட்டு துறை அமைச்சர் கமல் நாத்துக்கு, 263 கோடி ரூபாய் மதிப்புள்ள
சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகனுக்கு வெறும்
ஐந்து கோடி ரூபாய்க்குதான் சொத்து உள்ளது."மத்திய அரசு மற்றும் அதன்
அமைச்சர்களின் நடவடிக்கைகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்ற
அடிப்படையில், அனைத்து அமைச்சர்களும், தங்களின் சொத்துப் பட்டியலை, பிரதமர்
அலுவலகத்தில் அளிக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்
தெரிவித்திருந்தார். இந்த சொத்து பட்டியல் குறித்த விவரங்களை, ஆகஸ்ட்
31க்குள் அளிக்கும்படியும், அவர் அறிவுறுத்தி இருந்தார். இதன்படி, பிரதமர்
அலுவலக இணையதளத்தில் சொத்துப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய
அமைச்சரவையில் உள்ள, 77 பேரில், விலாஸ்ராவ் தேஷ்முக், கிருஷ்ணா திராத்,
ஜெயந்தி நடராஜன், ஜிதேந்தர் சிங், ஜெகத்ரட்சகன் ஆகியோரை தவிர, மற்றவர்களின்
சொத்து பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதுபற்றிய விவரம்:பிரதமருக்கு 4.8 கோடி ரூபாய்:பிரதமர் மன்மோகன்
சிங்கிற்கு, 4.8 கோடி ரூபாய் மதிப்புள்ள அளவுக்கு சொத்துக்கள் உள்ளன.
இரண்டு வீடுகள், "மாருதி 800' கார் ஆகியவை உள்ளன. இவரது மனைவி குர்சரண்
கவுரின் பெயரில், பாட்டியாலா வங்கியில் சேமிப்பு கணக்கில், 22 லட்ச ரூபாய்
உள்ளது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மொத்த சொத்து மதிப்பு, 1.25
கோடி ரூபாய். கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியின் மொத்த
சொத்து மதிப்பு, 13.33 லட்ச ரூபாய். இவருக்கு அசையா சொத்துக்கள் எதுவும்
இல்லை.

தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபலுக்கு சொந்தமான அசையா
சொத்துக்களின் மதிப்பு, 16.22 கோடி ரூபாய். இவரது வங்கி கணக்கில் 65 லட்ச
ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
முதலீட்டின் பங்கு மதிப்பு 40 லட்ச
ரூபாய். நகைகளின் மதிப்பு 20 லட்ச ரூபாய். மற்ற சொத்துக்களின் மதிப்பு,
4.75 கோடி ரூபாய். வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவுக்கு, 22 லட்சம் ரூபாய்
மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல் நாத்துக்கு முதலிடம்:நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் கமல்
நாத்துக்கு தான், மத்திய அமைச்சர்களிலேயே, அதிக அளவு சொத்துக்கள் உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சேர்த்து
ரூ.263 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
மத்திய
அமைச்சரவையிலேயே, மிக மிகக்குறைந்த சொத்துக்களை கொண்டவராக ஏ.கே.அந்தோணி
உள்ளார். மொத்தமே ரூ.1.8 லட்சம் மட்டுமே உள்ளதாக கூறியுள்ளார். இவரிடம்
ரூ.84 ஆயிரம் ரொக்கம் உள்ளதாம்.

இவர்கள் தவிர, சுஷில் குமார் ஷிண்டேவுக்கு, 7.75 கோடி ரூபாய் மதிப்புள்ள
சொத்து உள்ளதாகவும், அமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு, 56 லட்சம் ரூபாய்
மதிப்புள்ள சொத்தும், வீர்பத்ர சிங்கிற்கு 22 கோடி ரூபாய் மதிப்புள்ள
சொத்தும், குலாம் நபி ஆசாத்துக்கு 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்தும்
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணை அமைச்சர்களுக்கு எவ்வளவு சொத்து?மத்திய அமைச்சரவையில் உள்ள,
தமிழகத்தைச் சேர்ந்த இணை அமைச்சர்களை பொறுத்தவரை, நெப்போலியனுக்கு, 10.90
கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி
செல்வனுக்கு, 50.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நாராயணசாமிக்கு 2.60 கோடி ரூபாய்
மதிப்புள்ள சொத்து உள்ளதாகவும், பழனி மாணிக்கத்துக்கு சொந்தமாக, 55 லட்ச
ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளதாகவும், பிரதமர் அலுவலக இணையதளத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.87.27 கோடி சொத்து: நாட்டிலேயே பணக்கார முதல்வர் இவர்தான்
» 5 மாதங்களில் ரூ.2.98 கோடி அதிகரித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் சொத்து மதிப்பு.
» ஜெகன்மோகன் ரெட்டிக்கு 365 கோடி ரூபாய் சொத்து : சொத்து பட்டியலில் மலைக்க வைக்கும் பகீர் தகவல்
» “விஸ்வரூபத்திற்கு ரூ. 100 கோடி செலவு : கமல் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் ” - ரஜினி
» இறந்துபோன 100 வயது பிச்சைக்காரிக்கு ரூ.6 1/4 கோடி சொத்து .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum