Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
இந்தியத் தொலைக்காட்சி விவாதத்தில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் � சொதப்பி விட்டதால் நெருக்கடி
Page 1 of 1
இந்தியத் தொலைக்காட்சி விவாதத்தில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் � சொதப்பி விட்டதால் நெருக்கடி
இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பான
‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துடன் இணைந்து நடத்தப்பட்ட
விவாதத்தில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல
பங்கேற்றது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இதன் காரணமாக சிறிலங்கா
வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் ஒன்றின் மீது ஒன்று
குற்றம்சாட்டியுள்ளதுடன், முறுகலான நிலை ஒன்றும் ஏற்பட்டிருப்பதாக ஆங்கில
ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின்
போர்க்குற்றங்கள் என்ற ஆவணப்படத்துடன் இணைந்ததாக நேரடி விவாத நிகழ்வு
ஒன்றையும் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது. கடந்த 8ம்
நாள் இரவு இடம்பெற்ற இந்த நேரலை விவாதத்தில் சிறிலங்காவின் இராணுவப்
பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல செய்மதித் தொழில்நுட்பத்தின் மூலம்
பங்கேற்றிருந்தார். சென்னையில் இருந்து இந்த நிகழச்சி நேரலையாக
ஒளிப்பரப்பப்பட்டது. இந்த விவாதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு
சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உரிய வகையில் பதிலளிக்கவில்லை என்றும்
நிகழ்ச்சியில் எதிர்த்தரப்பில் எழுப்பப்பட்ட பல வாதங்களுக்கு அவர்
பொருத்தமான பதில் கூறாமல் சொதப்பி விட்டதாகவும் சிறிலங்கா வெளிவிவகார
அமைச்சின் மூத்த அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதேவேளை,
இந்த நிகழ்ச்சி முழுவதுமே விடுதலைப் புலிகளுக்கு சார்பாகவே
நடத்தப்பட்டதாகவும்,, நிகழ்ச்சியின் பின்னணியில் விடுதலைப் புலிகளின்
கொடியும் கூட காண்பிக்கப்பட்டதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு
அதிகாரிகள் கூறியுள்ளனர். இராணுவப் பேச்சாளர் இந்த நிகழ்ச்சியில்
பங்கேற்றதன் மூலம் அது பக்கச்சார்பற்றது என்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்
கொண்டுள்ளதாகவும், இதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது சிறிலங்கா அரசின்
தரப்பில் இழைக்கப்பட்ட மிகப்பெரிய தவறு என்றும் சிறிலங்கா பாதுகாப்புச்
செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இராணுவப்
பேச்சாளரே பதிலளிக்க வேண்டும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த
அதிகாரிகளே அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து முழுமையாக ஆராயாமல், இராணுவப் பேச்சாளரை இதில்
பங்கேற்க வைப்பதற்காக சிறிலங்கா அதிபர் ஊடாக வெளிவிவகார அமைச்சு மேற்கொண்ட
நடவடிக்கை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் கோத்தாபய ராஜபக்ச
குற்றம்சாட்டியுள்ளார் நிகழ்ச்சியின் மைய நோக்கத்தை புரிந்து கொள்ளாமல்,
சிறிலங்கா அதிபரின் மூலம் இந்த நிகழ்ச்சியில் இராணுவப் பேச்சாளரை பங்கேற்க
வைத்தது வெளிவிவகார அமைச்சு செய்த மிகவும் மோசமான முட்டாள்தனமான காரியம்
என்றும் அவர் மேலும் விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த் சிங்,
பிரித்தானியாவின் முன்ளாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட்,
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் ரோனர், அதிமுக
நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை, காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் அபிசேக்
பானு, நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார், கேணல் ஹரிகரன் ஆகியோர்
பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை ராகுல் கன்வால் ஒருங்கிணைத்து
நடத்தியிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்காவில்
போர்க்குற்றங்கள் நடந்திருந்தால், அனைத்துலக விசாரணைகளுக்கு அனுமதிக்கப்பட
வேண்டும் என்றே கருத்து வெளியிட்டிருந்ததாகவும் ஆங்கில ஊடகம் மேலும் தகவல்
வெளியிட்டுள்ளது.
Similar topics
» ஒத்துழைக்காவிடின் தற்கொலை செய்து கொள்வேன்“- இந்தியத் தூதரை மிரட்டிய சிறிலங்கா அதிபர்
» இலங்கை பாராளுமன்றில் உரையாற்றப் போகும் மோடி-அந்தரங்கப் பேச்சாளர் -
» தந்தி டிவியில் ஒளிபரப்பான விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்த விவாதத்தில் அசிங்கப்பட்டான் தங்கபாலு.
» இஸ்லாமியர்களோடு நெடுநாட்களாக விவாதத்தில் ஈடுபட்டும், எனக்கு கீழ்கண்ட கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைத்த பாடில்லை
» இலங்கை அகதிகளின் பேச்சாளர் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம்
» இலங்கை பாராளுமன்றில் உரையாற்றப் போகும் மோடி-அந்தரங்கப் பேச்சாளர் -
» தந்தி டிவியில் ஒளிபரப்பான விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்த விவாதத்தில் அசிங்கப்பட்டான் தங்கபாலு.
» இஸ்லாமியர்களோடு நெடுநாட்களாக விவாதத்தில் ஈடுபட்டும், எனக்கு கீழ்கண்ட கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைத்த பாடில்லை
» இலங்கை அகதிகளின் பேச்சாளர் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|