Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழர் கூட்டமைப்பை சிதைத்து தமிழரின் தேசிய பலத்தை உடைக்க திரைமறைவில் சதி:
Page 1 of 1

இலங்கைத்
தீவில் தேசிய இனங்கள், தேசிய இனப்பிரச்சனை என எதுவும் இல்லையென
நிறுவுவதையே தங்கள் உடனடி அரசியல் திட்டமாக ராஜபக்ச சகோதரர்கள்
கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுகின்றார் கொழும்பில் இருக்கும் தமிழ்
அரசியல் ஆர்வலர் ஒருவர்.
"கோவணமும் களவு போய்விட்டதை உணராமல்,
பட்டாடை பற்றிய கனவில் மிதக்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இதனைப்
புரிந்துகொள்ள வேண்டும்" என அவர் புதினப்பலகை-யிடம் தெரிவித்தார்.
கடந்த
குடியரசு அதிபர் தேர்தலுக்குப் பின்னர் - தமக்குப் பெரும் அச்சுறுத்தலாக
இருப்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைவர் சம்பந்தனும் தான் என்றே
ராஜபக்ச சகோதரர்கள் கருதுகின்றனர் என்று சொல்லப்படுகி்ன்றது.
ஆதலால்
- தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலவீனப்படுத்திச் சிதைப்பதற்கான இரகசிய
வேலைத் திட்டங்களை அவர்கள் தயாரித்துச் செயல்படுத்தி வருவதாகவும்
தெரியவருகின்றது.
அதாவது - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ்ச்
சமூகத்தில் மதிப்பு மிக்கோரைத் தமது வேட்பாளர்களாகத் தெரிவு செய்ய
வாய்ப்பளிக்காமல், அப்படியானவர்களை அடையாளம் கண்டு - அவர்களுடன் முன்னரே
தொடர்பு கொண்டு அவர்களத் தமது பக்கம் இழுக்கும் வேலைகளில் ராஜபக்ச
சகோதரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கைத் தீவினுள் மட்டும்
அல்லாமல், புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழ் சமூகப்
'பெரியோர்'களைக் கூட இவ்வாறாகப் பதவி ஆசை ஊட்டி தமக்குச் சார்பாக
அரசியலில் இறங்கச் செய்வதே ராஜபக்ச சகோதரர்களின் உத்தி.
இதன்
வழி - தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கியைச் சிதறடித்து - தமிழ்
மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பலம் வாய்ந்த தேசியச் சக்தியாக
கூட்டமைப்பு உருவாவதைத் தடுப்பதே நோக்கம்.
இந்த இரகசிய வேலைத் திட்டத்தின் பிதாமகனாக பசில் ராஜபக்ச செயற்படுகின்றார் என்று சொல்லப்படுகி்ன்றது.
யாழ்ப்பாணத்தில் வாழும் இன்னொரு பொது ஆர்வலர் புதினப்பலகை-யிடம்
பேசும் போது - "இலங்கைத் தீவில் வாழும் எந்த ஒரு 'தமிழ்ப் புள்ளி'யை
நீங்கள் அடையாளம் கண்டு, அவரைத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில்
அரசியலில் ஈடுபட வைக்க நீங்கள் தொடர்பு கொண்டாலும், அவரை ஏற்கெனவே
ராஜபக்ச தரப்பு தொடர்பு கொண்டு பேசியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்"
என்றார்.
ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், அரச நீதி நிர்வாகத் துறை
அதிகாரிகள், முன்னணி வணிகர்கள், பிரபல்யம் மிக்க சட்டவாளர்கள் என பலரும்
இந்த வலைக்குள் வீழ்ந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்னொரு
பக்கத்தில் - இனத்தின் நலனிற்காக அல்லாது தமது சுய இலாபத்திற்காக அரசியல்
ஆசைகள் கொண்டிருக்கும் தமிழர்கள் சிலர் கூட ராஜபக்ச குடும்பத்திற்குச்
சாமரம் வீசும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பில் வாழும் இன்னொரு
தமிழ் கல்விமான் தெரிவித்தார்.
அவர் இதற்கு வெளிப்படையான ஒரு உதாரணத்தையும் புதினப்பலகை-க்குக் கூறினார்.
தமிழ்ப்
பிரமுகர் தெய்வநாயகம்பிள்ளை ஈஸ்வரனைத் தலைவராகக் கொண்டு கொழும்பில் தேசிய
ஒற்றுமைப்பாட்டுச் சம்மேளனம் என்ற அமைப்பு இயங்குகிறது.
முற்றிலும் தமிழ்ப் பிரமுகர்களைக் கொண்ட இந்த அமைப்பின் அங்கத்தவர்கள் "ஐக்கிய இலங்கை"யை வலுவாக ஆதரித்து நிற்பவர்கள்.
இவர்கள்
கடந்த குடியரசு அதிபர் தேர்தலில் பெருவெற்றியீட்டிய ராஜபக்சவை பல்லாண்டு,
பல்லாண்டு நோயற்ற வாழ்வு வாழ்க என வாழ்த்தி தமிழ், ஆங்கிலப்
பத்திரிகைகளில் பெரிய விளம்பரங்களைக் கூட கொடுத்திருக்கின்றார்கள்.
ராஜபக்ச
குடும்பத்தின் இந்த சதி முயற்சியின் இன்னொரு அங்கமாக - தம்மால்
இனங்காணப்பட்ட - ஒற்றையாட்சிக்கு ஊதுகுழலாய் இருக்கும் ஆட்களை, தமிழ்
தேசிய கூட்மைப்பிற்குள் சேர்த்துவிடும் திட்டமும் இருக்கின்றது.
இதன்
மூலமாகவும் - தமிழர் கூட்டமைப்பின் அடிப்படைக் கோட்பாடான தமிழ் தேசியத்தை
வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளே நடைபெறுகின்றன என்றார் அந்த கொழும்பு
வாழ் தமிழ் கல்விமான்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் -
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் தமது ஆட்களை நுழைத்து அதன் அடிப்படைக்
கோட்பாடுகளை உடைக்கும் முயற்சியில் ராஜபக்ச சகோதரர்கள் மட்டுமே
ஈடுபடுகின்றார்கள் என்றில்லை.
அப்படிச் செய்வதன் மூலமாக இந்தியாவும் இலாபமடைய முடியும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
தமிழர்களின்
ஒரே தேசியச் சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் வலுப்படுத்ததாது
விடின் - தமிழ்சமூகத்திற்கு வெளியில் இருந்தும், உள்ளிருந்தும்
பின்னப்படும் இவ்வாறான சதிகளுக்குள் சிக்கி தமிழரின் அரசியல் வேட்கைகள்
சிதைந்து போய்விடும் எனவும் குறிப்பிட்டார்.

Similar topics
» அய்யா பழ.நெடுமாறன் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி உதயம்!
» கனடியத் தமிழர் தேசிய அவைக்கான மக்கள் பார்வைக்கான யாப்பு,
» இன்றும் நாளையும் கனடாவில் - கனடாத் தமிழர் தேசிய அவை மக்களுடனான கருத்தாடல்:
» "கனடிய தமிழர் தேசிய அவை விடுக்கும் கேப்பாபிலவு மக்களுக்கான அவசர தேவைகளுக்கான வேண்டுகோள்"
» தமிழீழ கீதமே ஈழத்தின் தேசிய கீதம் – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum