TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்தியா பரிதாப தோல்வி! *சமரவீரா சதத்தில் இலங்கை அபாரம்

Go down

இந்தியா பரிதாப தோல்வி! *சமரவீரா சதத்தில் இலங்கை அபாரம் Empty இந்தியா பரிதாப தோல்வி! *சமரவீரா சதத்தில் இலங்கை அபாரம்

Post by Tamil Wed Jan 06, 2010 7:24 am





இந்தியா பரிதாப தோல்வி! *சமரவீரா சதத்தில் இலங்கை அபாரம் Sama




மிர்புர்:
புத்தாண்டில் தனது முதல் போட்டியில் இந்திய அணி சொதப்பியது. நேற்று நடந்த
முத்தரப்பு தொடரின் லீக் போட்டியில் இலங்கையிடம் 5 விக்கெட்
வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. சதம் விளாசிய சமரவீரா, இலங்கை
அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார்.
இந்தியா, வங்கதேசம், இலங்கை அணிகள்
பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில்
நடக்கிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி, வங்கதேசத்தை
வீழ்த்தியது. இந்தியா, இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது போட்டி நேற்று
மிர்புரில் நடந்தது. டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் சங்ககரா பீல்டிங் தேர்வு
செய்தார்.
மீண்டும் ஸ்ரீசாந்த்:
ஒரு சிறிய
இடைவெளிக்குப் பின் இந்திய அணியில் மீண்டும் ஸ்ரீசாந்த், யுவராஜ் இடம்
பெற்றனர். இலங்கை அணியில் காயம் காரணமாக தில்ஷன், சமர சில்வா
நீக்கப்பட்டனர். இவர்களுக்குப் பதில், அறிமுக வீரர் லகிரு திரிமன்னே
மற்றும் திசரா பெரேரா ஆகியோர் இடம் பெற்றனர்.
காம்பிர்"அவுட்':
முதலில்
"பேட்' செய்த இந்திய அணிக்கு ஆடுகளம் சாதகமாக அமையவில்லை. வெலகேதரா பந்து
வீச்சில் அனல் பறந்தது. இவரது வேகத்தில், துவக்க வீரர் காம்பிர் வெறும் 8
ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த விராத் கோஹ்லியும் (9)
நிலைக்கவில்லை. வழக்கம் போல அதிரடி காட்டிய சேவக் 47 ரன்களுக்கு( 9
பவுண்டரி) வெளியேறினார்.
யுவராஜ் அசத்தல்:
பின்னர்
ஜோடி சேர்ந்த தோனி, யுவராஜ் பொறுப்புடன் பேட் செய்தனர். இலங்கை பந்து
வீச்சை சமாளித்து ஆடிய இந்த ஜோடி 4 வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்த
நிலையில், தோனி அவுட்டானார். இவர் 37 ரன்கள் (3 பவுண்டரி) எடுத்தார்.
மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ், கண்டம்பி (30 வது)
ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசி அரை சதம் கடந்தார். தொடர்ந்து
அசத்திய இவர் 74 ரன்கள் (2 சிக்சர் 6 பவுண்டரி) குவித்து வெளியேறினார்.
ஜடேஜா அதிரடி:
அடுத்து
வந்த ஜடேஜா, ரெய்னாவுடன் இணைந்தார். அதிரடியாக ஆடிய ஜடேஜா, துஷாரா வீசிய
ஆட்டத்தின் 45 வது ஓவரில் 3 பவுண்டரி ஒரு சிக்சர் விளாசினார். இவருக்கு
நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த ரெய்னா 35 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
ஜடேஜா 39 ரன்கள் சேர்த்தார். 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த
இந்திய அணி 279 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் வெலகேதரா 5, துஷாரா,
பெரேரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சுமாரான துவக்கம்:
சற்று
கடினமான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு தரங்கா, திரிமன்னே ஜோடி சுமாரான
துவக்கம் தந்தது. அறிமுக வீரராக களமிறங்கிய திரிமன்னே (22), நம்பிக்கை
அளித்தார். தரங்கா (30) நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
சூப்பர் ஜோடி:
பின்னர்
அனுபவ வீரர்களான சங்ககரா, சமரவீரா இணைந்தனர். அசத்தலாக ஆடிய இந்த ஜோடி,
இந்திய பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. ஒரு நாள் அரங்கில் சங்ககரா
53 வது அரை சதம் கடந்தார். 3 வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 122 ரன்கள்
சேர்த்திருந்த நிலையில், சங்ககரா (60) அவுட்டானார். அடுத்து களமிறங்கிய
கண்டம்பி (8), ரந்திவ் (4) சோபிக்க தவறினர்.
சமரவீரா சதம்:
இந்நிலையில்
"பேட்டிங் பவர் பிளேவை' தேர்ந்தெடுத்தது இலங்கை அணி. இதற்கு நல்ல பலன்
கிடைத்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரவீரா, ஒரு நாள் அரங்கில்
2 வது சதம் கடந்தார். இவருக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த ஆல்-ரவுண்டர்
பெரேரா அதிரடியில் மிரட்டினார். நெஹ்ரா ஓவரில் இவர் ஒரு சூப்பர் பவுண்டரி
அடிக்க, 48 ஓவரில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 283 ரன்கள் எடுத்து வெற்றி
பெற்றது. 15 பந்துகளில் 36 ரன்கள் (6 பவுண்டரி ஒரு சிக்சர்) குவித்த
பெரேரா, சமரவீரா (105) அவுட்டாகாமல் இருந்தனர்.


பாக்ஸ் செய்திகள்:
அதிர்ஷ்டம்:
இலங்கைக்கு
எதிரான நேற்றைய போட்டியில் இந்திய வீரர் சேவக் 35 ரன்கள் எடுத்திருந்த
போது, வெலகேதரா வீசிய பந்தில் (7 வது ஓவர்) விக்கெட் கீப்பர் சங்ககராவிடம்
"கேட்ச்' கொடுத்தார். ஆனால் அம்பயர் நோ-பால் என அறிவிக்க, சேவக்
தப்பினார். ஆனால் வெலகேதராவிடமே மீண்டும் விக்கெட்டை பறிகொடுத்தார் சேவக்
(47 ரன்கள்).


தப்பினார் ரெய்னா:
நேற்றைய
போட்டியின் 37 வது ஓவரை இலங்கை வீரர் லக்மல் வீசினார். 4 வது பந்தை
எதிர்கொண்ட ரெய்னாவின் பேட்டில் பட்ட பந்து சங்ககராவிடம் தஞ்சம்
புகுந்தது. ஆனால் பந்து தரையில் லேசாக உரசிச் சென்றது. இலங்கை வீரர்கள்
அப்பீல் செய்ய, அம்பயர் சைமன் டாபெலும் அவுட் கொடுத்து விட்டார். ஆனால்
ரெய்னா மைதானத்தை விட்டு தயங்கி தயங்கி வெளியேறிக் கொண்டிருந்தார்.
பின்னர் "டிவி' ரீப்ளேயில் அவுட் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட, ரெய்னா
மீண்டும் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்டார். அப்போது அவர் 7 ரன்கள் மட்டுமே
எடுத்திருந்தார்.


பலத்த பாதுகாப்பு:
கடந்த
ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கிரிக்கெட் வீரர்கள், லாகூரில் பயங்கரவாத
தாக்குதலுக்கு உள்ளாயினர். இது போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல்
இருக்க, வங்கதேசத்தில் நடக்கும் முத்தரப்பு தொடருக்கு பாதுகாப்பு
பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் ஷேர்-இ-பங்களா
மைதானத்தில் வங்கதேச போலீஸ் மற்றும் பாராளுமன்ற பாதுகாப்பு படை
கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வீரர்களுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு
கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். முத்தரப்பு தொடருக்கான
பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் அமைந்திருந்தாலும்,
இலங்கை அணி தங்களது பாதுகாப்பு நிபுணர்களுடன் வங்கதேசம் வந்துள்ளது.


வெறிச் சோடிய மைதானம்:
முத்தரப்பு
தொடருக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவே உள்ளது. இலங்கை,
வங்கதேசம் அணிகள் மோதிய முதல் போட்டிக்கு சுமார் 10 ஆயிரம் பேர்
வந்திருந்தனர். நேற்றைய இரண்டாவது நாள் போட்டிக்கு வெறும் 5 ஆயிரம்
மட்டுமே வருகை தந்தனர். இதனால் 35 ஆயிரம் பேர் வரை அமரக்கூடிய மிர்புர்,
ஷேர்-இ-பங்களா மைதானம் வெறிச் சோடிக் காண்ப்பட்டது. அதிகமான பனிப்பொழிவே
இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.


முதல் முறை:
இலங்கை
அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெலகேதரா, ஒரு நாள் அரங்கில் நேற்று முதல்
முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். தவிர, 10 ஓவர்கள் வீசிய
இவர் 4 "நோ-பால்', 4 "ஒயிடுகள்' உட்பட 66 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
இதுவரை 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 10 விக்கெட்டுகள்
கைப்பற்றியுள்ளார்.


5 வது வீரர்:
நேற்று
48 ரன்கள் எடுத்த போது, இலங்கை வீரர் சங்ககரா ஒரு நாள் அரங்கில் 8000
ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் இந்த இலக்கை எட்டும் 5 வது
இலங்கை வீரரானார். இதற்கு முன் இலங்கையின் ஜெயசூர்யா (13362), அரவிந்தா டி
சில்வா (9284), அட்டபட்டு (8529), ஜெயவர்தனா (8249) ஆகியோர் 8 ஆயிரம்
ரன்களை கடந்துள்ளனர்.
ஸ்கோர் போர்டு
இந்தியா
காம்பிர் (ப) வெலகேதரா 8 (12)
சேவக் (கே) திரிமன்னே (ப) வெலகேதரா 47 (31)
கோஹ்லி (கே) சங்ககரா (ப) வெலகேதரா 9 (12)
யுவராஜ் (கே) லக்மல் (ப) பெரேரா 74 (84)
தோனி (கே) சங்ககரா (ப) பெரேரா 37 (70)
ரெய்னா (ப) வெலகேதரா 35 (46)
ஜடேஜா (கே) கண்டம்பி (ப) துஷாரா 39 (34)
ஹர்பஜன் (கே) பெரேரா (ப) துஷாரா 1 (2)
ஜாகிர் (ப) வெலகேதரா 2 (4)
நெஹ்ரா -அவுட் இல்லை- 4 (6)
ஸ்ரீசாந்த் -அவுட் இல்லை- 1 (3)
உதிரிகள் 22
மொத்தம் (50 ஓவரில் 9 விக்., இழப்பு) 279
விக்கெட்
வீழ்ச்சி: 1-14 (காம்பிர்), 2-62 (கோஹ்லி), 3-71 (சேவக்), 4-170 (தோனி),
5-198 (யுவராஜ்), 6-263 (ரெய்னா), 7-264 (ஹர்பஜன்), 8-268 (ஜாகிர்), 9-275
(ஜடேஜா).
பந்து வீச்சு: வெலகேதரா 10-1-66-5, லக்மல் 8-1-48-0, துஷாரா
10-0-62-2, ரந்திவ் 10-0-36-0, கண்டம்பி 4-1-22-0, சமரவீரா 2-0-12-0,
பெரேரா 6-0-27-2.
இலங்கை
தரங்கா (கே)+(ப) ஹர்பஜன் 30 (48)
திரிமன்னே (கே) காம்பிர் (ப) ஸ்ரீசாந்த் 22 (24)
சங்ககரா (கே) ரெய்னா (ப) ஹர்பஜன் 60 (80)
சமரவீரா -அவுட் இல்லை- 105 (106)
கண்டம்பி (கே) ஸ்ரீசாந்த் (ப) ஹர்பஜன் 8 (11)
ரந்திவ் -ரன் அவுட் (நெஹ்ரா)- 4 (9)
பெரேரா -அவுட் இல்லை- 36 (15)
உதிரிகள் 18
மொத்தம் (48 ஓவரில் 5 விக்., இழப்பு) 283
விக்கெட் வீழ்ச்சி: 1-48 (திரிமன்னே), 2-77 (தரங்கா), 3-199 (சங்ககரா), 4-217 (கண்டம்பி), 5-226 (ரந்திவ்).
பந்து
வீச்சு: ஜாகிர் 9-0-57-0, நெஹ்ரா 8-0-55-0, ஸ்ரீசாந்த் 7-0-47-1, ஹர்பஜன்
10-1-47-3, சேவக் 5-0-26-0, ஜடேஜா 4-0-31-0, யுவராஜ் 5-0-19-0.





டெஸ்ட் அணியில் இஷாந்த் சர்மா:
வங்கதேசத்துக்கு
எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வெறும் 15 நிமிடங்களில்
தேர்வு செய்யப்பட்டது. இதில், இஷாந்த் சர்மா மீண்டும் வாய்ப்பு
பெற்றுள்ளார்.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில்
பங்கேற்கிறது. முதல் போட்டி சிட்டகாங்கில் (ஜன., 17-21) நடக்கிறது.
இரண்டாவது போட்டி மிர்புரில் (ஜன., 24-28) நடக்க உள்ளது. இதற்கான இந்திய
அணியை தேர்வு செய்வற்கான கூட்டம் சென்னையில் நடந்தது. சுமார் 15
நிமிடங்கள் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கேப்டன் தோனி, யுவராஜ், சேவக்
உள்ளிட்ட நட்சத்திரங்கள் நீடிப்பதால், அணியில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
மீண்டும் சச்சின்:
"பார்ம்'
இல்லாததால் முத்தரப்பு தொடரில் இருந்து நீக்கப்பட்ட இஷாந்த் சர்மா
மீண்டும் இடம் பெற்றுள்ளார். ஓய்வில் இருந்த சச்சின் மற்றும் சீனியர்
வீரர்களான டிராவிட், லட்சுமண் அணிக்கு திரும்பியுள்ளனர். உ.பி.,யை சேர்ந்த
வேகப்பந்துவீச்சாளர் சுதீப் தியாகி வாய்ப்பு பெற்றுள்ளார்.
இலங்கைக்கு
எதிரான கடந்த டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் பத்ரிநாத்
நீக்கப்பட்டுள்ளார். மற்றொரு தமிழக வீரரான முரளி விஜய் அணியில்
நீடிக்கிறார். சுழற்பந்துவீச்சில் ஹர்பஜனுடன் சேர்ந்து அமித் மிஸ்ரா,
பிரக்யான் ஓஜாவும் அசத்த உள்ளனர். கூடுதல் விக்கெட்கீப்பராக தினேஷ்
கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட அணி வருமாறு:
தோனி(கேப்டன்),
சேவக், காம்பிர், டிராவிட், சச்சின், லட்சுமண், யுவராஜ், ஹர்பஜன், ஜாகிர்
கான், ஸ்ரீசாந்த், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, இஷாந்த் சர்மா, முரளி
விஜய், தினேஷ் கார்த்திக், சுதீப் தியாகி.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum