Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உபுண்டு 11 (Ubuntu 11) ஒரு முன்னோட்டம்
Page 1 of 1
உபுண்டு 11 (Ubuntu 11) ஒரு முன்னோட்டம்
உபுண்டு 11 பதிப்பின் முன்னோட்டமாக உபுண்டு 11.04 பதிப்பு வெளிவந்துள்ளது.
அதை என் கணினியில் நிறுவி பார்த்தேன். அதன் சில முக்கிய அம்சங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
உபுண்டு ஒவ்வொரு பதப்பிற்கும் பதிப்பு எண்ணுடன் ஒரு பெயரையும் கொடுப்பது வழக்கம்.உபுண்டு 10.10 பதிப்பை maverick meerkat என்ற பெயரில் அறிமுகப்படுத்தியிருந்தது. அதே போல உபுண்டு 11 பதிப்பை natty Narwhal என்ற பெயர் கொடுத்து அழைக்கிறது.
முன்பு உபுண்டு பதிப்பு மடிக்கணிக்குத் தனியாகவும் மேசைக்கணினிக்குத்
தனியாகவும் வெளியிட்டு வந்தது. ஆனால் தற்போதைய natty பதிப்பை இரண்டு
கணினியிலும் வேலை செய்யும் விதமாக வெளியிட்டிருக்கிறது. அதனால் இரண்டு
முறை தனித்தனியே தரவிரக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
உபுண்டு 11.04 புதிய மாற்றங்கள்
உபுண்டு 11.04ல் கீழ்காணும் மாற்றங்கள் முக்கியமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
Linux kernel 2.6.38 லினக்ஸ் கெர்னல்
LibreOffice 3.3.2 ஆபீஸ் பேக்கேஜ்
GCC 4.5 கம்பைலர்
Python 2.7 கணினி மொழி
dpkg 1.16.0 பேக்கேஞ் மேனேஜர்
Upstart 0.9 புரோசஸ்
X.org 1.10.0 and Mesa 7.10.1
Firefox 4.0 இணைய உலாவி
Shotwell 0.9.1 போட்டோ மேனேஜர்
Evolution 2.32.2 மின்னஞ்சல், காலண்டர்
Unity
முன்பு உபுண்டு இடைமுகம் Gnome session மூலம் செயல்பட்டது. தற்போது unity desktop session அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Unity ல் doclet மாதிரி ஐக்கான்கள் பட்டியலிட வசதி இருக்கிறது. ஆனால்
முன்பு போல panel வசதி இல்லை. ஏனவே ஒரு விண்டோவில் இருந்து அடுத்த
விண்டோவிற்குத் தாவ முன்பு போல panelல் நாம் எதுவும் செய்ய முடியாது.
திரையின் இடது பக்கம் doclet இருப்பதில் அந்தந்த ஐக்கானை தெரிவுசெய்ய
வேண்டும், அல்லது ALT + TAB அழுத்த வேண்டும்.
Unity-ல் பொதுவாக நாம் கணினித்திரையில் எதிர்பார்க்கும் Main Menu
(start button) இல்லை. அதற்குப்பதிலாக உபுண்டு ஐக்கானில் பல்வேரு வசதிகள்
இணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதில் எளிதாக நமக்குத்தேவையான
மென்பொருளைத்தேட வசதியும் பல மென்பொருட்களை வகைப்படுத்தியும் பட்டியல்
உள்ளது. மேலும் இதில் நாம் நிறுவப்படாத மென்பொருட்களையும் பட்டியலிட்டு
அதை நிறுவ வசதி கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
Logout, restart, system settings போன்ற வசதிகள் மேல் panel-ல்
திரையின் வலது மூலையில் நாம் உள்நுழைந்த பயனர் பெயரில்
இணைக்கப்பட்டுள்ளது. இதிலேயே நாம் இணையத்தில் அரட்டையில் இருந்தால்
"Available, Away, Busy" போன்ற நிலைகள் சேர்க்கப்பட்டுள்ளது இணைய
பயனாளிகளுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும்.
Unity-ஐப்போலவே Gnome3-யிலும் சில வசதிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக
உள்ளது. gnome தேவையென்றால் நாம் தனியாக போட்டுக்கொள்ளலாம். இவை தொடுதிரை
கணினிகளில் எளிதாக செயல்படத்தேவையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு விண்டோவின் மெனுபார் என்பதை இப்போது ubuntu panel உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்த புதிய unity தேவையில்லை எனில் நீங்கள் உள்நுழையும் போது sessionஐ ubuntu classic என்பதைத் தெரிவு செய்தால் போதும்.
உபுண்டு ஒண்
உபுண்டு ஒண்இவ்வசதி
உபுண்டு 11ல் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உவுண்டு பயன்படுத்தும்
அனைவரும் தங்களுக்கென ஒரு கணக்கை உபுண்டு Cloud கணினியில்
உருவாக்கிக்கொள்ள இயலும். தற்சமயம் நாம் தெரிவுசெய்யும் கோப்புகளை அல்லது
அடைவுகளை files or folder) பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் வசதி இதில்
இருக்கிறது. மேலும் பல வசதிகளை இனி வருங்காலத்தில் உபுண்டு ஒண்ணில்
இணைப்பார்கள் என நம்பலாம்.
Open Office vs LibreOffice
இப்போ ஓப்பன் ஆபீஸ் லிப்ரே ஆபீஸ் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதற்கென [You must be registered and logged in to see this link.] என்று புதிய இணையதளமும் திறக்கப்பட்டுள்ளது
இந்த பெயர் மாற்றத்திற்கு முக்கிய காரணம் உண்டு. Sun நிறுவனத்தின்
மூலம் முன்பு உலகெங்கும் உள்ள தன்னார்வ மென்பொருள் வல்லுநரால்
உருவாக்கப்பட்டது ஓப்பன் ஆபீஸ், ஆனால் தற்போது Sun நிறுவனத்தை ஆரக்கிள்
நிறுவனம் வாங்கிவிட்டதால் ஓப்பன் ஆபீஸும் ஆரக்கிளுக்கு சொந்தமாகிவிட்டது.
இது திறந்தநிரலாளர்கள் மத்தியில் பெரிய அதிர்ப்தியை உருவாக்கி விட்டது.
ஏனெனில் SUN பிரபலமான solaris இயங்குதளத்தை இலவசமாக தந்தது. SUN Java
கணினிமொழி ஒரு திறந்த நிரல் மென்பொருள். அதுவும் இலவசம். இப்படி SUN
முன்பு திறந்த நிரல் மென்பொருட்களை ஆதரிக்கும் நிறுவனமாக இருந்தது. ஆனால்
சன் மாதிரி ஆர்க்கிள் திறந்தநிரலை ஆதரிக்கும் நிறுவனம் அல்ல. அது ஒரு முழு
வியாபார நிறுவனம்.
எனவே, மென்பொருள எழுத்தாளர்கள் புதிய பெயரில் இதுவரை Open Office என்ற
பெயரில் பங்களிப்பை நல்கி வந்ததை LibreOffice என்ற பெயரில் தொடர்ந்து
உருவாக்கி இலவசமாக திறந்தநிரல் மென்பொருளாகவே கொடுத்து வருகிறார்கள். எனவே
உபுண்டுவிலும் LibreOffice என்பற பெயரில் பழைய Open Office ஆபீஸ்
மென்பொருளை நாம் பயன்படுத்த இயலும்.
Banshee
Banshee இனி உபுண்டுவின் இயல்பான மீடியா பிளேயராக இருக்கும்.
இது sound மெனுவுடன் இணைக்கப்பட்டிருப்பதால் இந்த மென்பொருளை
கட்டுப்படுத்தல் எளிதாகவே இருக்கிறது. லிஸ்டன், ரிதம் போலவே பான்ஸீயும்
பிரபலமான மென்பொருளாக இருந்தாலும் பான்ஸியில் வீடியோக்களையும் நாம்
பயன்படுத்த முடிகிறது.
GIMP
இது மட்டுமே உபுண்டுவில் நான் கண்டு ஒரே ஒரு குறை. புதிய பதிப்பில் GIMP
இல்லை. நாமாக நிறுவினால்தான் உண்டு. நாம் உபுண்டுவை பதிப்பு 10-ல் இருந்து
11-க்கு புதுப்பிக்கும் போதும் ஏற்கெனவே GIMP நிறுவி இருந்தால் அதை
எடுத்துவிட்டுவிடுகிறது .
உபுண்டுவை 11.04க்கு புதுப்பிப்பது எப்படி?
உபுண்டுவில் ALT + F2 அழுத்துங்கள். அதில் update-manager -d
எனத்தட்டச்சி Enter அழுத்துங்கள். வரும் விண்டோவில் மேலே உபுண்டு புதிய
பதிப்பு இருக்கிறுது எனச்செய்தி காட்டும். அதில் upgrade கொடுத்தால்
என்னென்ன நிறுவ வேண்டும் எவற்றை நீக்க வேண்டும் என்பது போன்று விபரங்களை
பட்டியலிடும். அதைச்சரிபார்த்து நீங்கள் உறுதிபடுத்தினால் தானாகவே தேவையான
மென்பொருட்களை தரவிரக்கி நிறுவிவிடும். நல்ல இணைய வேகம் தேவைப்படும்.
உபுண்டு 11.04 பதிப்பு ஒரு முன்னோட்டப்பதிப்பு என்பதால் தங்கள்
கணினியில் சில சமயம் சரியாக வேலை செய்யாமல் போகலாம். அதற்கு கம்பனி
பொறுப்பல்ல
உபுண்டு 11.04 natty பற்றிய மேலும் விபரங்களை [You must be registered and logged in to see this link.] இங்கே காணலாம்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» windows 7 கணினியில் virtualbox மூலம் Ubuntu நிறுவுவது எப்படி? Holw to Instal Ubuntu on Virtualbox
» உபுண்டு 13.04 (Raring Ringtail) வெளியிடப்பட்டுள்ளது
» உபுண்டு நெட்புக் பதிப்பு இனி வெளிவராது
» வீட்டிற்கே வரும் இலவச CD/DVD - உபுண்டு, ஒப்பன்சோலாரிஸ், ஆரகிள் அன்ப்ரேகபில் லினக்ஸ்
» விரைவில் அறிமுகமாகும் Ubuntu 12.10

Permissions in this forum:
You cannot reply to topics in this forum