TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பச்சை பசேல் பழநி மலை எங்கே?

Go down

பச்சை பசேல் பழநி மலை எங்கே? Empty பச்சை பசேல் பழநி மலை எங்கே?

Post by piraba Mon Aug 15, 2011 8:45 am

பச்சை பசேல் பழநி மலை எங்கே? Large_294868
பழநி மலைமேல் அமர்ந்து, அருள் வடிவாய் காட்சி தரும்
முருகனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகின்றனர். தமிழக
கோயில் வருமானங்களில் முதலிடம்... பஞ்சாமிர்தம் என்றாலே பழநி என பல
பெருமைகளை தாங்கி நிற்கிறது பழநி தண்டாயுதபாணி கோயில். இது நமது பொக்கிஷம்.
கோயிலின் பெருமையை குன்றாது காப்பதும், பழம்பெருமை உடைய பழநி நகரின்
சிறப்பை பேணுவதும் நமது கடமை.
ஆட்சியாளர்கள், கோயில் நிர்வாகம்,
பொதுமக்கள் கரம்கோர்த்தால் இந்த புனித பணியை நம்மால் செய்ய முடியும்.
பழநியில் நிறை என்ன...குறை என்ன..? என்ன செய்ய வேண்டும்? அதுகுறித்த நேரடி
லைவ் ரிப்போர்ட் இதோ... முறைகேட்டிற்கு வழிவகுக்கும்
கோயிலுக்கு செல்ல
பஸ் ஸ்டாண்டில் இறங்கினால் போதும். "சார் வாங்க, சிறப்பு தரிசனம்
செய்யலாம்' என்று, சில புரோக்கர்கள் வலுக்கட்டாயமாக தலைக்கு ரூ.100 முதல்
500 வரை கட்டணம் வசூலித்து, சன்னதிக்கு அழைத்துச் செல்கின்றனர்.
தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்கின்றனர்.

கமிஷன் கிடைப்பதால், சில கோயில் ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை.
கோயிலில்
ஊழியர்கள் பற்றாக்குறை அதிகம். தனியார் செக்யூரிட்டிகள்தான் பல பணிகளை
பார்க்கின்றனர். கோயில் நிர்வாக பஞ்சாமிர்தம் ஸ்டால்களில் கூட இவர்கள்தான்
விற்பனையை கவனிக்கின்றனர். பஞ்சாமிர்தம் வாங்கினால் ரசீது தருவது இல்லை.
இதனால் முறைகேடு நடக்க வாய்ப்பு அதிகம். சபரிமலை, திருப்பதியில்
கம்ப்யூட்டர் ரசீது தருகின்றனர். அங்கு கோயில் பணியாளர்கள் தான் இந்தபணிகளை
செய்கின்றனர். பஞ்சாமிர்த டப்பாவில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி
இல்லை. கோயில் நிர்வாகம் தேதியை குறிப்பிட துவங்கினால், தனியார்
தயாரிப்பாளர்களும் பின்பற்றுவார்கள்.

கோயில் வளாகத்தில் தனியார் செக்யூரிட்டிகள் அடிக்கடி பக்தர்களிடம்
மோதலிலும் ஈடுபடுகின்றனர். அறநிலையத்துறைக்கு அதிக வருமானம் தரும்
கோயிலில், அரசு ஊழியர்களை நியமிக்க தயங்குவது ஏனோ? கோயில் பிரசாத ஸ்டால்கள்
தனியார் வசம் உள்ளது. இன்னும் தரமாக வழங்க, மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
போல், நிர்வாகமே பிரசாதம் தயாரிக்கலாம். அதேசமயம், கோயிலில் பாராட்டப்பட
வேண்டிய அம்சங்களும் உண்டு. மலைக்கோயில் பிரகாரங்கள் "பளீச்' என்று
இருக்கிறது. குடிநீர் வசதி செய்துள்ளனர். தரமான அன்னதானம் வழங்கப்படுகிறது.
கூட்டம் அதிகரிக்கும்போது, அதற்கேற்ப அன்னதானம் வழங்க வேண்டும்.
குழந்தைகளை தாலாட்டி நேர்த்தி கடன் செலுத்தும் தங்கத்தொட்டிலுக்கு வரவேற்பு
உள்ளது. வி.ஐ.பி.,க்கள் வரும் வழியில் உள்ள இத்தொட்டிலை, துலாபாரம் அருகே
வைத்தால் அனைவரும் "தரிசிக்க' முடியும்.

பாலிதீன் கழிவுகள் தாராளம்மலை சூழ்ந்த பழநியில் பாலிதீன் பைகளுக்கு தடை
இருக்கிறதா என்பது சந்தேகமாக இருக்கிறது. அந்த அளவிற்கு பிளாஸ்டிக்
கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. கன்னியாகுமரியில் எங்கு சென்று கேட்டாலும்
பாலித்தீன் பைகள் கிடைக்காது. ஏன் பழநியில் அமல்படுத்த முடியவில்லை? மலை
அடிவாரத்தில் குடிநீர் ஆதாரமாக இருந்த வையாபுரி கண்மாயில் கால்வைக்க
முடியவில்லை. கழிவுநீர் கலக்கும் இடமாக, குப்பை கிடங்காக மாறிக்
கொண்டிருக்கிறது. இதனால் பழநியின் நிலத்தடி நீரே பாழாகும் அபாயம் உள்ளது.
இதனை தூர்வாரி தண்ணீர் தேக்க முயற்சிக்க வேண்டும்.

மலையின் பசுமைக்கு ஆபத்து:மலை கோயிலுக்கு செல்ல, ரோப் கார் பணிக்காக
இரவு, பகலாக பாறையில் பணி நடந்தது. அப்போது அதிர்வுகளால் கோயிலுக்கு
மட்டுமல்ல, நவபாஷானங்களாலான மூலவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என
எச்சரித்தனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இயற்கையாகவே நீருற்று இருக்க
வேண்டிய மலையில், செயற்கையாக தற்போது நீருற்று அமைக்க பணிகள் நடந்து
வருகின்றன. மலையில் தொடர் கட்டுமான அதிர்வுகளால், மயில்கள் வேறு
இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.
இதை தவிர்க்க, இனி மலை மீது
புதிய கட்டுமானங்களை அனுமதிக்க கூடாது. முன்பு நாம் பார்த்த பழநி இன்று
இல்லை. பச்சை பசேல் மலை மீது கோயில் இருந்த நிலை மாறி, இன்று வாடி, வதங்கி
"மொட்டையாக' காட்சி தரும் மலையில் கோயில் இருக்கிறது.
மலையை மீண்டும் பசுமையாக்க மரக்கன்றுகள் நடவேண்டும். அரிய மூலிகைள் வளர்ந்த மலை இது. மீண்டும் மூலிகை செடிகள் நட்டு பேண வேண்டும்.
மலைக்கு
யானை பாதை, படிகள் வழியாக பக்தர்கள் வந்து செல்கின்றனர். வழியில்
வயதானவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை அளிப்பதற்குரிய
வசதியும், அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளும் வசதியும் ஏற்படுத்த வேண்டும்.


ஆக்கிரமிப்பு:சன்னதி தெருவின் இருபுறமும் கடைக்காரர்கள், சில அடி தூரம்
ஆக்கிரமித்துள்ளதால், தெரு சுருங்கி நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இங்குள்ள
அரசு மியூசியத்தை தேடவேண்டியுள்ளது. இந்த ஊர் மக்களுக்கே இப்படி ஒரு
மியூசியம் உள்ளது தெரியுமா? அதையும் மீறி சென்றால், போதிய பராமரிப்பின்றி,
பரிதாபமாக இருக்கிறது. கடைக்காரர்கள் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் கடை
விரித்தால் தெரு அகலமாக இருக்கும். இதனால் பக்தர்கள் இவ்வழியில் அதிகம்
வருவார்கள். வியாபாரமும் சூடுபிடிக்கும் என்பதை கடைக்காரர்கள் உணர
வேண்டும். கிரிவல பாதையில் மலை சுற்றுச்சுவரில் போஸ்டர்களை ஒட்டி
பாழ்படுத்தியுள்ளனர். பல இடங்களில் ஆக்கிரமிப்பும் உள்ளது. தெருநாய்களின்
தொந்தரவும் அதிகம். அடிப்படை வசதி இல்லை

அதிக வருமானம் தரும் இக்கோயிலில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
கோயில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அவசியம் தேவை. இங்கு ஒரு போலீசை கூட
பார்க்க முடியவில்லை. குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே பாதுகாப்பு கருவிகள்
தூசி தட்டப்படுகின்றன. மலைக்கு நடந்து செல்லும் வழியில் மொபைல் கழிப்பறைகள்
காட்சிபொருளாக உள்ளன.
சரவண தீர்த்தம் அருகே, மொட்டை போடும் இடம் ரூ.பல
லட்சத்தில் குளிரூட்டப்பட்டது. சில மாதங்களிலேயே "ஏசி' பயன்பாடாமல்
வீணாகியுள்ளது. மொட்டை போட ரூ.10 கட்டணம் வசூலிப்பதால் கோயிலுக்கு அதிக
வருவாய் கிடைக்கிறது. திருப்பதி போன்று இங்கேயும் இலவச மொட்டை அடிக்க
நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பக்தர் பேரவை அமைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: கோயிலுக்கு
பசுமாடுகளை காணிக்கையாக செலுத்த ரூ.1500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனால் கிராமத்தில் இருந்து வருபவர்கள், அடிவாரத்தில் பசுக்களை விட்டுச்
செல்கின்றனர். இதை சிலர் பிடித்து விற்கின்றனர். இதை தவிர்க்க, கட்டணத்தை
குறைத்து, அருகில் உள்ள களிமந்தையம் பொட்டலில் மாடுகளை பராமரிக்க நிர்வாகம்
ஏற்பாடு செய்ய வேண்டும்.
பழநியில் சிறப்பு வாய்ந்த நாதஸ்வர பள்ளியின்
வளர்ச்சிக்கு நிர்வாகம் உதவவேண்டும். மூடுவிழா கண்ட வேதபாடசாலை, ஓதுவார்
பயிற்சி பள்ளிகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். தேவஸ்தான
தங்கும் விடுதிகள், சில நேரங்களில் சமூகவிரோத செயல்களுக்கு பயன்படுகின்றன.
இங்கு போதிய சுத்தம் இல்லை. அடிவாரத்திற்கு செல்லும் சன்னதி தெரு, ரோப்
கார், வின்ச்சிற்கு செல்லும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை வேறு
இடங்களுக்கு இடமாற்ற வேண்டும். புனித தீர்த்தமாக கருதப்படும் சண்முகாநதி,
இடும்பன் குளத்தை தூர்வாரவேண்டும், என்றார்.

சுற்றுலா பயணிகளை ஈர்க்க என்ன வழி?பழநியில் பக்தர்கள் மட்டுமல்ல, பள்ளி
கல்லூரியில் இருந்து மாணவர்கள் சுற்றுலா வருகின்றனர். கோயில் மட்டும்தான்
உள்ளது என்று வருபவர்கள், அருகில் உள்ள எழில் சூழ்ந்த பாலாறு பொருந்தலாறு
அணை, குதிரையாறு அணை, வரதமாநதி அணையை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த இடங்கள் மற்றும் அங்குள்ள பூங்காக்களை சீரமைக்க வேண்டும். இந்த
இடங்களுக்கு வாடகை கார் பிடித்து செல்ல அதிகபட்சம் ரூ.2000 செலவாகும்.
இதனாலேயே பலர் செல்லவில்லை. இதற்கு பதில், சுற்றுலா துறை சார்பில் மூன்று
அணைகளுக்கு குறைந்த கட்டணத்தில் பயணிகளை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யலாம்.
அங்கு சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், இயந்திரம் அல்லாத படகு சவாரி
விடலாம்.

உடனடி தேவைகள் என்ன?பிளாஸ்டிக் பை முற்றிலும் ஒழிக்கப்பட
வேண்டும்.புரோக்கர் தொல்லை கட்டுப்படுத்த வேண்டும். மலையில் மரக்கன்றுகளை
நட்டு பசுமையாக்க வேண்டும்.பஞ்சாமிர்தம் டப்பாவில் தயாரிப்பு, காலாவதி தேதி
குறிப்பிட வேண்டும்.மலை பாதையில் அவசர உதவி, முதலுதவிக்கு ஏற்பாடு செய்ய
வேண்டும். கோயில் வளாகத்தில் போலீஸ் புறக்காவல் நிலையம் தேவைகோயிலில்
இருந்து அணைகளுக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலா திட்டம்.
dinamalar
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum