Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அதிகாரிகளின் டெலிபோன் செலவுக்கு உச்சவரம்பு
Page 1 of 1

அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் வீடுகளுக்கான தொலைபேசி
இணைப்புகளுக்கு மாதாந்திர கட்டணம், அழைப்புகளின் அடிப்படையில் இல்லாமல்,
தொகையின் அடிப்படையில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின்
அதிகாரிகளின் வீடுகளில் உள்ள தொலைபேசி இணைப்புகளுக்கு, மாதந்தோறும்
தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதற்கான தொகையை அந்தந்த துறை மூலம், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு
செலுத்தப்பட்டு வந்தது. கூடுதாக ஆகும் தொகை, அதிகாரியிடம் பிடித்தம்
செய்யப்பட்டது.
முன்பு, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், ஒரே "பிளான்' அடிப்படையில்
சேவையை வழங்கியது. இதனால், அழைப்புகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதில் சிரமம்
இல்லாமல் இருந்தது. பின்னர், பி.எஸ்.என்.எல்., வெவ்வேறு வகையான,
"பிளான்'களை அறிமுகப்படுத்தியதால், ஒரே சீரான தொலைபேசி அழைப்புகள்
எண்ணிக்கையை கணக்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஒவ்வொரு அதிகாரிக்கும்,
அந்தந்த, "பிளான்' அடிப்படையில், கூடுதல் தொகையை வெவ்வேறு விதமாக பிடித்தம்
செய்ய வேண்டியிருந்தது. இதனால், ஒவ்வொரு துறையில் இருந்தும் பல்வேறு
சந்தேகங்கள் கிளப்பப்பட்டு வந்தன. இதுதவிர, வீடுகளுக்கான இணைப்புகளுக்கு,
"பிராட் பேண்ட்' வசதி அளிக்கக் கோரியும், பல்வேறு அதிகாரிகளிடம் இருந்து
முறையீடுகள் வந்தன.
எண்ணிக்கை அடிப்படையில் அளிக்கப்பட்டிருந்த உச்சவரம்பு, நான்கு
தொகுப்புகளாக பிரிக்கப்பட்டிருந்தது. முதல்வர், அமைச்சர்கள், சபாநாயகர்,
துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு கொறடா, தலைமைச் செயலர்,
ஐகோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், முதல்வரின் செயலர்கள்,
கவர்னரின் செயலர்கள், கலெக்டர்கள், டி.ஆர்.ஓ.,க்கள், கவர்னரின் டாக்டர்,
செய்தித் துறை இயக்குனர், கலெக்டர்களின் (பொது) பி.ஏ.,க்கள், மாவட்ட போலீஸ்
எஸ்.பி.,க்கள், சட்டம் ஒழுங்கு ஐ.ஜி., உளவுத் துறை டி.ஐ.ஜி., மற்றும்
ஐ.ஜி., உள்பட 62 வகையான பதவிகளில் இருப்பவர்களுக்கு, உச்சவரம்பு ஏதுமின்றி
முழு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது தொகுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு, மாதம் ஆயிரம் அழைப்புகள்
(பி.எஸ்.என்.எல்., வழங்கும் இலவச அழைப்புகள் உள்பட) பேசிக் கொள்ள அனுமதி
அளிக்கப்பட்டிருந்தது. இதன்படி, அனைத்து அரசு துறை செயலர்கள், கூடுதல்
செயலர்கள், கமிஷனர்கள், போலீஸ் ஐ.ஜி.,க்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், லஞ்ச
ஒழிப்பு இயக்குனர், டி.என்.பி.எஸ்.சி., தலைவர், ஐகோர்ட் பதிவாளர்கள் உள்பட
34 வகையான பதவிகளை வகிப்போர், இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளனர்.மூன்றாவது
தொகுப்பில், அனைத் துறைத் தலைவர்கள், அமைச்சர்களது சீனியர் பி.ஏ.,க்கள்,
கெசடட் பி.ஏ.,க்கள் உள்பட 57 வகையான பதவிகளில் இருப்பவர்களுக்கு, மாதம் 500
அழைப்புகளை பயன்படுத்திக் கொள்ள (பி.எஸ்.என்.எல்., வழங்கும் இலவச
அழைப்புகள் உள்பட) அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்த மூன்று தொகுப்புகளிலும் இடம்பெறாத, இதர அதிகாரிகளுக்கு,
பி.எஸ்.என்.எல்., வழங்கும் இலவச அழைப்புகள் உள்பட மொத்தம் 300 அழைப்புகளை
பயன்படுத்திக் கொள்ள வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில்,
பயன்படுத்தும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கையில் கணக்கிடாமல்,
குறிப்பிட்ட கட்டணத்தை மாதந்தோறும் உச்சவரம்பாக, அதிகாரிகளின் வீட்டு
இணைப்புகளுக்கு நிர்ணயிக்கலாம் என்று, நிதித் துறை துணைச் செயலர் அரசுக்கு
கடிதம் எழுதியிருந்தார். இதுதவிர, அவரவர் விரும்பும் தொலைபேசி நிறுவனத்தில்
இணைப்பு பெற்றுக் கொள்ளவும், பிராட் பேண்ட் போன்ற இணைப்புகளை, அரசு
நிர்ணயிக்கும் உச்சவரம்பு கட்டணத்துக்கு உட்பட்டு பயன்படுத்திக் கொள்ளவும்
அனுமதிக்கும்படி கோரியிருந்தார்.
இதை பரிசீலித்த தமிழக அரசு, முதல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பதவிகளில்
இருப்பவர்களுக்கு எவ்வித கட்டண உச்சவரம்பும் கிடையாது என்று முடிவு
செய்துள்ளது. இரண்டாவது தொகுப்பில் இடம்பெற்றிருந்த அதிகாரிகளுக்கு, மாதம்
1,300 ரூபாயும், மூன்றாவது தொகுப்பில் இடம்பெற்றிருந்த அதிகாரிகளுக்கு
மாதம் 800 ரூபாயும், நான்காவது தொகுப்பில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு மாதம்
600 ரூபாயும் உச்சவரம்பு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில்,
தொலைபேசி நிறுவனங்கள் விதிக்கும் சேவை வரியும் சேர்த்து வழங்கப்படும்.
அதிகாரிகள் தாங்கள் விரும்பும் தொலைபேசி நிறுவனங்களில் இணைப்பு பெறலாம்.
எந்த "பிளான்' வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இன்டர்நெட் வசதி உள்பட
கூடுதல் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், அரசு நிர்ணயித்துள்ள
உச்சவரம்புக்குள் அவற்றை பயன்படுத்த வேண்டும். வீட்டு இணைப்புகளுக்கு அதை
விட கூடுதலாக ஆகும் செலவை, அதிகாரிகள் ஏற்க வேண்டும். புதிய இணைப்புகள்
பெறும் போது, தொலைபேசி கருவிக்கான கட்டணத்தை அதிகாரிகளே ஏற்க வேண்டுமென,
பொதுத் துறை உத்தரவிட்டுள்ளது.-நமது சிறப்பு நிருபர்-

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» ரூ.3 லட்சம் வரை வருமான வரி உச்சவரம்பு - நிலைக் குழு
» சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களின் செலவு உச்சவரம்பு ரூ. 16 லட்சம்: மத்திய அரசுக்கு பரிந்துரை
» அதிகாரிகளின் ஆசியுடன் போக்குவரத்துக் கழக டிப்போவில் மணல் கடத்தல்
» 29 ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் வீடு ஒதுக்கீடு ரத்து
» ‘டாப் 16′ லஞ்ச அதிகாரிகளின் பட்டியல்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum