TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்

2 posters

Go down

தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்  Empty தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்

Post by மாலதி Thu Aug 11, 2011 5:14 pm

எடிசன் - மறுபக்கம்


“உலகத்துக்கு என்ன தேவை என்று முதலில் கண்டு பிடிக்கிறேன். பிறகு,அந்த தேவையை பூர்த்தி செய்ய கண்டு பிடிக்கிறேன்.”

இந்த
பிரபலமான வாசகத்துக்கு சொந்தகாரர் இந்த உலகமே என்றும் மறக்காத தாமஸ் அல்வா
எடிசன். எங்களாலும், பலராலும் மின்குமிழை கண்டுபிடித்ததன் மூலம்
அறியபட்டவர். என்னமும் இந்த உலகம் இருக்கும்வரை இவரது கண்டுபிடிப்புகளும்
இவரும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், எங்களால் ஒரு
கண்டுபிடிப்பாளர் என்றும், ஒரு விஞ்ஞானி என்றும் அறியபட்ட தாமஸ் அல்வா
எடிசன்....! வாழ்க்கை வரலாறை முழுமையாக வாசித்து பார்த்த பொது, எனக்கு
தனித்து அவரை அப்படி மட்டுமே அழைக்க தோணவில்லை.
தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்  Genius%20is1302962350

எடிசன்
ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளர் மற்றும் விஞ்ஞானி என்பதை எல்லாம் தாண்டி,
எடிசன் ஒரு சிறந்த தொழில் முனைவர் மற்றும் சிறந்த தொழில் அதிபரும் கூட!!!!
வேறு பல விஞ்ஞானிகளிலில் இருந்து இவர் வேறுபடவும் எண்ணில் அடங்காத
கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கவும், அவருக்கு உதவி செய்தது இந்த விஞ்ஞான
புத்தி என்பதை விடவும், அவரது வணிக மூளையே காரணமாகும்.

எடிசனின்
முதல் கண்டுபிடிப்பு யாரும் பெரிதாக அறியாத வாக்கு பதிவு இயந்திரம். இந்த
இயந்திரம் நடைமுறைக்கு வர அமெரிக்க அரசியல்வாதிகள் அனுமதித்து இருந்தால்,
தேர்தல் நடைபெற்று முடிந்தவுடனே முடிவுகளை விரைவாக அறிவதுடன், மேலதிக பல
செலவுகளும் தவிர்க்கபடும். ஆனால், இதை எடிசன் கண்டுபிடித்து அமெரிக்க
அரசியல்வாதிகள் முன்பு காட்ட்டிய போது, “இதில் எங்களுக்கு சாதகமான மாற்றம்
தர கூடிய எதுவுமே இல்லை. எனவே, நீங்கள் வேறு எதையும் கண்டு பிடியுங்கள்
என்று சொல்லி விட்டார்கள். அப்போதுதான் எடிசனிடமிருந்த இந்த வணிக மூளை
விழித்து கொண்டது...! அப்போது அவர் சொன்ன வாசகம் தான் அவர் வாழ்நாளில்
பெரிய மாற்றத்துக்கு வழிகோலியது என்று சொல்லலாம்.

“மனித
சமூகத்துக்கு என்ன தேவையோ அதை மட்டுமே நான் கண்டுபிடிப்பேன். மாற்றியதை
நான் தொடவும் மாட்டேன்” என்று, கூறினார். தாமஸ் அல்வா எடிசன் இதற்க்கு
பிறகுதான் தன் வணிக மூளையையும் பயன்படுத்தி கண்டுபிடிப்புகளை தொடர்ந்தார்.
அதைவிடவும் சொல்ல கூடியது, எடிசன் தன் கண்டுபிடிப்புகளில் சம்பந்தபடாத
கண்டுபிடிப்பாளர்களை தட்டி கொடுத்து ஊக்குவித்ததுடன், தன்னுடன் தனது
கண்டுபிடிப்புகளுக்கு போட்டியாளர்களாக இருந்தவர்களுக்கு எதிராக செயல்படவும்
தவறவில்லை. இதற்காக அவர் பணம் உழைக்க கூடிய கண்டுபிடிப்புகளையும்
கண்டுபிடிக்க தவறவில்லை. அதற்காக அவர் கண்டுபிடித்த கண்டுபிடிபுக்களாக
குறிப்பிட்டு சொல்ல கூடியவை,

போனோகிராப் (ஒலிபதிவு செய்யும் கருவி)
மற்றும், பேசும்படத்தின் அடிப்படையில் அமைந்த இவரது சில நிமிடங்கள் ஓட
கூடிய படங்கள் இவை மூலம் எடிசன் வசூல் சக்கரவர்த்தியாக பணம் மேல் வாழும்
ஒரு விஞ்ஞானியாக இருந்தார். மனித குல தேவையை முன்னிலைபடுத்தி
கண்டுபிடிப்பை செய்வேன் என்று சொல்லிய எடிசன், பணம் உழைக்க இந்த பேசும்
படங்கள் மூலம் கவர்ச்சிபெண்களை பயன்படுத்தி படங்களை எடுத்தார் என்பது
உபரிதகவல்.
தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்  Thomasedis

தனது
கண்டுபிடிப்புகளில் தலையீடு செய்யும் கண்டுபிடிப்பாள்ர்களை அவர்களின்
வறுமையை பயன்படுத்தி அவர்களை விலைக்கு வாங்கிய எடிசன், பிற்காலங்களில்
கண்டுபிடிப்புகளில் தன் கண்டுபிடிப்புக்கு உதவகோரி அவர்களை இணைத்து தன்
கண்டுபிடிப்புகளை பூர்த்ஹ்டி செய்த பின்பு, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய
சன்மானம், பெயர் என்பவை கிடைக்க செய்யாமல் செய்த சம்பவங்கள் நிறையவே உண்டு.

அவர்
காலத்தில், ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளுக்கு வரும் அமெரிக்க
இளம் சமூகத்தின் ஹீரோவாக எடிசன் இருந்தார் என்று அப்போதைய பிரபல எழுத்தாளர்
வில்லியம் செக்ஸ்பியர் குறிப்பிடுகிறார். அவர் சொல்லும் போது, எடிசன்
அப்போதைய அமெரிக்க இளம் வர்க்கத்திடம் ஒரு விஞ்ஞானியாக பார்க்கபட்டத்தை
விட, ஒரு சிறந்த தொழில் முனைவோராக பார்க்கபட்டார். அமெரிக்க இலஞ்சர்களுடன்,
உரையாடும் போது, அவர்கள் எடிசனை விட சிறந்த தொழில் முனைவர் இந்த உலகத்தில்
இல்லை என்ற மனப்பாங்குடன் இருந்ததாக குறிப்பிடுகிறார்.

ஆனால், எந்த
தருணத்திலும் தாமஸ் அல்வா எடிசன் தான் ஒரு தொழில் முனைவோனாகவோ அல்லது
தொழில் அதிபராகவோ வரலாறுகள் காட்டி விட கூடாது என்பதில் முனைப்பாக
செயல்பட்டார். மின்குமிழை கண்டறிந்த எடிசன் மின்சாரம் பற்றி முழுமையாக
அறிந்து இருக்கவில்லை. ஆனால், அமெரிக்கா முழுவதும் மின் வழங்க கூடிய
மின்சார உற்பத்தி நிலையத்தை கொண்டு நடாத்தினார். அதுவும் மிகவும் தந்திரமாக
மின்னை கண்டுபிடித்ததவர்களால் கூட செய்ய முடியாதபடி இதை செய்தார்.
என்னதான் மின்சாரம் இருந்தாலும் தான் கண்டுபிடித்த மின்குமிழ் மூலம்தான்
அந்த மின்சாரம் பயன்படுகிறது என்று அமெரிக்க அரசியல் சபையை நம்பவைத்து,
அதன் மூலம், மின் நிலைய அனுமதியை பெற்று சலுகை அடிப்படையில் கட்டணங்களை
அறவிட்டு மக்களையும் தன் பக்கம் சேர்த்து கொண்டார்.

விஞ்ஞானி எடிசன்
தன் வணிக மூளையின் உச்சத்தை பயன்படுத்தியது, தான் கண்டுபிடித்த சீமேந்து
கலவையுடன் கூடிய கான்கிரீட் கட்டுமானத்தில்தான்!!! அப்போது இந்த தொழிலில்
அவருக்கு நிறையவே போட்டியாளர்கள் இருந்தார்கள். எடிசன் வேறுமனே இதை
கண்டுபிடித்ததுடன், நிறுத்திவிடவில்லை. அவள்ர் இந்த தொழிலில் ஈடுபட்ட
நபர்களை வெற்றி கொள்ள நினைத்தார். அதற்க்கு மக்களின் வறுமையை கையில்
எடுத்தார். அதாவது, வறுமையில் வாடும் மக்களுக்கு குறைந்த செலவில் தான்
கண்டுபிடித்த கலவையை பயன்படுத்தி வீடுகளை குறைந்த செலவில் கட்டி தருவதாக
சொல்லி கட்டி குடுத்ததுடன், பெரிய பெரிய கட்டுமான நிறுவகங்களுக்கு தான்
இப்படி கட்டிய வீடுகளை அவர்களை கொண்டே வழங்க சொல்லி இருந்தார். இதனால்,
பெரிய பெரிய கட்டுமான நிறுவகங்கள் தங்களை விளம்பரபடுத்தி கொள்ள
சந்தர்ப்பமாக அமைந்ததுடன், தவிர்க்க முடியாது எடிசனின் சீமேந்து கலவையை
பயன்படுத்த வேண்டியும் வந்தது. இதன் மூலம், இலகுவாக அவர் போட்டியாளர்களை
ஓரம் கட்டினார்.

எடிசன் மட்டுமல்ல இன்றைய காலத்தில் வாழும் பல
பிரபலங்கள் பில்கேட்ஸ் வரை தங்களை பிரபல்யம் செய்து கொள்ள இந்த வணிக
தந்திரங்களை பயன்படுத்தி கொள்ளுகிறார்கள். ஆனால், யாருமே தங்களை
வணிகவியலாளர் என்று சொல்லி கொள்ள ஆசைபடுவது இல்லை!!! இது சாதாரண மனித
இயல்பு!!

எப்போதுமே இந்த வணிகம் என்பது சரியான முறையில்
பயன்படுத்தபட்டதாக வரலாறுகள் இல்லை. போட்டியாளனாக இருக்கும் ஒருவனை
வீழ்த்தவும், தங்களை சரியாக பலடுத்தி கொள்ளவும், ஒருவனை அடக்கி ஆளவும்
வரலாறுகளில் வணிகம் சரியாக பயன்பட்டு இருக்கிறது என்று மட்டும் கூற
முடியும். அதற்க்கு தாமஸ் அல்வா எடிசன் மட்டும் விதிவிலக்காக இருக்க
முடியுமா???


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்  Empty Re: தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்

Post by மாலதி Thu Aug 11, 2011 5:14 pm

mதாமஸ் அல்வா எடிசன் - தோல்விகளில் வெற்றி கண்டவர்

தாமஸ் அல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் திகதி பிறந்தார் .
தாமஸ் அல்வா எடிசன் பற்றி அடிப்படை அறிவு அனைவரிடமும் இருக்கும்.மேலும் கொஞ்சம் பார்ப்போம் .

எடிசன்
11 வயதாக இருக்கும் போதே விளையாட்டாக தனது தந்தையின் நிலத்தில்
காய்கறிகளை பயிரிட்டு வந்தார் .இதனால் வருடமொன்றுக்கு 300 டொலர்கள்
கிடைத்தது .அதில் அரைவாசியை தனது தாயிடம் கொடுத்துவிட்டு மீதியை தனது
ஆய்வுகூடத்திற்கு செலவிட்டார் . காய்கறி வியாபாரம் பத்திரிக்கை வியாபாரம்
போன்றவற்றை புகையிரதத்திலேயே செய்தார் .

அவர் படிப்பறிவில் மந்தமாக இருந்தாலும் சிறு வயதிலிருந்தே ஏன் எதற்கு என
கேள்விகள் கேட்க்க பழகியவர் .பாடசாலைக்கு பின்னர் போகவில்லை
.முயற்ச்சிக்கும் ஊக்கத்திற்கும் சான்றாக விளங்கும் எடிசன் கோழி எப்படி
குஞ்சு பொரிக்கிறது என தானே இருந்து பார்த்த கதை அனைவருக்கும் தெரியும் .

தனது
சொந்த பத்திரிகையையும் புகையிரதத்திலேயே அச்சு அடித்து வெளியிட்டார்
.அச்சடிக்கும் இயந்திரத்தையும் ரயில் பெட்டியில் வைக்க அனுமதி பெற்றார் .
ஒரு வாரத்துக்கு 400 பிரதிகள் விற்றன . Grand trunk heral என்பதே அந்த வாரப்பத்திரிகை பெயர் .
தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்  Taedison


பத்திரிகையின் ஆசிரியர் நிருபர் ,விற்ப்பவர் எல்லாமே எடிசன் தான் . பொதி
கொண்டு
செல்லும் பெட்டியிலேயே அவர் தனது பரிசோதனைகள் செய்தார் . ஒரு நாள் அப்படி
செய்துகொண்டிருக்கும் போது பொசுப்ப்ராஸ் துண்டொன்றை பெட்டியின் அடியில்
போட்டுவிட்டார் .அதனால் ரயில் பெட்டி தீப்பற்றிக்கொண்டது .

ரயில்
சாரதி தீயை அனைத்து விட்டு அச்சு இயந்திரம் ,இரசாயன பொருட்களை தூக்கி
வெளியில் வீசிவிட்டு எடிசன் காதில் பலமாக ஒரு அடியும் விட்டான் . இது
எடிசனை ஓரளவுக்கு செவிடாக்கியது .

பின்னர் என்ன ! பத்திரிக்கை தொழிலையும் விட்டுவிட்டு மின்னியலில் ஆர்வம் செலுத்தினார் .

புகையிரத நிலையத்தில் தந்தித்தொடர்பு
எவ்வாறு இயங்குகிறது என்று அறிவதில் எடிசனுக்கு ஆர்வம் ஏற்ப்பட்டது .ஆனால்
அப்போது அதில் வேளை செய்வது கனவாக இருந்தது .அதிர்ஷ்டவசமாக இந்த
தந்திதொடர்பிலும் வேலை கிடைத்தது . ஒருநாள் ஸ்டேசன் மாஸ்டரின் மகனை
விபத்திலிருந்து காப்பாற்றியதர்க்காக இந்த வேலையை ஸ்டேசன் மாஸ்டர் வாங்கி கொடுதார் .

பின்னர் தனக்கென ஒரு ஆய்வுகூடம் அமைத்து அதில் தந்திக்கருவிகளை செய்தார் .ஒரே கம்பியில் திசைக்கு இரண்டாக நான்கு செய்திகளை அனுப்பக்கூடிய தந்திக்கருவியை கண்டுபிடித்தார் .தந்தித்தொடர்பில் முக்கியமான கண்டுபிடிப்பு இதுவாகும் .

கிரகம் பெல் கண்டுபிடித்த தொலைபேசிக்கு காபன் ஒலிவாங்கியை அமைத்து நல்ல தொலைத்தொடர்பை உண்டாக்கினார் . அதில் அவரை மேலும் சீர்திருத்தங்களை செய்ய சொல்லி வெஸ்டர்ன் யூனியன் என்ற நிறுவனம் கேட்டுக்கொண்டது .

முக்கியமாக எடிசன் மிகவும் மறதிக்காரரும் கூட ..வரலாறுகளில் பதியப்பட்டவை
1871
ஆம் ஆண்டு மேரி ஸ்டில்வெல் ஐ திருமணம் செய்தார் .திருமணமான முதல் நாள்
மாலையே மனைவியை பிறகு சந்திப்பதாக கூறிவிட்டு ஆய்வுகூடத்திற்கு வந்து
விட்டார் .அவர் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி செய்துகொண்டு
இருந்ததால் வீடு செல்ல மறந்துவிட்டார் .நள்ளிரவில் வந்து ஒருவர்
நினைவுபடுத்தவே அவருக்கு நினைவு வந்தது .

ஒருமுறை எடிசன் வரிப்பணம் கட்ட கியூவில் நின்ற போது அவரது முறை வந்தது
.கிளார்க் உங்கள் பெயர் என்ன என்று கேட்க்க எடிசன் முழித்தார் .அவருக்கு
பின்னால் நின்றவர் நீங்கள் எடிசன் அல்லவா என்று கேட்டவுடனே அவருக்கு நினைவு வந்தது .

தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்  History060406edison



பன்னல் பதிகருவியை கண்டுபிடித்தது எடிசனே .இந்த போனோகிராப் தான் பின்னர் கிராமொபோனாக மாறியது .அதில் பதிவான முதல் வரிகள்" mary had a little lamb " இது அவரின் குரலிலேயே பதிவானது .

இதன்
பின்னர் தான் ஒளி தரக்கூடிய மின்குமிழ் உருவாக்கும் வேலையில்
இறங்கினார் .பல ஆய்வுகளின் பின்னர் தான் தங்குதன் இழை குமிழினுள் ஒளிரும்
என கண்டுபிடித்தார் . இதற்க்கு அவரின் நண்பர்கள் 1600 பொருட்களை
பயன்படுத்தி நேரத்தை வீணாக்கிவிட்டோமே ,தங்குதனை முதலே பயன்படுத்தி
இருக்கலாமே என்றார்களாம் . அதற்க்கு எடிசன் நான் நேரத்தை வீணாக்கவில்லை அந்த 1600 பொருட்களும் மின்குமிளில் ஒளிரமாட்டா என கண்டு பிடித்துள்ளேன் என்றாராம் .

1882 செப்டம்பர் நியுயோர்க் நகருக்கு மின்குமிழ் பொருத்த முனைந்தார் எடிசன் .Edison electric light company என்ற கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது . பேர்ல் தெருவில் இருந்த தலைமையகத்தில் இருந்து தான் நகரெங்கும் முதலில் மின் ஓடத்தொடங்கியது .
தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்  ThomasEdison


எடிசன்
கண்டுபிடித்ததில் சிலது:முக்கியமானவை என்று சொல்லலாம் : சினிமா படம்
எடுக்கும் கமெரா ,மின் டைனமோ ,மின் எஞ்சின் , ரயில்வே சமிக்யை
தொகுதி,சேமிப்பு களம் போன்றவற்றை குறிப்பிடலாம் .

இந்த லிஸ்டில் அவர் கண்டுபிடித்த பொருட்கள் 1093 . மிக நீண்ட லிஸ்ட் . நேரமிருந்தால் பாருங்கள் . இதை அழுத்துக

இவரது
இந்த முயற்ச்சியாலே வாழ்க்கை முறைகள் பெருகி மின்சக்தியின் பாவனை
முக்கியத்துவம் தெரிந்தது .புதிய வாழ்க்கை முறை அமையும் விதத்தில்
மின்சாரத்தை மனித வாழ்க்கையோடு சேர்த்தவர் எடிசன் தான் ....


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்  Empty Re: தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்

Post by மாலதி Thu Aug 11, 2011 5:15 pm

எடிசன் - வெற்றி ரகசியங்கள்






தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்  Imagesg




கண்டுபிடிப்புகளின் கதாநாயகனாக திகழ்ந்த தாமஸ் ஆல்வா எடிசனின் வெற்றி
ரகசியம் என்பது அவர் பின்பற்றிய கொள்கைகளில் தான் உள்ளது. அவர்
விடாப்பிடியாக பின்பற்றிய கொள்கைகளில் சில... இதோ உங்களுக்காக!









* நான் ஒன்றை அடைய நினைத்தால் எத்தனை
சோதனைகள் வந்தாலும் சளைக்க மாட்டேன். முயல்வேன்! முயல்வேன்! அதை அடையும்
வரை முயல்வேன்.


தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்  Imagesbhg





*
எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும் போது வெற்றிக்கு எவ்வளவு அருகில்
இருக்கிறோம் என்று பலருக்குத் தெரிவதில்லை.எனவே தோல்வியைத் தழுவுகிறார்கள்.




* வாய்ப்பு என்பது உழைப்பென்னும் வேடமிட்டு வருவதால் பலர் அதைத் தவற விடுகிறார்கள்
தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்  Imageshf





*
ஒரு கருத்தைப் பிடித்துக்கொண்டு அதை வெற்றிகரமாக அடைபவனை நான் மதிக்கிறேன்.
ஆனால் ஆயிரம் சிந்தனைகளை வைத்துக்கொண்டு ஏதும் செய்யாதவனை நான்
மதிப்பதில்லை.



* தோல்வியா? யார் சொன்னது, ஆயிரக்கணக்கான
பொருள்கள் பயன்படமாட்டா எனக் கண்டிருக்கிறேனே! அது தான் வெற்றி.




* வெற்றிக்கு அடிப்படை, "கொண்டது விடாமை"


தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்  Imagesdr


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்  Empty Re: தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்

Post by மாலதி Thu Aug 11, 2011 5:15 pm

mஎடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!!
தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்  Electric_chair
தாமஸ்
ஆல்வா எடிசன் புகழ் பெற்ற விஞ்ஞானி என அறிவோம். அவர் சிறந்த வணிகர் என்பது
பலருக்கும் தெரியாது. வணிகராக எடிசன் செய்த சில கோல்மால்கள் (அல்லது
ராஜதந்திரம்) சிரிப்பை வரவழைப்பவை. அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு.

எடிசன்
மின்சாரத்தை மேம்படுத்தி டிசி (Direct Current) என்ற வகை மின்சாரத்தை
உருவாக்கி அதை சந்தைப்படுத்த முயன்றுகொண்டிருந்தார். எடிசனுக்கு போட்டியாக
வெஸ்டிங்ஹவுஸ் என்ற விஞ்ஞானி மற்றும் வணிகர் ஏசி (Alternate Current) என்ற
மின்சாரத்தை உருவாக்கினார். தனது லாபில் இருவகை மின்சாரத்தையும் சோதித்த
எடிசனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வெஸ்டிங்ஹவுசின் மின்சாரம் எடிசனின்
மின்சாரத்தை விட சக்தி வாய்ந்தது என்பதே முடிவு. அந்த மின்சாரத்துக்கு
கெட்ட பெயரை ஏற்படுத்த அதையே பயன்படுத்த முடிவு செய்தார் எடிசன்.


பத்திரிக்கையாளரை
கூப்பிட்டு அவர்கள் முன் ஒரு இரும்பு நாற்காலியை போட்டார் எடிசன். அதில்
ஒரு பூனையை உட்கார வைத்து கட்டினார். அப்புறம் அந்த நாற்காலியில் தனது டிசி
மின்சாரத்தை பாய்ச்சினார். பூனை 10-20 நிமிடம் துடிதுடித்து செத்தது.
அப்புறம் மீண்டும் ஒரு பூனையை உட்கார வைத்து வெஸ்டிங்ஹவுஸின் ஏசி
மின்சாரத்தை பாய்ச்சினார். பூனை இரண்டு வினாடிகளில் செத்துவிட்டது.


வெஸ்டிங்ஹவுஸ்
"பார்த்தீர்களா?
எனது மின்சாரம் பட்டால் உடனடியாக சாகமாட்டார்கள். பிழைத்துவிடுவார்கள்.
ஆனால் வெஸ்டிங்ஹவுஸின் மின்சாரம் உடலில் பட்டால் உடனடி மரணம்தான். எனவே
எனது மின்சாரமே பாதுகாப்பானது" என பிரச்சாரம் செய்தார் எடிசன். செய்தி
காட்டுத்தீ போல் பரவியது.
அப்புறம் எடிசனின் மூளையில் இன்னொரு ஐடியா
வந்தது. அப்போதெல்லாம் கொடும் குற்றவாளிகளை கில்லட்டின் வைத்து தலையை
வெட்டிக்கொன்று கொண்டிருந்தார்கள். அதற்கு பதில், தான் தயாரித்த மின்சார
நாற்காலியில் வெஸ்டிங்ஹவுசின் மின்சாரத்தை ஏற்றி அவர்களை கொல்லலாம் என
ஐடியா கொடுத்தார் எடிசன். அத‌ற்கேற்றாற்போல் மின்சார நாற்காலிகளை தயாரித்து
அரசிடம் விற்றும் விட்டார். இதனால் வெஸ்டிங்ஹவுசின் ஏசி மின்சாரத்துக்கு
அப்போதெல்லாம் பயங்கர கெட்ட பெயர் உண்டாகிவிட்டது. மின்சார நாற்காலியில்
உட்கார வைத்து கொல்வதை அப்போதெல்லாம் Westinghoused என அழைப்பார்கள்.


ஆனால்
மின்சார நாற்காலியில் மரணம் என்பது வலியற்ற மரணம் கிடையாது. முதலில் 2000
வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்தி அதிர்ச்சி கொடுப்பார்கள். சுயநினைவு
தப்பியவுடன் 5000 வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்தி உடலின் உள்பாகங்களை
எரிப்பார்கள். அப்போது கண்விழி வெளியே வந்து விழுவதெல்லாம் உண்டு. அப்போது
சுயநினைவு இருக்கிறதா இல்லையா என்பது அந்த நாற்காலியில்
உட்கார்ந்தவர்களுக்குதான் தெரியும்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்  Empty Re: தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்

Post by ஜனனி Fri Aug 03, 2012 3:50 pm

தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்  336442 தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்  254248
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்  Empty Re: தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று - பிப்.11 : தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தநாளையொட்டிய பகிர்வு:
» தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தின சிறப்பு பகிர்வு
» அக்டோபர் 18: கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம் இன்று (1931)
» விஞ்ஞானிகளின் தந்தை என போற்றப்படும் தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை குறிப்பு
» கிராமபோனின் காப்புரிமையை தாமஸ் ஆல்வா எடிசன் பெற்ற தினம் (பிப்.19, 1878)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum