TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மரணத்துக்கு வலை வீசி... மாணவர்களை இழுக்கும் கைபேசி!

Go down

மரணத்துக்கு வலை வீசி... மாணவர்களை இழுக்கும் கைபேசி! Empty மரணத்துக்கு வலை வீசி... மாணவர்களை இழுக்கும் கைபேசி!

Post by மாலதி Mon Jul 11, 2011 7:40 am

""டாக்டர்! நாங்க நாலு பேரும், கொஞ்ச நாளைக்கு முன்னால, கேரளா போய்
"ஜாலியா' இருந்துட்டு வந்தோம்; இப்போ, எங்களுக்குப் பயமா இருக்கு சார்,
எங்களுக்கு எச்.ஐ.வி., டெஸ்ட் பண்ணணும்...''வார்த்தையை முடிப்பதற்குள்
சொன்னவனை ஓங்கி அறைந்தார் அந்த டாக்டர்; மற்ற மூன்று பேரும் ஓரடி பின்
வாங்கினர். காரணம், அவர்கள் நால்வரும் கோவையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில்
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். நகரின் முக்கிய மருத்துவமனையில்
பணியாற்றும் பாலியல் மருத்துவரின் அறையில் நடந்தது இந்த நிகழ்வு. இதற்கு
மேல்தான் காத்திருக்கிறது அதிர்ச்சி.
மாணவர்கள் ஏதோ பயத்தில் வந்திருக்கின்றனர் என்று நினைத்து, அவர்களை
பரிசோதித்துப் பார்த்த போது, அவர்களில் ஒரு மாணவனுக்கு எச்.ஐ.வி.,
பாசிட்டிவ் என்று தெரியவந்தது.""எத்தனையோ எச்.ஐ.வி., பேஷன்ட்களுக்கு நான்
"ட்ரீட்மென்ட்' கொடுத்திருக்கேன். இந்த வயசுல, இப்பிடி வந்து நின்ன பசங்க
இவங்க மட்டும்தான். நம்ம கலாச்சாரமும், வாழ்க்கை முறையும் எங்கே
போகுதுன்னு நினைச்சப்ப, எனக்கு நாலு நாளா தூக்கமே வரலை,'' என்று
முடித்தார் அந்த டாக்டர்.
கோவையிலுள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மேல் தட்டு மாணவர்கள்
பலரிடம், அதி நவீன மொபைல் போன்கள் சர்வ சாதாரணமாகப் புழங்குகின்றன.
அவற்றில், அதிவேக இன்டர்நெட் இணைப்பும் கிடைக்கிறது. இல்லாவிட்டால்,
இன்டர்நெட்டில் இருந்து அவர்களே, இறக்கி வைத்துக்கொள்கின்றனர். காசைக்
கொட்டுவதற்கு, இவர்களின் பெற்றோர் தயங்குவதே இல்லை.இந்த வாழ்க்கை
முறைதான், இந்த மாணவர்களை மரணத்தின் விளிம்பு வரைக்கும் கொண்டு
சென்றிருக்கிறது.
கலாசாரத்தின் ஆணிவேர்களில் அமிலத்தை ஊற்றும் இந்த தகவல் தொடர்பு
சாதனங்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக, இந்த தேசத்தின்
நாளைய மன்னர்களுக்கு சவக்குழிகளை வெட்டிக் கொண்டிருக்கின்றன.பல மாதங்களாக
ஆபாச படங்களை காட்சிகளாகப் பார்த்துப் பழகி, அதற்கு அடிமையாகி விட்ட
நிலையில்தான், இந்த மாணவர்கள் அடுத்த கட்ட முயற்சிக்குப்
போயிருக்கின்றனர். இவர்களைப் போலவே, இன்றைக்கு ஏராளமான மாணவர்கள்
பிரவுசிங் சென்டர்களுக்குள் புகுந்து, வாழ்வுக்கான அழிவைத் தேடிக்
கொள்கின்றனர்.
விளையாட்டாக "வீடியோ கேம்ஸ்'களை மட்டுமே ரசித்த பள்ளி மாணவர்கள், ஆபாச
வலைதளங்களையும் அடிக்கடி நலம் விசாரிக்கின்றனர். சர்வதேச அளவில்
மென்பொருள் உருவாக்கத்தில் சாதனை படைத்து இந்திய இளைய சமுதாயம்தான்,
மற்றொரு புறத்தில் இப்படி ஆபாசங்களில் அழிந்து போவது வேதனைக்குரிய
விஷயம்.மும்பை, டில்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மாணவர்களுடன்,
கல்வி, விளையாட்டு, பொது அறிவு போன்ற விஷயங்களில் போட்டி போட வேண்டிய மாணவ
சமுதாயம், இத்தகைய விஷயங்களில் பெருநகரத்து மாணவர்களுக்குப் போட்டியாக
வளர்வதற்கு முழு முதற்காரணம், பெற்றோர்கள்; அடுத்ததாக, பள்ளி வளாகம்;
இறுதியாக வெளிச்சூழல்.பெற்றோர் தரும் அதீத சுதந்திரம், பள்ளி
நிர்வாகங்களின் பண வேட்டை, "டிவி' போன்ற ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றுடன்,
சமுதாய ரீதியான கட்டுப்பாடுகளும் தளர்ந்து போயிருப்பதும் ஒரு காரணம்.
குறிப்பாக, பிரவுசிங் சென்டர்களுக்கு எந்தவித கண்காணிப்பும் இல்லை.
விபசாரத்தில் பள்ளி மாணவர்கள் கூட பாதிக்கப்படும் நிலையில், அதைக்
கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை.
ஆபாசமான வலைதளங்களுக்குள் ஒரு சிறுவன்,
சிறுமி கூட உள்ளே புகுந்து விட முடியும் என்பது சர்வதேசத்துக்குமான சவால்
என்றாலும், நம்முடைய இந்திய கலாசாரத்துக்கு எதிராக நடத்தப்படும் மாபெரும்
யுத்தம் என்பதை மறுக்கவே முடியாது.ஆபாச படங்களை அடிக்கடி பார்க்கும்போது,
அதற்கு அடிமையாவதுடன் ஆண், பெண் நட்புக்கு இடையே எல்லை மீறவும்,
தூண்டுதலாக இருக்கும்.
இந்நிலையில், இலவச லேப்-டாப்களை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
அப்போது, நிலைமை இன்னமும் விபரீதமாகிவிடும். எனவே, மாணவர்கள் தேவையில்லாத
வலைத்தளங்களுக்குள் நுழையும்போது, இணைப்பு கிடைக்காதவாறு செய்ய வேண்டும்;
மெமரி கார்டு, பென்டிரைவ் கூடாது. வளர் இளம் பருவத்திலுள்ள குழந்தைகள்
லேப்-டாப், மொபைல் போனுடன் அதிக நேரம் செலவிடுகிறார்களா என கண்காணித்து
மாற்றம் கொண்டு வர பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.ஆபாச படங்களை மெமரி
கார்டுகளில் டவுன்லோடு செய்து தர தடை விதிக்க வேண்டும். அத்துமீறுபவர்கள்
மீது கடும் நடவடிக்கை வேண்டும். குறிப்பிட்ட வலைத்தளங்களையும் கண்காணித்து
தடை விதிக்க வேண்டும் என்பது உளவியல் நிபுணர்கள் மற்றும் சமூக
ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
பிஞ்சிலே பழுக்கும் அவலம் :பெயர் வெளியிடவிரும்பாத பால்வினை நோய்
சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகையில், "தற்போது 12 வயது நிரம்பாத மாணவர்கள்
கூட, ஆபாச படங்களை பார்ப்பது மட்டுமின்றி செயல்ரீதியாகவும் முயற்சிக்கும்
அவலம் உள்ளது. பலரும் ஆபாசபடங்களுக்கு அடிமையாகிவிட்டு தவறு செய்வது
அதிகரித்து வருகிறது; பயம் மற்றும் சந்தேகம் காரணமாக எச்.ஐ.வி., பாதிப்பு
உள்ளதா என பரிசோதிக்க வருகின்றனர். மாதந்தோறும் 30 வயதுக்குள் உள்ள
இளைஞர்கள் குறைந்தபட்சமாக 15 பேராவது என்னிடம் பரிசோதனைக்கு வருகின்றனர்.
இதேநிலை நீடித்தால், ஆரோக்கியமான இளைஞர்களை பார்க்கவே முடியாது' என்றார்.
கோவையை சேர்ந்த மனநல டாக்டர் சீனிவாசன் கூறுகையில், ""முன்பு
குறிப்பிட்ட காட்சிகள் எழுத்து, போட்டோ வடிவில் மட்டுமே பார்க்க
முடிந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நேரிடையாக பார்க்கும் நிலை
தற்போதுள்ளது. ஊடகங்களால் ஆபாச காட்சிகள் சாதாரணமாகி விட்டன; இது தவறானது,
கூடாது என்ற மனநிலை மாறிவிட்டது. படிக்கும் வயதிலேயே ஆண் - பெண் உறவு
எல்லை தாண்டி, கலாசார சீர்கேடு தலைதூக்குகிறது. கிரைம் சம்பவங்களுக்கும்
வழிவகுக்கிறது. தொழில்நுட்பம் என்பது கத்தி போன்றது. ஆபரேஷனுக்கும்
உதவும்; உயிரை கொல்லவும் உதவும். ஆபாச படங்களுக்கு அடிமையான பலரும்,
பிரச்னை நம்மை கை மீறி போய்விட்டது; ஆபத்தான நிலையில் உள்ளோம் என்பதை
புரிந்து கொள்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே பிரச்னையை கூறி தீர்வு காண
முன்வருகின்றனர்,'' என்றார்.-நமது நிருபர்-


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum