Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கல்விக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவரை இரு வாரங்களுக்குள் நியமிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்
Page 1 of 1

சென்னை, ஆக. 5: தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை
முடிவு செய்யும் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவுக்கான தலைவரை இரண்டு வாரங்களுக்குள்
நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஜான் தேவே மெட்ரிகுலேஷன் பள்ளியில்
பயிலும் ஜெயஸ்ரீனிவாசன் என்ற மாணவரின் தந்தை எம். சேஷாசலம் சென்னை உயர்
நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தைத் தவிர
நன்கொடை, சேர்க்கைக் கட்டணம், கட்டட நிதி என்று பல்வேறு பெயர்களில் மாணவர்கள்
மற்றும் பெற்றோர்களிடம் இருந்து மிக அதிகப்படியான கட்டணத்தை வசூலித்து வருகின்றன.
பெற்றோர்கள் கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் மற்றும் பல்வேறு வழிகளில்
சிரமப்பட்டு அந்தக் கட்டணங்களை செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறு பள்ளிகள் வசூலிக்கும் இந்த நியாயமற்ற கட்டண வசூலை ஒழுங்குபடுத்த சட்ட
ரீதியான எந்த அமைப்பும் இல்லாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், தனியார் பள்ளிகள்
வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் தமிழ்நாடு கல்விக் கட்டண
வசூல் ஒழுங்குமுறைச் சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு இயற்றப்பட்டது.
கடந்த 7.12.2009 அன்று நடைமுறைக்கு வந்த அந்த சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள்
வசூலிக்க வேண்டிய கட்டணத்தை முடிவு செய்வதற்காக கல்வி கட்டண நிர்ணயக் குழு
அமைக்கப்பட்டது. நீதிபதி கே. கோவிந்தராஜன் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள எல்லா தனியார் பள்ளிகள் பற்றிய விவரங்களையும் சேகரித்து,
ஒவ்வொரு பள்ளியும் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை அந்தக் குழு நிர்ணயம் செய்தது.
இவ்வாறு 10 ஆயிரத்து 233 பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து 7.5.2010 அன்று
நீதிபதி கோவிந்தராஜன் குழு உத்தரவிட்டது. இந்த கட்டண நிர்ணயத்தை 4 ஆயிரத்து 534
பள்ளிகள் ஏற்றுக் கொண்டன. 6,400 பள்ளிகள் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தன.
இதற்கிடையே நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை 8.10.2010 அன்று ராஜிநாமா
செய்தார். இதனைத் தொடர்ந்து கட்டண நிர்ணயக் குழுவின் அடுத்த தலைவராக நீதிபதி கே.
ரவிராஜ பாண்டியன் 30.10.2010 அன்று நியமிக்கப்பட்டார். மேல் முறையீடு செய்த பள்ளிகள்
குறித்த விவரங்களை ஆராய்ந்த அவர், அந்தப் பள்ளிகளுக்கான கட்டணத்தை மறு நிர்ணயம்
செய்து 13.6.2011 அன்று அறிவித்தார். அதன் பிறகு அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
அதன் பின்னர் காலியான கட்டண நிர்ணயக் குழு தலைவர் பதவி நிரப்பப்படவில்லை.
குழுவின் உறுப்பினர் - செயலர் பதவியிடமும் காலியாக உள்ளது.
இந்நிலையில், எனது மகன் படிக்கும் பள்ளி உள்பட பல தனியார் பள்ளிகள் கல்விக்
கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்காமல், மிக அதிகக்
கட்டணங்களை வசூலித்து வருகின்றன.
இது தொடர்பான புகாரை அளிக்க நான் கட்டண நிர்ணயக் குழு அலுவலகத்துக்கு சென்றேன்.
ஆனால், குழுவின் தலைவர், உறுப்பினர் - செயலர் உள்ளிட்ட பதவிகள் காலியாக உள்ளதால்,
அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து என்னால் புகார் அளிக்க முடியவில்லை.
எனவே, கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் மற்றும் பிற பதவியிடங்களை
உடனடியாக நிரப்புமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில்
வலியுறுத்தப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக்
கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், தனியார்
பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பது மட்டுமே குழுவின் பணி அல்ல. குழு நிர்ணயித்த
கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் தொடர்பாக புகார்கள் வந்தால்,
அந்தப் புகார்களை விசாரித்து தவறு செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு
அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டியதும் குழுவின் முக்கியப் பணியாகும்.
ஆனால், இப்போது குழுவின் தலைவர் பதவியிடம் காலியாக இருப்பதால், அதிகக் கட்டணம்
வசூலிக்கும் பள்ளிகள் மீதான புகார்களை தெரிவிக்க இயலாமல் பெற்றோர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஏ. நவநீதகிருஷ்ணன், கட்டண
நிர்ணயக் குழுவுக்கான புதிய தலைவரை நியமிக்கும் நடவடிக்கை அரசின் பரிசீலினையில்
உள்ளதாகவும், விரைவில் குழுவின் தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவரை
இரண்டு வாரங்களுக்குள் நியமித்து, அது பற்றிய விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல்
செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டது.
thanks:dinamanai

piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் நீதிபதி ரவிராஜபாண்டியன் ராஜிநாமா ?
» நித்தியானந்தாவிற்கு தர்ம அடி கொடுத்தது சென்னை உயர் நீதிமன்றம்
» இலங்கை அகதி மாணவி நந்தினிக்கு மருத்துவ இடம் வழங்க பரிசீலிக்க வேண்டும்-சென்னை உயர் நீதிமன்றம்
» வீரபாண்டி ஆறுமுகம் மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
» கல்விக் கொள்ளைக்கு சவுக்கடி கொடுத்த கட்டண நிர்ணயம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum