TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி:தீபாவளி தேவையை சமாளிக்க இறக்குமதி

Go down

ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி:தீபாவளி தேவையை சமாளிக்க இறக்குமதி Empty ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி:தீபாவளி தேவையை சமாளிக்க இறக்குமதி

Post by mmani Mon Aug 22, 2011 9:04 am

ரூ.25 ஆயிரம் உச்சத்தை தொடும் தங்கம் எட்டாக்கனி:தீபாவளி தேவையை சமாளிக்க இறக்குமதி Large_298700
மும்பை:"தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருந்தாலும், இந்த
ஆண்டில் தங்கத்தின் இறக்குமதி, ஆயிரம் டன்னைத் தாண்டும். தீபாவளிக்குள்
தங்கம் விலை 30 ஆயிரம் ரூபாய் வரை உயரலாம்' என, ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர். இனி சாதாரண மக்களும், நடுத்தர குடும்பத்தினரும் தங்கம்
வாங்க ஆசைப்படுவது எட்டாக்கனியாக மாறிய நிலை ஏற்பட்டிருக்கிறது.அமெரிக்கா
மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதாரச் சரிவு காரணமாக,
அங்குள்ளவர்கள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்து, தங்கத்தில்
முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கத்தின் விலை, வரலாறு காணாத
அளவுக்கு உயர்ந்து வருகிறது.

தற்போதைய நிலையில் ஒரு சவரன் தங்கம் 21 ஆயிரத்தை தாண்டிவிட்டது. "இதே
நிலை நீடித்தால், தீபாவளிக்குள் 10 கிராம் தங்கம் 30 ஆயிரம் ரூபாய் வரை
விற்கக் கூடிய வாய்ப்பு உள்ளது' என, உலோக தாது அமைப்பின் துணைத் தலைவர்
பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். அதாவது ஒரு சவரன் விலை 25 ஆயிரம் ரூபாயை
எட்டும்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், "தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில்
உயர்ந்தாலும், இந்தியாவில் இந்த ஆண்டு தங்கம் இறக்குமதி, ஆயிரம் டன்னைத்
தாண்டும். இந்த ஆண்டின் முதல் அரையாண்டில், 553 டன் அளவுக்கு தங்கம்
இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 958 டன் தங்கம் இறக்குமதி
செய்யப்பட்டது. தங்கத்தில் முதலீடு செய்வதில் தான் தற்போது மக்கள் ஆர்வம்
காட்டுகின்றனர். தங்க நகை செய்வதில், அவ்வளவாக வரவேற்பு இல்லை. தங்க நகை
வைத்திருப்பவர்கள் தற்போதைய விலையேற்றத்தைப் பயன்படுத்தி அவற்றை விற்று
லாபம் பார்க்க முன்வந்துள்ளனர்' என்றார்.

உலக தங்கம் கவுன்சிலின் இந்தியாவுக்கான இயக்குனர் அஜய் மித்ரா
குறிப்பிடுகையில், "தற்போதைய நிலையில் 10 கிராம் தங்கத்தின் விலை 28
ஆயிரத்து 150 ரூபாயாக உள்ளது. இவ்வளவு விலை உயர்ந்தாலும், மக்களிடையே
வாங்கும் திறன் அதிகரித்துள்ளதால் தங்கம் இறக்குமதி அதிகரிக்கும்;
அத்துடன், விலை உயர்வுக்கான சாதகமான சூழ்நிலையும் உள்ளது' என்றார். உலகச்
சந்தை வீழ்ச்சி அடிப்படையில் அவர் தெரிவித்த கருத்து இது.
அதே
நேரத்தில், புதிதாக முதலீடு என்ற அடிப்படையில் தங்கம் வாங்குவோர் தங்க
நாணயங்களையும், அதிக எடை இல்லாத ஆபரணங்களையும் வாங்கலாம் என்ற கருத்தும்
உள்ளது. மேலும், தங்கம் விலை உயர்ந்திருப்பதால், வெள்ளி ஆபரணங்கள் பக்கமும்
மக்கள் ஆர்வம் சிறிது திரும்பியுள்ளது. ஆனாலும், பிளாட்டினம் அல்லது வைரம்
வாங்க ஆர்வம் காட்டவில்லை.

இந்தியாவில் எப்போதுமே தங்கத்தை ஆபரணங்களாகச் சேமிப்பது வாடிக்கை.
வங்கிகளில் டீமேட் கணக்கு துவங்கி, பரஸ்பர நிதி நிறுவனத் திட்டம் போல
சேமிக்கும் திட்டம் (இ.டி.எப்.,) மேல்தட்டு மக்களுக்கு ஆதரவானது. ஏனெனில்,
அதற்கு ஆதரவாக அப்படியே தங்கம் கையிருப்பாக வைக்கப்படும். ஆனால், அந்த
திட்டத்தை எத்தனை பேர் ஆதரிப்பர்?
பழைய தங்கத்தை விற்று விட்டு, லாபமாக
பணத்தை வாங்கும் போக்கு சந்தையில் அதிகரிக்கும் என்று கூறப்பட்டாலும்,
கடந்த இரு மாதங்களில் உள்ள நிலவரத்தைப் பார்த்தால், வழக்கமாக பழைய தங்கத்தை
(ஸ்கிராப்), கடைகளில் விற்கும் அளவு மிகவும் குறைந்திருப்பதாக புள்ளி
விவரங்கள் காட்டுகின்றன.

ஒரு மாதத்தில் 20 சதவீத விலை உயர்வு

* ரியல் எஸ்டேட்டில் அல்லது பங்கு பத்திர முதலீடுகளில் அபாயம் ஏற்படும்
என்ற அச்சத்தில், தங்கத்தில் கடந்த சில நாட்களாக முதலீடு
அதிகரித்திருக்கிறது. ஒரு மாதத்திற்குள், 20 சதவீத விலை உயர்வை
எட்டியிருக்கிறது.
* வங்கிகளில் தங்க ஆபரணத்தை அடமானம் வைத்து கடன்
வாங்கி, அதன் மூலம் புதிய தங்க ஆபரணம் வாங்குவதும் இனி யோசிக்க வேண்டிய
விஷயம். தப்பித் தவறி மாதாந்திர தவணை கட்டத் தவறினால், வாங்கிய கடனுக்கான
வட்டி அதிகரித்து, அது பெரும் சுமையாகி விடும்.
* தங்க நகையை அடகு
வைத்திருப்பவர்கள் அதை மீட்டு, வெளிச் சந்தையில் விற்று லாபம் பார்க்கலாம்.
அது, அவர்கள் கடன் சுமையைக் குறைக்கும். அதுவே நீண்ட நாள் அடகு என்றால்
சந்தேகம் தான்.
* அதே சமயம், தங்கத்தின் மீது கிராமுக்கு ஒரு
குறிப்பிட்ட தொகை என்று நிர்ணயித்து கடன் தரும் வங்கிகள், தற்போது
அதிகரித்த விலை உயர்வுக்கு ஏற்ப கடன் தொகையை உயர்த்த வாய்ப்பில்லை. உலகச்
சந்தை திசை மாறி சற்று விலை குறைந்தாலும், வங்கிகளில் தங்கத்தை ஈடாக வைத்து
கடன் பெற்றவர்கள் திரும்ப வாங்கிச் செல்வது சந்தேகம் என்ற அச்சமும் அதற்கு
காரணம்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 20 ஆயிரம் கிலோ தங்கத்தை இறக்குமதி செய்கிறது எம்எம்டிசி
» உ.பி.யில் பூமியில் புதைந்து கிடக்கும் 4 ஆயிரம் கோடி தங்கம், பிளாட்டினம் கண்டுபிடிப்பு
» ஒரு மாதமாக தேவையை நிறைவேற்றாத கணவன் மீது புது மனைவி வழக்கு!
» தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது.இதைத் தொடர்ந்து பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடை நிறுவனங்கள் தீபாவளி விளம்பரங்கள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
» தங்கம் வென்ற 'தெருவோரத் தங்கம்'...! -பிரேசிலை அதிர வைத்த சென்னை சிறுமி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum