Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புதிய அணை கட்டினால் பாலைவனமாகும் தென் தமிழகம்
Page 1 of 1

பெரியாறு அணை அருகே, கேரளா புதிய அணை கட்டினால், தென் தமிழகம் பாலைவனம்
ஆவது உறுதி. நம்முடைய உரிமைகளுக்காக, ஒற்றுமையோடு போராட வேண்டிய காலகட்டம்
இது.முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி மதுரை, திண்டுக்கல், தேனி,
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கரில் நெல்
சாகுபடி நடந்து வருகிறது. 152 அடி உயரம் உள்ள பெரியாறு அணை பலமிழந்து
விட்டது என, 1979ல் கேரள அரசு புகார் கூறியது. பின்னர், நீர் மட்டம் 136
அடியாக குறைக்கப்பட்டது. அதன் பின், தேனி மாவட்டம் தவிர மற்ற
மாவட்டங்களில், விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படத் துவங்கியது.
இருபோகமாக
இருந்த நெல் சாகுபடி ஒரு போகமாகவும், சில பகுதிகள் தரிசு நிலங்களாகவும்
மாறின.இந்நிலையில், 27.2.2006ல் அணை நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திக்
கொள்ளலாம் என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை, இன்று
வரை கேரள அரசு அமல்படுத்தவில்லை.சுப்ரீம் கோர்ட் பரிந்துரைப்படி நடக்கும்
நடவடிக்கை:அணையை மீண்டும் முழுமையாக ஆய்வு செய்ய, ஐவர் குழுவை நியமிக்க,
சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்தது. நீதிபதி ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட
இக்குழுவில், தமிழக தரப்பில் நீதிபதி லட்சுமணனும், கேரள தரப்பில் நீதிபதி
தாமஸ், டாக்டர் தத்தே, மேத்தா, சப்பால் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்குழு
ஆய்வு செய்வதற்காக, 21.12.2010ல் அணைப்பகுதிக்கு வந்தது. நீரில்
மூழ்கியுள்ள அணையின் சுவர்ப் பகுதியை பரிசோதனை செய்ய, குழு பரிந்துரை
செய்தது.
அதன் அடிப்படையில், 7.1.2011 அன்று மத்திய மண் ஆராய்ச்சி நிலைய
இயக்குனர் ராஜ்பால் சிங் தலைமையிலான குழு, அணைப் பகுதிக்கு வந்தது.
நீர்மூழ்கி வீரர்கள் துணையுடன், அணையின் சுவர்ப் பகுதியை நவீன டிஜிட்டல்
காமிரா மூலம் படம் எடுத்தனர். அதன் பின், ராகவேந்திர பாண்டே தலைமையிலான
மத்திய மண் ஆராயச்சிக் குழு ஆய்வு நடத்தியது. அணையின் பலம் குறித்து
அறியும் நடவடிக்கையில், இக்குழு ஈடுபட்டுள்ளது.
தற்போதுள்ள அணையின் பலம்
குறித்து, ஐவர் குழுவினர் ஆய்வுப் பணியில் இறங்கியுள்ளனர். அதே சமயம்,
எதையும் கண்டுகொள்ளாமல், "பழைய அணை அருகே புதிய அணை கட்டியே தீருவோம்' என,
கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.புதிய அணை: பெரியாறு அணையில் இருந்து,
1300 அடி தூரத்தில் உள்ள வனப்பகுதியில், புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு
இடம் தேர்வு செய்து, பாறை மற்றும் மண்ணின் உறுதித் தன்மை போன்றவை குறித்து,
ஆய்வு நடத்தியுள்ளது.ரோடு அமைக்க, கட்டுமானப் பணியில் ஈடுபடுபவர்களின்
குடியிருப்பு கட்டுவதற்கு, 5 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.
புதிய
அணையால், தமிழகத்திற்கு ஏற்படும் பிரச்னைகள் :* பெரியாறு அணை குறித்த, 999
ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் செல்லாததாகி விடும்.* புதிய அணை கட்டுவதாகக் கூறி,
மேலும் பல ஆண்டுகள் 136 அடியிலேயே நீர் நிறுத்தப்படும்.*தமிழகத்திற்கு
ஆண்டு தோறும், 13.5 டி.எம்.சி., தண்ணீர் இழப்பு ஏற்படுவதுடன், 2 லட்சம்
ஏக்கரில் முழுமையாகச் சாகுபடி செய்ய முடியாமல் போய் விடும்.* புதிய அணை
கட்டுப்பாட்டை, கேரள அரசு கையில் எடுத்துக் கொள்வதால், தண்ணீருக்காக
ஒவ்வொரு முறையும், கேரள அரசை கையேந்த வேண்டிய நிலை, தமிழகத்துக்கு
ஏற்படும்.* தற்போதுள்ள அணைக்குக் கீழ் பகுதியில், புதிய அணை கட்டுவதால்,
அணையின் நீர் மட்டம், தற்போதுள்ள 136 அடிக்கும் குறைவாகவே இருக்கும்.
இதனால், தமிழகப் பகுதிக்கு தண்ணீரை எடுக்க முடியுமா என்பதில், பிரச்னை
ஏற்படும்.தீர்வு என்ன: பெரியாறு அணை அருகே, புதிய அணை
கட்டுவதற்காக, தன்னிச்சையான முடிவெடுத்து சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாட்டை
மீறி, கேரள அரசு தொடர்ந்து பிரச்னை செய்து வருகிறது. இப்படியே போனால்,
இன்னும் சில ஆண்டுகளில் விவசாய பலம் மிகுந்த தென் தமிழகம், பாலைவனமாக
மாறும் நிலை உருவாகும்.தமிழக அரசியல் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள்,
விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் ஒன்றிணைந்து, கேரளாவின் முயற்சியை
முறியடிக்க, போராட வேண்டியது அவசியம். ஒற்றுமையோடு மத்திய அரசை வலியுறுத்த
வேண்டிய நேரம் இது.வைகோ உண்ணாவிரதம்:பெரியாறு அணை
பிரச்னை குறித்து, பல்வேறு தரப்பினர் போராடினாலும், தமிழக அரசு நடவடிக்கை
எடுத்தாலும், தொடர்ந்து வேகம் குன்றாமல், பிரச்னையின் ஆழத்தை உணர்ந்து,
இடைவிடாது போராடி வருபவர் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ.கேரள அரசின்
ஒவ்வொரு நடவடிக்கையின் போதும், தமிழகத்தில் இருந்து வைகோவின் எதிர்ப்புக்
குரல் எழும்பும். புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சியைக் கண்டித்து,
மதுரையில் இன்று வைகோ உண்ணாவிரதம் இருக்கிறார்.-நமது சிறப்பு நிருபர்-

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» பசுமை பாலைவனமாகும் தமிழகம்...சீரழிக்கும் சீமைகருவேல்!
» தென் மாநிலங்களின் மதுபான விற்பனையில் தமிழகம் முதலிடம்
» தென் சூடான் எனும் புதிய நாடு நாளை உதயமாகிறது!
» தே.மு.தி.க., – பா.ம.க., – புதிய தமிழகம் எம்.எல்.ஏ.,க்கள் 10 பேர் ராஜினாமா
» பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு புதிய தமிழகம் ஆதரவு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum