Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
புனேயில் குண்டுவெடிப்பு : 9 பேர் பலி : 50க்கும் மேற்பட்டோர் காயம்
Page 1 of 1

புனே : புனேயின் கோரேகான் பூங்கா பகுதியில்
உள்ள பிரபல ஜெர்மன் பேக்கரியில் குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் 9 பேர்
பலியாயினர்; 53 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்களில் 2 பேர் வெளிநாட்டவர்
என்று தெரிய வந்துள்ளது. பேக்கரியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை பேக்கரி
ஊழியர் ஒருவர் திறநது பார்க்க முயன்றபோது அதில் இருந்த குண்டு வெடித்தது.
இது பயங்கரவாத தாக்குதல் என மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.
பாட்டீல் தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம் புனேயின் கோரேகான் பகுதியில்
உள்ள பிரபல ஜெர்மன் பேக்கரியில், நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில்
திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 8 பேர்
பலியாகியுள்ளனர். வெளிநாட்டினர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து
சசூன், ஜஹாங்கிர் மற்றும் உத்ராணி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் வெளிநாட்டவர்களும் இருக்கலாம் என
கருதப்படுகிறது. எனினும் உடல்கள் அடையாளம் காணப்பட்ட பின்னே, இதுகுறித்த
உறுதியான தகவல் தெரியும்.
புனேயின்
கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஓஷோ ஆசிரமம் அருகில் ஜெர்மன் பேக்கரி
உள்ளது. மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும்
அமெரிக்கரான டேவிட் ஹெட்லி, இந்தியா வந்திருந்த போது இந்த ஆசிரமத்தில்
தங்கியிருந்ததாக போலீசார் கூறினர். இந்நிலையில், குண்டுவெடிப்பு நிகழ்ந்த
இடத்தை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் நேரில்
பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், இது சிலிண்டர்
வெடிவிபத்து அல்ல என்றும், பயங்கரவாத தாக்குதல் தான் என்றும்
தெரிவித்தார். புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரி, வெளிநாட்டினர் அதிகம் வந்து
செல்லும் இடம் என்பதால், தாக்குதலுக்கு இந்த இடத்தை பயங்கரவாதிகள்
தேர்ந்தெடுத்திருக்கலாம் என கூறினார். இதே கருத்தை மத்திய
பாதுகாப்புத்துறை செயலர் ஜி.கே. பிள்ளையும் கூறியுள்ளார். மிகவும் கவனமாக
இருக்கும் படி மக்களை மகாராஷ்டிர அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சி.பி.ஐ.,
பாரன்சிக் அமைப்பு, மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு படையினர் மற்றும்
தேசிய புலனாய்வு அமைப்பினர் புனே விரைந்துள்ளனர்.
கவலைப்பட தேவையில்லை:
வெடிவிபத்து குறித்து மகா., முதல்வர் அசோக் சவான் கூறுகையில், பாதுகாப்பு
ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளோம். எனவே
இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை என தெரிவித்தார். முதற்கட்ட சோதனைகள்
நடந்து வருவதாகவும், ஆய்விற்குப்பின்னே இது எவ்வகையான வெடிவிபத்து என்பது
குறித்து தெரியவரும் என்றும் தெரிவித்தார்.
லக்ஷர்-இ-தொய்பாவால் நோட்டமிடப்பட்ட பேக்கரி :
புனேயில் ஒஷோ ஆஸ்ரமம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்த பேக்கரி லக்ஷர் இ
தொய்பாவால் நோட்டமிடப்பட்ட விபரம் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம்
புனேவில் ஒஷோ ஆஸ்ரமம் அருகேயுள்ள ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடிப்பில்
பலியான 12 பேரில் ஐந்து பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது. இதில் ஒருவர்
வெளிநாட்டவர். ஆஸ்ரமத் திற்கு வரும் வெளிநாட்டவர்கள் விரும்பி இந்த
பேக்கரிக்கு வருவது வழக்கம். இதனால் இந்த பேக்கரியை லக்ஷர் இ தொய்பா
இயக்கத்தைச் சேர்ந்தவரும், பாகிஸ் தானை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவைச்
சேர்ந்த டேவிட் கோல் மென் ஹெட்லி என்பவர் நோட்டமிட்ட விபரம்
தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். விரைவில் இந்தியா, பாக்.,
இடையே பேச்சுவார்த்தை நடப்பதை கெடுக்கும் வகையிலும், வெளிநாட்டவர்கள்
இந்தியா வருவதற்கு பயம் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த குண்டுவெடிப்பு
நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.பேக்கரியில் ஒரு
மூலையில் வைக்கப்பட்டிருந்த பார்சலை, வெயிட்டர் ஒருவர் திறந்துபார்த்த
போது குண்டுவெடித்ததாக பேக்கரி ஊழியர்கள் தெரிவித்தனர்.
சிதம்பரம், சோனியா கண்டனம் :
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர்
பலியாயினர். 50க்கும் மேற்ப்டடோர் பலியாயினர். இது பயங்கரவாத தாக்குதலாக
இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த
சம்பவத்திற்கு உள்துறை அமைச்சர் சிதம்பரம், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா
கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து விளக்க வருமாறு
முதல்வர் அசோக் சவானுக்கு சோனியா அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில்
சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: இந்த
சம்பவம் கண்டனத்திற்குரியது என்றும், இதுகுறித்த விபரங்கள்
சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இறுதியில் தான் இது பயங்கரவாதிகளின் செயலா,
இல்லையா என்று கூற முடியும் என்றும், இந்தியாவில் வாழும் வெளிநாட்டுப்
பயணிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம்
இந்தியா மீது அயல்நாடுகள் வைத்திருக்கும் மதிப்பை சீர்குலைக்கப்பதற்காகவே
இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், சம்பவ இடத்தில் பயங்கரவாத
எதிர்ப்புப் படையினர், போர்ஸ் ஒன் உள்ளிட்ட படையினர் முகாமிட்டுள்ளதாகவும்
அவர் தெரிவித்தார். இந்தியா எந்தவகை தாக்குதல்களையும் திறமை பெற்றுள்ளது
என்று அவர் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பு
நிகழ்ந்த ஜெர்மன் பேக்கரியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
இஸ்ரேல் மையம். இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள தகவலில்
கூறியுள்ளதாவது : இந்த குண்டுவெடிப்பில் இஸ்ரேல் நாட்டவர்கள்
பாதிக்கப்படவில்லை என்றும், யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளத
ரூ. 1 லட்சம் நிவாரண உதவி:
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் நிகழ்ந்த
குண்டுவெடிப்பில் 9 பேர் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர்
படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட முதல்வர் அசோக் சவான்
கூறியதாவது: குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1
லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அவர்
தெரிவித்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு
கடிதம் அனுப்பியுள்ளது. மாநில அரசுகள், பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ள
வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சிதம்பரம் விளக்கம் :
குண்டுவெடிப்பு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த உள்த்துறை
அமைச்சர் சிதம்பரம் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அப்போது
அவர் கூறியதாவது : இந்திய உளவுத்துறையின் தோல்வியாக புனே குண்டுவெடிப்பை
கருத முடியாது; குண்டுவெடிப்பு குறித்து பயங்கரவாத ஒழிப்பு குழு அமைத்து
விசாரணை நடத்தப்படும்; விசாரணை முடிவில் குண்டுவெடிப்பு மற்றும்
பாதுகாப்பு குறைபாடு குறித்த காரணங்கள் தெரியவரும்; ராணுவத்தில் இருந்து
தடயவியல் நிபுணர்கள் புனே விரைந்துள்ளனர்; எந்த ஒரு குறிப்பிட்ட
நாட்டினரையும் குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை; பயங்கரவாதி
ஹெட்லி புனேயில் சென்று வந்த இடங்களுக்கு தகுந்த பாதுகாப்பு
அளிக்கப்படும். இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» புனேயில் மனநலம் பாதித்த டிரைவரால் பயங்கரம் பஸ்சை தாறுமாறாக ஓட்டியதில் 9 பேர் பலி : 30 பேர் காயம்; 40 வாகனங்கள் சேதம்
» தாய்லாந்து குண்டுவெடிப்பு : 10 பேர் பலி ; 60 பேர் காயம்
» அமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு:பாஸ்டனில் 3 பேர் பலி:141 காயம்
» தாய்லாந்து: 3 இடங்களில் குண்டுவெடிப்பு: 5 பேர் காயம்: இஸ்ரேலியரை குறி வைத்து ஈரானியர்கள் சதி ?
» பஞ்சாப்பில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு: 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum