Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சிலவகை விற்பனை வரி உயர்வு: தமிழக அரசு
Page 1 of 1
சிலவகை விற்பனை வரி உயர்வு: தமிழக அரசு
Last Updated :
சென்னை,
ஜூலை 11: தமிழக அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கில் சில விற்பனை வரி
விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,900
கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது. இதற்கான
உத்தரவை நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே. சண்முகம் திங்கள்கிழமை
பிறப்பித்தார்.உத்தரவு விவரம்: தமிழகத்தில் முன்பிருந்த அரசு ரூ.1
லட்சம் கோடிக்கும் அதிகமாக கடன் வைத்துவிட்டுச் சென்றுள்ளது. அந்தக் கடனை
அடைப்பதுடன் வட்டி செலுத்த வேண்டிய கடமை அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதே
சமயம் புதிய அரசு அறிவித்துள்ள புதிய நல திட்டங்களை வெற்றிகரமாக அமல்
செய்யவும், நிதிநிர்வாக நடத்தை நெறிகளைப் பின்பற்றவும் புதிய கூடுதல்
வருவாய் வழிகளைக் கண்டறிய வேண்டியுள்ளது. எனவே வருமானத்தைப் பெருக்கும்
பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான ஒரு வழியாக விற்பனை வரியை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பின்வரும் மாறுதல்கள் செய்யப்படுகின்றன.4
சதவீத மதிப்புகூட்டு வரி வசூலிக்கப்படும் பொருள்கள் மீதான வரி இனி 5
சதவீதமாக உயரும். "அறிவிக்கப்பட்ட' பொருள்களுக்கும் (இடைநிலை சரக்குகள்)
மீதும் இந்த 5 சதவீத வரி விதிப்பு பொருந்தும்.கர்நாடகம்,
மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த வரி 5 சதவீதமாக ஏற்கெனவே
உயர்த்தப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசும் இதை 5 சதவீதமாக உயர்த்த முடிவு
செய்துள்ளது.இருந்தாலும் விவசாயத் துறையின் முக்கியத்துவத்தைக்
கருத்தில் கொண்டு இப்போது 4 சதவீதமாக இருக்கும், விவசாயக் கருவிகள் மீதான
வரி நீக்கப்பட்டு முழுமையாக வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல இப்போது 4 சதவீத வரி வசூலிக்கப்படும் உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கும் முழு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.12.5
சதவீத மதிப்பு கூட்டு வரி வசூலிக்கப்படும் பொருள்களுக்கு இனி 14.5 சதவீத
வரி வசூலிக்கப்படும். ஆந்திரத்தில் இது ஏற்கெனவே 14.5 சதவீதமாக
உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இது 13.5 சதவீதமாக
உயர்த்தப்பட்டுள்ளது. குஜராத்தில் சில பொருள்களுக்கு 15 சதவீதமாகவும்,
சிலவற்றுக்கு 20 சதவீதமாகவும் இந்த வரி உள்ளது.முன்பு வரி விலக்கு
அளிக்கப்பட்டிருந்த ஜவுளி மற்றும் ஜவுளிப் பொருள்கள் 5 சதவீத வரி
விதிப்பின் கீழ் கொண்டு வரப்படும். மத்திய அரசு கூடுதல் கலால் தீர்வை
வசூலித்து வந்த காரணத்தால் இந்த விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இப்போது
மத்திய அரசு கூடுதல் கலால் தீர்வையை ரத்து செய்துவிட்டது. மாநில அரசு
விற்பனை வரி விதிக்கவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது.கண்டு
நூலுக்கு ஏற்கெனவே 5 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. எனவே ஜவுளிக்கு வரி
விதிப்பது மதிப்பு கூட்டு வரி அமைப்பின் ஒரு பகுதியாக கச்சா பொருள் வரி
பயனைப் பெறும்.ஆந்திரத்திலும் ஜவுளிகளும் ஜவுளிப் பொருள்களும்
மதிப்பு கூட்டு வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இருந்தாலும் சிட்ட
நூலும், கைத்தறி துணிகளும் தொடர்ந்து வரி விலக்கு சலுகையைப் பெறும்.உணவு எண்ணெய் வணிகத்தில் மொத்த வணிக அளவின் அடிப்படையிலான வரி விதிப்பால் பெருமளவு வரி தவிர்க்கப்படுகிறது. எனவே
இந்த வரி விலக்கு வரம்பை ரூ.500 கோடியில் இருந்து ரூ.5 கோடியாகக் குறைக்க
அரசு முடிவு செய்துள்ளது. எனவே பெரிய வணிகர்கள் வரி வரம்புக்குள்
கொண்டுவரப்படுவார்கள்.உடல் நலனுக்குத் தீங்கு தரும் புகையிலை
மற்றும் புகையிலைப் பொருள்கள் மதிப்பு கூட்டு வரி பட்டியலில் இருந்து
நீக்கப்படும். அதில் அப் பொருள்களுக்கு இப்போது 12.5 சதவீத வரி
விதிக்கப்படுகிறது. இவை இனி தொகுப்பு 2-ல் மதிப்பு கூட்டு வரி அல்லாத
பொருள்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு 20 சதவீத வரி விதிக்கப்படும்.வாயில்
போட்டு மெல்லும் புகையிலை, பொடி, சுருட்டு ஆகியவை முன்பு வரி விலக்கு
பெற்றிருந்தன. இப்போது 20 சதவீத வரி வரம்பில் கொண்டுவரப்படும். இப்போது
வரி விலக்கு பெற்றுள்ள பீடி மற்றும் பீடி புகையிலை ஆகியவற்றுக்கு 14.5
சதவீத வரி விதிக்கப்படும்.இப்போது 4 சதவீத வரி பட்டியலில் உள்ள
எல்.சி.டி. பேனல்கள், எல்.இ.டி. பேனல்கள், டி.வி.டி.க்கள், சி.டி.,
செல்போன்கள், ஐ-பாட், ஐ-போன் ஆகியவற்றுக்கான வரி 14.5 சதவீதமாக
உயர்த்தப்படும்.இந்த வரி மாறுதல்கள் ஜூலை 12-ல் இருந்து அமலுக்கு
வருகின்றன. இவற்றால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,900 கோடி கூடுதல் வருமானம்
கிடைக்கும்.பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு: பத்திரப் பதிவுத்
துறையில் சொத்து குத்தகை, சொத்துப் பதிவு, அட்டர்னி அதிகாரம் தருதல்
உள்ளிட்ட பத்திரங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணங்களை (முத்திரைத்தாள்
கட்டணம் அல்ல) உயர்த்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.300 கோடி வருமானம் ஈட்ட
முடிவு செய்யப்பட்டுள்ளது என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar topics
» ரூ.190க்கு 'அம்மா சிமெண்ட்' விற்பனை தொடங்கியது தமிழக அரசு!
» கசாப்பு கடைகளுக்கு தமிழக அரசு வழங்கிய இலவச ஆடுகள் விற்பனை
» தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு: ஜெயலலிதா உத்தரவு
» தமிழக அரசு மனு!கர்நாடகா 10 டிஎம்சி நீர் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.
» பால் கொள்முதல் விலை உயர்வு: ஆவின் பால் விலை உயராது: தமிழக அரசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum