Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆட்சி மாறும், காட்சி மாறாது!
Page 1 of 1
ஆட்சி மாறும், காட்சி மாறாது!
கர்நாடக
முதல்வர் எடியூரப்பா தனது பதவி விலகல் கடிதத்தை ஒருவாறாகக்
கொடுத்துவிட்டார் என்பதால் பாரதீய ஜனதா கட்சிக்குக் கிடைத்திருக்கும்
புத்துணர்வும், நிம்மதிப் பெருமூச்சும் நிச்சயமாக நிரந்தரமானதல்ல. நாடாளுமன்ற
மழைக்காலக் கூட்டத் தொடரில் சங்கடமில்லாமல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
மீது கேள்விக்கணைகள் தொடுக்க இது போதுமானது என்றாலும், அடுத்த மூன்று
மாதங்களில் இதேபோன்ற வேறொரு சிக்கலை எதிர்கொள்ளவே வேண்டியிருக்கும். காரணம்
- இரும்புத்தாது! இந்தப் பிரச்னை இரட்டைக் குழல் துப்பாக்கி என்றால், ஒரு
குழல் எடியூரப்பா, மற்றொரு குழல் ரெட்டி சகோதரர்கள். காந்தம்
இரும்புத் தாதுக்களைத் தன்னிடத்தில் இழுக்கும் வல்லமை எந்த அளவுக்கு
அறிவியல் உண்மையோ, அந்த அளவுக்கு கர்நாடக அரசியல்வாதிகளை இரும்புத் தாது
ஈர்க்கின்றது என்பது அனுபவ உண்மை. இதில் கர்நாடகத்தை ஆள்வது காங்கிரஸô
மதச்சார்பற்ற ஜனதா தளமா அல்லது பாரதீய ஜனதா கட்சியா என்ற பாகுபாடெல்லாம்
கிடையாது. ஏனென்றால், பெல்லாரி மாவட்டத்தில் மட்டுமே பல ஆயிரம் கோடி
ரூபாய்க்கான இரும்புத் தாது - கனிமவளம் காடுகளின் கீழே உள்ளது. இரும்புத்
தாது வெட்டியெடுக்கும் உரிமை யாருக்கு அளிக்கப்படுகிறது என்பதும், அந்த
நபர் அரசியல்கட்சியைச் சார்ந்தவரா அல்லது வெறும் தொழிலதிபரா என்பதைப்
பொருத்தும்தான் கர்நாடகத்தில் அரசியல் மோதல்கள் நடைபெற்று வருகின்றன.பெல்லாரி
மாவட்டத்தில் சுமார் 10,868 ஹெக்டேர் நிலப்பரப்பில் நடைபெற்று வந்த
இரும்புத் தாது வெட்டியெடுக்கும் சுரங்கப் பணிகளை நிறுத்தி வைக்க உச்ச
நீதிமன்றம் ஜூலை 29-ம் தேதி உத்தரவிட்டது. ஆனாலும், அடுத்தநாளே 49
லாரிகளில் இரும்புத் தாது கொண்டுசெல்லப்பட்டபோது பறிமுதல் செய்யப்படுகிறது.
ஜூலை 30-ம் தேதி வழங்கப்பட்ட சரக்கு கொண்டுசெல்லும் அனுமதிச் சீட்டை லாரி
ஒட்டுநர்கள் காட்டுகிறார்கள். நீதிமன்றம் 29-ம் தேதியே பணிகளை
நிறுத்திவிடச் சொல்லிவிட்ட பின்பு, 30-ம் தேதி எப்படி சரக்கு ரசீது வழங்க
முடியும் என்று ஆட்சியர் பறிமுதல் செய்கிறார்.வேறு அதிகாரிகளாக
இருந்தால் இந்த 49 லாரிகளும் உரிய, முறையான ரசீதுகளுடன் போக வேண்டிய
இடத்துக்குப் போயிருக்கும் என்பது நிச்சயம். சில நேர்மையான அதிகாரிகளும்கூட
இந்திய அரசுப் பணியில் இருக்கிறார்கள் என்று வேண்டுமானால் மகிழ்ச்சி
அடையலாம்.""பறிமுதல் செய்யப்பட்டு, துறைமுகப் பகுதியிலேயே கொட்டி
வைக்கப்பட்ட பல ஆயிரம் டன் இரும்புத் தாது, இப்போது இல்லை. அவை அரசுக்குத்
தெரியாமல் அல்லது தெரிந்தும் கண்டுகொள்ளாத நிலையில், ஏற்றுமதி
செய்யப்பட்டுவிட்டன'' என்று லோக் ஆயுக்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தனது
அறிக்கையில் குறிப்பிட்டது, இந்த முறைகேட்டில் மறைக்கப்படாத வால் மட்டுமே!பெல்லாரி
மாவட்டத்தில் அனுமதி பெற்ற 148 சுரங்கங்களில் 124 மட்டுமே செயல்படுகின்றன.
இவற்றில் 10 விழுக்காடு இரும்புத் தாது மட்டுமே முறைப்படி
எடுக்கப்படுகிறது. மற்ற 90 விழுக்காடும் முறைதவிர் நடவடிக்கைகள் மூலம்
வெட்டியெடுத்துக் கொண்டு செல்லப்படுகின்றன என்று உச்ச நீதிமன்றம் தனது
தீர்ப்பில், தாளமாட்டாமல் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளது.அதுமட்டுமல்ல.
சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்காற்று) மசோதாவில் அதிக
உரிமத் தொகை (ராயல்டி) நிர்ணயிக்கவும், அழிக்கப்படும் காடுகளை
மீட்டுருவாக்கம் செய்யத் தேவையான நிதி ஒதுக்குவதும்கூட
சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை கர்நாடக அரசு அதையெல்லாம்
சட்டைசெய்ததாகவே தெரியவில்லை. கனிமம் மற்றும் சுரங்கங்கள் விவகாரத்தில்
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகாரம் வானளாவியது. ஆனால், மத்திய
அரசும் இது குறித்துக் கவலையேபட்டுக் கொள்ளவில்லை. இப்போது ஒரு டன்
இரும்புத் தாதுக்கு ரூ.61 உரிமத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள்
கேட்கிறார்கள்: ""ஏன் இதை இரும்புத் தாது ஏற்றுமதியில் கிடைக்கும்
இறுதிவிலையில் 10 விழுக்காடாக நிர்ணயிக்கவில்லை? (அதாவது ஒரு டன்னுக்கு
ரூ.500)அதுதானே நியாயமான உரிமத் தொகையாக இருக்க முடியும்? மேலும், இந்தச்
சுரங்கத் தொழில் மூலம் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மேலதிகமான அழிவை
காடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளதால், காடு வளர்ப்புக்காகத் தனியாக இவர்களிடம்
சமூகநலனுக்கான நிதி வசூலிக்கப்பட வேண்டாமா?'' நீதிமன்றத்துக்கும் மக்கள்
மன்றத்துக்கும் எழுகிற இந்த நியாயமான கேள்வி ஏன் மாநில, மத்திய
ஆட்சியாளர்களுக்குள் எழவில்லை?சுரங்கத் தொழிலால் காடுகள் மோசமாக
அழிக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் அதற்கான மாற்று நடவடிக்கைகள்
குறித்தும், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சிக் கழகம் (நீரி)
அளித்த பரிந்துரைகளை மாநில அரசு அமல்படுத்த எந்த முயற்சியும் இதுவரை
மேற்கொள்ளவில்லை. அதற்குக் காரணமில்லாமலா இருக்கும்?உரிமத்தொகை
மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதால்தான், சுரங்க, கனிம
ஏற்றுமதிகளில் நடைபெற்றுள்ள குளறுபடிகளால் கர்நாடக அரசுக்கு ரூ.18,000 கோடி
வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று லோக் ஆயுக்த தனது அறிக்கையில்
கணக்கிட்டுக் கூறியுள்ளது. இது உரிமத் தொகை குறைவால் வந்த இழப்பீடு
மட்டுமே! ஒருவேளை, இந்த இரும்புத் தாது முழுவதையும் கர்நாடக அரசே
வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்திருந்தால், அந்த அரசுக்கு எத்தனை லட்சம் கோடி
ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும்? இது அந்த மாநில மக்களுக்கு எத்தகைய
வளர்ச்சியைக் கொடுத்திருக்கும்?கர்நாடக அரசியல்வாதிகள் இரும்பு மனிதர்கள்!
piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» ஆட்சி மாறும் நிலையில் புலிகளுக்கான தடையை 5 வருடத்திற்கு நீடித்தது காங்கிரஸ்
» கொலைகாரர்களாக மாறும் மாணவர்கள்: தடம் மாறும் தலைமுறையை திருத்துவது எப்படி?
» குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்
» மிருகக் காட்சி சாலையொன்றில் ஒட்டக சிவிங்கியொன்று தனது குட்டியை ஈன்றெடுக்கும் காட்சி..
» 15 ஆண்டுகள் சோடி மாறாது வாழும் பறவைகள்.
» கொலைகாரர்களாக மாறும் மாணவர்கள்: தடம் மாறும் தலைமுறையை திருத்துவது எப்படி?
» குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்
» மிருகக் காட்சி சாலையொன்றில் ஒட்டக சிவிங்கியொன்று தனது குட்டியை ஈன்றெடுக்கும் காட்சி..
» 15 ஆண்டுகள் சோடி மாறாது வாழும் பறவைகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum