TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:34 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சர்வதேச ஆதரவைவேண்டி தற்கொடையாளர்கள் நாளையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை!!

Go down

சர்வதேச ஆதரவைவேண்டி தற்கொடையாளர்கள் நாளையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை!! Empty சர்வதேச ஆதரவைவேண்டி தற்கொடையாளர்கள் நாளையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை!!

Post by அருள் Wed Jul 06, 2011 7:29 am





சர்வதேச ஆதரவைவேண்டி தற்கொடையாளர்கள் நாளையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை!! Pulikkodi_new-100x80எமது இனவிடுதலைக்கான போராட்டத்தை அனைத்துலக அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப எமது மக்களை அணிதிரட்டி நாம் தொடர்ந்தும் போராடுவோம்.
அதற்கான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் சர்வதேசத்திடம் வேண்டி நிற்கின்றோம் என கரும்புலிகள் நாளையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அவ்வறிக்கையின் முழுமையான வடிவம் வருமாறு:
தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/05/11
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
03/07/ 2011.
கரும்புலிகள் நாள் – 2011
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ்பேசும் மக்களே,
ஜூலை- 05 கரும்புலிகள் நாள்.
எம்
மக்களை அழித்து எம் மண்ணை ஆக்கிரமிக்க பெரும் படைப்பலத் துணையுடன் வந்த
எதிரியை எதிர்கொள்ள தம் உயிரையே ஆயுதமாக்கி, உடலை வெடிமருந்தாக்கி
மனபலத்தை எமது இனத்தின் கவசமாக்கிய உத்தமர்களின் நினைவு நாள்.
கரும்புலிகள்
காலத்தால் மறைந்து போகாத வரலாற்றைப் பதித்து, இரும்பையொத்த வீரத்தை
விதைத்து, எம்மினத்தின் வரலாற்றைப் புதுப்பித்த புனிதர்கள்.
ஜனநாயகம்
என்கின்ற போர்வையில் அரச பயங்கரவாத ஆட்சியாளர்களால் ஆயுத பலத்துடன்
தமிழினம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட, மனித நாகரீகமே வெறுக்கத்தக்க தமிழர்
படுகொலைகளுக்கும் நில ஆக்கிரமிப்புக்கும் எதிரான எமது போராட்டத்தின்
அதியுச்ச எதிர்ப்பு ஆயுதமாகவே எமது தற்கொடையாளர்கள் களமிறங்கினார்கள்.
எமது
போராளிகள் தங்களைத் தற்கொடையாளர்களாக அர்ப்பணித்ததன் பின்னணி, சூழல்
ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்க்காமலும் அவர்களின் ஆத்ம உணர்வுகளின்
ஆணிவேரைப் புரிந்துகொள்ளாமலும் எமது இனவிடுதலை தொடர்பான எந்த ஆய்வுகளும்
நிறைவடைய முடியாது. எம் இன விடுதலைக்கான தேவையினையும் அவசியத்தினையுமே
கரும்புலிகளின் உணர்வுகள் பதிவு செய்துள்ளன.
இன்று
தமிழர் தாயகத்தில் எமது மக்கள் தொடர்ந்தும் அவலங்களை எதிர்கொண்டே
வாழ்கின்றனர். எமது மக்கள் தமது பூர்வீகமமான வாழிடங்களில் ஆயுதம் தரித்த
சிங்களப்படைகளின் அச்சுறுத்தலின் மத்தியில் அடிமைகளாகவே வாழ
நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். காலங்காலமாகச் சிறுகச்சிறுக தமிழர்
நிலங்களை ஆக்கிரமித்து ஏப்பம் விட்ட சிங்கள அரசு இப்போது தனது
ஆக்கிரமிப்பை எந்தத் தடைகளுமற்று பெருமெடுப்பில் சிங்கள பெளத்த மயமாக
மாற்றிவருகின்றது.
போர்
முடிந்துவிட்டதாகக் கூறும் சிங்கள அரசு இன்னமும் தமிழர் தாயகத்தைப்
போர்ச்சூழலிலேயே வைத்திருக்கின்றது. தினமும் கொலைகள், அச்சுறுத்தல்கள்,
காணாமற்போதல்கள், பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
பெயரளவிற்கு
விடுவிக்கப்பட்டதாகக் கூறும் எமது ஆண், பெண் போராளிகள் நேரடியாகவும்
மறைமுகமாகவும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் காணாமற் போவதும்
படுகொலை செய்யப்படுவதும் நாளாந்தம் நிகழ்ந்தேறி வருகின்றன.
தமிழர்களால்
ஜனநாயகரீதியில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின்
மக்கள் சந்திப்புக்களிற்கூட சிங்களக் கூலிப்படைகளின் வன்முறைகள்
கட்டவிழ்த்து விடப்படும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இந்நிலைதான்
கடந்த பல தசாப்தங்களாக சிங்களப் பேரினவாத அரசாங்கங்களினால்
மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.
சிங்கள
ஆட்சியாளர்களின் இத்தகைய நடவடிக்கைகளானது உலக நாகரிகங்களையும்
மனிதவிழுமியங்களையும் தொடர்ச்சியாக அவமதிக்கும் செயலாகவே பார்க்க
முடிகின்றது. மேலும் மனித உரிமை தொடர்பில் அனைத்துலகத்தின் அழுத்தங்களை
சிங்களம் செவிமடுக்கவில்லை என்பதனையே காட்டுகின்றது. காலங்காலமாக
தமிழர்மேல் அடக்குமுறைகளை ஏவியே வளர்ந்துவந்த இப்பேரினவாத அரசு இன்றைய
நிலையில் மென்மேலும் மோசமான நிலையை நோக்கியே நகர்ந்து செல்கின்றது.
சிங்கள
அரசின் இத்தகைய தொடர் செயற்பாடுகளால் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் எமது
மக்களின் சுதந்திர உணர்வை அழித்துவிட முடியாது. தொடர் ஆக்கிரமிப்புக்களால்
சிங்கள பௌத்த பேரினவாத அரசிடமிருந்து எமது மக்கள் விடுதலை பெற வேண்டிய
தேவை இன்னுமின்னும் வலுவடைந்து கொண்டே வருகின்றது.
எமது
போராட்டம் ஆயுதவழியில் ஆசை கொண்டோ வெடிமருந்தில் மோகம் கொண்டோ
முகிழவில்லை. மாறாக சாத்வீக வழியிலான எல்லாப் பொறிமுறைகளும் தோற்றுப்போன
பின்பே ஆயுதப்போராட்டம் உருவானது. இன்றைய உலக ஒழுங்கு எமது
விடுதலைப்பயணத்திற்கான ஆயுதப்போராட்டம் எனும் பாதையினை ஏற்றுக்கொள்ள
மறுத்து வந்ததோடு தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கி
நின்ற எமது இயக்கத்தை அழித்துவிடும் கொடிய போர் குறித்து பாராமுகமாக
இருந்ததையும் சில நாடுகள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதையும் எமது இனம்
வேதனையுடன் பார்க்கின்றது.
நாம்
எமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த நாளிலிருந்து எமது மக்கள் தமது
உரிமைக்கான போராட்டத்தினை மாற்று வடிவங்களில் முன்னெடுத்து
வருகின்றார்கள். அதேவேளை எமது மக்களோடு சேர்ந்து, எமது இனத்தின் மீதான
உரிமை மீறல்களைப் புரிந்துகொண்டு, அதற்கான நீதியினைப் பெற்றுக்கொடுக்க
அக்கறை செலுத்துகின்ற நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் நாம்
ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து வழங்கத் தயாராகவேயுள்ளோம்.
எமது
இனவிடுதலைக்கான போராட்டத்தை அனைத்துலக அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப எமது
மக்களை அணிதிரட்டி நாம் தொடர்ந்தும் போராடுவோம். அதற்கான ஆதரவினையும்
ஒத்துழைப்பினையும் சர்வதேசத்திடம் வேண்டி நிற்கின்றோம்.
காலத்தின்
கட்டாயம் தான் கரும்புலிகளை உருவாக்கியது. தரையில் எதிரிகளின் இரும்பு
கோட்டைகளை ஊடறுத்துத் தகர்த்தார்கள்; கடலில் எதிரிக்கலங்களை
மூழ்கடித்தார்கள்; வான்வழி சென்று வரலாறு படைத்தார்கள். தமிழர் போராட்ட
வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற எம் காவிய நாயகர்கள் என்றும் எம்மினத்தின்
காவல் தெய்வங்களாய் நிலைப்பார்கள்.
தியாகங்களின் உச்சத்தைத் தொட்ட எமது தற்கொடையாளர்களின் கனவை நாம் என்றென்றும் நெஞ்சில் நிறுத்திப் பூசிப்போம்.
நன்றி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அனைத்து தமிழர்களும் ஒன்றிணைத்து தமிழீழ மாவீரர்நாளை கடைபிடிக்குமாறு – தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை
»  விடுதலைப் புலிகள் எப்படி சர்வதேச உதவிகள் இல்லாமல்.... தங்கள் வளங்களை வைத்து விமானப் படையை உருவாக்கினார்கள் என்பதைப் பாருங்கள்..! இதில் இருந்து உருவாகியதுதான் விடுதலைப் புலிகளின் வான்படை..!
» தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன் முதலாக வெளியிடப்பட்ட அறிக்கை..
» தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் ஆயுதக் கொள்வனவு – அமெரிக்கா
» தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று வெளி இட்ட கடிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum